ஏப்ரல் 01, 2011

பெற்றோர்களே எப்பொழுது திருந்துவீர்கள்

சென்ற வாரம் சனிக்கிழமை திவ்யா படிக்கும் ப்ளே ஸ்கூலில் ஆண்டு விழா . இதற்காக பள்ளி அருகில் ஒரு சிறிய ஹாலில் விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆண்டு இறுதி ஆதலால் எனக்கு விடுமுறை கிடைக்கவில்லை. எனவே என் மனைவி மட்டுமே சென்றிருந்தார்கள் . அங்கு சிலப் பெற்றோர்கள் செய்த கூத்துகளைப் பிறகு எனக்கு சொன்னார்கள் . அதைக் கேட்டபொழுது எனக்குத் தோன்றியது "இவர்கள் திருந்தமாட்டார்களா ?"

ஆண்டு விழா நடப்பதற்கு இரண்டு வாரங்கள் முன்பே, பெற்றோர்களை அழைத்து ஒரு மீட்டிங் நடத்தினார்கள். அப்பொழுது சில விஷயங்கள் சொன்னார்கள். பெற்றோர்கள் ஆண்டு விழா அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய  வேண்டாம் என்று . அவர்கள் முக்கியமா சொன்னது உங்கள் குழந்தை விழா அன்று மேடை ஏற மறுத்துவிட்டால் விட்டுவிடுங்கள் . குழந்தை அப்படிதான் இருக்கும். அதை வற்புறுத்த வேண்டாம்  என்பதுதான். அதேபோல் யாரும் விழா அன்று கேமரா எடுத்து வந்து போட்டோ வீடியோ எடுக்க வேண்டாம். நாங்களே எடுத்து தருகிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.நீங்கள் எடுக்க வேண்டும் என்றால் வீட்டில் மேக்கப் போட்டவுடன் எடுத்துவிட்டு வாருங்கள். இங்கே வந்து மேடையின் முன் நின்று போட்டோ எடுக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார்கள். 


 இப்ப விழா அன்னிக்கு என்ன நடந்ததுன்னு பார்ப்போம்.

 காலையில் திவ்யா ,திவ்யாம்மா இருவரையும் விழா நடந்த இடத்தில் விட சென்றப் பொழுதே கவனித்தேன். அங்கு வைத்திருந்த பெரும்பாலான பெற்றோர் கேமராவுடன் வந்திருந்தனர். நான் நினைத்தது போலவே, மேடையில் குழந்தைகள், ரைம்சிற்கு ஆட இவர்கள் மேடையின் முன் சென்று தங்கள் கேமராவில் படமெடுக்கத் துவங்கிவிட்டனர். இதனால் இரண்டு கஷ்டங்கள்


ஒன்று தங்கள் பெற்றோர் கீழே நிற்பதைப் பார்த்த சிலக் குழந்தைகள் மேடையில் இருந்து இறங்க முயற்சிக்க, ஆசிரியைகளுக்கு அந்தக் குழந்தைகளை சமாளிப்பதுக் கடினமாகி விட்டது .

இரண்டு பின் வரிசையில் அமர்ந்து இருந்தவர்களால் நிகழ்ச்சியைப் பார்க்க இயலவில்லை.

 பள்ளி நிர்வாகம் படம் மற்றும் வீடியோ அடங்கிய சீடியை தருவதாக சொல்லியும் இப்படி செய்யும் பெற்றோரை என்ன செய்வது ?

அடுத்த நிகழ்வைப் படியுங்கள்
 
ஒரு குழந்தை , திவ்யா வயதுதான் இருக்கும். மேடை ஏற மறுத்துவிட்டது. மாட்டேன்னு அடம் அழுகை. டீச்சர்களும் கூப்பிட்டு பார்த்தார்கள் , அந்தக் குழந்தையின் அம்மாவும் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அந்தக் குழந்தைக்கு எதோ பயமோ இல்லை வேற எத காரணமோ அலுத்து அடம் பிடித்து கீழேயே நின்று விட்டது. இது ஒரு பெரிய விஷயம் இல்லை. மூன்று வயதுக் குழந்தைகளிடம் இது ஒரு சகஜமான விஷயம்.

