Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

வியாபாரம் 13

மிக நிதானமாக யோசித்து யோசித்து நடப்பவன் போல வந்துக் கொண்டிருந்தான். பாலத்தின் அடியில் இரவு தந்த இருளின் மறைவில் சில போலீசார்  தயாராக இருந...


மிக நிதானமாக யோசித்து யோசித்து நடப்பவன் போல வந்துக் கொண்டிருந்தான். பாலத்தின் அடியில் இரவு தந்த இருளின் மறைவில் சில போலீசார்  தயாராக இருந்தனர்.

அதே நேரத்தில் அவனை இறக்கி விட்டு பறந்த காரை , கலெக்டர் ஆபிஸ் ரவுண்டானாவில் போலீசார் மடக்கி இருந்தனர். அங்கும் இருட்டுதான் அவர்களுக்கு உதவி செய்தது.

பாலத்தை நெருங்கும் வரை வேகமாய் நடந்தவன், அதனருகே வந்தவுடன் தன் நடையில் வேகத்தைக் கூட்டினான். வாகனங்களை தடுக்கும் வகையில் போடப்பட்டிருந்த தடுப்புகளின் வழியே நுழைந்து வெளியேற முயன்றவனை
அவனை சுற்றி சூழ்ந்த போலீசார் கைது செய்தனர்.


அரை மணி நேரம் கழித்து, கமிஷனர் அறையில் , சேலம் மாநகர கமிஷனர் முன்பு சேகர், ஜெய்யுடன் அமர்ந்திருந்தார்.

"ஆறு மாசம் முன்னாடி ரமேஷ் செட்டியார்கிட்ட  கடன் கேட்டு இருக்கான் .இன்னும் ஒரு கார் வாங்கி  ட்ராவல்ஸ்ல விட்டா கொஞ்சம் காசு பார்க்கலாம்னு  ஆசை . யார்யாருக்கோ கொடுத்து உதவி பண்ணி இருந்த செட்டியார் , என்ன நினைச்சாரோ தெரியலை, கொஞ்ச நாள் கழிச்சு பார்க்கலாம்னு சொல்லித் தட்டிக் கழிச்சிட்டே இருந்திருக்கார்.

அந்த நேரத்தில்தான் இந்த ரெண்டு பேரும் ரமேஷுக்கு பழக்கமாகி இருக்காங்க. அவங்கதான் கடத்தற ஐடியாவை அவனுக்குக் கொடுத்து இருக்காங்க. எல்லாம் சரியாதான் பண்ணாங்க. ஆனால் செல்போன்தான் இவங்க சிக்கினதுக்கு முக்கியக் காரணம்.

இதுல ஜெய் பிடிச்ச ரமேஷோட ப்ரெண்டும் முக்கியக் காரணம். அவன் மாட்டியதில்தான் அவங்க கார் பத்தி விஷயம் தெரிஞ்சு அதுக்கேத்த மாதிரி ப்ளான் பண்ண முடிஞ்சது.


"வெல் . குட் வொர்க்  சேகர் "  என்ற கமிஷனரின் பாராட்டுக்கு புன்னகையுடன் தலையசைத்து எழுந்து சல்யுட் அடித்து விட்டு வெளியேறினான் சேகர்.

அடுத்த நாள் காலை பேப்பர்களில் " கடத்தல்காரர்கள்  கைது " என்றத் தலைப்பு செய்தியுடன் சேகரின் போட்டோவும் வெளியாகி இருந்தது.

- வியாபாரம் முடிந்தது 

பி . கு. அதிகம் இடைவெளி விட்டு எழுதியதால் கொஞ்சம் சுவாரசியம் குறைந்துவிட்டதோ என்று எண்ணுகிறேன். வியாபாரம் முடிச்ச கையோட கடையைக் கொஞ்ச நாள் சாத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனவே ஒரு தற்காலிக விடுமுறை எழுதுவதில் இருந்து மட்டுமே .(நிம்மதின்னு அ(ட)ப்பாவி தங்கமணி  பெருமூச்சு விடறது தெரியறது இங்கே )




அன்புடன் எல்கே


22 கருத்துகள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எல்லாம் சரியாதான் பண்ணாங்க. ஆனால் செல்போன்தான் இவங்க சிக்கினதுக்கு முக்கியக் காரணம்.//

எந்தக்குற்றவாளியும் தடயம் விடாமல் இருப்பதில்லை.

