மார்ச் 29, 2011

இது புதுசுக் கண்ணா புதுசு


பல வெளிநாடுகளில் இருந்து குறிப்பா ஆப்ரிக்காவில் இருக்கு நாடுகளில் இருந்து மெயில் வரும் . இவ்ளோ காசு உன் அக்கவுன்ட்டுக்கு மாத்தறேன், உன் அக்கவுன்ட் நம்பர் குடுன்னு கேட்டு வரும் மெயில்கள் இப்ப பழசு. இப்ப எல்லாம் புதுசு புதுசா ஏமாத்த ஆரம்பிச்சிட்டாங்க. 

இப்ப லேட்டஸ்ட் மோசடி எஸ் எம் எஸ் மூலம்தான் நடக்குது. நேற்று இரவு எனக்கு வந்த எஸ் எம் எஸ் 

congrats! you have been selected to get a natural pearl set of rs.2499/-/ For details SMS "W" to 9248094343. Valid for 48hours only T&C.


இதுதாங்க அந்த எஸ் எம் எஸ். நான் சமீபக் காலத்தில் எந்தப் போட்டியிலும் கலந்துக்கலை. அப்படி எதாவது ஒரு போட்டியில் கலந்துக்கிட்டு இருந்தாலும் சொல்லலாம் அதிர்ஷ்டம் நல்லா இருக்குனு. 

எப்படி எல்லாம் கிளம்பி வரங்கா பாருங்க நம்ம பணத்தை ஏமாத்த. இந்த மாதிரி எஸ் எம் எஸ்கள் மோசடியின் முதல் கட்டம். நீங்க விவரம் கேட்டு மெசேஜ் அனுப்பினால் நீங்கள் இவ்வளவு கட்ட வேண்டும் என்பது போன்ற கண்டிசன்கள் சொல்லப்படும்.  

பார்த்து ஜாக்கிரதையா இருந்துகோங்க அப்பு, அவ்வளவுதான் நான் சொல்லமுடியும்.

அன்புடன் எல்கே

52 கருத்துகள்:

அப்பாவி தங்கமணி சொன்னது…

அடப்பாவமே... எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க... "நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரெம்ப கேட்டு போச்சண்ணே".... டெக்னாலஜி வளர வளர ஏமாத்தற டெக்னிக்குகளும் புதுசாத்தான் இருக்கு... ரூம் போட்டு யோசிப்பாங்களோ...:)))

எனக்கு facebook ல இருந்து நேத்து இப்படி ஒரு மெசேஜ் வந்தது... கொஞ்சம் வேற மாதிரி... பதிவாவே போடறேன்... ஐடியா குடுத்ததே நீ தானே... சரி சரி ஓட வேண்டாம்...ஹா ஹா...:)

GEETHA ACHAL சொன்னது…

இப்படி எல்லாம் கூட நடக்குதா..,,

DrPKandaswamyPhD சொன்னது…

இதையும் பார்த்து ஏமாறுபவர்கள் இருப்பார்கள். நம் நாட்டுக் கலாசாரம் அப்படி. "ஓசி" ன்னா உயிரையும் விடுவார்கள் நம் மக்கள்.

Madhavan Srinivasagopalan சொன்னது…

உங்களுக்கு 500000 ரூபாய் பரிசு விழுந்திருக்கு... பாங்க் ஃபார்மாலிடீஸ் முடிஞ்ச உங்க அக்கவுண்டுக்கு உடனே அனுப்பிடறேன்
பாங்க் ஃபார்மாலிடீஸ் கிளியர் பண்ண, நீங்க எனக்கு ரூபாய் 5000 அனுப்புங்க..
---- என்னோட அக்கவுன்ட் நம்பர் 0 00 000 0000 ..

asiya omar சொன்னது…

இது மட்டும் இல்லை,இதுக்கு மேலேயும் இருக்கு,போன் செய்து ஏமாற்றும் வேலை எவ்வளவோ யு.ஏ.இ யில் இருக்கு.இப்ப எந்த கணக்கும் இல்லை,எல்லா ஊரும் கெட்டு கிடக்கு,நாம தான் உஷாராக இருக்க வேண்டும்.

RVS சொன்னது…

இதெல்லாம் ஜோக்கா எடுத்துக்கணும் எல்.கே. லீவ் இட். ;-)))

Chitra சொன்னது…

DrPKandaswamyPhD 3 Says:
Mar 29, 2011 7:48:00 AM

இதையும் பார்த்து ஏமாறுபவர்கள் இருப்பார்கள். நம் நாட்டுக் கலாசாரம் அப்படி. "ஓசி" ன்னா உயிரையும் விடுவார்கள் நம் மக்கள்.


......அவ்வ்வ்வவ்வ்வ்......

