மே 09, 2011

வியாபாரம் 6


டென்சனில் என்ன பேசுவது என்றுப் புரியாமல் தவித்த விஜி , ஒரு வழியாய் எதோ ஒரு சமாதானம் சொல்லி அழைப்பை முடித்தாள். அதன் பின்னும் அவளுக்கு படப்படப்புக் குறையவில்லை என்பதை அவள் முகமே சொல்லியது . பின் எதோ நினைத்தவளாக , தன் அலைப்பேசியில் ஒரு எண்ணைத் தேடி அதற்கு அழைத்தாள். மறுமுனையில் அந்த எண் தொடர்புக் கொள்ளும் நிலையில் இல்லை என்ற மெசேஜ் வர சலிப்புடன் அழைப்பைத் துண்டித்தாள்.

சாதாரணமாக  செய்த உதவி தன்னை இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விடும் என்று அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை. கோபம், பயம், குழப்பம் என்று அனைத்து உணர்ச்சிகளும் ஒரே சமயத்தில் கிட்டத் தட்ட அழுதுவிடுவது போல் இருந்தாள். அடுத்து என்ன செய்வது என்றுப் புரியாமல் குழம்பிய மனத்துடன் , எதிரே இருந்த பஸ்களைப் பார்த்தாவாறே நின்றிருந்தாள்

கண்ணின் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்க அதே சமயத்தில் அவள் அலைபேசி அழைக்க அதில் இருந்த எண் புதிதாய் இருந்ததால் ஒரு கணம் யோசித்தாள். பின் அழைப்பை உயிர்ப்பிக்க மறுமுனையில் அவளுக்குப் பழக்கமானக் குரல் பேசத் துவங்கியது .

*****************************************************************************************************

"இன்னும் எவ்வளவு நேரம் நாம இங்க இருக்கணும் ?"

"இருட்டும் வரைக்கும் எங்கயும் போக முடியாது . சிட்டியை விட்டு எப்படி வெளிலப் போறதுன்னு முதல்ல யோசிக்கணும் . இருந்த காரும் ரிப்பேர் ஆகிடுச்சி."

"அதுக்குதான் ரமேஷ் போயிருக்கான். வேற கார் ஏற்பாடு பண்ணமுடியுமான்னு பார்த்துட்டு அப்படியே நாம அந்தக் காரை விட்டுட்டு வந்த இடத்தில் நிலைமை எப்படி இருக்குதுன்னு பார்க்கறேன்னு சொல்லி இருக்கான். "

"எப்ப வரேன்னு ஏதாவது சொன்னானா ?"

"போன் பண்றேன்னு சொல்லி இருக்கான்."

"ஹ்ம்ம் சரி . அவர் இன்னும் மயக்கதில்தானே இருக்கார்."

"ஆமாம். இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டார்"

"அதுதான் நல்லது."

அதே நேரத்தில் செவ்வாய்ப்பேட்டை பஜாரில் ஸ்ரீனிவாச செட்டியார் காணமல் போன செய்தி வெளியே பரவ ஆரம்பிக்க , பஜார் முழுவதும் ஒருவித மெல்லியப் பரபரப்பு காணப்பட்டது. அவர்கள் குடும்பத்திற்கு நெருங்கியவர்கள், நேராக வீட்டிற்கு சென்று விசாரிக்கத் துவங்கினர். கிருஷ்ணனுக்கு போன் செய்ய நினைத்தவர்கள் அவன் காவல் துறையினரைப் பார்க்க சென்றிருக்கிறான் என்றவுடன் தங்கள் நினைப்பைக் கைவிட்டனர். இப்பொழுது போன் செய்தால் தங்களுக்கும் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற சுயநலத்தில் நழுவினர்.

********************************************************************************************************

கிருஷ்ணனிடம் அவருக்கு அழைப்பு வந்த எண்ணை வாங்கிய சேகர், அதை ஒரு நிமிடம் ஆராய்ந்தார். தனியார் தொலைப்பேசியின் எண் என்றுத் தெரிந்தது. ஒரு வேளை ஒரு ரூபாய் போட்டுப் பேசும் பொதுத் தொலைப்பேசியாய் இருக்குமோ என்று சந்தேகம். இருந்தாலும் எந்த ஏரியா என்பதுத் தெரிந்துவிடுமே என்று கண்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தந்து அந்த எண் எந்தப் பகுதியில் உள்ளது என்று விசாரிக்க சொன்னார். 