அருமையாய் வியாபாரம் தந்த தங்களுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

"வெல் . குட் வொர்க் சேகர் " //

அருமையான நடை. சுவாரஸ்யம் குறையாத மிடுக்கு.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

இதோட பாகம்-2 வருமா :-))

எல் கே சொன்னது…

@ராஜராஜேஸ்வரி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@சாரல்

இதுக்கப்புறம் கொஞ்ச நாள் எதுவும் எழுதுவதாய் இல்லை. சும்மா இருத்தலே சுகம் :)

Geetha Sambasivam சொன்னது…

நல்லாத் தான் இருந்தது; கொஞ்ச நாட்கள் விடுமுறை கொடுத்துத் தான் பாருங்க, சலிப்பு குறையலாம். வாழ்த்துகள். பாராட்டுகள்.

ஆனால் முடிவில் ஏதோ முடிச்சாகணுமேனு ஒரு அவசரம் தெரியுது. எல்லாம் தமிழில் மாறி இருக்கு போல!

Geetha Sambasivam சொன்னது…

தொடர

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லா இருந்தது. Come Back Soon.

எல் கே சொன்னது…

@கீதா மாமி

நோ சலிப்பு, ஆபிஸ் ஆணி ஜாஸ்தி. வீடு வர எட்டு மணிக்கு மேல் ஆகி விடுகிறது. அதான் முக்கியக் காரணம் .

இதை எழுதி முடிக்காட்டி அப்படியே விட்டுடுவேனொன்னு பயம். அதான் காரணம்

எல் கே சொன்னது…

நன்றி குமார்

RAMA RAVI (RAMVI) சொன்னது…

“வெல் குட் வொர்க் எல் கே சார்”.நாங்களும் பாராட்டுகிறோம் ஒரு சுவையான துப்பறியும் கதைக்கு..

பத்மநாபன் சொன்னது…

இந்த வியாபாரத்துக்கே கடையை மூடினா எப்படி ? சீக்கிரம் விடுப்பும் ஓய்வும் எடுத்துட்டு கடையை திறங்க....

A.R.ராஜகோபாலன் சொன்னது…

பல திருப்பங்களும் , முடிச்சுகளும் கொண்ட அருமையான கதை , நன்றி சார் ஒரு அருமையான கதையை தந்தமைக்கு

"வெல் . குட் வொர்க் சேகர்(எல் கே) "

மோகன்ஜி சொன்னது…

கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டு சேர்ந்து படித்ததால் எனக்கு ஏதும் ஸ்வாரஸ்யம் குன்றியது போல் தெரியவில்லை கார்த்திக் ! தெளிவான கதையோட்டம். எதுக்கு டக்குன்னு சுபம் கார்டு போட்டுட்டீங்க?

எல் கே சொன்னது…

@ராம்வி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

நன்றி அண்ணா. ஆணி ஜாஸ்தி ஆய்டுச்சு ...எழுத சரக்கு இருக்கு, ஸ்டார்ட் பண்ணிட்டு நிறுத்தக் கூடாது ...

middleclassmadhavi சொன்னது…

ரசித்த தொடர்; சீக்கிரமே எழுத ஆரம்பியுங்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

'சட்'டுனு முடிந்து விட்டது. சுவாரஸ்யமாகவே இருந்தது.

vanathy சொன்னது…

தொடங்கும் போது இருந்த விறு விறுப்பு முடிவில் இல்லை. இன்னும் கொஞ்சம் அழகா முடிச்சிருக்கலாம்.
முடிவு சூப்பர், தல.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//நிம்மதின்னு அ(ட)ப்பாவி தங்கமணி பெருமூச்சு விடறது தெரியறது இங்கே//

ச்சே...ச்சே...அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்... நீ எழுதலைனா எனக்கு வம்பு இழுக்க வாய்ப்பே கிடைக்காதே...சோ, எழுது கார்த்தி எழுது...:))

கதை நல்லபடியா முடிஞ்சுது... சுவாரஷ்யம் எல்லாம் ஒண்ணும் குறையல... நல்லா தான் போனது... நானும் முடிக்கணும்னு போராடிட்டு இருக்கேன்... லெட்ஸ் சி..:)

Geetha Sambasivam சொன்னது…

வானதி சொன்னதை ஆமோதிக்கிறேன். உண்மையில் நானும் அதே சொல்ல எண்ணிப் பின்னர் யோசித்துவிட்டு எழுதவில்லை. ஆனால் முடிவில் கொஞ்சம் அவசரம், முடிக்கணுமேனு ஒரு அலுப்பு, எல்லாம் தெரிகிறது.

சாகம்பரி சொன்னது…

வியாபாரம் வெற்றிகரமாக விறுவிறுப்பு குறையாமல் முடிந்துவிட்டது லாபம். விடுமுறை முடிந்து சந்திப்போம்.