ஏப்ரல் 07, 2011

லஞ்சத்தை எதிர்த்து

காந்தீயவாதி அன்னா ஹஸாரே டெல்லியின் ஜந்தர் மந்தர் அருகே லஞ்சத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதை உற்சாகமான இளைஞர் கூட்டம் 'இரண்டாவது சுதந்திரப் போராட்டம்' என்று வர்ணிப்பதில் மறு கருத்து இருக்கமுடியாது.

இந்தப் போராட்டத்தை ஆதரிக்குமுகமாக இன்று (7 ஏப்ரல் 2011) மாலை 6.00 மணிக்கு மெரீனா கடற்கரையில் மெழுகுவர்த்திப் பேரணி ஒன்று நடக்க இருக்கிறது. அதுவும் காந்தி சிலை அருகே என்பதும் மிகப் பொருத்தம்தான். சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் பங்கேற்றுத் தமது ஆதரவை வெளிப்படுத்தலாம். இதை ஏற்பாடு செய்திருப்பவர் வழக்கறிஞர் கே. ரவி. இவர் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் மற்றும் பாரதிப் பற்றாளர். கூட்டத்தில் சொற்பொழிவுகள் கிடையாது என்று கூறியிருப்பது மிகவும் நிம்மதியைத் தருகிறது :-)

அங்கிருக்கும் நோட்டுப் புத்தகத்தில் கருத்துக்களை எழுதிக் கையெழுத்திடலாம். தமிழகத்தில் கட்சி வாரியாக நடத்தப்படும் சேனல்களும், பத்திரிகைகளும் இந்தக் கூட்டத்தை அசட்டை செய்துவிடவும், குறைத்துப் பேசவும் வாய்ப்பு அதிகம். நேரில் சென்று, பங்கேற்று, குறைந்தபட்சம் அநியாயத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிப்போம். பேரணி பெரும்பேரணியாக இருக்கட்டும்.

முடிந்தவர்கள் சென்று பங்கெடுத்து ஊழலுக்கு எதிரான போரில் நமதுக் கடமையை செய்வோம்.

பி.கு : இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. சென்னை நண்பர்களின் கவனத்திற்காக பதிவிட்டேன்.


Overall rating
 

22 கருத்துகள்:

பாட்டு ரசிகன் சொன்னது…

தகவல் அறிந்தேன்..

பாட்டு ரசிகன் சொன்னது…

//////
நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////

விவரம் அறிய..

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post.html

jothi சொன்னது…

நல்லமுயற்சி
வெற்றிபெற வாழ்த்துவோம்

Chitra சொன்னது…

Thank you for passing on the info.

middleclassmadhavi சொன்னது…

முடிந்தவர்கள் பங்கு பெறுங்கள். முடியாதவர்கள் இங்கிருந்தே ஆதரவு தருகிறோம்.
நன்றி!

சசிகுமார் சொன்னது…

அண்ணா எந்த வேலை இருந்தாலும் கண்டிப்பாக இதில் நான் கலந்து கொள்வேன். அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரம், நல்ல தகவல், ஆனாலும் இவரது போராட்டத்திற்குப் பலன் கிடைக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டிய விடயம்.

thirumathi bs sridhar சொன்னது…

தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

ஸ்ரீராம். சொன்னது…

சொற்பொழிவுகள் கிடையாது என்பது நல்ல விஷயம். இல்லாவிட்டால் எல்லாவற்றையும் சுயலாபத்துக்காக அரசியல் ஆக்கி விடுவார்கள். தார்மீக ஆதரவு என்றுமே நல்லது. நம்மளவில் நேர்மையாக இருக்கலாம். மிகக் குறைந்த பட்சம் வோட்டை விற்காமல்...!

சுந்தர்ஜி சொன்னது…

அன்னா ஹஸாரேயால் உங்கள் தளத்துக்குள் நுழைகிறேன் கார்த்தி.

மிகவும் அவசியமான ஒரு எதிர்ப்பும் அதற்கான விழிப்புணர்வும் இன்றைய தேவை.

கோடிகளில் சுருட்டத் தொடங்கிவிட்ட கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கான முடிவின் துவக்கம் இது.

என்னால் கலந்துகொள்ள இயலாதுபோனதற்கு வருத்தமும் என் சார்பில் மானசீகமாக ஒரு மெழுகுவர்த்தியும்.

A.R.RAJAGOPALAN சொன்னது…

"லஞ்சத்தை எதிர்த்து"
செய்தி தாள்களில் வராத ஆனால் வரவேண்டிய நல்ல செய்தி
நீங்கள் இன்றி அறியேன் இதை , நன்றியுடன் நவின்றேன் அதை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முடிந்தவர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் நாட்டுக்காக...

எல் கே சொன்னது…

@ராஜகோபாலன்

ஆச்சர்யம் அடைகிறேன். இன்றையத் தேதியில் இதுதான் தலைப்பு செய்தி. தமிழ் பேப்பர்களில் இதற்க்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று எண்ணுகிறேன்

பத்மநாபன் சொன்னது…

அன்னாஜி யின் சத்யாகிரக போராட்டம் வெற்றி பெற பிரார்த்திப்போம்...சென்னைக் கூட்டம் பெருமளவில் குவிந்து அன்னாஜியின் போரட்டத்திற்கு அதரவளிக்க வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தகவலுக்கு நன்றி.

அமைதிச்சாரல் சொன்னது…

அன்னாவின் போராட்டம் வெற்றிபெறட்டும். முடிஞ்சா பதிவர்கள் சார்பா ஒரு மெழுகுவர்த்தியை ஏத்திவெச்சிட்டு வாங்க..

raji சொன்னது…

Thanks for sharing

அப்பாவி தங்கமணி சொன்னது…

நல்ல விஷயம்... நல்ல துவக்கம்... நல்ல முயற்சி...

மோகன்ஜி சொன்னது…

எல்.கே! உங்கள் பதிவைப் பார்த்து பலரும் வரக்கூடும். நன்றி உங்கள் பொதுநலத்துக்கு.ஹசாரேயின் முயற்சிகள் கண்டிப்பாய் வெற்றி பெறும்,பெற வேண்டும்.

S.Menaga சொன்னது…

நல்ல முயற்சி!!

asiya omar சொன்னது…

0091 22 61550789 இந்த தொலைபேசி எண்ணிற்கு நாம் டயல் செய்தால் அவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது போல் ஆகுமாம்.அதனால் தயவு செய்து இந்த நம்பருக்கு missed call செய்யவும்,நாங்கள் CALL செய்யும் பொழுது ENGAGED ஆக இருந்தது.
எல்.கே. இதனையும் உங்கள் பதிவில் இணைக்கவும்.நன்றி பகிர்வுக்கு,போராட்டம் வெற்றியடைய வாழ்த்துவோம்.

Lakshmi சொன்னது…

நல்ல பதிவு கார்த்தி. நீங்க சென்னைதானே போனீங்களா?