Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

கூட்டு 11.04.2011

தேர்தலினால் நாம் கவனிக்கத் தவறியவை : குமரி கடலில் முட்டம் கடியபட்டினத்தில் இருந்து சிறிது தொலைவில் ஆடுமேய்ச்சான் பாறைக்கு  அருகில் உள்ள பாற...

தேர்தலினால் நாம் கவனிக்கத் தவறியவை :
குமரி கடலில் முட்டம் கடியபட்டினத்தில் இருந்து சிறிது தொலைவில்
ஆடுமேய்ச்சான் பாறைக்கு  அருகில் உள்ள பாறையில் மோதி பனாமா கொடி கொண்ட
கப்பல் கடலில் கடந்த ஒரு வாரமாக மெதுவாக மூழ்கி கொண்டு இருக்கிறது.

நேற்று தான் சிங்கபூர் நாட்டில் இருந்து  மீட்பு கப்பல் வந்தது எண்ணெய் கசிந்து அந்த பகுதியில் உள்ள இயற்கை வளம் பாதிக்க படுவதை பலர் கவலையுடன் கவனித்து வருகின்றனர். இதைப் பற்றி எந்த சேனல்களிலும் செய்தி வரவில்லை. தமிழ் நாளிதழ்களிலும் செய்தி வரவில்லை. தி எகனாமிக் டைம்ஸ் இதழில் மட்டும் இதை பற்றிய செய்தி வந்துள்ளது. (நன்றி திரு ஒரிஸ்ஸா பாலு)



 ஓட்டு 

  "நீங்கள் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்பதை விட ஓட்டுப் போடவேண்டும் என்பது முக்கியமானது. எனவே நாளை மறுநாள் எந்த வேலை இருந்தாலும் முதலில் வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டுப் போட்டுவிட்டு பிறகு மற்றக் காரியங்களைப் பாருங்கள். இந்த முறை தேர்தல் கமிசனே பூத் ஸ்லிப் தந்து இருப்பதால் கட்சிக்காரர்களுக்கு வேலை மிச்சம். 


கல்யாண மண்டபங்கள்

புறாக் கூண்டு மாதிரியான மண்டபங்கள் இப்பொழுது அதிகரித்து வருவது நல்லது அல்ல. எதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் தப்பிப்பது கடினம். அரசாங்கம் இதற்கு ஒரு வழிமுறை செய்யுமா இல்லை வழக்கம்போல் எதாவது ஒரு பெரிய விபத்து நடந்தப் பிறகுதான் நடவடிக்கை எடுக்குமா ??

கேமராமேன்களின் தொல்லை


வரவர கல்யாணங்களில் யார் எங்கு நிற்க வேண்டும் என்பதை வீடியோ எடுப்பவர்கள்தான் முடிவு செய்கின்றனர். அவர்கள் போட்டோ எடுக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மேடையில் செய்யப்பட வேண்டிய சடங்குகள். நீ இங்கே நிற்காதே அங்கே தள்ளி நில்லு என்று சொல்லுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. அதேபோல் கல்யானதிருக்கு முதல் நாள் வரவேற்ப்பு முடிந்த பின் , என்னமோ மாடலிங் போட்டோ ஆல்பம் போடுவது போல் மணமக்களை இப்படி திருப்பி அப்படித் திருப்பி வதைத்துக் கொண்டிருப்பார்கள். மணமக்கள் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புகைந்துக் கொண்டிருப்பார்கள்.
கல்யாணம் என்பது அவர்கள் வாழ்வில் வரும் ஒரு முக்கியமான நிகழ்வு. அதை அவர்கள் மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டும். அவர்களை போட்டு வதைக்காதீர்கள்.

இந்தவாரப் பதிவர்

 புதிதாய் பதிவெழுத vanthirukkum திரு ராஜகோபால் அவர்கள் ஆயுத எழுத்து என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கிறார். மொத்தம் மூன்று பதிவுகளே எழுதி இருந்தாலும், அவரது அரசியல் பற்றிய பதிவு என்னைக் கவர்ந்தது. நீங்களும் படித்துப் பாருங்கள்.

http://arr27.blogspot.com


அன்புடன் எல்கே

35 கருத்துகள்

Porkodi (பொற்கொடி) சொன்னது…

kutti koota iruku? :)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

1) திருச்சி தினமலர் நாளிதழில் மூழ்கும் கப்பல் பற்றிய செய்திகள் விபரமாக, படத்துடன் 9.4.11 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

2) கட்டாயமாகக் காலையிலேயே கிளம்பி வோட்டுப்போட்டிடுவோம்

3) திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில் தான், பெரிய தீ விபத்து நடந்து, நிறைய உயிர்பலிகள் ஆகி, ஒரு 5 ஆண்டுகள் ஆகிவிட்டதே. நடவடிக்கை எடுக்க மீண்டும் ஒரு பெரிய விபத்து நடக்க வேண்டுமா? வேண்டாம். வேண்டவே வேண்டாம்.

