ஜூலை 28, 2011

மூன்றெழுத்து (தொடர் பதிவு )

 இந்தத் தொடருக்கு என்னை அழைத்த நண்பர் சேட்டைக்காரனுக்கு என் நன்றிகள்

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
    பேருந்துகளில் நீண்ட பயணம்
    அதிகாலை தனிமையில் பாட்டுக் கேட்பது
    பேசிக் கொண்டே இருப்பது 
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?  
   
சமீபத்திய தமிழ் சினிமா பாட்டுகள்
இரைச்சல்கள்       
அடுத்தவரைப் பற்றிய அவதூறுகள்

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
  அதிக உயரம்
  சில சமயங்களில் எதிர்காலம்
என் பதிவை படிச்சிட்டு யாரவது எதிர் பதிவு எழுதுவாங்கலோன்னு
4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
 
இலக்கியம் என்று சிலர் எழுதுவது 
எவ்வளவு முயற்சி செஞ்சும் புரியாமல் போனது காலேஜில் பிசிக்ஸ்
சில சமயங்களில் சில நபர்களின் பேச்சு
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
*  லேண்ட்லைன் போன்
*   ஸ்பீக்கர்
*  முத்தொள்ளாயிரம்
6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்?
* எனது குழந்தையின் சேட்டைகள்.
* சிலரது கூகிள் பஸ்கள்
* இணையத்தில் நடைபெறும் சில விவாதங்கள் .
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
* ஜெயமோகனின் "பத்ம வியூகம்" படித்துக் கொண்டிருக்கிறேன் .
* ரிவர்ஸ் லாஜிஸ்டிக்ஸ் படிப்பது . 
* அதீததிற்காக அடுத்த மேட்ச் பற்றிய ப்ரிவியு .
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
* சொந்தமாக ஒரு வீடு.
* ஒரு அறக்கட்டளை அமைப்பது .
* ஒரு புத்தகம் எழுதுவது .
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
    எல்லாமே செஞ்சு முடிக்க முடியும் (நம்பிக்கைதானே வாழ்க்கை )
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

அடுத்தவர்களை பற்றி புறம் பேசுவது
பொய்கள்
இந்த வருஷம் அப்ரைசல் இல்லை என்று என் மேனேஜர் சொல்லுவது

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
  மிருதங்கம்
  பிரெஞ்சு
  வெப் டிசைனிங்
12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
    சைவ உணவு அனைத்துமே பிடிக்கும்
  

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

* குறை ஒன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா ...
* உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா...
* நாதவிநோதங்களும் (சலங்கை ஒலி)
 
14) பிடித்த மூன்று படங்கள்?
   பொதுவா அப்படி சொல்றது கஷ்டம். எல்லா ரஜினி படமும்


15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
   அப்படி எதுவும் இல்லை. எதுவுமே நிரந்தரம் இல்லை. சோ எது இல்லாமையும் வாழ முடியும்
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்? 

அன்புடன் எல்கே

32 கருத்துகள்:

கலாநேசன் சொன்னது…

9,10,15 மிக ரசித்தேன்...

தமிழ்வாசி - Prakash சொன்னது…

மூன்று தொடர்பதிவு நல்லாயிருக்கு,

சேட்டைக்காரன் சொன்னது…

//பேசிக் கொண்டே இருப்பது//
நம்ம கட்சி போலிருக்கு...! :-)

//அடுத்தவரைப் பற்றிய அவதூறுகள்//
டிட்டோ...!

//என் பதிவை படிச்சிட்டு யாரவது எதிர் பதிவு எழுதுவாங்கலோன்னு //

பயமா? விளம்பரமே பிடிக்காதா? :-)

// இணையத்தில் நடைபெறும் சில விவாதங்கள் .//

இதுக்கு ஒண்ணாம் நம்பர் கொடுத்திருக்கலாமோ?

//பொதுவா அப்படி சொல்றது கஷ்டம். எல்லா ரஜினி படமும்//

தலைவர் வாழ்க!

சேட்டைக்காரன் சொன்னது…

நறுக்! சுருக்! :-)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மூன்றெழுத்தில் உங்கள் மூச்சு தெரிகிறது.

//உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்? எல்லாமே செஞ்சு முடிக்க முடியும் (நம்பிக்கைதானே வாழ்க்கை ) //

சபாஷ்!
உங்களால் எல்லாமே செஞ்சு முடிக்க முடியும் தான்.

எனக்கும் உங்கள் மேல் அந்த நம்பிக்கை உள்ளது.

வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

நேர்மை, தன்னம்பிக்கைக் கலந்த பதில்கள். இந்த தொடர்பதிவே வேறு சில தளங்களில் வேறு வேறு வித்தியாசமான ஆப்ஷன்களுடன் வந்திருக்கிறது போல...!

ராமலக்ஷ்மி சொன்னது…

சுவாரஸ்யம்:)!

RAMVI சொன்னது…

//) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
எல்லாமே செஞ்சு முடிக்க முடியும் (நம்பிக்கைதானே வாழ்க்கை )//

ஆம் நம்பிக்கைதான் வாழ்க்கை.நல்ல பதில்கள் வாழ்த்துக்கள் கார்திக்.

