ஏப்ரல் 22, 2011

வியாபாரம் 3

பழைய வியாபாரங்களைப் படிக்க

சிலநொடிகள் ராமுவை உற்று நோக்கிய சேகர் பின் அங்கிருந்து கிளம்பி தன் அலுவலகத்தை அடைந்தான். அலுவலகம் வந்தவுடன், கார் டிரைவரின் எண்ணிற்கு அங்கிருந்த லேண்ட்லைன் போனில் இருந்து அழைத்தான். அவன் எதிர்பார்த்தவாறே சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட மெசேஜை பதிவுசெய்யப்பட்டக் குரல் ஒலிக்க அழைப்பைத் துண்டித்து அந்த எண் எந்த நிறுவனத்தின் எண் என்று ஆராய முற்பட்டான்.

ஏற்கனவே நேரம் ஆனதுடன் இன்னொரு சலிப்பும் சேர்ந்துக் கொண்டது அவனுக்கு. ஒரே எண்ணை வைத்து கம்பெனியை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி வந்தது நமக்குதான் தொல்லை என்று எண்ணியவாறே முதலில் பி எஸ் என் எல் அலுவலகத்திற்கு தொடர்புக் கொண்டான். அவன் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என்பது அவன் அழைப்பைத் துண்டித்து அடுத்த எண்ணை டையல் செய்தபொழுதே தெரிந்தது. இரண்டு மூன்று நிறுவனங்களை அழைத்தப்பின் அவனுக்குத் தேவையான விவரங்கள் கிடைத்தன.

அவர்களிடம் அவன் தனக்குத் தேவையான விவரங்களைக் கேட்டுப் பெற்றான். பின் அந்த நம்பருக்கு கடந்த இரு தினங்களில் வந்த அழைப்புகள்  மற்றும் அந்த நம்பரில் இருந்து செய்யப்பட்ட அழைப்புகள்  இந்த இரண்டு விவரங்களையும் அடுத்த நாள் காலைக்குள் தனக்கு அனுப்புமாறு சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

பின் அவர்களிடம் இருந்து பெற்ற  விவரங்களை ஆராயத் துவங்கினான். அவர்கள் வீட்டில் சொன்ன டிரைவரின் பெயரும் கார்ட் வாங்கும் பொழுது கொடுக்கப்பட்டிருந்த பெயரும் வேறு வேறாக இருந்தது அவனுக்கு டிரைவரின் மேல் லேசாக சந்தேகம் வந்தது. எதற்கும் அதில் கொடுக்கப்பட்டிருந்த முகவரியில் சென்று விசாரிக்க முடிவு செய்து நேரத்தை பார்த்தான். மணி அப்பொழுதே பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த முகவரிக்கு செல்ல எப்படியும் அரைமணி நேரம் ஆகும். அந்த முகவரியும் உண்மைதானா என்று அவனுக்கு உறுதியாகத் தெரியவில்லை. இரவு நேரத்தில் சென்று அங்குத் தேடுவதை விட பகலில் செல்லலாம் என்று முடிவெடுத்தான்.

பின் தன் உயரதிகாரியை அலைப்பேசியில் அழைத்தவன், அவரிடம் நடந்ததை விவரித்து அடுத்த நாள் தான் செய்யவிருப்பதையும் சொன்னான்.


புதிய நபர் ஒருவர் தன் கடை வாசலில் வண்டியை நிறுத்தியவுடன் முதலில் கோபப்பட்டாலும் , உடனே அவர் காவல்துறையை சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டுக் கொண்டவுடன் அந்த நேரத்தில் அவருக்கு என்ன வேலை என்று சந்தேகம் வந்தது ராமுவிற்கு. பின் சேகர் , ஸ்ரீனிவாச செட்டியார் வீட்டிற்குள் சென்றதைப் பார்த்த ராமுவிற்கு வியப்பு ஏற்பட்டது.

இந்த நேரத்தில், காவல் துறையை சேர்ந்தவருக்கு அங்கு என்ன வேலை ? வியாபர சம்பந்தப்பட்ட எந்த சிக்கலானாலும் கடையில் வைத்தே தீர்ப்பதுதானே அவரது வழிமுறை. இன்று புதிதாய் எதோ நடக்கிறதே என்று எண்ணியவரின் மனதில் மதியத்தில் இருந்து செட்டியாரை பஜாரில் பார்க்காதது பற்றி சந்தேகம் உதித்தது.  பொதுவாய் ஒரு மணி நேரத்தில் மீண்டும் பஜாருக்கு திரும்பும் செட்டியார் அன்றுத் திரும்பி வந்ததை தான் பார்க்கவில்லை என்பது அப்பொழுதுதான் அவர் மனதில் உறைத்தது.

