Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

வியாபாரம் 8

 பழைய வியாபாரங்களை பார்க்க ரமேஷ் அங்கிருந்து கிளம்பியவுடன் சிறிது யோசனையில் ஆழ்ந்த சேகர், பின் தன் செல்போனில் இருந்து யாரையோ அழைத்தான் . ...


ரமேஷ் அங்கிருந்து கிளம்பியவுடன் சிறிது யோசனையில் ஆழ்ந்த சேகர், பின் தன் செல்போனில் இருந்து யாரையோ அழைத்தான் .

"ஆமாம் ஜெய் . நேரா அங்க போய் அவர்கிட்ட கேட்டுப் பாரு . இருந்தா வாங்கிக்கோ. இல்லைனாலும் பிரச்சனை இல்லை. அட்ரஸ் இருக்கும் எப்படியும் அந்த ஏரியால போய் விசாரிச்சு பாரு. எவ்வளவு நேரத்தில் அப்டேட் பண்ற ?"

"ஒரு ரெண்டு மணி நேரத்துல நானே உங்க லைனுக்கு வரேன் சார். "

"அப்படியே அந்த கிருஷ்ணன் வீடு இருக்கற அதே ரோட் எண்ட்ல ஒரு கடை இருக்கும். அந்தக் கடை ஓனர் கிட்டயும் விசாரிக்கணும். "

"ஓகே சார் . பண்ணிடறேன். "

ஜெய் ,சேகரின் நம்பிக்கைக்குரிய சப் இன்ஸ்பெக்டர். ஜெய்யிடம் பேசிவிட்டு , மீண்டும் மற்றொரு எண்ணுக்கு அழைத்தார். 

"ஜெயா! உடனே கிளம்பி பழைய பஸ் ஸ்ட்டேன்ட்ல இருக்கற கார்பரேஷன் காம்ப்ளெக்ஸ் தெரியும்தானே ? அங்க வந்திருங்க. ஒரு பொண்ணை விசாரிக்கணும்."

"ஓகே சார். "
"முக்கியமான விஷயம். யூனிபார்ம்ல வர வேண்டாம். நார்மல் ட்ரெஸ்ல வாங்க."

"ஓகே சார். அரைமணி நேரத்துல வந்துடறேன் சார்."

தானும் இப்ப கிளம்பினா சரியா இருக்கும் என்று எண்ணியவன், காரை கமிஷனர் ஆபிசுக்கு எடுத்து செல்ல சொல்லிவிட்டு அவனும் பழைய பேருந்து நிலையத்தை நோக்கி வண்டியை செலுத்தினான். 

அதே நேரம் அங்கு விஜி, ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு முகத்தை அலம்பிவிட்டு கடையில் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தாள்.  ஜெயா அங்கு வந்து சேர்வதுக்கு முன்பே அங்கே வந்த சேகர் , கடைக்கு எதிர்புறம் நின்று கொண்டு கடையை ஆராய்ந்து கொண்டிருந்தான். 

அவன் அங்கு வந்து சிறிது நேரத்திலேயே அவனது அலைபேசி சிணுங்கியது. ஜெயாவின் நம்பரில் இருந்து போன் . அழைப்பை உயிர்ப்பித்து அவளை அந்தக் கடை அடையாளம் சொல்லி அங்கே வர சொன்னான் . 


"ஜெயா ! இந்தக் கடையில் வேலை செய்யற பொண்ணுதான் அந்த டிரைவருக்கு கார்ட் வாங்கி தந்திருக்கு. அந்த டிரைவர்தான் குற்றவாளியான்னு நமக்கு உறுதியாத்  தெரியாது. அதனால கடையில் வெச்சி விசாரிக்க வேண்டாம். அந்த பொண்ணுகிட்ட போய் பேசி வெளில கூட்டிகிட்டு வாங்க. நான் பக்கத்தில் இருக்கற ஜூஸ் ஷாப்ல இருக்கறேன். எப்படி பேசணும்னு தெரியும்தான?"

"அதை நான் பார்த்துக்கறேன் சார். அஞ்சு நிமிசத்தில் ஜூஸ் ஷாப்ல மீட் பண்றேன்" சொல்லிவிட்டு அந்த ம்யூசிக் ஷாப்பினுள் நுழைந்தாள் ஜெயா. 


