Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

வியாபாரம் 7

பழைய வியாபாரங்களைப் பார்க்க மொபைலில் தெரிந்த எண் புதிதாய் இருந்ததால் எடுப்பதா வேண்டாமா என்றக் குழப்பத்தில் ஒரு கணம் யோசித்தாலும், பின் அழ...

பழைய வியாபாரங்களைப் பார்க்க

மொபைலில் தெரிந்த எண் புதிதாய் இருந்ததால் எடுப்பதா வேண்டாமா என்றக் குழப்பத்தில் ஒரு கணம் யோசித்தாலும், பின் அழைப்பை உயிர்ப்பித்தாள்.

அழைப்பு இணைக்கப்பட்டவுடனேயே மறுமுனையில்  இருந்து
"விஜி ! நான்தான் பேசறேன் !"

தனக்கு பழக்கமான குரல் என்றவுடன் , மீண்டும் ஒருமுறை அது எந்த எண் என்றுப் பார்த்தாள். எதோ ஒரு தொலைபேசி எண் என்றுத் தெரிந்தவுடன் "என்ன லேன்ட்லைனில் இருந்து பண்ற ? மொபைல் என்னாச்சு எதுக்கு ஆப் பண்ணி வெச்சிருக்க ?"

"இல்லை ஒரு சின்ன பிரச்சனை . அதான் ஆப் பண்ணி வெச்சிருக்கேன் ."

"அது உனக்கு சின்ன பிரச்சனையா ? அந்த கார்டை வெச்சு என்ன பண்ண ? என்னை தேதி வீடு வரைக்கும் போலிஸ் வந்திருச்சி . கார்டை வெச்சிருக்கியா இல்லை என்ன பண்ண ?"

"போலிஸ் வந்துச்சா ? என்ன கேட்டாங்க ?"

"நீ என்ன பண்ண அதை முதல்ல சொல்லு ."

"அதை போன்ல சொல்ல முடியாது . நேர்ல வந்து சொல்றேன். போலிஸ் என்ன கேட்டாங்க அதை சொல்லு."

"நீ தப்பு பண்ணியா ? இல்லாட்டி அதை எதுக்கு திருப்பி திருப்பி கேட்கற ? இன்னும் என் கிட்ட எதுவும் கேட்கலை. வீட்டுக்கு போயிருக்காங்க. அனேகமா இங்க வருவாங்கான்னு நினைக்கிறேன்."

"சரி போலிஸ் கேட்டா, நீதான் வாங்கினே, ஆனா தொலைஞ்சு போச்சுன்னு சொல்லி சமாளி"

"ஆமாம் . அப்படியே நான் சொன்னா சரின்னு கேட்டுகிட்டு போய்டுவாங்க  பாரு . சொல்றதை சரியா சொல்லணும் . நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. உடனே கிளம்பி இங்க வா. நேர்ல பேசியாகணும் உன்கிட்ட."

"நிலைமை புரியாம விளையாடறியே நீ."

"என் நிலைமையை பாரு. உனக்கு கார்ட் வாங்கி தந்தது மட்டும்தான் நான். ஆனால் இப்ப பிரச்சனை எனக்குதான். அதை கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டேங்கறியே நீ ."

இத்தனை நேரம் பொங்கி வந்துக்கொண்டிருந்த அழுகையை கட்டுபடுத்தி பேசிக்கொண்டிருந்த விஜி அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அழத் துவங்கினாள்.

பெண்களின் கடைசி ஆயுதம் பிரயோகிக்கப் பட அதற்கு மேல் எந்த காரணமும் சொல்ல இயலாத ரமேஷ் , "சரி சரி அழாத. கொஞ்ச நேரத்தில வரேன். அங்க வந்துட்டு மறுபடியும் கூப்பிடறேன் " என்று சொன்னான் .

"ஏமாத்த மாட்டியே ? சீக்கிரம் வா " என்று கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்த வண்ணம் கூறி அழைப்பை துண்டித்தாள் விஜி.


அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன் குழப்பத்தில் ஆழ்ந்தான் ரமேஷ். இப்பொழுது அவளை சென்றுப் பார்ப்பதா இல்லை இருக்கும் ஆபத்தை சமாளிப்பதா என்று யோசிக்கத் துவங்கினான். சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு , எப்படியும் அவளை பார்த்தாக வேண்டும் . போலிஸ் அவள் மூலம் நம்மை அணுகும் முன் இங்கிருந்து இடத்தையும் மாற்றியாக வேண்டும் . முதலில் காரை விட்டு வந்த  இடத்திற்கு சென்று அங்கிருக்கும் நிலையை ஆராய முடிவு செய்தான். பின் அடுத்து என்ன செய்வது என்ற முடிவுக்கு வருவோம் என்றெண்ணி நண்பனிடம் கடன் வாங்கி வந்திருந்த பைக்கை கிளப்பினான்.


காரை விட்ட இடத்திற்கு அருகில் வந்தவன் , அதன் எதிரே இருந்த டீக்கடையில் போலிஸ் இருப்பதை பார்த்துவிட்டு அங்கே நுழையாமல் அதன் அருகில் இருந்த ஒரு பொட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக் கொண்டு அதை பற்ற வைத்துக் கொண்டு டீக் கடையில் நடப்பவற்றை பார்க்க ஆரம்பித்தான்.

அங்கிருந்தவர்களை விசாரித்துக் கொண்டிருந்த சேகர் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களையும் நோட்டம் விடுவதை பார்த்த ரமேஷ் மெதுவாக அங்கிருந்து கிளம்ப முயற்சித்தான்.

அவன் அங்கு வந்து நின்றது முதலே அவனை பார்த்துவிட்ட சேகர் , அவன் நழுவ முயன்றவுடனேயே துரத்திப் பிடித்தார்.


"சார் விடுங்க சார். எதுக்கு சார் என்னைப் பிடிக்கறீங்க ?"

"எதுக்கு இங்கிருந்து இவ்வளவு அவசரமா போகப் பார்த்த ?"

"எனக்கும் இதுக்கும் என்ன சார் சம்பந்தம்? போற வழில தம் அடிக்க நின்னேன். முடிச்சிட்டேன் . கிளம்பறேன். இங்க என்னப் பிரச்சனைன்னு கூட எனக்குத் தெரியாது. நான் எதுக்கு பயப் படனும்"

உள்ளுக்குள் பயமிருந்தாலும், வெளியே அதைக் காட்டாமல் மிகத் தெளிவாக உரத்து பேசினான்.

"உன் பேரு என்ன ?"

"ரமேஷ் "

"வண்டி யாருது ?"

"என் பிரெண்டோட வண்டி சார்."

"வண்டி ஆர் சி இருக்கா?"

"இருக்கு சார்."

 பெட்ரோல் டேங் மேலிருந்த கவரில் இருந்து ஆர்சி யை எடுத்துக் கொடுத்தான்

அதைப் பார்த்த சேகர் ,"சரி உன் பிரெண்ட கூட்டிகிட்டு வந்து வண்டியை ஸ்டேஷன்ல இருந்து எடுத்துக்க . இப்ப நீ கிளம்பு ."

"ஏன் சார் ? இப்ப என்ன பிரச்சனை ? எதுக்கு வண்டியை தரமாட்டேங்கறீங்க ?"

"வண்டி உன் பிரெண்டோட வண்டிதான?"

"ஆமாம்"

"அப்புறம் என்ன பிரச்சனை? அவனை கூட்டிகிட்டு வா . வண்டியை எடுத்துகிட்டு போலாம். "

இனி அவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று முடிவெடுத்த ரமேஷ் "சரி சார். அவனைக் கூட்டிகிட்டு வந்து வண்டியை எடுத்துக்கறேன்" என்று சொல்லி கிளம்ப எத்தனித்தான்.

