Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

வியாபாரம் 4

பழைய வியாபாரங்களைப் பார்க்க போலிப்பெயரில் அந்த கார்ட் வாங்கப் பட்டிருக்கும் என்று முன்னமே தெரிந்திருந்தாலும் , அங்கு கிடைத்த தகவல்கள் இந்த...

போலிப்பெயரில் அந்த கார்ட் வாங்கப் பட்டிருக்கும் என்று முன்னமே தெரிந்திருந்தாலும் , அங்கு கிடைத்த தகவல்கள் இந்த வழக்கில் இன்னும் சிலர் சம்பந்தப் பட்டிருப்பரோ என்று எண்ணத்தூண்டியது .

முகவரியில் குறிப்பிடப்பட்டிருந்த வீட்டை அணுகி , கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தான். சில நொடிகள் காத்திருத்தலுக்குப் பிறகு , நாற்பது வயதை ஒட்டியப் பெண்மணி ஒருவர் கதவைத் திறந்தார்.  காவல்துறைக்கே உரிய காக்கி உடையில் வராமல் சாதாரண உடையில் சேகர் வந்ததால் 

"யாருங்க ? யார் வேணும் உங்களுக்கு ?

" முத்து யாருங்க இங்க ."

"என் வீட்டுக்காரர்தான். நீங்க யாரு ? உங்களுக்கு என்ன வேணும் ?"

 நான் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல இருந்துவரேன். இப்ப சமீபத்தில் அவர் எதவாது மொபைல் கார்டு வாங்கினாரா ?

"எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. அவர் உள்ளதான் இருக்கார் . அவர்கிட்டயே கேட்டுகோங்க "

"ஏங்க கொஞ்சம் வாங்க " என்றுத் தன் கணவரை அழைத்தவாறே சேகரையும் உள்ளே வரசொன்னாள்.

"நீங்கதான் முத்துவா ?"

"ஆமா சார். என்ன விஷயம் ?"

"இப்ப சமீபத்தில எதவாது சிம் கார்ட் வாங்கினீங்களா ?"

" ஏன் சார் என்னாச்சு ?"

"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க "

"இல்லீங்களே . நான் ஒரு வருசத்துக்கு முன்னாடி வாங்கினேன் . அதுக்கப்புறம் எதுவும் நான் வாங்கலயே சார் ."

"அப்ப இந்த நம்பர் யாருது ? இந்த நம்பர் உங்க பேர்லதான் வாங்கி இருக்காங்க ?" என்று சொல்லி அந்த நம்பரை சொன்னான் .

"இல்லீங்களே . நான் எதுவும் இப்ப கார்ட் வாங்கலயே ."

"வேற யாருக்காவது வாங்கித் தந்தீங்களா ?"

"என் பொண்ணுதான் கார்ட் வாங்கனும்னு சொன்னா. ஆனா இந்த நம்பர் அவளோட நம்பர் இல்லையே ?"

"உங்க பொண்ணுக்கு நீங்க வாங்கிக் கொடுத்தீங்களா இல்லை வெறும் டாக்குமென்ட் மட்டும் கொடுத்தீங்களா ?"

"எதோ அட்ரஸ் ப்ரூப் வேணும்னு ரேஷன் கார்டு வாங்கிட்டு போச்சுங்க "

"உங்க பொண்ணு இப்ப எங்க ? வீட்ல இருந்தா கூப்பிடுங்க."

"இல்லீங்க வேலைக்கு போயிருக்கு . "

"எங்க வேலை செய்யறாங்க? அந்த அட்ரஸ் கொடுங்க ?"

"டவுன் பஸ் ஸ்டேன்ட்ல காம்ப்ளக்ஸ்ல கணேஷ் ம்யூசிக் ஸ்டோர்ல வேலை செய்யுதுங்க."

"உங்க பொண்ணு பேரு என்ன ? "

"விஜி "

"சரி நான் அங்க போய் விசாரிச்சுக்கறேன் "

"சார் எதாவது பிரச்சனையா ?"

"ஆமாம். உங்க பொண்ணு உங்க பேர்ல வேற ஒருத்தருக்கு சிம் கார்ட் வாங்கி தந்திருக்கு . அந்த ஆளை இப்ப வேற ஒரு கேஸ் விஷயமா தேடிகிட்டு இருக்கோம் ."

"என் பொண்ணுக்கு எந்தப் பிரச்சனையும் வராதே ?"

"அது உங்க பொண்ணு சொல்ற விஷயத்தை பொறுத்து இருக்கு . தேவைப்பட்டா  மறுபடியும் வரேன். "

அங்கிருந்து கிளம்பிய சேகர் பழைய பஸ் ஸ்டேண்டை நோக்கி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். குகைப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது அவனது அலைபேசி மீண்டும் அலறத் துவங்கியது. 

