ஏப்ரல் 25, 2011

தலைப்பிடப்படாதவை I

கடந்த வாரம் வெள்ளி என்றெண்ணுகிறேன். காலை மணி எட்டரை இருக்கும். அன்று அதிகம் வெய்யிலும் இல்லை. காற்றும் லேசாக என்னைத்  தழுவி  செல்ல அன்றையக் காலை அற்புதமாக தெரிந்தது.

அலுவலகத்திலிருந்து வழக்கமாய் செல்லும் டீக்கடைக்கு நடந்து கொண்டிருந்தேன். புறாக்கூட்டம் ஒன்று எங்கிருந்தோ வந்தது. டீக் கடையில் நின்றுக் கொண்டு அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறகடித்து ஒலி எழுப்பியப் படி பறந்து கொண்டிருந்த புறாக்களில் ஒன்று திடீரென்று அங்கிருந்த ஹை வோல்டேஜ் ட்ரான்ச்பார்மரில்  அமர , அடுத்த நொடி அது தூக்கி எறியப் பட்டது. 

கீழே விழுந்த அந்தப் புறாவின் உடலில் உயிர் இருந்தால் காப்பாற்றலாம் என்று இரண்டு எட்டு எடுத்து வைப்பதற்கு முன் இதற்காகவே காத்திருந்தது போன்று அங்கு வந்த நாய் , அந்தப் புறாவைக் கவ்விக் கொண்டு சென்று விட்டது. 

அந்த சம்பவம் என் மனதில் வேறு சில அதிர்வலைகளை தூண்டி விட்டது. அவை இங்கே. 

காலை நேரம் என்பது நமது இளமைப் பருவம். இங்கு சிறகடித்துப் பறப்பது நாம்தான். 


ட்ரான்ச்பார்மரில் உட்காருவது என்பது நாம் செய்யும் தவறான காரியங்கள். அதன் உடனடி விளைவு கீழே விழுவது.  அங்கிருந்த புறாக்களில் ஒரு புறா மட்டும் ஏன் அங்கு வந்து அமரவேண்டும் ? அதற்க்கு என்ன காரணம் ? நம் நண்பர்கள் கூட்டத்தில் கண்டிப்பாக இளமையில் ஏதேனும் தவறு செய்து அதனால் பாதிக்கப்படும் நண்பர் ஒருவராவது இருப்பார்.

ஒரு தவறு செய்தால் ஏற்படும் தொடர் நிகழ்சிகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள்தான் அந்த நாய் புறாவை எடுத்து செல்வது. 

என்ன நான் சொல்லி இருப்பது சரியா நண்பர்களே ?

பி.கு : அப்பப்ப இந்த மாதிரி மனதில் வரும் எண்ணங்களை "தலைப்பிடப்படாதவை" என்றத் தலைப்பில் பகிரலாம் என்று இருக்கிறேன்.  
 
அன்புடன் எல்கே

42 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பெரியப்பா .. ஏன் பயமுறுத்தறீங்க?

Balaji saravana சொன்னது…

முதல் பாதி ஒரு அட்டகாசமான த்ரில்லர் கதையோட ஆரம்பம் மாதிரி இருந்தது எல்.கே! அடுத்த பகுதியில தத்துவம் ஸ்டார்ட் ஆயிடுச்சு!

Ramani சொன்னது…

தலைப்பிடப்படாதவை எனச் சொல்லுதலைவிட
நிகழ்வுகளும் சில நினைவுகளும்
அல்லது
நிகழ்வுகளும் தாக்கங்களும் எனக் கூட
தலைப்பிட்டிருக்கலாமோ?
கனமான விஷயங்களை எழுதுகையில்
அதற்கான தலைப்பும் சரியாக இல்லையெனில்
கைப்பிடி சரியாக இல்லாத நல்ல கனமான
அரிவாளைப்போலவும் ஆகக்கூடுமோ?
நல்ல சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

=((

GEETHA ACHAL சொன்னது…

நல்ல தலைப்பு..சரியாக சொன்னீங்க...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், இளமைத்துடிப்பினாலும், உணர்ச்சிவசப்பட்டு, ஒருசில தவறு செய்பவர்களுக்கு, எடுத்துரைக்கும் நல்லதொரு அறிவுரை.

பாராட்டுக்கள்

மாதேவி சொன்னது…

தத்துவம் நன்றாக இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தொடரட்டும் தலைப்பில்லா விஷயங்கள்.....

ஷர்புதீன் சொன்னது…

:)

Madhavan Srinivasagopalan சொன்னது…

தத்துவம்..
அல்லது
தத்துபித்துவமா ?

Good one..

Lakshmi சொன்னது…

2 கார்த்தி அழகாக சொல்லி இருக்கீங்க. தொடருங்க. தலைப்பிடப்படாதவைகளை.

கோவை2தில்லி சொன்னது…

தலைப்பிடாதப்படாதவை தொடரட்டும்.

பத்மநாபன் சொன்னது…

காரணம் இன்றி காரியம் இல்லை...சில காரியங்களுக்கு காரணம் தெரிவதில்லை.. தொடருங்கள்..உங்களுக்கு தெரியாத காரணம் மற்றவர்க்கு தெரியலாம் ..