"ரமேஷ் , ஒரு நிமிஷம் " என்று அவனை நிற்க சொன்ன சேகர் அங்கிருந்த கான்ஸ்டபிளை அழைத்தான்.

" இவரோட அட்ரஸ் அப்புறம் லைசென்சை வாங்கி வெச்சுகோங்க. அவர் பிரெண்டை கூட்டிகிட்டு வந்தப்புறம் விசாரிச்சிட்டு வண்டியை குடுங்க "

ஒரு வழியாய் அங்கிருந்து கிளம்பிய ரமேஷ் , உடனடியாய் விஜியை பார்க்க போவதா வேண்டாமா என்று யோசித்தான். தான் அங்கே செல்லும்பொழுது இந்த சேகர் அங்கு வந்தால் தான் வசமாக மாட்டிக் கொள்வோம் என்று நினைத்தான். எனவே இப்பொழுது தங்கி இருக்கும் இடத்தில் இருந்து எப்படி வெளியேறுவது என்ற வழியை முதலில் பார்ப்போம் என்று முடிவெடுத்தவனாய் தனக்கு தெரிந்த இன்னொரு நண்பனுக்கு அழைக்கத் துவங்கினான் . தன் நண்பனை அழைத்து காருக்கு ஏற்பாடு பண்ணியவன் மாலையில் வந்து காரை எடுத்துக் கொள்வதாகக் கூறினான்.

தாற்காலிகமாக அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்த ரமேஷின் முகத்தில் தெரிந்த சோர்வை கண்ட சங்கர்

"என்னாச்சு ரமேஷ் ? எதாவது பிரச்சனையா ?"

"பிரச்சனையா ? நீ வேற . தப்பி வரதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன் . "

"என்னாச்சு ?"

"இவர் வீட்டுக்கு போன் பண்ணிட்டு , காரை விட்ட இடத்தில் நிலை எப்படி இருக்குதுன்னு பார்க்க போனேன் . இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக்கிட்டேன். எதோ சொல்லி தப்பிச்சிட்டேன்."

"சந்தேகப் படலையா ?"

"கொஞ்சம் சந்தேகம் இருக்கும்னு நினைக்கிறேன் ."

"எதுக்கும் ஈவ்னிங் இங்க இருந்து நாம கிளம்பிடறது நல்லது. "

"நைட் தான கிளம்பலாம்னு இருந்தோம்  "

"ஆமாம் . ஆனால் இங்க இருக்கறது அவ்ளோ நல்லது இல்லை. எவ்ளோ சீக்கிரம் கிளம்பரமோ அவ்ளோ நல்லது."

"சரி எந்த வழில இங்க இருந்து போகப் போறோம் ?"

"நீங்க ரெண்டு பேரும் இவரை கார்ல ஏத்திகிட்டு இங்க இருந்து அம்மாப்பேட்டை  வழியா அயோத்தியாபட்டினம் கேட்டுக்கு போய்டுங்க. அங்க இருந்து வலசையூர் போற வழி தெரியும்தானே ?"

"தெரியுமே . அங்க போய் ..."

"வலசையூர்ல இருந்து ஏற்காட்டுக்கு ஒரு வழி போகுது . அந்த ரூட் பிரச்சனை இருக்காது. பொதுவா அங்க எந்த செக் போஸ்ட்டும் இல்லை. அயோத்தியாப்பட்டினம் செக் போஸ்ட்ல எனக்குத் தெரிஞ்சு பத்துமணிக்கு மேலதான் போலிஸ் இருப்பாங்க,. அதுக்கு முன்னாடி நாம அதை க்ராஸ் பண்ணிடனும். உங்க கிட்ட காரை கொடுத்தப்புறம் நான் பஸ் பிடிச்சு ஏற்காடு வந்திடுவேன். உங்களுக்கு அந்த ரூட் தெரியும்தானே ?"

"ம்ம் தெரியும் ரெண்டு முறை போயிருக்கேன் ."

