Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

கூட்டு 04.04.2011

கேவலமான பிரச்சாரம்  தமிழகத்தில் என்றுதான் அரசியல் சகிப்புத் தன்மையும் நாகரீகமும் வருமோ என்றுத் தெரியவில்லை. ஆளுங்கட்சி எதிர்கட்சித் தலைவர்க...

கேவலமான பிரச்சாரம் 

தமிழகத்தில் என்றுதான் அரசியல் சகிப்புத் தன்மையும் நாகரீகமும் வருமோ என்றுத் தெரியவில்லை. ஆளுங்கட்சி எதிர்கட்சித் தலைவர்களைத் தவறாகப் பேசுவதும், அதற்குப் பதிலாக எதிர்கட்சித் தலைவர்களும் அதே ரீதியில் பேசுவதும் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுமானாலும் பிடிக்காலம். ஆனால் கட்சி சார்பற்ற பொதுமக்களுக்கு இது பிடிக்காது. இந்த விஷயத்தில் வடஇந்திய அரசியல்வாதிகள்  பரவாயில்லை. என்னதான் திட்டிக் கொண்டாலும், மாற்றுக் கட்சியினரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதும் ,அவர்கள் வீடு விழாக்களுக்குப் போவதும் என்று அரசியலையும் ,மற்றவற்றையும் பிரித்தேப்பார்க்கின்றனர். அத்தகைய நிலை தமிழகத்தில் எப்பொழுது வருமோ ?


இன்று இரவு சனியை பார்க்கலாம்!
 
  எந்த ஒரு கிரகமும் சூரியனுக்கு நேர் எதிராக இருக்கும்போது அந்த கிரகம் சூரிய ஒளியால் பிரதிபலிக்கப்பட்டு ஒளிரும். 

திங்கள்கிழமை சூரியன், பூமி, சனி ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று எதிராக ஒரே நேர்கோட்டில் வருகின்றன. திங்கள்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை சூரிய உதயம் வரை சனி கிரகத்தை அதன் வளையங்களுடன் வெறும் கண்களால் காணலாம்.

வானத்தின் கிழக்கில் ராசி மண்டலத்தின் 6-வது பகுதியான கன்னி ராசிப் பகுதியில் சனி கிரகம் மஞ்சள் நிறத்தில் தெரியும். இதை தொலைநோக்கிகள் மூலம் பார்த்தால் வளையங்கள் மிகத் தெளிவாகத் தெரியும்.

378.1 நாள்களுக்கு ஒரு முறை, சனி கிரகம் இவ்வாறு ஒரே நேர் கோட்டில் வரும். அதாவது 30 ஆண்டுகளில் 29 தடவை இவ்வாறு நேர்கோட்டில் வரும். அப்போதெல்லாம் நாம் சனியை வெறும் கண்களால் கண்டுகளிக்கலாம். இதற்கு முன் சென்ற ஆண்டு (2010) மார்ச் 22-ம் தேதி இவ்வாறு ஒரே நேர் கோட்டில் வந்தது இனி அடுத்த ஆண்டு (2012) ஏப்ரல் 15-ம் தேதி இவ்வாறு வரும்

ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் நுரையீரல் புற்றுநோய் 

கட்டடங்களின் கூரையாகப் போட பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாஸ் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பது உறுதியாகத் தெரிந்துள்ளதால் அதன் பயன்பாட்டை இந்திய அரசு முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் நிபுணர்களும், அறிவியலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆஸ்பெஸ்டாஸ் என்றழைக்கப்படும் மிருதுவான, நார் போன்ற இப்பொருள் சிலிகேட் கனிமப் பொருள் வகையைச் சார்ந்தாகும். இதனை கிரைசோலைட் என்றும் அழைக்கின்றனர். இந்த ஆஸ்பெஸ்டாஸ் பெரும்பாலும் கட்டடங்களின் கூரையாகவே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூரையாக போடப்படும் ஆஸ்பெஸ்டாஸில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும் நார்கள் சுவாசத்தின்போது நுரையீரலிற்குச் சென்று தங்கிவிடுகிறது. இதுவே நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது என்று மருத்துவ அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆஸ்பெஸ்டாஸில் பல வகைகள் உள்ளன என்றாலும், அவை யாவும் ஆபத்தானவையே என்று கூறுகிறார் பேராசிரியர் எலிஹூ ரிச்டர். இவர் இஸ்ரேலின் ஹூப்ரூ பல்கலைக் கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியராவார்.

