ஏப்ரல் 24, 2011

கூட்டு 24.04.2011

ஸ்மார்ட் டிவி 

சாம்சங் புதிதாய் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தி உள்ளனர். கணினி , டிவி ரெண்டும் இணைந்ததுதான் இந்த ஸ்மார்ட் டிவி. நார்மலா டிவியும் பார்த்துக்கலாம். அதே சமயத்தில் இணையம் சென்று அங்கிருந்து வீடியோவும் பார்த்துக்கலாம்.வீடியோ பார்ப்பதோடு சாட் பண்ணலாம்.  மேலும் அவர்கள் கொடுத்துள்ள அப்ளிகேசன் மூலம் இன்னும் சில பயன்களைப் பெறலாம்.  இதுதான் இதோட சுருக்கமான விளக்கம். 


அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இது பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்தி இந்தியாவிலும் அறிமுகப் படுத்தி உள்ளனர். இதன் குறைந்தபட்ச விலை Rs 57000.

இதை பற்றி மேலும் விவரங்களை அறிய இங்கே செல்லவும்.பார்க்கிங் பிரச்சனை 

ரெயில்வே ஸ்டேசனில் இருக்கும் இரண்டு சக்கர வாகனம் நிறுத்தும் இடம்  ஆகட்டும் அல்லது அரசு பேருந்து நிலையங்களில் இருப்பதாகட்டும் , வண்டி நிறுத்துபவர்களுக்கு வசதியாக உள்ளதா ? குறிப்பாக சென்ட்ரலில் இருக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும்  இடம். வருடா வருடம் டெண்டர் மூலம் அந்த ஸ்டேன்ட் நடத்துவதற்கு ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனக்குத் தெரிந்தவரை பல லட்சங்களுக்கு மேல் போகிறது அந்த டெண்டர். இதன் மூலம் ரெயில்வேக்கு நல்ல லாபம்தான். ஆனால் பொதுமக்களுக்கு வசதி எதுவும் இல்லை. 

வண்டி நிறுத்தும் இடம் முழுவதும் சேறும் சகதியுமாய் இருக்கிறது. போதாக்குறைக்கு , முட்களும் ,கல்லும் எப்பொழுது வண்டி டயரை பதம் பார்க்கலாம் என்று காத்திருக்கின்றன. ஒப்புக்கு ஒருகூரை. அதன் கீழ் இருபது வண்டிகளை மட்டுமே நிறுத்த முடியும் .

நல்ல லாபம் சம்பாதிக்கும் இடத்தில் பொதுமக்களுக்கு ஏன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது ?


டவுட்டு

தனியார் நடத்தும் மால்கள் ஆகட்டும், அரசாங்க இடத்தில் ஒப்பந்தக்காரர்கள் நடத்தும் பார்க்கிங் ஆகட்டும் அவர்கள் கொடுக்கும் டோக்கனில் "வண்டியை இங்கு உங்கள் சொந்த ரிஸ்கில் நிறுத்துகிறீர்கள். வண்டியில் உள்ள பொருளோ வண்டியின் பாகங்களோ தொலைந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல " என்று எழுதி இருப்பார்கள். 

இவர்கள் பொறுப்பேற்க மாட்டேன் என்றால் எதற்காக கட்டணம் வசூலிக்க வேண்டும் ? இந்தமாதிரி பிரிண்ட் செய்திருப்பது சட்டப்படி சரியா ? சட்டம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். 

போக்குவரத்து விதிகள் 

சிக்னலில் காவல்துறை அதிகாரி இருக்கிறாரோ இல்லையோ சிக்னலை மதித்து நடக்கவேண்டியது ஒரு நல்ல குடிமகனின் கடமை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் எத்தனை பேர் அப்படி செய்கிறோம் ? குறிப்பா படிச்சவங்கதான் யாருமே இல்லையே ? எதுக்கு நிக்கணும் அப்படின்னு சிக்னலை மதிக்காம விதிமுறைகளை மீறுகிறார்கள்.  

இவர்கள் விதிமுறைகளை மீறிவிட்டு , பின் காவல்துறையினர் லஞ்சம் கேட்கின்றனர் என்று புலம்புகின்றனர். அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் நேர்மையை எதிர்பார்க்கும் நாம் நேர்மையா இருக்கிறோமா ? . யோசிக்க வேண்டிய விஷயம் இது. 

கீது ஜோஸ் 

கேரளாவை சேர்ந்து கீது ஜோஸ் என்கின்ற பேஸ்கட்பால் வீராங்கனை அமெரிக்கா சென்றுளார். இதில் என்ன விஷயம் இருக்கிறது என்கிறீர்களா ? அமெரிக்காவில் நடைபெறும் NBA மற்றும் WNBA தொழில் முறை கூடைபந்தாட்ட போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. ஒரு வருடமாவது அதில் கலந்துக் கொண்டு விளையாடவேண்டும் என்பதுதான் பெரும்பாலான கூடைப்பந்தாட்ட வீரர்கள்/வீராங்கனைகளின் ஆசை .

