ஜூன் 26, 2011

திவ்யாவின் கதை

திவ்யாவை பற்றி எழுதி ரொம்ப நாள் ஆச்சு. கீழ திவ்யா சொன்ன கதையை அப்லோட் செய்த லிங்க் கொடுத்து இருக்கேன். மொபைலில் ரெகார்ட் செய்ததால் உங்கள் ஸ்பீக்கர் சவுண்ட் அதிகம் வைத்துக் கேட்கவும் . கதை அவுட்லைன் மட்டும்தான் எனக்கு புரிஞ்சது. இவ அவளோட பிரெண்ட் வீட்டுக்கு போயிட்டு வராலாம். அவ்ளோதான். உங்களுக்கு புரிஞ்சதை மத்தத சொல்லுங்க 


கேட்டுட்டு சொல்லுங்க 

அன்புடன் எல்கே

39 கருத்துகள்:

Lakshmi சொன்னது…

குழந்தை குரல் கேக்கவே ஆசையா
இருந்தது. படம் எதுவும் வல்லே.
ஒன்லி குரல் மட்டும் அதிக சவுண்ட்
வச்சு கெட்டேன்.திருஷ்ட்டி சுத்தி
போடுங்க.

சே.குமார் சொன்னது…

santhosam... திருஷ்ட்டி சுத்தி
போடுங்க.

komu சொன்னது…

கார்த்திக் ரொம்ப, ரொம்ப நாள் கழிச்சு
ப்ளாக் பக்கம் வந்தேன். குழந்தையின்
மழலைக்குரல் ரெண்டு மூனு தரம்
கேட்டுக்கேட்டு மகிழ்ந்தேன். இந்தவயதில் தானே இந்தமழலைக்குரலைக்கேக்க முடியும்.
ப்ளாக் எழுதுவதில் ஒரு வசதி. அந்தக்குழந்தை பெரியவள் ஆனபிறகும் கூட அவளுக்கு காட்ட முடியும். நல்ல வேலை செய்தீங்க.

Ramani சொன்னது…

குழல் இனிது யாழ் இனிது என்பர்
மழலைச் சொல் கேளாதவர் என
வள்ளுவன் சொன்னது எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது
மிகப்பெரிய வித்வானின் கச்சேரியை கேட்க கிடைக்காத
சுகம் ஆனந்தம் மழலையில் கேட்க எவ்வளவு அழ்காய் கிடைக்கிறது
மன சோர்வுற்றால் நிச்சயம் இந்த பதிவைப் போட்டுக்கேட்பேன்
நன்றி

A.R.ராஜகோபாலன் சொன்னது…

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலை சொல் கேளாதார்

RAMVI சொன்னது…

திவ்யாவின் மழலை குரலை கேட்டவுடன் என் குழந்தைகளின் மழலை பருவம் நினைவுக்கு வந்தது. குழந்தைக்கு வாழ்த்துக்கள்...

raji சொன்னது…

ஆனந்தம் பரமானந்தம்.இதை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
எனக்கும் ஒன்லி ஆடியோதான்.வீடியோ வரலை.ஆனால் ஆடியோவிலேயே
அமுது ததும்புகிறது

மோகன்ஜி சொன்னது…

அற்புதமாய் இருந்தது திவ்யாகுட்டியின் கதை.
கிசுகிசு உண்மைதானே கார்த்திக்?

ஸ்ரீராம். சொன்னது…

பிள்ளைக் கனியமுது. மழலை இனிமை. மிகத் தீவிரமாய் ஏதோ கதை சொல்கிறாள் குழந்தை. அப்பளம், சாம்பார் போல இன்னும் சில வார்த்தைகள் புரிந்தன.