4)கேமராமேன்கள் தொல்லை மிகவும் அதிகமாகவே உள்ளன. சிலர் போட்டோ, வீடியோக்களுக்குத்த்தரும் முக்கியத்துவம் சடங்குகளுக்குத் தராமல் இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

5) புதிய பதிவர் பற்றிய தங்களின் அறிமுகத்திற்கு நன்றி.

Unknown சொன்னது…

சரிங்க ஆபீசர்..

Asiya Omar சொன்னது…

கூட்டு பகிர்வும்,திரு வை,கோவின் பின்னூட்டமும் அருமை.

RVS சொன்னது…

முடியாது எல்.கே. போட்டோ எடுக்காம இருக்க முடியாது. வீடியோ எடுக்காம இருக்க முடியாது. யார் கல்யாணம் பார்த்தா என்ன. கிஃப்ட் குடுக்கும் போது அவங்களையும் சேர்த்து கிளிக்குவோம்.
கூட்டு ரொம்ப கொஞ்சமா பண்ணியிருக்கீங்க. எல்லோருக்கும் பத்துமா? ;-))

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

நல்ல கூட்டு

Chitra சொன்னது…

பல விஷயங்களை தொகுத்து தருவது, நல்லா இருக்குது.

ஸ்ரீராம். சொன்னது…

*செய்தி சேனல்கள் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அபபடி நடப்பதில்லை.
*குறைந்தபட்சம் 49 O வாவது போட்டு விட வேண்டும்.
*எல்லா வகையிலும் காசு பார்க்கும் ஜனம் குட்டி மண்டபங்களையும் கட்டி காசு பார்க்கிறது போலும்.
*வீடியோகிராபர்கள் கொஞ்சம் ஓவராக நடந்து கொள்வது போலத் தோன்றினாலும் நாமே அவர்கள் வீடியோ/புகைப் படம் எடுக்க நல்ல முறையில் வழிவகை செய்து விட்டால் அவர்கள் தொல்லை இருக்கப் போவதில்லை. நம் உறவு வகையிலேயே ஒருவர் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு தரப்புக்கும் பிரச்னை இருக்காது. பல வருடங்களுக்குப் பிறகு நமக்கு மலரும் நினைவுகளைத் தரப் போவது அவைதானே...!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முக்கிய தலைவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதால் நம்ம மக்களும் கோட்டை விட்டுட்டாங்களோ...!!!

middleclassmadhavi சொன்னது…

திருமண மண்டபம் குறித்து நீங்கள் சொல்வது சரியே! தீர்வு?

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

நான்கு காய்களுடன் கூட்டு ஸ்வாரஸ்யம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

kuttu tasty.

வல்லிசிம்ஹன் சொன்னது…

உங்கள் பதிவே ஒரு பத்திரிகை படித்த அனுபவத்தைக் கொடுக்கிறது கார்த்திக்.
இந்த வீடியோ க்ராஃபர்களின் தொல்லை எல்லை மீறித்தான் போகிறது.
கல்யாணத்தைப் பார்க்கவிடாமல் செய்கிறார்கள்.
நல் ஆட்சி தமிழகத்தில் வரட்டும்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

உங்கபதிவில் பலவிஷயங்கள் தெரிந்த்ுகொள்ள முடிகிரது. நன்றி.

vanathy சொன்னது…

என்னமோ மாடலிங் போட்டோ ஆல்பம் போடுவது போல் மணமக்களை இப்படி திருப்பி அப்படித் திருப்பி வதைத்துக் கொண்டிருப்பார்கள். மணமக்கள் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புகைந்துக் கொண்டிருப்பார்கள்.///
ஆண்டவா! இந்த கொடுமை எப்ப முடிவுக்கு வருமோ தெரியவில்லை!!!!
நல்ல பதிவு.

பத்மநாபன் சொன்னது…

அளவான கூட்டில் ருசியான விஷயங்கள் ... ...

எனக்கும் ஓட்டு போட ஆசை ... சென்ற முறை கிடைத்த சீட்டை கொண்டு சென்று '' உங்களுக்கு இந்த வாக்கு சாவடியில் இல்லை அந்த சாவடிக்கு செல்லவும் '' அங்கு இல்லை இன்னொரு பக்கம் செல்லவும் '' என அலைகழிக்கப் பட்டு ஜனநாயக கடமை மறுக்கப்பட்டது .... இந்த தடவை வோட்டு சாவடி உறுதியான நிலையில் நாட்டில் இல்லாத நிலை ... வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் ஆன் லைன் வசதி செய்து தரலாம் ( பல கட்டுப்பாடுகளோடு ) இல்லாவிட்டால் ஆன் லைனிலேயே வேட்பாளரை ஜெய்க்க வைத்து விடுவார்கள் ....

