ஜூன் 06, 2011

என்னில் பாதி....என்னில் பாதியாய்
வாழ்வின்
மீதியாய் கலந்தாய்

என் வெற்றியில் நீ

மகிழ்ந்தாய் - தோல்வியில்
உற்சாகமூட்டினாய்.


கண்ணசைவில் சித்திரங்கள்
படைத்தாய் -  வாழ்வை
வசந்த கால சோலையாக்கினாய்...என் சுகமே உன்
விருப்பம் என்றாக்கிக்
கொண்டாய்..

கோபங்களையும் சிரிப்பால்
புன்னைகை ஆக்கினாய்..

உன் பாதியாய் அல்ல
முழுதுமாய் நானானாய் ...

என்ன பரிசு தர நான் - எனை
முழுதும் அளித்தாலும் அது தகுமோ ??

பி .கு : இன்று எனது பாதி சௌம்யாவின் பிறந்தநாள். 


அன்புடன் எல்கே

22 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

உன் பாதியாய் அல்ல
முழுதுமாய் நானானாய் ...

என்ன பரிசு தர நான் - எனை
முழுதும் அளித்தாலும் அது தகுமோ ?? //
Nice...

GEETHA ACHAL சொன்னது…

சூப்பர்ப்..கலக்குறிங்க..

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சௌமியா...

Lakshmi சொன்னது…

many, many happy returns of the day sowmya

A.R.ராஜகோபாலன் சொன்னது…

என் சுகமே உன்
விருப்பம் என்றாக்கிக்
கொண்டாய்..

இல்லறத்தின் இனிமை சொல்லும்
சுந்தரக்கவிதை
உங்கள் மனையாளுக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள்!

//உன் பாதியாய் அல்ல
முழுதுமாய் நானானாய் ...

என்ன பரிசு தர நான் - எனை
முழுதும் அளித்தாலும் அது தகுமோ?//

சந்தேகமே !

ஹேமா சொன்னது…

உங்கள் அன்பு நீடித்து வாழ மனம் நிறைந்த வாழ்த்துகள் கார்த்திக் !

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்களில் பாதிக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்....

கீதா சொன்னது…

காதல் தவழும் தங்கள் கவிதைக்குப் பாராட்டும், கவிதையில் தவழும் தங்கள் காதல் மனைவிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளும்.

RVS சொன்னது…

வீட்டு அம்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க..
அவங்கள நினைக்கும் போதே உங்களுக்கு கவித..கவித.. கொட்டுது... ;-))

இன்னிக்கி டின்னர் வெளியிலா? ;-))

Priya சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சௌமியா!

//உன் பாதியாய் அல்ல
முழுதுமாய் நானானாய்//...சூப்பர்!

middleclassmadhavi சொன்னது…

முழுமையான இருவருக்கும் வாழ்த்துக்கள்!

பத்மநாபன் சொன்னது…

சகோதரிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... எழுதிய கவிதையும் வழங்கிய கிருஷ்ணன் பாட்டும் அருமை....

அப்பாவி தங்கமணி சொன்னது…

Many many happy returns of the day
Sowmiya. Lovely wish brother...:)

பெயரில்லா சொன்னது…

Belated Happy Birthday Divyamma!

ஸ்ரீராம். சொன்னது…

உங்கள் துணைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....

Lakshmi சொன்னது…

கார்த்தி, உங்களை வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கேன் நேரம்
கிடைக்கும் போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

சுந்தர்ஜி சொன்னது…

தாமதமாய் பி.நா.வாழ்த்துக்கள் சகோ.

சுசி சொன்னது…

அழகான வாழ்த்து..

இங்கேயும் வாழ்த்துகள் சௌம்யா.

asiya omar சொன்னது…

சகோ,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? பகிர்வுக்கு மகிழ்ச்சி.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சௌம்யா.

அன்னு சொன்னது…

//என் வெற்றியில் நீ
மகிழ்ந்தாய் - தோல்வியில்
உற்சாகமூட்டினாய். //

தங்கமணி வாழ்க!!! பிறந்த நாளோ அல்ல சாதாரண நாளோ, இதே அன்பும், அன்னியோன்யமும் என்றும், என்றென்றும் இல்வாழ்க்கையில் நிலவ மனதார்ந்த வாழ்த்துக்கள்....இருவருக்கும் :))

சாகம்பரி சொன்னது…

சில வார்த்தைகள் சந்தோசத்தை விதைக்கும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சௌமியா.

குந்தவை சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொளமியா.
இப்ப தான் படித்தேன் அதான் லேட்டு.

ஒரு நாள் முன்னமே பிறந்து எனக்கு அக்காவாயிட்டீங்க. :)