இதன் பின் அந்தக் குழந்தையின் தாயும் பாட்டியும் செய்ததுதான் கண்டனத்துக்குரியது. அந்தத் தாய் தொடர்ந்து அந்தக் குழந்தையை திட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் "சனியனே" என்றும் திட்டி இருக்கிறார். தாய் எதற்கு திட்டுகிறார் என்றுக் கூடப் புரியவில்லை அந்தக் குழந்தைக்கு. இவர்கள் திட்டத் துவங்கியவுடன் அழ ஆரம்பித்து விட்டது. அந்த அழுகைக்குப் பரிசாக இரண்டு அடி கிடைத்ததுதான் பரிதாபம்.  

ப்ளே ஸ்கூலில் குழந்தைகளை ஊக்குவிக்க ஒரு நிகழ்ச்சி . அவ்வளவுதான், எதற்கு பெற்றோர்கள் இப்படி நடக்கின்றனர் ? அந்த நிகழ்ச்சியில் ஆடாமல் போனால் என்ன ஆகப் போகிறது ? இத்தனைக்கும் அங்குப் படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசு உண்டு என்று சொல்லி இருந்தார்கள். அந்த வயதில் குழந்தைகளை கட்டாயப் படுத்துவதில் என்ன லாபம் ?

பெற்றோர்களே எப்பொழுது திருந்துவீர்கள் ??

அன்புடன் எல்கே

38 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நிறைய விஷயங்களில் நாம் ஒன்றும் செய்வதிற்கில்லை கார்த்திக். இது போன்ற சின்னக் குழந்தைகளுக்குப் பிடிக்காத விஷயத்தில் கட்டாயப்படுத்துவதில் பயன் இல்லை! நல்ல பகிர்வுக்கு நன்றி.

dheva சொன்னது…

இட்ஸ் ஷேம் டு ஹியர் கார்த்திக். பெற்றோர்கள் எல்லாம் சின்ன குழந்த்தைகளை இப்டி ட்ரீட் பண்றது வெரி பேட்....! இவுங்களுக்கு எல்லாம் தனியா க்ளாஸ் எடுக்கணும் போல...!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

குழந்தை பெத்துக்குறதுக்கு முன்பு இவர்களுக்கு பாடம் எடுக்கணும்...

தெய்வசுகந்தி சொன்னது…

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விட மாட்டாங்க போல!!

சேட்டைக்காரன் சொன்னது…

பள்ளிக்கூடங்களில் நடைபெறுகிற விழாக்களுக்கு அழைக்கப்படுகிற சிறப்பு விருந்தினர்களின் தேர்வைக் கவனித்திருக்கிறீர்களா கார்த்தி? ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு தொலைக்காட்சித்தொடர் நடிகர் வந்து ரஜினிகாந்தின் புராணத்தைப் பாடிக்கொண்டிருந்த கொடுமையைக் கண்ணால் பார்த்து நொந்து நூலாகிப்போனேன். எதையெதைத் திருத்துவது, யார் திருத்துவது என்று புரியலியே!

தமிழ்வாசி - Prakash சொன்னது…

பாவங்க அவங்க குழந்தைகள், நாம பெரியவங்க... நாம குழந்தைகளா மாறக் கூடாது.

vanathy சொன்னது…

எங்க மக்களுக்கு எதை செய்ய வேண்டாம் என்று சொல்கிறோமோ அதை தான் செய்வார்கள். இவர்கள் திருந்தவே மாட்டார்கள். என் மகனின் பள்ளியில் கார்கள் u turn அடிக்க கூடாது என்பது விதி. யாரும் இதை காதில் போட்டது போலவே தெரிவதில்லை. மக்களுக்கு எதையும் சொல்லி புரிய வைப்பது கஷ்டமான வேலை.

Balaji saravana சொன்னது…

எல்.கே, எங்க ஊர்ல இந்த மாதிரி ஆளுங்கள, ”படிச்சும் பதராப் போனவங்க”ன்னு சொல்லுவாங்க.. அப்படி தான் நினைக்க வேண்டியிருக்கு..