அவர் மனதில் இந்த சந்தேகம் உதித்தப்பின் அவரால் கடையில் அமைதியாக உட்கார இயலவில்லை. செட்டியாரின் வீட்டிற்கு சென்று
என்ன நடந்தது என்றுக் கேட்கவேண்டும் என்று எண்ணினார். ஆனால் போலிஸ் அங்கு இருக்கும்பொழுது தான் அங்கு செல்வது அவ்வளவு உசிதம் அல்ல என்று எண்ணியவர் சிறிது நேரம் பொறுமையாக இருந்தார் .

பின் பொறுமை இழந்தவராய் , அவரது வீட்டு எண்ணிற்கு அழைத்தார். கிருஷ்ணனே போனை எடுத்தது அவருக்கு வசதியாய் இருந்தது. கிருஷ்ணனும் அவரும் கிட்டத்தட்ட ஒரே வயது . அதனால் கொஞ்சம் நெருக்கமும் கூட. அவன் போனை எடுத்தவுடன் யார் என்று அறிந்துக் கொண்டு , தனக்கு மறுமொழி சொல்லாமல், அங்கு யாருக்கோ பதில் சொன்னதை வைத்தே , இன்னும் காவல்துறையை சேர்ந்தவர் அங்கிருப்பதை புரிந்துகொண்ட ராமு, அதிக நேரம் பேசாமல் அழைப்பை முடித்துக் கொண்டார். அவர் அழைப்பைத் துண்டிக்கவும் , சேகர் மீண்டும் தன் வண்டியை எடுக்க அவர் கடையருகே வரவும் சரியாக இருந்தது.

சேகர் அங்கிருந்து கிளம்பி அந்த வீதியைத் தாண்டி போகும் வரைக் காத்திருந்த ராமு, பின் தன் கடைப் பையனை கடையை அடைக்க சொல்லிவிட்டு, கிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றார். கிருஷ்ணனிடம் பேசி விவரங்களைத் தெரிந்துக் கொண்டவர் , அவனுக்கு ஆறுதல் கூறி அங்கிருந்துக் கிளம்பினார்.


மறுநாள், அந்த கார்ட் வாங்கியபொழுது குடுக்கப்பட்டிருந்த விலாசத்திற்கு செல்லும் வழியில் செவ்வாய்பேட்டைக்குள் மீண்டும் நுழைந்த சேகர், பஜார் வழியாக சென்றான். அவன் வந்தது காலை நேரம் என்பதால் அதிகப் பரபரப்பு இன்றி வீதிகள் கொஞ்சம் அமைதியாய் இருந்தன. இந்நேரம் செட்டியார் இல்லாதது பற்றி ஏதேனும் செய்திகள் பரவி இருக்கோமோ என்று சிறிது சந்தேகமும் அவனுக்கு இருந்தது. நகரின் சிரியப் பகுதியில் ஒரு நபர் திடீரென்று காணவில்லை என்றால் செய்திகள் அதிவிரைவில் பரவும் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். இந்த வழக்கை விரைவில் முடிக்கவேண்டும் என்ற எண்ணியவாறே வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

அலைபேசி நிறுவனத்தில் இருந்து அவன் பெற்ற முகவரி இருந்த ஏரியாவை அடைந்தவன், அதில் குறிப்பிடப் பட்டிருந்த வீதிக்கு வந்தான். நடுத்தரமக்கள் வசிக்கும் பகுதி போல் தோன்றிய அந்த வீதியை ஆராய்ந்தவன், தான் போகவேண்டிய வீட்டை அடைந்து விசாரிக்கத் துவங்கினான்.

தன் சொந்தப் பெயரில் கார்டை அந்த டிரைவர் வாங்கவில்லை என்று முதல் நாளிரவே தெரிந்துக் கொண்டவன், அந்த வீட்டில் விசாரித்தப் பின் அதிர்ச்சியே அடைந்தான்.

-வியாபராம் தொடரும்

35 கருத்துகள்:

middleclassmadhavi சொன்னது…

ஃபர்ஸ்ட்?!!

கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.

A.R.RAJAGOPALAN சொன்னது…

விறுவிறுப்பான விழி விரிய வைக்கும் வியாபார தொடக்கத்தை படிக்கும் போதே உணர்ந்தேன் உங்களின் தனித்துவமான கதை நடையை ....... தொடருங்கள் வாழ்த்துக்கள்

பாட்டு ரசிகன் சொன்னது…

சிறப்பான பாதை...
தொடரட்டும்...