"அப்படியா ?"

"பத்து நிமிஷத்தில் அங்க இருப்பேன் " என்று சொல்லியவாறே வண்டியைத் திருப்பியவன் எதோ நினைத்தவனாக வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்தி , முதல் நாள் தான் குறித்துக் கொண்ட கிருஷ்ணனின் எண்ணுக்கு அழைத்து உடனே கிளம்பி உடையாப்பட்டி பை பாஸில் இருந்து சீலநாயக்கன்பட்டி பை பாஸ் செல்லும் ரோட்டில் ஒரு இடத்தை சொல்லி அங்கு வருமாறு சொல்லிப் பின் தன் வண்டியை அங்கே விரட்டினான்.


 பதினைந்து நிமிடம் கழித்து அந்த இடத்திற்கு சென்றவன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே தன் வண்டியை நிறுத்தினான். பின் காரின் அருகே சென்று அதைப் பார்த்தவரே அங்கிருந்த காவல் துறையினரிடம் விசாரிக்க ஆரம்பித்தான்.

"எப்ப இருந்து இந்த கார் இங்க நிக்குது ? யார் முதலில் பார்த்தது ?"

"நேத்து நைட் ரெண்டு மணி வரைக்கும் இந்த கார் இங்க இல்லை சார் . அதுக்கு அப்புறம்தான் கொண்டுவந்து நிறுத்தி இருக்கணும்."

"அதெப்படி அவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க ?"

"நைட் ரெண்டு மணிக்கு ஹைவே ரோந்து போலிஸ் வருவாங்க சார். அவங்க கண்ணில் பட்டிருந்தா அப்பவே விஷாரிச்சிருப்பங்க. "

"கார் லாக் ஆகி இருக்கா?"

"இல்லை சார். வண்டி சாவிக் கூட உள்ளதான் இருக்கு."

"யார் ரிப்போர்ட் பண்ணது?"

"எதிர்ல இருக்கற டீக்கடைக்காரர் தான் சொன்னார்."

"சரி வாங்க. கார் ஓனருக்கு சொல்லியிருக்கேன். அவர்  வரதுக்கு முன்னாடி அந்த டீக்கடைக்காரரை விஷாரிச்சிட்டு வருவோம் ."

"இந்தக் காரை எப்ப பார்த்த?"

"எப்பவும் காலையில் அஞ்சு மணிக்கு கடையை திறப்பேன். அப்பவே இந்தக் கார் இங்கதான் இருந்தது சார் "

"எத்தனை மணிக்கு போலிசுக்கு சொன்ன ?"

"இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ."

"ஏன் இவ்ளோ லேட் பண்ண ?"

"சில சமயம் யாரவது கார் ரிப்பேர் ஆகி இருந்தாலும் , இங்க விட்டுட்டு போயிட்டு காலையில் ஆளக் கூட்டிகிட்டு வந்து சரி பண்ணி எடுத்துக்கிட்டுப் போவாங்க. அந்த மாதிரி ஏதாவது இருக்கும்னுதான் சொல்லலைங்க. ரொம்ப நேரம் ஆகியும் யாரும் வரலை. அதான் போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணேன் ."

"சரி "

"கார் உள்ள தேடித் பார்த்தியா ?"

"இல்லை சார். உங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டிருந்தேன் "

"சரி வா. உள்ள எதவாது இன்பார்மேஷன் கிடைக்குதான்னு பார்ப்போம் "
என்றவாறே காரை நோக்கி சேகர் போகவும், மற்றொரு காரில் கிருஷ்ணன் வந்திறங்கவும் சரியாக இருந்தது . 

- வியாபாரம் தொடரும் 

39 கருத்துகள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மொத போணி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>" நான் போலீஸ்ல இருந்துவரேன். இப்ப சமீபத்தில் அவர் எதவாது மொபைல் கார்டு வாங்கினாரா ?

பெரியப்பா.. லாஜிக் இடிக்குது..

" நான் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல இருந்துவரேன். இப்ப சமீபத்தில் அவர் எதவாது மொபைல் கார்டு வாங்கினாரா ?

இது ஓக்கே...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சேலம் பகுதியைச் சுற்றி கதை பின்னப்பட்டிருப்பது சுவாரஷ்யத்தை அதிகப்படுத்துகிறது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வியாபாரம் த்ரில்லிங்காப்போகுது!
தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வியாபாரம் தொடர்கிறது - திருப்பங்களோடு... நடக்கட்டும்...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

செம த்ரில்லிங்கா போவுது..

சுசி சொன்னது…

விறுவிறுப்பா போகுது தொடர்.. தொடருங்க கார்த்திக்..