Chitra சொன்னது…

ப்ளே ஸ்கூலில் குழந்தைகளை ஊக்குவிக்க ஒரு நிகழ்ச்சி . அவ்வளவுதான், எதற்கு பெற்றோர்கள் இப்படி நடக்கின்றனர் ? அந்த நிகழ்ச்சியில் ஆடாமல் போனால் என்ன ஆகப் போகிறது ? இத்தனைக்கும் அங்குப் படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசு உண்டு என்று சொல்லி இருந்தார்கள். அந்த வயதில் குழந்தைகளை கட்டாயப் படுத்துவதில் என்ன லாபம் ?


...lack of understanding. :-(

komu சொன்னது…

ஆமா, குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடணும். பெரியவங்களே குழந்தைகளா மாறிடறாங்க.

Vasagan சொன்னது…

I don't understand the psychology of this kind of parents, just pity on them only.

அன்னு சொன்னது…

90% PARENTS ippadithaan irukkaanga. kuzanthiaglai pommaigalaa ninachu! pch..:(

thirumathi bs sridhar சொன்னது…

தர்மசங்கடமான விசியம்தான்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தலைவரே நான் வெறுத்துப்போய் இப்பொது எந்த நிகழ்ச்சியிலும் பையனை கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தலைவரே நான் வெறுத்துப்போய் இப்பொது எந்த நிகழ்ச்சியிலும் பையனை கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை...

அப்பாவி தங்கமணி சொன்னது…

Thats right... parents should change in this aspect... kids shouls be allowed to be kids not adultlike

For this Parents would say "this is competitive world..." and all that... but there is an age to it... I feel bad for this kids

ஹேமா சொன்னது…

கொடுமை.இவர்கள் திருந்தச் சந்தர்ப்பமே இல்ல கார்த்திக் !

ஹுஸைனம்மா சொன்னது…

புகழ்,பிரபலம் என்ற போதைக்கு அடிமையாகி விட்டவர்கள். பாவம், வீட்டுக்குப் போன பிறகும் அந்தக் குழந்தைக்கு திட்டு தொடர்ந்திருக்கும்.

நிரூபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ, பெற்றோரின் இத்தகைய செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.

குழந்தைகளை வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி, சாதனை செய்வது போல மேடையேற்றுவது, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வைப்பது இவை யாவும் கண்டிக்கத்தக்கவையே. அதுவும் அந்த பாட்டியும், அம்மாவும் செய்த சேட்டை இருக்கே...பாவம் அந்தச் சின்னப் பிஞ்சுகள். எங்கே தங்களின் குடும்ப பெய்ர் கெட்டு விடுமோ எனும் அடிப்படையில் தான் இவர்கள் பிள்ளைகளை மிரட்டி மேடையேற்றிச் சாதிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.


கமராவுடன் படையெடுத்தவர்களை, கமராவை பறிச்சுப் போட்டு வீட்டை ஓடு என்றூ பள்ளி நிர்வாகம் எச்சரித்து அனுப்பியிருக்க வேண்டும்.
(முதல் காமெண்ட் தூக்க குழப்பத்திலை மாறி அனுப்பி விட்டேன்.)

ஸ்ரீராம். சொன்னது…

நாமளே சொன்னதைக் கேட்கலை, நம்ம குழந்தை எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு தோன்ற வேண்டாமா...பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். பாவம் அந்தக் குழந்தை.

பத்மநாபன் சொன்னது…

ஒவ்வொரு குழந்தைக்கு ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை ... போட்டி மனப்பான்மையில் கட்டாய படுத்துகிறார்கள் .. குழந்தைகளை சேர்க்கும் முன் பெற்றோர்களுக்கு மனவியல் பாடம் எடுக்கவேண்டும் ..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பெரியப்பா.. நீங்க சொல்றது உண்மைதான்.. ஈரோட்ல கூட எல்லா ஸ்கூல்லயும் இந்த கொடுமை நடக்குது..

asiya omar சொன்னது…

மிக நல்ல பகிர்வு,இப்படி தான் தற்சமயம் என் மகள் சென்ற ஆர்ட் ஆஃப் லிவிங் குழந்தைகளுக்கான கோர்ஸ்,முடிவில் பெற்றொரை அழைத்து அவர்களுக்கு ஒரு ஸ்பீச் கொடுத்தாங்க,அது தான் இங்கு முக்கியமாக தெரிந்தது,பெற்றோர்களின் பங்கு முக்கியம்,அதைச்சரியாக செய்யனும்.பாராட்டுக்கள்.திவ்யாமா.சில நேரம் நாம வேடிக்கை தான் பார்க்க வேண்டும்,அவர்களுக்கு புரியாது.

