மே 30, 2011

வியாபாரம் 9

போனையும் தன்னையும் மாற்றி மாற்றி பயந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ராஜியைப் பார்த்த சேகர் "போனை எடுத்து பேசு " என்று காவல் துறைக்கே உண்டான அதிகாரத் தொனியில் சொன்னான்.
சேகரின் கட்டளையை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லாததால் அழைப்பை ஏற்று போனை காதில் வைத்தவள் நடுங்கும் குரலுடன் "ஹலோ" என்றால் ,
மறுமுனையில் "உங்களுக்குப் பிடித்த பாடலை உங்கள் போனிற்கு டவுன்லோட் செய்ய ..." என்றுப் பதிவு செய்யப் பட்டக் குரலை கேட்டவுடன் அவளையும் அறியாமல் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
"ஏர்டெல் கால் சார் " என்று ஒருவித சலிப்புடன் சேகரிடம் சொன்னாள்.
போன் அட்டென்ட் பண்ணும் பொழுது அவளிடம் இருந்த பயத்தையும் இப்பொழுது கொஞ்சம் பயம் நீங்கிய விதத்தையும் கவனித்த சேகர் " சரி சொல்லுங்க. அந்த ரமேஷை எவ்வளவு நாளா தெரியும் உங்களுக்கு "
"ஒரு வருஷத்துக்கு மேல தெரியும் சார் "
"எப்படி பழக்கம் ?"
"முன்ன செவ்வாய் பேட்டையில் கடையில் வேலை செஞ்சுகிட்டப்ப பழக்கம் சார். "
"உங்களுக்கும் அவருக்கு என்ன உறவு?"
இதற்கு ராஜியிடம் இருந்து பதில் வராமல் போனதால்
"நீங்க எதுக்கு உங்க அப்பா பேர்ல அவருக்கு சிம் கார்ட் வாங்கி தந்தீங்க ? உங்க அப்பா பேர்ல அவருக்கு சிம் வாங்கி தர அளவுக்கு என்ன உறவு ?" கேள்வியை சிறிது மாற்றிக் கேட்டான் .
இதற்கும் பதில் வராமல் போனதால் அவன் ஜெயாவைப் பார்த்தான்.அவன் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட ஜெயா 
"இங்கப் பாருமா, இங்கயே ஒழுங்கா பதில் சொல்லிடு. நீ பண்ணி இருக்கறதை ஒரு பையன் பண்ணியிருந்தா இந்நேரம் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய்தான் விசாரிச்சிருப்போம்.இப்ப நீ பேசாம இப்படியே இருந்தா ஸ்டேஷனுக்கு கூட்டிகிட்டு போய் விசாரிக்க வேண்டி இருக்கும்."
ஜெயா அவளிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், சேகர் ராஜியின் செல்போனில் அதுவரை வந்திருந்த அழைப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் அவர் எதிர்பார்த்த ஒரு எண் இருந்தது . பின் அந்த மொபைலில் அவன் போட்டோ ஏதாவது இருக்குமா  என்று பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்களில் ஒரு போட்டோ சிக்கியது. 
அதில் இருந்தது அன்றுக் காலை அவர் விசாரித்த அதே ஆள். 
"இந்த போட்டோவில் இருக்கறதுதான் ரமேஷா ?"
"ஆமாம் சார் "
"ஜெயா நீங்க கேட்டுகிட்டு இருந்த உடனே வரேன் "   என்று சொல்லிவிட்டு இரண்டு போன்களையும் எடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தான். சில நிமிடங்கள் யோசித்தவன் பின் கடைசியாக வந்த அழைப்புகளின் எண்களை பார்த்தான். ஒரே எண்ணில் இருந்து  வந்திருந்த இரண்டு மிஸ் கால்களைப் பார்த்துவிட்டு அந்த எண்ணுக்கு தனது போனில் இருந்து கால் செய்தான்.
மறுமுனையில் குரல்  கேட்டவுடன் "இது எந்த ஏரியா ? " என்று அவன் கேட்டதற்கு பதில் நக்கலாய் வந்தது .
"போலிஸ் டிபார்ட்மென்ட்ல  இருந்து கால் பண்றோம்" என்று சொன்னவுடன் மறுமுனையில் பணிவு உடனடியாய் தென்பட்டது. அவன் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் கிடைத்தது.
அவன் பேசிவிட்டு உள்ளே வரவும் , ஜெயா விஜியிடம் பேசி முடிக்கவும் சரியாக இருந்தது.
"என்ன ஏதாவது பேசினாளா ?"
"பேசினாள் சார். இந்தப் பொண்ணு அவனை விரும்பி  இருக்கு. அவன் கார்டு வேணும்னு சொன்னதால அவங்க அப்பா பேர்ல வாங்கித் தந்திருக்கு. மத்தபடி இந்தப் பொண்ணுக்கு வேற எந்த விஷயமும் தெரியலை சார் ."
அவள் சொல்லி முடிக்கவும் மீண்டும் விஜியின் போன் ஒளிரத் துவங்கியது.
"அனேகமா அவன்தான் பண்றான்னு நினைக்கிறேன் . போனை அட்டென்ட் பண்ணுங்க. அவனை பாக்கணும்னு சொல்லி இங்க வர சொல்லுங்க. நாங்க இங்க இருக்கறது அவனுக்குத் தெரியாதக் கூடாது.
அவர் சொன்னதற்கு பதில் சொல்லாமல் வெறும் தலையாட்டலின் மூலம் சம்மதத்தை சொன்ன விஜி , அழைப்பை உயிர்ப்பித்தாள்.
"ஏன்  காலை அட்டென்ட்  பண்ணலை  ? எதுக்கு கட் பண்ண ?"
சில கணம் என்ன சொல்வது என்று திகைத்த விஜி பின் நடுங்கும் குரலுடன் "இல்லை. கடையில கூட்டம் இருந்தது. அதான் எடுக்க முடியலை. இப்ப எங்க இருக்க ?"
"அங்கதான் இருக்கேன் ."
"இங்கயா ?" கேட்ட விஜியின் குரலில் சிறிது படப்படப்பு கூடி இருந்தது.
"ஆமாம் . வலசையூர் போற பஸ் இருக்கற இடத்தில இருக்கேன். இங்க வர முடியுமா?"
"இல்லை. இப்ப அங்க வந்தா மேனேஜர் சத்தம் போடுவார். நீ கடைகிட்ட இருக்கற ஜூஸ் கடைகிட்ட வா. நான் அங்க இருக்கேன்" 
"சரி" என்று ரமேஷ் சொல்லியவுடன் அழைப்பு கட் ஆனது.
"குட் . ஒழுங்கா பேசி இருக்க. இப்ப வெளில போய் அவனுக்காக வெய்ட் பண்ணு. "
"ஜெயா நீங்க இந்த பொண்ணு நிக்கற இதத்தை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி நின்னு என்ன நடக்குதுன்னு பாருங்க. நான் இங்க இருக்கேன். என்னை  அவன் பார்த்திருக்கன். அதனால நான் அங்க இருந்தா அவன் தப்பிச்சிடுவான்."
அவன் சொல்லியவாறே இருவரும் கடையில் இருந்து வெளியே சென்று காத்திருந்தனர். விஜி கண்ணில் படுமாறு ஒரு மேஜையை செலெக்ட் பண்ணி அங்கே அமர்ந்தான் சேகர். விஜி படப்படக்கும் இதயமும் , பயந்த முகமுமாய் வெளியே நின்றுக் கொண்டிருந்தாள். 
வியாபாரம் தொடரும்  