கடைக்கு வந்த வாடிக்கையாளர் என்றே அவளை நினைத்த அவளை "வாங்க மேடம்! என்ன சிடி வேண்டும் உங்களுக்கு ?" என்று கடை மேற்பார்வையாளர் போல்  இருந்தவர் கேட்டார். 

"இல்லை . எனக்கு சி டி எதுவும் வேண்டாம். இங்க விஜின்னு ஒரு பொண்ணு வேலை செய்யுத்துள்ள , அந்த பொண்ணோட அக்கா நான். இந்தப் பக்கம் வந்தேன். அதான் பார்த்துட்டு போலாம்னு .."

"நீங்க விஜியோட அக்காவா ? இருங்க விஜிய கூப்பிடறேன்."
"விஜி விஜி இங்க வாம்மா. உன் அக்கா வந்திருக்காங்க பாரு ".


கடையின் மறு புறத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு எதையோ எடுத்துக் காட்டிக்கொண்டிருந்த விஜி திகைப்படைந்தாள். தனக்கு யாரும் அக்கா இல்லியே என்று யோசித்துக் கொண்டே "இதோ ஒரு நிமிஷம் , வரேன் சார்" என்று குரல் கொடுத்தாள்.

அவள் குரல் கொடுக்கவும் ஜெயா அந்த இடத்திற்கு வரவும் சரியாக இருந்தது. 

அவள் இருந்த கவுண்டரை நெருங்கிய ஜெயா மெல்லியக் குரலில் "போலிஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து வரேன். கொஞ்சம் என் கூட வா. உன் கிட்ட விசாரிக்க வேண்டி இருக்கு. அக்காகூட ஜூஸ் கடை வரைக்கும் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு வா. மறக்காம உன் செல் போனையும் எடுத்துக்கிட்டு வா ."

நடப்பவற்றை கண்டு குழப்பமடைந்த விஜி என்ன பதில் சொல்வது என்றுப் புரியாமல் பேயறைந்த முகத்துடன் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

மீண்டும் கடையின் முன்பக்கம் வந்த ஜெயா , கடை சூபர்வைசரிடம் "சார் ! பக்கத்தில் இருக்கற ஜூஸ் கடை வரை கூட்டிகிட்டு போயிட்டு வரேன் சார். "

"ரொம்ப லேட் பண்ணிடாதீங்க. சீக்கிரம் அனுப்பிடுங்க. கஸ்டமர் வர நேரம் இது "

"இல்லை சார். ரொம்ப லேட் ஆகாது சார். ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷத்தில் அனுப்பிடறேன் சார். "

"சரி சரி "

விஜியை அழைத்துக் கொண்டு கடையில் இருந்து வெளியே வந்த சமயம், விஜியின் கையில் இருந்த அலைபேசியின் திரை ஒளிரத் துவங்கியது  . கடையில் இருந்ததால் சைலெண்டில் போட்டு வைத்திருந்ததால் அழைப்போசை வரவில்லை. 

பக்கத்தில் ஜெயா இருந்ததாலும், திரையில் வந்த என்னும் புதியதாய் இருந்ததாலும் அந்த அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்று ஒரு கணம்  யோசித்துப்  பின் ஜெயா தன்னை கவனிக்கிறாளா என்று ஓர கண்ணால் பார்த்தாள். ஜெயா இவளைப் பார்த்த மாதிரி தோன்றவில்லை அவளுக்கு. அவள் தன்னை கவனிக்கவில்லை என்றுத் தெரிந்தவுடன் அந்த அழைப்பைத் துண்டித்தாள். ஆனால் அலைபேசி ஒளிரத் துவங்கியதுமே விஜி என்ன செய்யப் போகிறாள் என்று யோசித்துக் கொண்டிருந்த ஜெயா இவள் அழைப்பைத் துண்டித்ததை கவனித்து விட்டாள். ஆனால் அதை கவனியாது போல் ஆவலுடன் ஜூஸ் கடையினில் நுழைந்தாள்.



கடையினில் நுழைந்து சேகர் இருந்த மேஜைக்கு சென்று அங்கிருந்த நாற்ககலியில் அமரவும் மீண்டும் அலைபேசி ஒளிரத் துவங்கியது. இந்த முறை சேகரும் கவனித்துவிட்டான். என்ன செய்வது என்றுப் புரியாமல் குழப்பமும் பயமும் கலந்த முகத்துடன் போனையும் சேகரின் முகத்தையும் மாறி மாறி  பார்த்துக் கொண்டிருந்தாள்
 
-வியாபாரம் தொடரும் 


அன்புடன் எல்கே

23 கருத்துகள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பிசினஸ் கன்டினியூ.....