சேட்டைக்காரன் சொன்னது…

கார்த்தி,விஞ்ஞானபூர்வமா ஏமாத்துறதுலே நம்மாளுங்க கில்லாடிங்கன்னு ஒரு பட்டிமன்றத்துலே லியோனி சொன்னாரு! ஞாபகம் வந்திச்சு! :-)

பத்மநாபன் சொன்னது…

பொதுவான பிரச்சனை இது.. நேரம் இருந்தால் சைபர் கிரைமுக்கு போகலாம் ...பார்த்தவுடன் டெலிட் செய்வதுதான் இதற்கு சிறந்த பரிகாரம் ...

பெயரில்லா சொன்னது…

அடப்பாவிங்களா. இப்படி எல்லாம் கூட ஏமாத்தறாங்களா? அவ்வ்வ்வவ்வ்வ்.....

அமைதிச்சாரல் சொன்னது…

புதுசு புதுசா யோசிக்கிறாங்க :-)))

middleclassmadhavi சொன்னது…

எனக்கும் இந்த SMS வந்தது!

தவிரவும், லேண்ட்லைனில் இந்த நம்பர் lucky dipல் செலக்ட் ஆகியிருக்கு, டின்னருக்கு உங்கள் spouse-உடன் வாருங்கள் என்று அழைப்பு வேறு! - நான் அலுவலக நம்பர் அது என்றவுடன் ஃபோன் கட்டானது!!

raji சொன்னது…

அதையேன் கேக்கறீங்க.ஒரு நாளைக்கு ஒரு மெஸேஜாவது
இப்படி வந்து தொலையுது.

நீங்க அதுக்கு செலக்ட் ஆயிருக்கீங்க இதுக்கு உங்களுக்கு கன்செஷன்னு
படுத்தல் தாங்கலைடா சாமி

சாகம்பரி சொன்னது…

எனக்கு 250,000,00 பௌண்ட்ஸ் - ஷெல் ஆயில் கம்பெனி டிராவில் வெற்றி பெற்ற செய்தி. பெரிய காமெடி.

சுசி சொன்னது…

ஹஹாஹா..

நேத்து எங்க டீம் லீடருக்கு இதே மெசேஜ் வந்திச்சு கார்த்திக். அவ கிட்ட சொல்லி இருக்கோம்.. மரியாதையா எங்களுக்கும் பங்கு குடுத்திடுன்னு :)

Lakshmi சொன்னது…

கார்த்தி,10 நாள் முன்ன எனக்கு மெயிலில்
இப்படித்தான் மெசேஜ் வந்தது,வின்னர் எச்சுமி உங்களுக்கு 300000 பறுமானமுள்ள்ள கிஃப்ட் காத்துகிட்டு இருக்கு இன்த மெயில் அட்ரஸ் க்ளிக்
பண்ணுங்கன்னு. நான் என்ன பண்ண யாரைக்கேக்கன்னு முழிச்சுகிட்டு இருக்கேன் சரியான சமயத்தில் பதிவுபோட்டீங்க.அந்தமெயிலையே டிலீட் பண்ணிட்டேன்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சாக்குரதையா இருங்கலேய் மக்கா...

thirumathi bs sridhar சொன்னது…

ஆமாங்க,இந்த் மாதிரி sms இப்போ அதிகம் வருது,இது கூட பரவாயில்லங்க,டேடிங் போக&இத்யாதிக்கெல்லாம் 4 டிஜிட் நம்பரில் sms வருது.

சில வாணரங்கள் ட்ரை செய்ததில்,டேடிங்கிற்கு sms ல் பேச்சுவார்த்தை நடத்துவதற்குள் மைனஸ் பேலன்ஸ் காமிக்குதாம்.

புதுகைத் தென்றல் சொன்னது…

சில கடை வாசல்களில் உங்க பேரு, போன் நம்பர் எழுதி இந்த டப்பால போடுங்க, லக்கி ட்ராவுல உங்களுக்கு பரிசு கிடைக்கும்னு சொல்வாங்க. அந்த மாதிரி கலெக்ட் செஞ்ச நம்பருங்களை வாங்கன்னே ஒரு கூட்டம் இருக்கு.

டெக்னாலஜில திட்டம் போட்டு ஏமாத்தறவங்க கூட்டம் ஜாஸ்தியாகிப்போச்சு. நாமதான் சுதாரிப்பா இருக்கணும். உங்க பதிவு பலரை அலர்ட் செஞ்சிருக்கும் பகிர்வுக்கு நன்றி

மதுரை சொக்கன் சொன்னது…

எனக்கும் வந்ததுண்டு!உடனே அழித்து விடுவேன்!

சென்னை பித்தன் சொன்னது…

இதில் ஏமாந்த படித்தவர்கள் அநேகம் பேர்!பேராசைதான்!

எல் கே சொன்னது…

@அப்பாவி

ஆமாம் நெறைய ஏமாத்தறாங்க. ஜாக்கிரதையா இருக்கணும் . போடு போடு. காபி ரைட்ஸ் என்கிட்டே இருக்கு ஒழுங்கா அதுக்கு தனி காசு கொடுத்து விடு

எல் கே சொன்னது…

@கீதா ஆச்ச்சல்

இதை விட மோசாமா எல்லாம் நடக்குது

எல் கே சொன்னது…

@கந்தசாமி

ஆமாம் சார். இலவச கலாச்சாரம் ஒழியனும் முதலில். நன்றி

எல் கே சொன்னது…

@மாதவன்
முதலில் நீங்கள் எனக்கு ஒரு லட்சம் அனுப்புங்கள் சரியா ???