பாட்டு ரசிகன் சொன்னது…

கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வியாபாரம் அபாரமாய் தொடர்கிறது.

geethasmbsvm6 சொன்னது…

விறுவிறுவிறுவிறு

geethasmbsvm6 சொன்னது…

தொடர

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வியாபாரி அண்ணாச்சி வாழ்க.....

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அப்புறம் என்ன ஆச்சு, என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. தொடருங்கள் வியாபாரத்தை.

Balaji saravana சொன்னது…

செம ஸ்பீட் அப் எல்.கே! :)

சாகம்பரி சொன்னது…

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். துப்பறியும் நாவல்களை கடைசி பக்கம் படித்தபின்தான் மற்ற பக்கங்களை படிப்பேன். இவ்வளவு கேப் தந்து போட்டால் எப்படி?

சுந்தர்ஜி சொன்னது…

முன்செல்லும் தடத்தைப் பின் தொடர்கிறோம் கார்த்திக்.

சொன்னாற்போல ஒரு வாரம் இடைவெளி விட்டுவிட்டீர்கள்.திக் திக்.

எல் கே சொன்னது…

@மாதவி

ஆமாம் நீங்கதான் பாஸ்ட்டு .. நன்றிங்க

எல் கே சொன்னது…

@ராஜகோபாலன்

நன்றி ராஜகோபாலன் சார். தனித்துவம் என்று பெரியதாக இல்லை. கொஞ்சம் வேகமா இருக்கணும்னு நினைப்பேன் (போஸ்ட் போடறதுல இல்லை )

எல் கே சொன்னது…

@பாட்டு ரசிகன்

நன்றி சார் . வரேன் சார் உங்கத் தளத்துக்கு

எல் கே சொன்னது…

@ராஜராஜெச்வரி

நன்றி மேடம்


@கீதா சாம்பசிவம்

நன்றி மாமி

அப்பாவி தங்கமணி சொன்னது…

Nice going... konjam peria padhivaa poden...:)

சுசி சொன்னது…

தொடருங்க கார்த்திக்.

vanathy சொன்னது…

நல்ல சஸ்பென்ஸா இருக்கு. தொடருங்க.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நடத்துங்க பெரியப்பா

ஸ்ரீராம். சொன்னது…

நிறைய படித்தாற் போலவும் இருக்கு...கொஞ்சமா தான் இருக்கோ என்றும் தோன்றுகிறது! தொடருங்கள்.

RVS சொன்னது…

எல்.கே வியாபாரம் அமோகமா இருக்கு. கடையை சீக்கிரம் கட்டிடாதீங்க. ;-))

ஷர்புதீன் சொன்னது…

உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

அன்னு சொன்னது…

romba slowvaaga pora maathiriye irukku. enakku mattumthaanaa theriyalai. aduththa pathivu seekirame podungnna :)

அன்னு சொன்னது…

naan mela sonna comment kathai podara vegathai enni. kathaiya sollalai... hehe thavaraaga enna vendaam.

எல் கே சொன்னது…

@மனோ

மக்கா ஒரு வழி பண்ணாம விட மாட்ட போல இருக்கே

எல் கே சொன்னது…

@வைகோ

நன்றி சார்

எல் கே சொன்னது…

@பாலாஜி

பாருங்க நீங்க ச்பீடுனு சொல்றீங்க ஒருத்தங்க ச்லோவ்னு சொல்றாங்க

எல் கே சொன்னது…

@சாகம்பரி

ஹிஹிஹ் அதுக்கு ஒன்னும் பண்ணறதுக்கு இல்லீங்க. இனி கொஞ்சம் சீக்கிரமா போடறேன்

எல் கே சொன்னது…

@சுந்தர்ஜி

அடுத்தடுத்து வீட்டில் உறவினர் வருகை /நிகழ்ச்சிகள் . அலுவலகத்திலும் கொஞ்சம் மாற்றங்கள் காரணமா வேலைகள்.

இனி சீக்கிரம் போடுவேன். லேட் ஆகாது

எல் கே சொன்னது…

@அப்பாவி

நம்ம ஆசை படறது எல்லாம் நடக்குமா ? எனக்கு கூடத்தான் நீ ஜில்லுன்னு ஒரு காதல் சீக்கிரம் முடிக்கனமுனு ஆசை . நடக்குதா .அதுமாதிரிதான் இதுவும்

கோவை2தில்லி சொன்னது…

கதை விறுவிறுப்பாக செல்கிறது.

asiya omar சொன்னது…

இந்தக்கதையும் நல்லா போகுது..

ஹுஸைனம்மா சொன்னது…

துப்பறியும் கதையா? நல்லது. இன்னும் கொஞ்சம் ஃபாஸ்டா போனா விறுவிறுப்பு கூடும்.

Jaleela Kamal சொன்னது…

nalla irukku