அங்கு சென்று விளையாட கீதுவிற்கு வாய்ப்பு வந்துள்ளது. அங்குள்ள மூன்று அணிகளின் தகுதித் தேர்வுகளில் பங்கு பெற இப்பொழுது சென்றுள்ளார் கீது. அவர் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் NBA மற்றும் WNBA வில் விளையாடும் முதல் இந்தியர் என்றப் பெருமை கீதுவிற்கு கிடைக்கும். 

கீது தேர்வாக எனது வாழ்த்துக்கள். 


இந்தவாரப் பதிவர் 

எல்லாவற்றையும் நேசிப்போம் என்றப் பெயரில் வலைப் பூ வைத்துள்ள திரு வெங்கட்ராமன் முருகன். இவர்தான் இந்த வாரப் பதிவர். இவர் சிறுகதைகள் அதிகம் எழுதியுள்ளார். அவற்றில் எனக்குப் பிடித்தது "அப்பாச்சி ". கதைய்டாவ் சுருக்கம் இதுதான். நகரத்தில் பிறந்து வளரும் இந்தகால சிறுவனுக்கு பாட்டி மற்றும் அவர்களின் ஊர் பிடிக்கவில்லை. ஆனால் அங்கு சென்றாகவேண்டியக் கட்டாயம். அவன் அங்கு சென்று தன் மனதை மாற்றிக் கொண்டானா இல்லையா என்பதைப் படிக்க அவரது தளத்திற்கு செல்லுங்கள். டிஸ்கி : இந்த வாரம் கூட்டு எல்லோருக்கும் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். உங்க கருத்தை சொல்லுங்க.


அன்புடன் எல்கே

48 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

Interesting news. Thank you for sharing.

Matangi Mawley சொன்னது…

Parking lot paththi neenga kettirukkara doubt enakkum undu!

Very interesting 'koottu'!! :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மணமும் சுவையும் கூடிய கூட்டு. பார்க்கிங் வசதிகள் குறைவு என்பது எல்லா ஊருக்கும் பொது. தில்லியில் அதற்கு ஒரு பெரிய லாபியே இருக்கிறது.

middleclassmadhavi சொன்னது…

கூட்டு சரியாகத் தான் இருக்கிறது!

Lakshmi சொன்னது…

கூட்டு மிகவும் சுவையாகவும் சுவாரசியமாகவும் இருக்கு.

சுசி சொன்னது…

// வண்டியில் உள்ள பொருளோ வண்டியின் பாகங்களோ தொலைந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல " //
இதை இங்கேயும் பொது இடங்கள்/மால்களில் காணலாம்.

கூட்டு சரியாக இருக்கு கார்த்திக்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//
நல்ல லாபம் சம்பாதிக்கும் இடத்தில் பொதுமக்களுக்கு ஏன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது ?//

அட போங்க மக்கா அதுக்கெல்லாம் அவங்களுக்கு நேரமில்லை....

சேட்டைக்காரன் சொன்னது…

//இவர்கள் பொறுப்பேற்க மாட்டேன் என்றால் எதற்காக கட்டணம் வசூலிக்க வேண்டும் ? இந்தமாதிரி பிரிண்ட் செய்திருப்பது சட்டப்படி சரியா ? சட்டம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.//

அது ஒருபுறம். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கிற தனியார்களைப் பற்றி தெரியாதா கார்த்தி? :-)

சேட்டைக்காரன் சொன்னது…

//எதுக்கு நிக்கணும் அப்படின்னு சிக்னலை மதிக்காம விதிமுறைகளை மீறுகிறார்கள். //

சரியான உதாரணம் வள்ளுவர் கோட்டம் முன்பு. ஒரு பயலும் சிக்னலை மதிக்கிறா மாதிரி தெரியவில்லை. எல்லாரும் பாதசாரிகள் கோட்டைத் தாண்டியே வண்டியை நிறுத்துகிறார்கள்.

சேட்டைக்காரன் சொன்னது…

//எனக்குப் பிடித்தது "அப்பாச்சி ". "கதைய்டாவ்" சுருக்கம் இதுதான்//

என்ன கார்த்தி, திடீரென்று ரஷிய மொழியிலும் கலக்கறீங்க? :-)

சேட்டைக்காரன் சொன்னது…

கூட்டு நல்லாயிருக்கு.

