Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

மாலை மாற்று

நம் முன்னோர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளத் தவறிய விஷயங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் "மாலை மாற்று ".  ஆங்கிலத்தில் "பாலி...

நம் முன்னோர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளத் தவறிய விஷயங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் "மாலை மாற்று ". 

ஆங்கிலத்தில் "பாலிண்ட்ரோம்" என்று ஒன்று உள்ளது. தமிழிலும் வார்த்தைகள் உண்டு. அதே போல் பாடல்களும் பல உண்டு. அந்த வகையில் திருஞான சம்பந்தர் ஒருப் பதிகம் எழுதி உள்ளார். "திருமாலை மாற்றுப் பதிகம்" என்ற அப்பதிகமும் அதன் உரையும் கீழே உள்ளது. 

மாலை மாற்று என்றால் என்ன?

"ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அ·தாய் வருவதை மாலை மாற்றென மொழி"

 ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும்.  அது முன்னிலிருந்து வாசிக்கும் அதே வாசகமாக அமையவேண்டும்.

பாடல் எண் : 1

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

பொழிப்புரை :

ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.

பாடல் எண் : 2

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

பொழிப்புரை :

வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.

பாடல் எண் : 3

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

பொழிப்புரை :

அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே!

பாடல் எண் : 4

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

பொழிப்புரை :

என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே. தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.

பாடல் எண் : 5

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

பொழிப்புரை :

யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! அறிவில் மேம்பாடு உடையவனே! அனைத் துயிர்கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே! என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் வாயாக!.

பாடல் எண் : 6

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.

பாடல் எண் : 7

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

பொழிப்புரை :

உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே! ஒப்பற்ற தாயானவனே! ஏழிசை வடிவானவனே! நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின் உட் பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ

பாடல் எண் : 8

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

பொழிப்புரை :

இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று சொல்லப்படும் பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே. மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க வரும்போது காத்தருள்வீராக! மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின் சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக! ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா? (அடியேம் சிறுமையால் செய்த பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).


பாடல் எண் : 9

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

பொழிப்புரை :

காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே. பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!.

பாடல் எண் : 10

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

பொழிப்புரை :

நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே . புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.

பாடல் எண் : 11

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

பொழிப்புரை :

நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக! என்று நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ள திருஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமானைப் போற்றி அருளிய, பாடுவோர்களையும், கேட்போர்களையும் உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.

இந்தப் பாடல்களையும் விளக்கங்களையும் கீழ்க்கண்ட தளங்களில் இருந்து எடுத்தேன்.

அவர்களுக்கு என் நன்றி 

29 கருத்துகள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வடை.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

போண்டா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பஜ்ஜி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இருங்க படிச்சுட்டு வாரேன்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ் பொங்கி வழியுது.....

settaikkaran சொன்னது…

எப்பா சாமீ....இதையெல்லாம் எங்கே படிச்சு நானும் இலக்கியவாதி ஆவுறது...? இப்பவே கண்ணைக் கட்டுதே...!

RVS சொன்னது…

படிச்சு படிச்சு வாய் இழுத்துக்கிச்சு... ஏற்கனவே அந்தந்த தளங்கள்ல படித்தேன். பகிர்வுக்கு நன்றி எல்.கே. ;-)

குறையொன்றுமில்லை. சொன்னது…

முதல் பாரா படித்ததும் அந்தாதி வகைப்பாடல்கள் பற்றி சொல்ரீங்கன்னு நினைச்சேன். அதிலும் முடியும் வரியில் அடுத்தவரி ஆரம்பிக்கும் இல்லியா?ஆனா முழுவதும் படித்தபிறகுதான் இதன் அழகை புரிஞ்சுக்க முடிந்தது. நன்றி. கார்த்தி.

சுசி சொன்னது…

ரொம்ப புதுசா இருக்கு கார்த்திக்.. மலைப்பாவும் இருக்கு படிக்க.

middleclassmadhavi சொன்னது…

இப்பாடல்கள் தேவாரக் குழுவினர் சுலபமாக ஓதும் போதும் நமக்குக் கூடப் படிக்கக் கடினமாக இருக்கும்!

நல்ல பதிவு!

raji சொன்னது…

நான் வேணும்னா எழுதறதை நிறுத்திடட்டுமா?
இம்மாதிரியெல்லாம் படிக்கும் பொழுது எனக்கு
இப்படித்தான் தோன்றும்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது "தமிழின் பெருமை" என்று ஒரு
கட்டுரை தயார் செய்ய என் தந்தையின் உதவியை நாடினேன்.
அப்பொழுது அவர் இந்த திருமாலை மாற்றுப் பதிகத்திலிருந்தும்
சில பாடல்களை மேற்கோள்களாய் எடுத்துத் தந்தார்.
அப்பொழுதுதான் முதன்முதலாய் இதைப் பற்றி
அப்பாவின் மூலம் அறிந்தேன்.

raji சொன்னது…

அம்மை ஞானப்பால் ஊட்டி வளர்த்தவர் ஆயிற்றே

ஹூம்.....