குறையொன்றுமில்லை. சொன்னது…

இண்ட்ரெஸ்டிங்க். தொடருங்க.

எல் கே சொன்னது…

@மனோ

நன்றி


@லக்ஷ்மி

நன்றிமா

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அலைபேசி ஒளிரத் துவங்கியதுமே விஜி என்ன செய்யப் போகிறாள் என்று யோசித்துக் கொண்டிருந்த ஜெயா இவள் அழைப்பைத் துண்டித்ததை கவனித்து விட்டாள்//
That is Polish .

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

விஜி மாட்டிக்கிட்டா போலிருக்கே. விஜி மாட்டினா டிரைவரும் மாட்டுவார்ன்னு நினைக்கிறேன். கதை விறுவிறுப்பாப் போகுது. தொடருங்கள்.

எல் கே சொன்னது…

@ராஜராஜேஸ்வரி

ஆமாம். ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கறது அவ்ளோ ஈசி இல்லையே

எல் கே சொன்னது…

@வைகோ

பார்ப்போம் சார். என்ன நடக்குதுன்னு

ஸ்ரீராம். சொன்னது…

ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு வந்திட்டா மாதிரி தெரியுது....வேலை ஜாஸ்தியா கார்த்திக்...நீண்ட இடைவெளி...!

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம் அண்ணா

கிட்டத்தட்ட . வேலையும் கொஞ்சம் அதிகம்தான். நடுவில் வீட்டில் கணினி கொஞ்சம் பிரச்சனை. கொஞ்சம் கவிசோலையில் வேற முமுரம் ஆகிட்டேன் அப்புறம் ஐபிஎல் வேற. எல்லாம் சேர்ந்துவிட்டது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விறுவிறுப்பாய் செல்கிறது…. தொடரட்டும் வியாபாரம்….

நிரூபன் சொன்னது…

ஒவ்வோர் பகுதியிலும் ஆச்சரியப்பட வைக்கிறீங்களே சகா.
தொடருங்கள்.
இந்தப் பகுதியில் செல் போன் ஒலிக்க கட் பண்ணுதல், சிம் வாங்கிய கடைக்குப் போதல் என பல விடயங்களில் த்ரிலிங்கை அதிகரித்துள்ளீர்கள்.

எல் கே சொன்னது…

@மாதவி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@வெங்கட்

நன்றி வெங்கட்

எல் கே சொன்னது…

@நிரூபன்

நன்றி நண்பரே. கொஞ்சம் தப்பா புரிந்து கொண்டுள்ளீர்கள். சிம் வாங்கிய கடை அல்ல அது. அந்தப் பெண் வேலை செய்யும் கடை. எதற்கும் முன்பகுதிகளை கொஞ்சம் படிச்சிடுங்க

சுசி சொன்னது…

தொடருங்க கார்த்திக்.

எல் கே சொன்னது…

@சுசி

நன்றி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பெரியப்பா கவிதைல கதைல தொடர்கதைல அப்டின்னு ஆல்ரவுண்டரா இருக்காரே? ரைட்டர் ஆக ப்ளானோ?

எல் கே சொன்னது…

சித்தப்பு , இதுக்கு ரெண்டு திட்டி திட்டிடு ? ஏன் இப்படிலாம்

சாகம்பரி சொன்னது…

விசாரணை நடக்கும் விதம் நாகரிகமாக உள்ளது. நம்ம ஊர் போலீஸ்தானா?

Geetha Sambasivam சொன்னது…

நல்ல விறு விறு, குறையாமல் போகுது, கடத்தறதுக்கு மோட்டிவ் என்னவா இருக்கும்??? யோசிக்கிறேன். கண்டு பிடிக்கலாம். :D

Geetha Sambasivam சொன்னது…

தொடர

எல் கே சொன்னது…

@சாகம்பரி

எல்லா போலிசும் அப்படி இல்லையே ? (நிஜத்தில்தான் இல்லை கதையிலாவது இருக்கட்டுமே )

எல் கே சொன்னது…

@ கீதா
நன்றி. கண்டுபிடிங்க பாக்கலாம்