மேலும் இதைப் பற்றிய விவரம் அறிய 

http://tamil.webdunia.com/miscellaneous/health/disease/1104/02/1110402058_1.htm

ஒவ்வொரு பவுண்டரிக்கும் 25 ஆயிரம் ரூபாய் 

உலக கோப்பை தொடரின் பைனலில் அடிக்கப்பட்ட ஒவ்வொரு பவுண்டரி, சிக்சருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இது உலகளவில் உள்ள, பின் தங்கிய குழந்தைகளின் படிப்புக்கு தேவையான, புத்தகங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

நல்ல விஷயம் நடந்து இருக்கு. இதற்காக வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்து தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களின் புத்தாண்டு தினம். அவர்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .  இனிய உகாதி திருநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.



அன்புடன் எல்கே

41 கருத்துகள்

Chitra சொன்னது…

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சாகம்பரி சொன்னது…

ஆகாயத்தில் ஏற்கனவே என் தேடல்கள் அதிகம். மஞ்சள் நிறத்தில்.....பார்க்கிறேன். நாம் சனியை பார்க்கலாம். சனிதான் நம்மை பார்க்கக்கூடாது. நன்றி திரு.எல்.கே.

Unknown சொன்னது…

அரசியல் சகிப்புத்தன்மையா??

கிலோ என்ன விலைங்க..

Anisha Yunus சொன்னது…

//உலக கோப்பை தொடரின் பைனலில் அடிக்கப்பட்ட ஒவ்வொரு பவுண்டரி, சிக்சருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இது உலகளவில் உள்ள, பின் தங்கிய குழந்தைகளின் படிப்புக்கு தேவையான, புத்தகங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

நல்ல விஷயம் நடந்து இருக்கு. இதற்காக வாழ்த்துக்கள்.//

இது உண்மையில் நல்ல விஷயம் கார்த்திண்ணா, செயலிலும் அது நடந்தால் சரி :)

கோலா பூரி. சொன்னது…

அனை வருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

கார்த்தி, ஒரே பதிவில், அரசியல், விளையாட்டு, ஹெல்த்கேர், வான்வெளி அதிசயம் என்று கலக்கி இருக்கீங்க. இன்று வானத்தையே வெரிச்சுப்பாக்கனும். புத்தாண்டு கொண்டாடுபவர்கள் அனை வருக்கும் வாழ்த்துக்கள்.

dheva சொன்னது…

கூட்டு புதுசா கார்த்திக்...கராசாரமா அட்டகாசமா இருக்கு...!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சனியை பார்த்தால் சனியன் பிடிக்காதுதானே மக்கா...

எல் கே சொன்னது…

@சித்ரா

நன்றிங்க

@செந்தில்

உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க

எல் கே சொன்னது…

@சாகம்பரி
உண்மைதான் சாகம்பரி. நாம பார்த்தா சனிக்கு ஒன்னும் ஆகாதுதானே ???

எல் கே சொன்னது…

@அன்னு

அதெல்லாம் கொடுப்பாங்க. வெறும் விளம்பரம் மட்டும்தந்தால் பின்னாடி பிரச்சனை

எல் கே சொன்னது…

@கோமு
நன்றிங்க

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
நீங்க எழுதறதை விடவா ? நன்றிமா

எல் கே சொன்னது…

@தேவா
அட வாங்க ரொம்ப நாள் கழிச்சு வரீங்க நன்றி

எல் கே சொன்னது…

@மனோ
மக்கா, நாம பாக்கறதுனால சனிக்கு ஒன்னும் ஆகாதே ??

சாந்தி மாரியப்பன் சொன்னது…

இன்னிக்கி சனிப்பார்வையா :-))))

ADHI VENKAT சொன்னது…

அனைவருக்கும் யுகாதி திருநாள் வாழ்த்துக்கள்.
கூட்டு சுவையாக இருந்தது.

சுசி சொன்னது…

இங்க மேகமூட்டமா இருக்கு.. மழை வேற :(

கூட்டு நல்லாருக்கு கார்த்திக்.

சுசி சொன்னது…

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் :)

RVS சொன்னது…

யாராவது உருப்படியா நாங்க வந்தா ஊழலை ஒழிப்போம் அப்படின்னு பிரச்சாரம் பண்றாங்களா பாருங்க... உஹும்.. காணோமே...
வழக்கம் போல் கூட்டு நல்லா வெந்துருக்கு... ;-))

தெய்வசுகந்தி சொன்னது…

கூட்டு நல்லா இருக்குதுங்க கார்த்திக்!!