20 கருத்துகள்:

vanathy சொன்னது…

well written, Sir. Waiting for the next part....

middleclassmadhavi சொன்னது…

Suspense...suspense

பெயரில்லா சொன்னது…

continue fast Karthik

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

விறுவிறுப்பான இடத்தில் தொடரும் போட்டாச்சு. அடுத்து என்னாகுமோ என்ற ஆவல் அதிகரித்து விட்டது. தொடருங்கள்.

சுசி சொன்னது…

அடுத்த வியாபாரம் ஒரு மாசத்துக்கு அப்புறமா??

எப்டி இருக்காங்க திவ்யாக்குட்டி..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அட நல்ல விறுவிறுப்பான இடத்தில் வரும்போது தொடரும்.... சீக்கிரம் அடுத்த பகுதியை போடுமய்யா கார்த்திக்....

Lakshmi சொன்னது…

போலீஸ்காரங்க நல்லாவே என்கொயரி செயராங்க.

எல் கே சொன்னது…

@வாணி

நன்றி சீக்கிரம் போடறேன்

எல் கே சொன்னது…

@மாதவி

கொஞ்சமாவது சஸ்பென்ஸ் இருக்கனும்ன்ல

எல் கே சொன்னது…

@மீனு

சீக்கிரம் போடறேன் மேடம்

எல் கே சொன்னது…

@வைகோ

நன்றி சார். சீக்கிரம் போட்டுடறேன்

எல் கே சொன்னது…

@சுசி

அவ்ளோ நாள் ஆகாது. இந்த வாரமே அடுத்தது வரும் . ரொம்ப நல்லா இருக்காங்க சுசி

எல் கே சொன்னது…

@வெங்கட்

சீக்கிரம் ஒரு ரெண்டு மூணு நாளில் போட்டுடறேன்

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

நன்றிமா

ஸ்ரீராம். சொன்னது…

ரமேஷ் அவசரப் பட்டு வண்டியைப் பார்க்கப் போனதால் கொஞ்சம் விபரீதம் ஆகி விட்டது போலும். இப்போது 'மச்சான் மாட்டிகிட்டாரு ' பாடக் காரணமாகப் போறாரே...!!

RVS சொன்னது…

நல்லாப் போவுது எல்.கே. எல்லாப் பார்ட்டுக்கும் கமெண்ட்ட முடியலை. ஸாரி! ;-)

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

இருக்கலாம் அண்ணா. பொறுமையாதான் இருக்கணும்

எல் கே சொன்னது…

@ஆர் வீ எஸ்

இதுல என்ன ஓய் ? எல்லோருக்கும் வேலைன்னு ஒன்னு இருக்கே

கீதா சாம்பசிவம் சொன்னது…

அரியர்ஸைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கிளியர் பண்ணறேன். :D

கீதா சாம்பசிவம் சொன்னது…

தொடர