பத்மநாபன் சொன்னது…

சக்கரை போட்டு கலக்கி .... எனக்கு தரல்லை ... இப்படி படப்படவென்று மழலை வெள்ளம் அருவியாக கொட்டியது அழகு . ....

asiya omar சொன்னது…

எல்.கே குழந்தை அருமையாக,இனிமையாக பேசியிருக்கா,என்ன கதைன்னு புரியயலை,இரண்டு முறை கேட்டேன்,திவ்யாவிற்கு கதவை மூடுவதும் திறப்பதும் ரொம்ப பிடிக்குமோ!அம்மா,அப்பா இருவருக்கும் பொழுது நல்லா போகும்.வாழ்த்துக்கள்.

middleclassmadhavi சொன்னது…

மழலை இனிது! வாழ்த்துக்கள்

மாதேவி சொன்னது…

இனித்திடும் மழலைக்குரல்.

"அம்மாவைக் கட்டிக்கொள்வேன்... என்று கூறுகிறாள்.

vanathy சொன்னது…

சூப்பரா இருக்கு, தல. இனிமையான நாட்கள் enjoy பண்ணுங்கள்.

கீதா சொன்னது…

கதை சொல்கிறாளா? எனக்கென்னவோ அழகாய்ப் பாட்டுப் பாடுவது போல் இருந்தது. என் குழந்தைகளின் மழலையை இப்படிப் பதிவு செய்யாமல் தவறிவிட்டேனே என்று ஏக்கம் உண்டாக்கிவிட்டாள். திவ்யாக்குட்டிக்கு என் ஆசிகள்.

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

அம்மா குரல்தான். வீடியோ இல்லை

எல் கே சொன்னது…

@குமார்

கண்டிப்பா

எல் கே சொன்னது…

@கோமதி

உங்களை ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் பாக்கறதுல சந்தோசம்

எல் கே சொன்னது…

ரமணி

தனயன் ஆனேன் சாமி.

எல் கே சொன்னது…

@ராஜகோபாலன்

அதே அதே அதே

எல் கே சொன்னது…

@ரம்வி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@ராஜி

ஆடியோ மட்டும் போட்டா ஆடியோதான் வரும் ,. வீடியோ போடலை

எல் கே சொன்னது…

@மோகன் ஜி

ஹஹஅஹா... கிசுகிசுவை படிச்சிட்டுதான் இதை போட்டேன் :)