மோகன்ஜி சொன்னது…

உங்கள் கூட்டு உகாதி பச்சடி போல் இனிப்பு, காரம், புளிப்பு என் அசத்தலாய் இருக்கு. மீகு நா யுகாதி சுபாகாங்க்க்ஷலு

ஸ்ரீராம். சொன்னது…

அந்த வட இந்திய நாகரீகம் எல்லாம் தென் இந்திய அரசியலில் வராது...இங்கே எல்லாமே ஜென்மப்பகை!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//கேவலமான பிரச்சாரம்//
அதை விட கொடுமை மறுநாளே எதிர்கட்சிக்கு மாறி அப்படியே உல்டாவா பேசறது... கஷ்டம்டா சாமி...:(((

//இன்று இரவு சனியை பார்க்கலாம்//
ஓ.... புது விஷயம்... நன்றி...

//ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் நுரையீரல் புற்றுநோய்//
பெரும்பாலும் இது தொழில்சாலைகளில் இருப்பதால் இன்னும் ஆபத்து... பெரும்பாலான நேரம் மக்கள் இருப்பது பனி இடத்தில் தானே...

//ஒவ்வொரு பவுண்டரிக்கும் 25 ஆயிரம் ரூபாய்//
வாவ்..தட்ஸ் கிரேட்

//புத்தாண்டு வாழ்த்துக்கள்//
நன்றி...;))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

-

ரிஷபன் சொன்னது…

யுகாதி நல்வாழ்த்துகள்.
தகவல்கள் ஒவ்வொன்றும் ரசனை.
நம்மூர் அரசியல்வாதி எந்த விழாவுக்கும் வராமல் இருந்தாலே போதும்!

Matangi Mawley சொன்னது…

Sir, enga veettu kutti telescope eduththundu motta maadikku ponom... porvaiya izhuththu poththundirukku vaanam. oru natchatramum kannukku theriyala... "4 am ku ezhunthu paakkalaam" naanga... Vidinjidum! :)

nice koottu....

esp. info on asbestos.... niraiiiyaa school-la use pannaraanga... koora potta sachool irukka koodaathu-nnu sonnappo- kooraiya eduththuttu asbestos pottu vechchirukkaanga niraiiiya school la... atha mothalla niruththanum. cancer- or no cancer.... veyil kaalaththula evvalavu erichchal kodukkum kozhanthaikalukku!

great mix...

எல் கே சொன்னது…

@சாரல்
நமக்கா இல்லை சனிக்கா ??

@ஆதி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@சுசி
அடடா பரவாயில்லை விடுங்க. அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்
அநியாயத்துக்கு ஆசை படரீர். அப்புறம் அவங்க எப்படி சம்பாதிப்பா

எல் கே சொன்னது…

@சுகந்தி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@மோகன்ஜி
என்ன திட்டறீங்க ??

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
எதுகெடுத்தாலும், வடக்கு வாழ்கிறது என்று சொல்கிறார்களே இதை கத்துக்க மாட்டார்களா ??

எல் கே சொன்னது…

@அப்பாவி
ஆமாம் . வேலை செய்யரவாளுக்குதான் கஷ்டம்

எல் கே சொன்னது…

@ரிஷபன்
உண்மைதான் இவங்க வந்தாலே, விழா மாறி போய்டும்

எல் கே சொன்னது…

@மாதங்கி
நள்ளிரவு நாலு மணிக்கா ???

Anisha Yunus சொன்னது…

asbestas patri 8 aanudugalaay padiththuk konduthaan ullen, ellaa naattilirunthum thooki eriyappatta kuppai inthiyaavil mattum thangamaay jolikkum enna seyya!!!

raji சொன்னது…

எப்பவும் கூட்டை சுட சுட ரசிக்க வந்திருவேன்.இந்த தடவை
கொஞ்சம் ஆறினப்பறம் வந்துட்டேன்.ஆனாலும் சுவை மாறலை.
கலக்கல் கூட்டு

பத்மநாபன் சொன்னது…

நம்மஊர் அரசியலுக்கும் நேர்மைக்கும் இடைவெளி ரொம்ப அதிகமாயிடுச்சு.....

அருமையான வானியல் நிகழ்வை பார்க்க தவறவிட்டேன் ....

எளிதாகவும் விலைகுறைவாக இருப்பதால் அஸ்பெஸ்டாசுக்கு போகிறார்கள் .. இப்படி உயிர் கொல்லும் ஆபத்து இருப்பதை சொன்னது நல்ல விழிப்புணர்வு

அடிக்கும் பவுண்டரிகள் நல்ல சேவைக்கு செல்வது சிறப்பானது ...

யுகாதி வாழ்த்து சொல்லுவோம் ....காவேரி பாலாற்று காரர்களுக்கு

அவியலாக அமைந்த நல்ல கூட்டு .....

மாதேவி சொன்னது…

தகவல்கள் அருமை.

யுகாதி வாழ்த்துக்கள்.

Asiya Omar சொன்னது…

நல்ல பகிர்வு அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துக்கள்.