அப்பாதுரை சொன்னது…

straight shooter!

Madhavan Srinivasagopalan சொன்னது…

//16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

கீதா சாம்பசிவம்
அப்பாவி தங்கமணி
ராஜகோபாலன் //

நாட்டாமை.. தீர்ப்ப மாத்து..
ராஜகோபாலன் ஆல்ரெடி எழுதிட்டாரு..

அமைதிச்சாரல் சொன்னது…

முத்தான மூன்று பதில்கள் :-)

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அன்பு நிறை எல் கே சார்
உங்களின் கனிவான அழைப்பிற்கு நன்றி , பெருமை அடைந்தேன்
என் பதிவுலக ஆசான் ஆர் வி எஸ் அழைப்பின் பேரில் ஏற்கனவே எழுதிவிட்டேன்
இதோ அதற்கான சுட்டி
http://arr27.blogspot.com/2011/07/blog-post_10.html
-- உங்களின் ஒவ்வொரு பதிலும் மிகவும் எதார்த்தமாய் , நிதர்சனமாய் , நிறைவாக இருந்தது
அலங்காரமும் ,
அரிதாரமும்
அகங்காரமும் இல்லாத ,
எல்லோரும் ரசிக்கும்
எல்லோரையும் ஈர்க்கும்
பல்சுவை பதில்கள்

Priya சொன்னது…

தொடர்பதிவு நல்லா இருக்கு.. ரசித்து படித்தேன்...!
பிரெஞ்ச் கற்றுக்கொள்ள விருப்பமா கார்த்திக்... சீக்கிரம் கற்றுக்கொள்ளுங்க... மிக அழகான மொழி அது!

அப்பாவி தங்கமணி சொன்னது…

// எல்லாமே செஞ்சு முடிக்க முடியும் (நம்பிக்கைதானே வாழ்க்கை ) // super bro... thats the spirit...வழக்கம் போல பஞ்ச் பஞ்ச்ஆ உன்னோட ஸ்டைல்ல பதில் சொல்லி இருக்க... :)

ஐ... நானும் எழுதணுமா... தேங்க்ஸ்... கண்டிப்பா எழுதறேன்... ஆனா இப்படி one word answer எல்லாம் எனக்கு வராது... கட்டுரை தான்....:)

அப்பாவி தங்கமணி சொன்னது…

-

சுசி சொன்னது…

நல்ல பதில்கள் கார்த்திக்.

எல் கே சொன்னது…

@கலாநேசன்

நன்றி

எல் கே சொன்னது…

@பிரகாஷ்

நன்றி

எல் கே சொன்னது…

@சேட்டை

பேச்சு எங்கள் மூச்சு. விளம்பரமா அதெல்லாம் நமக்கெதுக்கு சாரே ...

எல் கே சொன்னது…

@வைகோ

நன்றி சாரே

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

ஆமா அண்ணா. தொடர் பஸ் கூட ஓடியது கூகிள் பஸ்ஸில் :)

எல் கே சொன்னது…

@ராமலக்ஷ்மி

நன்றி மேடம்

எல் கே சொன்னது…

@ராம்வி

தொடர்ந்து என் பதிவுக்கு வருவதற்கு நன்றி மேடம்

எல் கே சொன்னது…

@அப்பாதுரை

நமக்கு பாசாங்கு பிடிக்காது.

எல் கே சொன்னது…

@மாதவன்

அப்படியா சரி விடுங்க

எல் கே சொன்னது…

@அமைதிசாரல்

நன்றிங்க


@ராஜகோபாலன்

நன்றிங்க

எல் கே சொன்னது…

@ப்ரியா

கேள்விப்பட்டிருக்கிறேன்.. அதனால்தான் கற்றுக் கொள்ள ஆசை.

எல் கே சொன்னது…

@அப்பாவி

பஞ்சா ?? அபப்டிலாம் ஏதுமில்லீங்க அம்மணி. மனசில பட்டது சொல்லிட்டேன் . அம்புட்டுதேன். தொடர் பதிவ ரெண்டு பாகமா போடற ஆள் நீங்க. நடத்துங்க

எல் கே சொன்னது…

@சுசி

தேங்கீஸ்

சாகம்பரி சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்கு . உண்மையாயிருக்கு. குறையொன்றுமில்லை என்று பாடிவிட்டு இது இல்லாமல் வாழ முடியாது என்று சொல்லமுடியாதே.

GEETHA ACHAL சொன்னது…

மூன்று வேள்விகளின் தொடர் பதிவு அருமை...

பேருந்தில் நீண்ட பயணம் பிடிக்குமா...

ஹுஸைனம்மா சொன்னது…

//பயப்படும் மூன்று விஷயங்கள்?
அதிக உயரம் //

நிறைய பேர் இதச் சொல்லிருக்காங்க. என்னை மாதிரியும் ஆட்கள் இருக்காங்ககிறது எவ்ளோ ஆறுதலா இருக்கு... ;-))))))