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

இது போன்ற பாடல்களைப் படிக்கும்போதுதான்
தேன்தமிழின் ருசியினை அறிய முடிகிறது.
தமிழின் அழகை மேலும் ரசிக்க வைத்து விட்டீர்கள்.
மிக்க நன்றி எல்.கே.

கோலா பூரி. சொன்னது…

என் ஃப்ரெண்ட் வீட்டில் குழந்தைகள் இதுபோல தமிழ் விளையாட்டு விளையாடி பாத்திருக்கேன். அதெல்லாம் சின்ன், சின்ன வரிகளில் வரும் அதுவே எனக்கு சரிவர புரிஞ்சுக்க முடியாது. தேரு வருதே, மோரு போருமோ இப்படி நிறைய.

Yaathoramani.blogspot.com சொன்னது…

பதம் பிரித்துச் சொல்ல இப்போது
தமிழ் அறிஞர்களால் கூட முடியுமா
என்பது சந்தேகமே
பரணில் கிடந்த அற்புதங்களை
எடுத்துக் காட்டியமைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் சொன்னது…

தலைப்பை மட்டும் பார்த்துட்டு, ஏதோ கல்யாணச்சடங்குகளைப்பத்திதான் சொல்லப்போறீங்களோன்னு வந்தேன்.. படிச்சப்புறம் கல்யாண விருந்தே சாப்ட்ட திருப்தி :-)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

அடேயப்பா... இதுல இவ்ளோ இருக்கா? கேள்விப்பட்டு இருக்கேன்... படிச்சதில்ல....நன்றி..

எனக்கு பிடிச்ச இன்னொரு வகை அந்தம் ஆதியாய் வரும் அந்தாதி பாடல்கள்... ஞாபகம் வெச்சுக்க சுலபமா ஒரு க்ளு மாதிரி இருந்ததாலயோ என்னமோ அது ரெம்ப பிடிக்கும்... பாட்டு மற்றும் பொருள் சுவையும் அதில் உண்டு... எனக்கு அந்த வகைல பிடிச்ச ஒரு பாட்டு "கலைவாணி நின் கருணை தேன் மழையே". இது எளிமையான ஒன்னுங்கரதால மனசுல பதிஞ்சது போல. இந்த வகைல உனக்கு தெரிஞ்ச இது போன்ற செய்யுள் வகை பாடல்கள் இருந்தால் போடலாமே... சும்மா தோணுச்சு... :)

பெயரில்லா சொன்னது…

ரொம்ப மலைப்பா இருக்கு எல்.கே!!!

சாகம்பரி சொன்னது…

வியக்க வைக்கும் பாடல் வரிகள். அதற்கேற்ற விளக்க உரை. வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நல்ல பகிர்வு.... உங்கள் உழைப்பை இந்த பதிவு காட்டுகிறது.


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

ஹேமா சொன்னது…

தமிழின் இனிமை முழுப்பதிவிலும்.பொழிப்புரை இல்லாவிட்டால் என்னன்னே தெரியாம இருந்திருக்கும்.
நன்றி கார்த்திக் !

aavee சொன்னது…

சூப்பர் கார்த்திக்.. தமிழ்ல விளையாடிருக்காங்க..

இது எப்பவோ கேட்டது .. (மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் )

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நம் இனிய தமிழில் இதுபோன்ற பல புதையல்கள் புதைந்து கிடக்கிறது கார்த்திக். அவ்வப்போது இது போன்றவற்றை சேகரித்து ஓரிடத்தில் பகிர்ந்தால் நமக்கும், வரும் சந்ததியினருக்கும் உதவும். பகிர்வுக்கு நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

அறிவியல் விங்ஞானத்தைவிட அந்த இரண்டு,இரண்டு வரிகளுக்கு அர்த்தம் இவ்வளவா?அருமை.பகிர்விற்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி எல்.கே.

vanathy சொன்னது…

எல்கே, இதெல்லாம் புரிந்து கொள்ளும் வயசில்லை எனக்கு.

Asiya Omar சொன்னது…

எனக்கு எங்கே இதெல்லாம் தெரியும் சகோ?விளக்கம் நல்லாயிருக்கு.

ADHI VENKAT சொன்னது…

தமிழ் இலக்கணத்திலும், செய்யுளிலும் பாடல்களிலும் அவ்வளவு அழகு இருக்கிறது. நல்ல பகிர்வு.