சாந்தி மாரியப்பன் சொன்னது…

திருமண மண்டப அவஸ்தைகள் ரொம்ப சரி..

போட்டோ எடுக்கறதைப்பத்தி சொல்லணும்ன்னா..கல்யாணத்துக்கு அப்புறமா, போட்டோகிராபர் என்னை சரியாவே எடுக்கலைன்னு குத்தம் சொல்றதும் அதே மக்கள்தானே... அதேமாதிரி வெவ்வேறு போஸ்கள்ல போட்டோ எடுக்கறது அப்போதைக்கு அவஸ்தையா இருந்தாலும் பின்னாடி ஆல்பத்துல அந்தப்போட்டோக்கள்தான் பளிச்சுன்னு இருக்கும். மணமேடையிலோ ரிசப்சனிலோ எடுக்கப்படும் போட்டோக்கள் சிலசமயங்களில் சோபிப்பதில்லை.

Thenammai Lakshmanan சொன்னது…

கூட்டு அருமை எல் கே.:)

மோகன்ஜி சொன்னது…

உங்கள் கூட்டு மணக்கிறது. இன்னமும் கொஞ்சம் சமைக்கப் படாதோ?
பத்தலயே எங்களுக்கு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கமகம கூட்டு – காய்கள் தான் கொஞ்சம் கம்மியோ?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Nice koottu..:)

எல் கே சொன்னது…

@போர்க்கொடி

நான் என்னிக்கு பெரிய போஸ்ட் போட்டு இருக்கேன்

எல் கே சொன்னது…

@வைகோ

சார் நன்றி/ ஏற்கனவே ஆனது தெரியும் . ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லையே

எல் கே சொன்னது…

@கே ஆர் பி

:))


@ஆசியா

நன்றி

எல் கே சொன்னது…

@ஆர் வீ எஸ்


அண்ணே , நான் சொல்றது மாங்கல்ய தாரணம் நடக்கறப்ப அது தனி பதிவா போடலாமான்னு யோசிக்கறேன்

எல் கே சொன்னது…

@ஆச்சி

நன்றிங்க

@சித்ரா
நன்றி


@ஸ்ரீராம்

அண்ணா அதை பண்ணாதீங்க. அதனால் உபயோகம் இல்லை . நான் சொல்றது தாலி கட்டும் சமயத்தில்

எல் கே சொன்னது…

@மனோ

மக்கா புரியலையே

எல் கே சொன்னது…

@மாதவி

அதைத்தான் நானும் கேக்கறேன்

@சுந்தர்ஜி

நன்றி ஜி


@ராஜேஸ்வரி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@வல்லிமா

என் வீட்டு பக்கம் வந்ததற்கு சந்தோசம் அம்மா. ரொம்ப தொல்லை தாங்கலை. சில இடங்களில் கத்த வேண்டி இருக்கு

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

அம்மா நன்றி

@வானதி

ஆமாம் . நன்றி


@பத்மநாபன்
என்ன பாதுகாப்பு செய்தாலும் நம்ம ஆளுங்க அதை மீருவாங்க

எல் கே சொன்னது…

@சாரல்

முக்கியமா நான் சொல்றது சில தருணங்களில் மண்டபத்துக்கு வரவங்களை பார்க்க விடுவது இல்லை. பிறகு எதற்கு அவர்கள் மண்டபத்திற்கு வரவேண்டும் ??

எல் கே சொன்னது…

@தேனம்மை

நன்றி அக்கா


@மோகன் ஜி

அவசர சமையல் இது


@வெங்கட்
டைம் இல்லை

@புவனி

நன்றி

raji சொன்னது…

அப்பாடி!லேட்டா வந்தாலும் எனக்கும் கூட்டு கிடைச்சுடுச்சு.
கூட்டு பண்றதுக்கு பாத்திரம் பெரிய சைஸ் கிடக்காம போயிடுச்சா
கொஞ்சம் அளவு குறைஞ்சு போச்சு.ஆனால் சுவை மாறாம நல்லாவே இருக்கு

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல கூட்டு!!

சாகம்பரி சொன்னது…

திருமண ஆல்பம் ஒரு இனிய தொகுப்பு. கெடுபிடி எனபது நாம் புகைப்பட கலைஞரை புக் செய்யும்போதே சொல்லிவிட்டால் குறைந்துவிடாதா? இரண்டு பக்க உறவினர்களையும் மணமக்கள் அடையாளம் காண உதவுவது ஆல்பம் தானே. கூட்டு முக்கியமான செய்திகள்.