கோவை2தில்லி சொன்னது…

கூட்டு சுவையாகவும் மணமாகவும் இருந்தது. கீதுவிற்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

ஸ்மார்ட் டிவி இன்னும் கொஞ்ச நாள் போனால் நாம் (அல்லது நான்) வாங்கும் விலைக்கு வந்து விடும்...!

பார்க்கிங் பிரச்னை....எல்லாவற்றுக்கும் அன்னா ஹசாரே வர முடியுமா....பொது மக்களே யாராவது ஒரு முதல் அடி எடுத்து வைக்க வேண்டியதுதான்...!

போக்குவரத்து விதிகள் என்றில்லாமல் எல்லா விஷயத்திலும் மக்கள் தம் பொறுப்புணர்ந்து நடந்து கொண்டால் நல்லாத்தான் இருக்கும்.
சுனாமி வந்தபோது ஜப்பானின் கட்டுப் பாட்டையும் நேர்மையையும் பொறுமையையும் பார்த்தோமே...யார் கற்றுக் கொடுத்து அவர்களுக்கு வந்தது?

கீதுவுக்கு எங்கள் வாழ்த்துக்களும்...(முதலில் கீது ஜோக்ஸ் என்று படித்தேன்!)

அமைதிச்சாரல் சொன்னது…

கூட்டு நிறைவா இருக்கு.

Madhavan Srinivasagopalan சொன்னது…

// இவர்கள் பொறுப்பேற்க மாட்டேன் என்றால் எதற்காக கட்டணம் வசூலிக்க வேண்டும் ? //

பொது இடங்களில்.. (ரயில் நிலையம், பீச்) மக்கள் அடிக்கடி வருவதால் பார்கிங் மூலம் அரசிற்கு வருவாய் சேர்க்கவே, பார்கிங் டெண்டர் விடப் படுகிறது. ஆக அரசிற்கு வருவாய் (டெண்டர் எடுத்தவருக்கு பேரு-- எரிய வாய், சாப்பிட).

அதாவது அந்த இடத்தில் வாகனங்களை வைப்பதற்கு பயனாளி தரும் வாடகைதான் பார்கிங் கட்டணம்.

வீடு வாடகைக்கு எடுத்தால், வீட்டிலுள்ள பொருளுக்கு வீட்டு வானோர் பொறுப்பேற்க முடியாது.. அதுபோலவே..

நானும். இந்த கேள்வியை பல வருடங்களுக்கு முன்னர் கேட்டிருக்கிறேன்.. பின்னர் இவ்வாறு புரிந்து கொண்டேன்.

//இந்தமாதிரி பிரிண்ட் செய்திருப்பது சட்டப்படி சரியா ? சட்டம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். //

சட்டப் படி தவறில்லை என நான் நினைக்கிறேன்.

எனக்கு விரிவான சட்டம் தெரியாது.... எனக்கு இன்டூடிவாக தெரிவதை சொல்கிறேன்.

Madhavan Srinivasagopalan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
A.R.RAJAGOPALAN சொன்னது…

மனதிற்கு நிறைவான நவரச கூட்டு
நன்றி பதிவாக பதமாக பரிமாறியதர்க்கு

சாகம்பரி சொன்னது…

இந்த வார கூட்டு நன்றாக இருக்கிறது. இதற்கே கீதுவிற்கு திருஷ்டி சுத்தி போடவேண்டும். நன்றி திரு.எல்.கே

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கூட்டு நல்ல ருசியாகவே உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வெள்ளிநிலா சொன்னது…

//இவர்கள் பொறுப்பேற்க மாட்டேன் என்றால் எதற்காக கட்டணம் வசூலிக்க வேண்டும் ? இந்தமாதிரி பிரிண்ட் செய்திருப்பது சட்டப்படி சரியா ? சட்டம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். //
me too have same question!!

! சிவகுமார் ! சொன்னது…

கீது உலகப்புகழ் பெற வாழ்த்துகள்!

S.Menaga சொன்னது…

கூட்டு சுவையாகவே இருக்கு,கீது வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

தெய்வசுகந்தி சொன்னது…

Nice koottu!!

Balaji saravana சொன்னது…

சரியான கூட்டு எல்.கே!

asiya omar சொன்னது…

இந்த வாரக்கூட்டு அருமை..