"அப்ப சரி. நான் மலைக்கு வந்தப்புறம் உங்களுக்கு கால் பண்றேன். "

- வியாபாரம் தொடரும் 

52 கருத்துகள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மொத டீலிங்க் வித் பெரியப்பா

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இங்க இருக்கறது அவ்ளோ நல்லது இல்லை. எவ்ளோ சீக்கிரம் கிளம்பரமோ அவ்ளோ நல்லது."//
Interesting.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ம் ம் செம ஸ்பீடாத்தான் கதை போகுது.. பெரியப்பா பஸ்ல ட்ராவலிங்க்ல இருக்கும்போதே எழுதி இருப்பாரோ? #டவுட்டு

எல் கே சொன்னது…

@ராஜராஜேஸ்வரி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@செந்தில்

சித்தப்பு நான் எங்க பஸ்ல போறேன் ?? வீட்ல இருந்து வண்டிதான். ஊருக்கு வரதா இருந்தாதான் பஸ்சு. இப்போதைக்கு அதுவும் இல்லை

நன்றி

A.R.ராஜகோபாலன் சொன்னது…

வியாபாரம்
விறுவிறுப்பா
வேகம் எடுக்குது

பனித்துளி சங்கர் சொன்னது…

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் எழுத்து நடை அமைந்திருக்கிறது அருமை . மீண்டும் தொடருக்காக காத்திருக்கிறேன்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரசிக்கும் படி இருந்தது..
தொடருங்கள்...

Chitra சொன்னது…

பத்திகளை பிரித்து இருக்கும் விதம், உரையாடல்களை தனித்து காட்டி இருப்பது, எழுத்து நடை, என்று வாசிப்பதற்கு எளிதாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன.

பெயரில்லா சொன்னது…

பெண்களின் கடைசி ஆயுதம் பிரயோகிக்கப் பட அதற்கு மேல் எந்த காரணமும் சொல்ல இயலாத ரமேஷ் //
ஹ்ஹஹ்ஹா

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

ரொம்ப பயமுறுத்தறீங்க கார்த்திக்.

vanathy சொன்னது…

சூப்பரான எழுத்து நடை. வெயிட்டிங் for the next part.

சாகம்பரி சொன்னது…

very nice , its going on well like sherlock holmes

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

விளம்பரம் இல்லாமல் சீரியல் பார்ப்பது போலவே இருக்கு.

எல் கே சொன்னது…

@ராஜகோபாலன்

நன்றி சார்

எல் கே சொன்னது…

@சங்கர்

வாங்க. ரொம்ப நாளா ஆளை காணோம். ரொம்ப நன்றி

எல் கே சொன்னது…

@கவிதை வீதி சௌந்தர்

நன்றி நண்பரே

எல் கே சொன்னது…

@சித்ரா

உங்கள் ரசனைக்கும், பாராட்டுக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@ஆர் கே

விவகாரமா அதை மட்டும் ஏன்யா எடுத்து கமென்ட் போட்ட

எல் கே சொன்னது…

@சுந்தர் ஜி

அப்படியா ?? அப்ப சரி

எல் கே சொன்னது…

@வாணி

சீக்கிரம் போட்டுடலாம் வாணி

எல் கே சொன்னது…

@சாகம்பரி

அவர் கதைகளை நான் படிச்சது இல்லீங்க . கேள்விபட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு ஒப்பிட்டதுக்கு நன்றி

எல் கே சொன்னது…

@ஆச்சி

அவ்ளோ மோசமா இருக்குன்னு சொல்றீங்களோ (சும்மா )

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

விறுவிறுப்பா இருந்தது...good going..:)

ஸ்ரீராம். சொன்னது…

நைட்டு கிளம்பறதுக்கு பதில் சாயங்காலமே கிளம்பறாங்களா.... இப்பவே லேட்டுங்க....!!