தெய்வசுகந்தி சொன்னது…

:((

அப்பாவி தங்கமணி சொன்னது…

நீ எழுது பிரதர்... படிக்க நானாச்சு...:)

ஸ்ரீராம். சொன்னது…

வீட்டுல கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போயாச்சா....தத்துவம் எல்லாம் ஆரம்பிக்குது...!

சுசி சொன்னது…

:))

தி. ரா. ச.(T.R.C.) சொன்னது…

எண்ணத்திற்கு நல்ல வடிகால்.தலைப்பு இல்லாமல் எழுதலாம் ஆனால் ATMமை நம்ம்ம்ம்ம்ம்பி இறங்க வேணுமான்னு யோசிக்கனும்

தக்குடு சொன்னது…

எனக்கு தெரிஞ்சு ஒரு ஆள் ஜகத்குருனு ஒரு நல்ல தலைப்புல நல்ல விஷயங்களை சொல்லிண்டு இருந்தது. இப்ப என்னடான்னா மினிகூட்டு,மீடியம் கூட்டுனு வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறிடிச்சி, அது எப்போ கீழ இறங்கும்??..:))

Jaleela Kamal சொன்னது…

present

Priya சொன்னது…

தலைப்பிடப்படாதவை...தொடர வாழ்த்துக்கள்!

vanathy சொன்னது…

சூப்பர்! இன்னும் தொடருங்கள்.

சாகம்பரி சொன்னது…

இதுதான் கவிஞனின் மனது. ஒரு விசயத்தை வாழ்வியலோடு ஒப்பிடுதல் நன்று. தொடருங்கள் திரு.எல்.கே

Gayathri சொன்னது…

ரைட்...நல்லா யோயகுறீங்க ப்ரோ. ப்ளீஸ் தொடருங்கள்

எல் கே சொன்னது…

@செந்தில்

இதில் என்ன பயமுறுத்தல் ??

எல் கே சொன்னது…

@பாலாஜி

த்ரில்லரா ?? அவ் ... நன்றிங்க

எல் கே சொன்னது…

@ரமணி

உங்கள் கருத்துக்கு நன்றி. இந்தத் தலைப்பும் ஒரு வகையில் கேட்சியா இருக்கும். எல்லாமே கனமான விஷயங்களா இருக்குமா எனக்குத் தெரியலை. ஒரு சில சம்பவங்கள் எனக்குள் சிலத் தாக்கங்களை ஏற்படுத்தும். அவைதான் இங்கு வரும்

எல் கே சொன்னது…

@அனாமிகா
ஏன் இந்த சோகம்

எல் கே சொன்னது…

@கீதா அச்சில்

நன்றிங்க

எல் கே சொன்னது…

@வைகோ

சரியா சொன்னீங்க நன்றி சார்

எல் கே சொன்னது…

@வைகோ

சரியா சொன்னீங்க நன்றி சார்

எல் கே சொன்னது…

@மாதேவி

நன்றி

@வெங்கட்
நன்றி


@சர்புதீன்

நன்றி நண்பரே

@மாதவன்

ரெண்டுமே இல்லை. எனக்குள் தாக்கம் ஏற்படுத்துபவை

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

நன்றிமா

@ஆதி

நன்றி

@

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

ஆமாம் அண்ணா. ஒரு சில சமயம் ஒரு சிலருக்கு புரியும் . அதுதான் :)

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி

நன்றி


@அப்பாவி

ரொம்ப ரொம்ப தேன்கீஸ்

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா :))

@தி ரா சா

அண்ணா , அவங்களை நம்பி இறங்கலாம். அவங்க இட்லியைதான் நம்ப முடியாது

கோமதி அரசு சொன்னது…

ஒரு தவறு செய்தால் ஏற்படும் தொடர் நிகழ்சிகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள்தான் அந்த நாய் புறாவை எடுத்து செல்வது. //

செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்பது இது தானோ!

உங்கள் தலைப்பே நல்லா இருக்கு.

நிரூபன் சொன்னது…

வாழ்க்கையில் எதிர்பாராத நேரங்களில் விந்தையான நிகழ்வுகளும் இடம் பெறும், விபரீதமான நிகழ்வுகளும் இடம் பெறும். அவை ஒவ்வொன்றினுள்ளும் ஒவ்வோர் அர்த்தங்கள் பொதிந்திருக்கும் என்பதற்கு, இப் புறா சம்பவமே எடுத்துக் காட்டு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தொடரட்டும்.படிக்கக் காத்திருக்கிறோம்.

செந்தில்குமார் சொன்னது…

தலைப்பிடப்படாதவை.....ம்ம்ம்

தலைப்பு..அருமை எல் கே....

RVS சொன்னது…

தலைப்பிடப்படாதவை உங்களுக்கு தலைப்பா கட்டும் போலிருக்கிறது எல்.கே. அம்சம். ;-))

பெயரில்லா சொன்னது…

Gud one L.K.continue