ஹுஸைனம்மா சொன்னது…

//(முதலில் கீது ஜோக்ஸ் என்று படித்தேன்!)//

நானும்!! சர்தார்ஜி/முல்லா ஜோக்ஸ் போல இது என்ன புதுசா என்று யோசிக்குமளவு... :-))) :-(((

//வீடு வாடகைக்கு எடுத்தால், வீட்டிலுள்ள பொருளுக்கு வீட்டு வானோர் பொறுப்பேற்க முடியாது.. அதுபோலவே..//

இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. வீட்டை வாடகைக்கு எடுத்தால், நாம் அதில் குடியிருக்கிறோம் நம் பொருட்களுக்குப் பாதுகாப்பாக. ஆனால், இங்கு நம் பொருளை அவர் பொறுப்பில் ஒப்படைத்துச் செல்கிறோம், கட்டணத்தைக் கொடுத்து. எனில் நாம் வரும்வரை அவர்தானே பொறுப்பாளர் அதற்கு?

வேண்டுமென்றால், “விலையுயர்ந்த பொருட்களை வாகனத்தில் வைத்தால் பொறுப்பேற்க முடியாது” என்றோ, அசாதாராண சூழ்நிலைகளால் (தீவிபத்து, மழைவெள்ளம், போல) ஏற்படும் நஷ்டத்திற்குப் பொறுப்பேற்க முடியாது என்று சொல்லலாம்.

எனக்கும் சட்டம் தெரியாது. (நியாயமாகத்) தோன்றுவதைச் சொல்கிறேன். தவறென்று விளக்கினால் மாற்றிக் கொள்கிறேன்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

Nice கூட்டு.... smart TV super smart னு கேள்விப்பட்டேன்... ஆனா என்ன பிரச்சனைகள் இருக்குனு போக போக நியூஸ் வரும்னு நினைக்கிறேன்... :)

Jaleela Kamal சொன்னது…

***kuddu mika arumai

எல் கே சொன்னது…

@ இராஜராஜேஸ்வரி

நன்றிங்க


@மாதங்கி

நன்றி

எல் கே சொன்னது…

@வெங்கட்

இன்னிக்கு கோயம்பேடு போனேன். அங்க நல்ல வசதி பண்ணி இருக்காங்க இப்ப. சென்ட்ரல் மற்றும் எழும்பூர்தான் பிரச்சனை

எல் கே சொன்னது…

@மாதவி

நன்றி


@லக்ஷ்மி

நன்றிமா

@சுசி

ஓஹோ அப்படியா

எல் கே சொன்னது…

@மனோ
அது சரி

எல் கே சொன்னது…

@சேட்டை

அது டெண்டர் எடுத்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன் . வள்ளுவர் கோட்டம் சிக்னல் எப்ப எந்த சைட்ல இருந்து கார் சீறி வரும்னு தெரியாது

ரஷ்ய மொழி ஹிஹிஹ்

எல் கே சொன்னது…

@ஆதி

நன்றிங்க

@ஸ்ரீராம்

நீங்க வாங்கற விலை . எங்க போராடறது ?

அடுத்தவர்களைக் குற்றம் சொல்லியே பழக்கப்பட்டுவிட்டோம் நாம்

எல் கே சொன்னது…

@சாரல்

நன்றிங்க


@மாதவன்

விரிவான பதிலுக்கு நன்றி. எனக்கும் தெரியலை.ஆனால் அப்படி இருப்பது தவறில்லை என்று சொல்கிறார்கள்

எல் கே சொன்னது…

@ராஜகோபாலன்

நன்றி

எல் கே சொன்னது…

@சாகம்பரி

அதெல்லாம் அவங்க அம்மா பண்ணி இருப்பாங்க . நன்றி

எல் கே சொன்னது…

@வைகோ
நன்றி சார்

எல் கே சொன்னது…

@வெள்ளி நிலா

நான் உங்கக்கிட்ட கேட்டா நீங்க என்கிட்டே கேட்கரீன்களே

எல் கே சொன்னது…

@சிவகுமார்
நலமா ?? நன்றி

எல் கே சொன்னது…

@மேனகா

நன்றி

@சுகந்தி

நன்றி

@ஆசியா

நன்றி சகோ


@

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா
அவ் .. சரியா எழுதலையா ??


சரியா தெரியலை. விசாரிச்சு பார்க்கணும்

எல் கே சொன்னது…

@அப்பாவி

உனக்கு மட்டும் ஏன் இப்படித் தோணுது

@ஜலீலா

நன்றி சகோ

நிரூபன் சொன்னது…

சிமார்ட் டீவிடி, நம்ம ஊரில ஒரு இலட்சம் ஆகும் என்று நினைக்கிறேன்.

நிரூபன் சொன்னது…

சிமார்ட் டீவிடி, நம்ம ஊரில ஒரு இலட்சம் ஆகும் என்று நினைக்கிறேன்.

நிரூபன் சொன்னது…

இந்த வாரக் கூட்டில், பொது மக்கள் நலன் சார் விடயங்கள் அதிகமாக உள்ளன.

நிரூபன் சொன்னது…

கூட்டு.. வழமை போலவே காரம் தான்.