பின் அங்கிருந்த கான்ஸ்டபிளை அணுகியவர் , அந்தப் பகுதியைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார். அவரிடம் பேசியவாறே கார் இருந்தப் பகுதியை மீண்டும் பார்த்தவரின்  கண் புதிதாய் அங்கு எதையோ பார்த்தது போல் ஒரு நிமிடம் பிரகாசம் ஆனது. பின் அதைப் பார்த்தும் பார்க்காதவர் போல் எதிர்புறம் இருந்தக் கடைகளில் இருந்தவர்களை பார்த்தவர், மெதுவாக டீக்கடையை நோக்கி சென்றார். 

அவர் அங்கு நுழைந்ததுமே உள்ளிருந்தவர்களை ஒரு முறை பார்த்தவர் , போலீசைக் கண்டவுடன் வரும் சாதாரண பயமே அங்கிருந்தவர்கள் முகத்தில் இருப்பதைப் பார்த்து பின் கடை உரிமையாளரிடம் விசாரிக்கத் துவங்கினார். விசாரிக்கும் பொழுதே அவர் கண்கள் அக்கம் பக்கக் கடைகளிலும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. 


இவர் பார்ப்பதைப் பார்த்தவுடன் , அங்கிருந்து ஒருவன் மெதுவாக நழுவ முற்பட்டான். அதைக் கண்ட அவர் , உடனடியாக அவனை நோக்கி விரைந்தார். 


- வியாபாரம் தொடர்ந்து நடக்கும்

37 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அப்புறம் என்ன ஆச்சு? காணாமல்போன செட்டியார் என்ன ஆனாரோ என்ற கவலை நாளுக்குநாள் ஜாஸ்தியாகுதே !

Lakshmi சொன்னது…

அப்புரம் என்னாச்சுன்னே யூகிக்கமுடியாமல் திறமையாக கொண்டு செல்கிரீர்கள்.எதிர்பார்ப்பு எகிருது.

சசிகுமார் சொன்னது…

அண்ணே ஏன் ஒட்டு பட்டைகளை வைக்க வில்லை அண்ணே திரட்டிகளில் இணைக்கிறீர்களா இல்லையா. ஹிட்ஸ் என்ற ஒன்று பதிவுலகத்தை ஆட்கொண்டுள்ள போதிலும் இதில் இருந்து தள்ளியே நிற்கும் தங்களின் மனம் செயல் பாராட்ட பட வேண்டிய ஒன்று.

Chitra சொன்னது…

Good going.... :-)

வல்லிசிம்ஹன் சொன்னது…

WIll come back after reading all the posts L.K. very interesting writing.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரைட்டு....

Gayathri சொன்னது…

அவ்வ்வ்வ்வ் அப்புறம்....தங்கமணி அக்காக்கு போட்டியா ஒரே சுச்பென்ஸ்

vanathy சொன்னது…

super! well written.

அப்பாவி தங்கமணி சொன்னது…

விறுவிறுப்பா போகுது... நடக்கட்டும் நடக்கட்டும்...:)

ஸ்ரீராம். சொன்னது…

வண்டியின் அருகில் ஏதாவது எஃப் எம் மைக் இருந்திருக்குமோ? என்னவாக இருக்கும்?

சுசி சொன்னது…

கொஞ்சமா எழுதறிங்க.. சீக்கிரமே தொடரும் வந்திடுது :(

எல் கே சொன்னது…

@வைகோ

அவர் பத்திரமாதான் இருப்பாருன்னு நினைக்கிறேன். நன்றி

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

ரொம்ப நன்றிமா.

எல் கே சொன்னது…

@சசிகுமார்

நன்றி தம்பி. எப்ப தமிழ்மணம் தரவரிசை என்று ஒன்றை உருவாக்கியதோ அப்பவே ஓட்டுப்பட்டைகளை நீக்கிவிட்டேன். தமிழ்மணம் ஆர் எஸ் எஸ் செய்தியோடை அடிப்படையில் இயங்குவதால் அதில் மட்டும் நேரடியாக இணையும். மற்றப்படி நான் சேர்ப்பது இல்லை.

முக்கியமான ஏதாவது ஒரு பதிவு அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்று நினைத்தால் இன்ட்லியிலும் இணைப்பேன். ஆனால் ஓட்டுப பட்டை இனி வைப்பதில்லை என்ற முடிவில் என்ற மாற்றமும் இல்லை

எல் கே சொன்னது…

@சித்ரா

நன்னி ஹை!!!