குறையொன்றுமில்லை. சொன்னது…

போலிசைக்கண்டு ரமெஷ் பயந்து ஒதுங்குவதைப்பார்த்தாலே ஏதோ
தில்லு முல்லுல மாட்டியிருக்கான்னோன்னு சந்தேகம் வருது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கதையில் விறுவிறுப்பு ராக்கெட் வேகத்தில் சூடு பிடித்துள்ளது.

தொடருங்கள்.

Geetha Sambasivam சொன்னது…

கடத்தலுக்கான காரணமே தெரியலையே???

Geetha Sambasivam சொன்னது…

தொடர

middleclassmadhavi சொன்னது…

நல்லாப் போகுது!!

Thenammai Lakshmanan சொன்னது…

ரொம்ப த்ரில்லிங்கா போயிக்கிட்டு இருக்கு வியாபரம்..எல் கே

மோகன்ஜி சொன்னது…

உரையாடல்களிலேயே லாவகமாய் பதிவை நகர்த்துவது அற்புதம் கார்த்திக்.

RVS சொன்னது…

சபாஷ். திடீர்னு அதிவேகமா நவுருது. சரி எதுக்காக கடத்தணும்? ;-))

Jaleela Kamal சொன்னது…

ம்ம் படிச்ச்சாச்சு

ஷர்புதீன் சொன்னது…

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி

எல் கே சொன்னது…

@அப்பாவி

நன்றி

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்


அப்படி சொல்றீங்களா. சீக்கிரம் கிளம்ப சொல்றேன்

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

ஹ்ம்ம் சந்தேகம் வரலாம் . அப்படி இல்லாமையும் போகலாம்

எல் கே சொன்னது…

@வைகோ

நன்றி சார்

எல் கே சொன்னது…

@சுசி

தொடர்கிறேன்

எல் கே சொன்னது…

@கீதா

இதுக்குதான் ஒழுங்கா படிக்கணும்னு சொல்றது. http://lksthoughts.blogspot.com/2011/05/5.html படிங்க

எல் கே சொன்னது…

@மாதவி

ரொம்ப லேட்டா வர மாதிரி தோணுது

எல் கே சொன்னது…

@தேனம்மை
ரொம்ப நன்றிக்கா

எல் கே சொன்னது…

@மோகன் ஜி

எனக்குத் தெரிந்தது அதுதான். நன்றி

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

மைனர்வாள் தெக்கால போயிட்டு வந்தா மறந்து போயிடுமா

http://lksthoughts.blogspot.com/2011/05/5.html

படிச்சிட்டு வாரும்

எல் கே சொன்னது…

@ஜலீலா


நன்றி சகோ

எல் கே சொன்னது…

@சர்புதீன்

இதெல்லாம் எந்த அளவுகோளில் நீங்கள் மதிப்பிட்டீர்கள் என்று நானறியேன்.

இருந்தாலும் தங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி நண்பரே

GEETHA ACHAL சொன்னது…

அப்பாடா..இப்ப தான் முதல் பகுதியில் இருந்து 7வது பகுதி வரை படித்தேன்..ரொமப் நல்லா இருக்கு...
இதுக்கு தான் தொடர் கதைகளினை எல்லாம் முடித்த பிறகு படிக்க வேண்டும்...

இப்ப பாருங்க...அடுத்த பகுதி எப்போ வரும் என்று டென்ஷாக இருக்கு...

எல் கே சொன்னது…

@கீதா


நன்றி. தாமதம் ஆவதற்கு மன்னிக்கவும். நாளை போட்டுவிடுகிறேன்

அன்புடன் மலிக்கா சொன்னது…

வியாபாரம் படு விறுவிறுப்பாக..

ஸ்ரீராம். சொன்னது…

என்ன.... டெம்ப்ளேட் மாத்தியாச்சா....

நிரூபன் சொன்னது…

அடுத்த அங்கத்தில் ரமேஷ் மாட்டிக்குவான் என்று நினைக்கிறேன்.
பயங்கர சஸ்பென்ஸாக கதையினை நகர்த்துறீங்க சகோ.