எல் கே சொன்னது…

@ஆசியா

சகோ அங்கயும் இருக்கா இந்த மாதிரி ??

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

அது சரி. மக்களுக்கு ஒரு தகவல்தான் இது

எல் கே சொன்னது…

@chitraa

:))

எல் கே சொன்னது…

@சேட்டை

அதில ஒருத்தர் டாக்டர் பட்டம் வாங்கி இருக்கார் :)

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

அண்ணா டெலிட் தான்

எல் கே சொன்னது…

@அனாமிகா

இதை விட மோசமா எல்லாம் இருக்கு

எல் கே சொன்னது…

@சாரல்
ஆமாம்

எல் கே சொன்னது…

@maathavi

உங்களுக்கு வந்தது ரொம்ப பழைய டெக்னிக் . அஞ்சு வருசத்துக்கு முன்னாடி என் மொபைலுக்கு வந்தது

எல் கே சொன்னது…

@ராஜி

உண்மைதான். ரொம்பத் தொந்தரவு

எல் கே சொன்னது…

@சாகம்பரி

அதுல பாதி எனக்கு வேண்டும்

எல் கே சொன்னது…

@சுசி

நீங்க வாங்கினா எனக்கும் பங்கு வேண்டும்

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

அப்படி வந்த டெலிட் பண்ணிடுங்க . ரிப்ளை பண்ண வேண்டாம்

எல் கே சொன்னது…

@மனோ

ஆமாம் மக்கா

எல் கே சொன்னது…

@ஆச்சி

ஹை டேடிங் நல்லா இருக்கே.

எல் கே சொன்னது…

@புதுகை தென்றல்

அதெல்லாம் நான் நிரப்புவதே இல்லை. (என் அதிர்ஷ்டத்தின் மேல் அப்படி ஒரு நம்பிக்கை )

எல் கே சொன்னது…

@சொக்கன்

நலம்தானே ??? ரொம்ப நாள் ஆச்சு பார்த்து

எல் கே சொன்னது…

@பித்தன்

ஆமாம் சார்.

தெய்வசுகந்தி சொன்னது…

புதுசு புதுசா யோசிக்கறாங்கப்பா!

அன்னு சொன்னது…

//@அப்பாவி

ஆமாம் நெறைய ஏமாத்தறாங்க. ஜாக்கிரதையா இருக்கணும் . போடு போடு. காபி ரைட்ஸ் என்கிட்டே இருக்கு ஒழுங்கா அதுக்கு தனி காசு கொடுத்து விடு//

இப்படியும் சம்பாதிக்கறவங்க இருக்காங்க. ஹெ ஹெ ஹெ

:))
(அப்புறம் அந்த முத்து மாலைய வாங்கி திவ்யாம்மாக்கு தரலையா !!!)

! சிவகுமார் ! சொன்னது…

கள்வருக்கு செல் உள்ள இடம் எல்லாம் சிறப்பு?

மோகன்ஜி சொன்னது…

இந்த மாதிரி பித்தலாட்டம் வரவர அதிகம் நிகழ்கிறது. மனிதனின் பேராசையும், உழைக்காமல் பணம் பண்ணும் சின்னபுத்தியும் இருக்கும் வரை இந்த ஏமாற்று வேலைகளுக்கு பஞ்சமே இல்லை..
நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள் எல்.கே

தக்குடு சொன்னது…

ஆள்தான் பாத்து அனுப்பி இருக்கான் பாருங்கோ!! அவனை சொல்லனும்!!..:))lol

மாதேவி சொன்னது…

ஏமாற்றும் கூட்டம் எங்கும் இருக்கிறது.

ஸ்ரீராம். சொன்னது…

டெக்னாலஜி....! முன்னாடி எல்லாம் ட்ரான்சிஸ்டர் வேணுமான்னு கேட்டு டெல்லிலேருந்து செங்கல் வரும்!

அப்பாதுரை சொன்னது…

பதில் sms அனுப்பினா என்ன ஆகும்?

எல் கே சொன்னது…

@சுகந்தி

ஆமாம்


@அன்னு

இது காபிரைட்ஸ் காசு


@சிவா
ஹஹாஹ் ஆமாம்

எல் கே சொன்னது…

@மோகன்ஜி

உண்மை . சீக்கிரம் பணக்காரன் ஆகணும்


@தக்குடு
ஹஹஅஹா


@மாதேவி

ஆமாம்

@ஸ்ரீராம்
ஓகோ அது தெரியாதே

@அப்பாதுரை
அடுத்த முறை வந்தா பதில் அனுப்பி என்ன ஆகுதுன்னு சொல்றேன்