எல் கே சொன்னது…

@வல்லிமா

உங்க வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிமா

எல் கே சொன்னது…

@மனோ

ராங்கு

எல் கே சொன்னது…

@காயத்ரி

என்னது அப்பாவி கூட நான் போட்டியா அதெல்லாம் நடக்காது ... யார்கூட நான் போட்டிப் போடறது

எல் கே சொன்னது…

@வாணி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@அப்பாவி

நடக்கும் நடக்கும்

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா , நீங்க போர்க்கொடி கதைன்னு நினைசிடீங்க .. என் கதையில் அந்த அளவுக்கு அறிவியல் விஞானனம் எல்லாம் வராது

எல் கே சொன்னது…

@சுசி
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எழுதுவது என்று முடிவு செய்துள்ளேன். அடுத்த முறை பெரிதாக போடா முயல்கிறேன்

asiya omar சொன்னது…

கதை சூப்பராக போகுது..எழுத்து மிக அருமை.

geethasmbsvm6 சொன்னது…

சரிதான், ஆனால் ரொம்பவே கொஞ்சமாய் எழுதுவதால் கொஞ்சம் படிக்க உற்சாகக் குறைவு ஏற்படுகிறது. நல்லா விறுவிறுப்பா இருக்கு.

போர்க்கொடிக்குக் கதை வேறேயா எழுதத் தெரியும்? அதுவும் அறிவியல் கதை? :P :P

எல் கே சொன்னது…

@ஆசியா
வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி

எல் கே சொன்னது…

@கீதா

வீட்டில் கணினி பிரச்சனை. இன்னிக்குதான் சரி பண்ணி இருக்கேன். அலுவலகத்தில் இருந்து எனுதியதால், எழுதியவரை அபப்டியே போட்டுட்டேன்.

எல் கே சொன்னது…

@கீதா

போர்க்கொடி அருமையா கதை விடுவாங்க சாரி எழுதுவாங்க

Jaleela Kamal சொன்னது…

கத நல்ல போய் கொண்டு இருக்கு

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விறுவிறுப்பான கதையின் நகர்விற்குப் பாராட்டுக்கள்.

மோகன்ஜி சொன்னது…

விட்டதைஎல்லாம் ஒரு மூச்சில் படித்தேன் கார்த்திக். சுவாரஸ்யமாய் கொண்டு செல்கிறீர்கள். செட்டியாரை ஒண்ணும் பண்ணிடாதீங்க!

ஹுஸைனம்மா சொன்னது…

நீங்க சின்னசின்னதா எழுதறதனால, (எனக்கு) கண்டினியுட்டி விட்டுப் போற மாதிரி ஃபீலிங். ரொம்ப யோசிச்சுதான், முந்தின எபிசோடை நினைவுபடுத்த வேண்டியிருக்கு. கொஞ்சம் பெரிய பதிவா எழுதுங்க.
மற்றபடி, கதை விறுவிறுப்பாப் போகுது.

சாகம்பரி சொன்னது…

//கிருஷ்ணனுக்கு போன் செய்ய நினைத்தவர்கள் அவன் காவல் துறையினரைப் பார்க்க சென்றிருக்கிறான் என்றவுடன் தங்கள் நினைப்பைக் கைவிட்டனர். இப்பொழுது போன் செய்தால் தங்களுக்கும் ஏதாவது பிரச்சனை வருமோ//
இது ரொம்ப சகஜமாக நடக்கிறது.
வியாபாரம் லாபம் போல.

Shriram சொன்னது…

Nice.

எல் கே சொன்னது…

@ஜலீலா

நன்றி சகோ

எல் கே சொன்னது…

@ராஜராஜேஸ்வரி

ஹ்ம்ம் நன்றிங்க

எல் கே சொன்னது…

@மோகன் ஜி

எங்க காணோம்னு பார்த்துகிட்டு இருந்தேன். என் கையில் என்ன இருக்கு .அவங்க என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்

நிரூபன் சொன்னது…

கடையில் இருந்து எஸ் ஆகியவனிடம் தான் நிறைய மர்மங்கள் துலங்கும் என நினைக்கிறேன். அடுத்த அங்கத்தினைப் படிப்போம்.