கோவை2தில்லி சொன்னது…

என்ன சொல்வது? இப்படித் தான் இருக்கிறார்கள். :(

சாதாரணமானவள் சொன்னது…

குழந்தைகளை குழந்தைகளாக வளரவிட பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. நீங்களாவது அவங்க மாதிரி இல்லாம இருக்கீங்களே. நல்லது.

middleclassmadhavi சொன்னது…

Good post!

சுசி சொன்னது…

இங்க படம் எடுக்கிற விஷயம் இல்லேன்னாலும் அழற பிள்ளைய மேடையேத்துறது இருக்குது கார்த்திக்.

Lakshmi சொன்னது…

குழந்தை களுக்கு பெற்றொர்கள் தான்
நல்ல வழிகாட்டியாக இருக்கணும்.
அவங்களே விதிமுறைகளைக்கடைப்பிடிக்கலைனா எப்படி?

சாகம்பரி சொன்னது…

சிலர் தங்களுடைய கடந்த காலத்தோல்விக்கு வடிகாலாக பிள்ளைகள் வெற்றி பெற வேண்டும் என்று பாடாய் படுத்துகின்றனர்.

! சிவகுமார் ! சொன்னது…

டி.வி. நிகழ்ச்சிகளில் பிள்ளைகளின் பெற்றோர் செய்யும் அராஜகம் கொஞ்ச நஞ்சமா. சவுக்கால அடிக்கணும்!

! சிவகுமார் ! சொன்னது…

சினிமா பாட்டுக்கு பொண்ணை விட அம்மா ஆடுற ஆட்டம் இருக்கே. சிம்ரன் தோத்தா போங்க!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் அவசியம்.

மோகன்ஜி சொன்னது…

இந்தப் பெற்றோர்க்கெல்லாம் ஒரு "அண்டர்ப்ளே" ஸ்கூல் ஆரம்பிக்க வேண்டியது தான்.

ரிஷபன் சொன்னது…

குழந்தைகளை அதன் போக்கில் விட்டு ரசிக்கும் மன நிலை வந்து விட்டால் இந்த அவஸ்தை குழந்தைகளுக்கு வராது.

raji சொன்னது…

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குழந்தைகள் என்றே
புரிந்து கொள்வதே இல்லை.மூன்று வயது கூட நிரம்பாத அந்த பிஞ்சுகள்
அதற்குள்ளாகவே ரைம்ஸ் சொல்லி விட வேண்டும்,ரன்னிங் ரேசில் முதலாக
வந்து விட வேண்டும்.திணிக்கும் எல்லாவற்றையும் ஒழுங்காக படுத்தாமல்
சாப்பிட்டு விட வேண்டும் என்று இவர்களின் எதிர்பார்ப்புகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

பருவத்தே பயிர் செய் என்பதை புரிந்து கொள்ளாத பெற்றோர்கள்

Jaleela Kamal சொன்னது…

சின்ன குழந்தைகளுக்கு மேடை ஏறியதும் பெற்றொர்களை பார்த்ததும் ஒன்றும் புரியாது திரும்பி திரும்பி பார்ப்பார்கள்,
எல்லார் முன்னாடியும் அப்படி ஏன் திட்டனும். சே

angelin சொன்னது…

ஸ்கூல் நிர்வாகம் விழா ஆரம்பிக்கும் முன்னேயே பெற்றோர்களிடமிருந்து மொபைல் போன்
உட்பட எல்லாத்தையும் வாங்கி வச்சிடணும்.இது ஒன்று தான் தீர்வு.
அந்த சின்ன குழந்தையை அடிச்ச அம்மாவையும் பாட்டியையும் ஏன் டீச்சேர்ஸ் சும்மா விட்டாங்க .