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்


ஒருத்தர் கதையை கண்டுபிடிச்சு சொன்னார். அதைப் போடுகிறேன்

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

எனக்கும் பலது புரியலை

எல் கே சொன்னது…

@ஆசியா
ஹ்ம்ம் ஆமாம் ரொம்ப இஷ்டம் அவளுக்கு அடிக்கடி மாட்டுவது நான்தான்

எல் கே சொன்னது…

@மாதவி

நன்றி


@மாதேவி

நன்றி

எல் கே சொன்னது…

@வானதி

நீங்க வேற பள்ளிக்கூடம் போய்ட்டா என்ன பண்றதுன்னு யோசிக்கறேன்

எல் கே சொன்னது…

@கீதா

நன்றிங்க. தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவு இது

எல் கே சொன்னது…

நா​நீ இந்த ஒனாகி ஒனைக்கன்னா மீனாகி, ஆஅ வந்தே சிந்தா கொன்னாகி, தொந்தா இந்தா வந்தாகி, தொந்தா பின்னி சந்நண்ணி, ஊநிகண்ணி நானின்னி நாலு பேரும் வந்தாளாம். அநீனா இன்னி ஒக்கநி இன்ஸ்டன் ஆகி வீந்தாலாம். மியாமி மட்டும் இந்தாலா? மாமி வல்லையா? அஞ்சு பேரும் அங்க போயிந்தாலா? கதவ பூட்டிட்டு? ஐ கதவ தெறக்க முடியுமா? கதவ தெறக்க முடியாதுதானே? அப்போ உள்ளேயே இந்தாலாம். உள்ள இந்துண்டு கதவ தட்டிந்தாலாம். அப்பீ ஈங்காரிந்து வந்து கேட்டா இந்து உள்ள போயிட்டாலாம். டப்பு உள்ள போய்டு வரலியாம். வெளியே வேலை பண்ணி தேங்கா நறுக்கி நறுக்கி (நக்கி நக்கி?) சாப்டு முடிச்சுட்டாலாம். ஐ சுட்டா சக்க (சக்கரை) போட்டு சாப்டுடாலாம் எனக்கு தரவே இல்லையாம். அங்கிள் தெரிஞ்ச்சுப்பலா, தெரிஞ்ச்சுப்பலா, மாட்டாதான? தெரிஞ்சுட்டா சக்கரையா. நான் சாப்டு அவா வீட்டிலயே இந்தேன்.
அப்போ எங்க வீட்டுக்கு வரவே இல்ல. அப்போ அவோல்லேந்து கதவு பூடிட்டா. அவா கதவ. நான் அப்பா அக்க தந்து நா உள்லேவோ தேந்துடேன். நான் பாப்பா வீட்டுக்கு வந்துட்டேன். அப்போ வந்து நீங்க வந்து சேந்து வீட்டுக்கு போயிட்டாலாம். ஆ வீட்டுக்கு. அப்போ நீ வந்தியா? அங்க்கேயிந்து போனோம் நம்பலா. அம்மா நான் கட்டு போட்டுட்டேன். அப்போ நம்ம வீட்டுக்கு வந்தோம். கதை முடிஞ்சுபோச்


இதுதான் அவ சொன்னது. இதை பொறுமையாக கேட்டு தட்டச்சு செய்த திவா அண்ணாவுக்கு நன்றிகள் பல

நிரூபன் சொன்னது…

மழலை மொழி கேட்பதற்கு எப்போதுமே இனிமையானது என்பதற்குத் திவ்யாவின் குரலும் ஓர் சான்று.

முதல் ஒரு நிமிடம், கொஞ்சம் புரியாமல் இருந்தது. பின்னர் கொஞ்சும் குரலில் உங்கள் சுட்டி பேசியிருக்கிறா.

ரசித்தேன்.

வளமான எதிர்காலம் திவ்யாவிற்கு வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

சாதாரணமானவள் சொன்னது…

ஹா ஹா ஹா அழகோ அழகு

கோவை2தில்லி சொன்னது…

திவ்யாவுக்கு சுத்திப் போடுங்க. குழந்தை சொல்றத கேட்க அவ்ளோ இனிமையா இருந்துச்சு. ஆனா கதை தான் புரியலை. புரிஞ்சப்புறம் நீங்க சொல்லுங்க.

அப்பாவி தங்கமணி சொன்னது…

சூப்பர்... பிற்காலத்தில் பிளாக்கர் ஆகும் வாய்ப்பு இப்பவே தெரியுது... என்னமா கதை விடரா...:))

சாகம்பரி சொன்னது…

உயிரே படத்தை நான்கு முறை பார்த்தேன். இசைக்காக, கதைக்காக, வசனத்திற்காக, பிரெசண்ட் செய்த விதத்திற்காக. குட்டி திவ்யாவின் கதையையும் நான்கு முறை கேட்டாச்சு. ரீங்காரமாக இசைக்கின்ற குரல் மனது மொத்தத்தையும் அள்ளிக்கொள்ள கதை தலைக்குள் போகவே மாட்டேங்குது. கவலைகளை மறக்கடிக்கும் இனிய இசை. நன்றி எல்.கே சார்.

Vasagan சொன்னது…

Super, apadiyae ava adapavi athai mathri என்னமா கதை விடரா...:))

Geetha6 சொன்னது…

நல்ல கருத்து!சூப்பர்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குட்டிப் பாப்பாவின் குரலில் கதை இனிமையாக இருக்கு.... பகிர்ந்தமைக்கு நன்றி கார்த்திக்.

Priya சொன்னது…

ச்சோ ஸ்வீட்... குரலை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலிருக்கு!திவ்யாகுட்டிக்கு என் அன்பு முத்தங்கள்!