ஸ்ரீராம். சொன்னது…

விஸ்தாரமான விசாரணை. க்ளூ கிடைக்க ஒரொரு இடமாக போவதும் சுவாரஸ்யத்தை அதிமாக்குகிறது. எங்கு என்ன க்ளூ கிடைக்கிறது என்று பார்ப்போம்...!

Asiya Omar சொன்னது…

கதையோட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துது..முந்தைய பகுதி லின்க் கொடுத்தால் மறந்தவங்க,புதிதாக வாசிக்கிறவங்க திரும்ப் படிச்சிப்பாங்க,தொடர் கதை போஸ்டிங் இடைவெளி அதிகமாக இருக்கே.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Nice going... maintaining suspense... super...:)))

எல் கே சொன்னது…

@செந்தில்

என்ன நவீன நக்கீரரா நீர் ??

எல் கே சொன்னது…

@ராஜராஜேஸ்வரி

நினைவுகள் எழுதும்பொழுதே அடுத்த கதை சேலத்துடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன். அதுதான் காரணம். நன்றி

எல் கே சொன்னது…

@வைகோ

நன்றி சார்

எல் கே சொன்னது…

@வெங்கட் நாகராஜ்
நன்றி வெங்கட்

எல் கே சொன்னது…

@சாரல்

நன்றிங்க

எல் கே சொன்னது…

@சுசி

நன்றி சுசி

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

அடுத்த ரசிகமணி நீங்கள்தான்.

எல் கே சொன்னது…

@ஆசியா

மேல இருக்கே சகோ "பழைய வியாபாரங்களைப் பார்க்க " என்று இருக்கே ??

கொஞ்சம் உடல்நிலை சரியில்லை அதுதான் தாமதம்

எல் கே சொன்னது…

@அப்பாவி

பார்த்தேன் ரொம்ப ரொம்ப நன்றி

எல் கே சொன்னது…

@அப்பாவி

ஹ்ம்ம் ஹ்ம்ம் நன்றி

Anisha Yunus சொன்னது…

suda suda soodaana viyaabaramthaan!!1.. kathai ippathaan vegam pidikkuthungnnaa... :)

vanathy சொன்னது…

LK, super suspense!!! continue...

Jaleela Kamal சொன்னது…

அப்பரம் என்ன ஆச்சு

RVS சொன்னது…

முழு சேலத்தையும் அலசிடுங்க எல்.கே. அப்படியே அந்தந்த ஏரியாவுல இருக்கிற முக்கியமான சில விஷயங்களையும் எடுத்து சொன்னீங்கன்னா வியாபாரம் பிச்சுகிட்டு போகும். நல்லா இருக்கு. ;-))

சாகம்பரி சொன்னது…

கட் அண்ட் ரைட்டாக போலீஸ் ஸ்டைலிலேயே வசனங்கள். நன்றாக உள்ளது.

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

போலீஸ் விசாரிப்பது திரில்லாவே இருக்கு,தொடருகிறேன்,

பத்மநாபன் சொன்னது…

வியாபாரத்துக்கு வரமுடியவில்லை...வோல் சேலா ஒரு நாள் உட்கார்ந்து படிச்சுக்கிறேன்....

மாதேவி சொன்னது…

நன்றாக இருக்கிறது.தொடருங்கள்..

குறையொன்றுமில்லை. சொன்னது…

விரு விறுப்பா போகுது. தொடரவும்.

எல் கே சொன்னது…

@அன்னு

லேட்டா வந்துட்டு சுட சுட வியாபாரமா ? ஹ்ம்ம் நன்றி

எல் கே சொன்னது…

@வாணி


நன்றி

எல் கே சொன்னது…

@ஜலீலா


இதோ நாளைக்கு சொல்றேன்

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

கண்டிப்பா சேலம் முழுக்க அலசப்போறேன். ஆனால் நீங்க கேட்டிருக்கறது நடக்குமான்னு தெரியலை . பார்ப்போம்

எல் கே சொன்னது…

@சாகம்பரி

பாராட்டுக்கு நன்றி

எல் கே சொன்னது…

@ஆச்சி

நன்றி ஆச்சி

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

ரசிகமணியே இப்படி சொல்லிட்டா ?? சரி சரி வாரம் ஒருமுறை படிங்க

எல் கே சொன்னது…

@மாதேவி

நன்றி

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

நன்றிமா

நிரூபன் சொன்னது…

டிஜிட்டல் டெக்னாலயியை எப்படிக் குற்றவாளிகள் கையாள்கிறார்கள் என்பதனை இப் பதிவில் சுட்டியிருக்கிறீர்கள்.

ஒவ்வோர் பகுதிகளிலும் சஸ்பென்ஸ் வைத்து எழுதுகிறீர்கள் சகா.