மார்ச் 07, 2011

பயமுறுத்தும் சென்னை மெட்ரோ ரயில்இந்தியாவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஊழல்களின் வரிசையில் அடுத்து விரைவில் இடம்பெறப் போவது மெட்ரோ ரயில் ஊழல். இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் வேலைகளை நிறைவேற்றிய மாஸ்மெட் ரோஸ்ட்ராய் என்ற நிறுவனத்துடன் தான் சென்னையில் மெட்ரோ ரயில் அமைக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே டில்லியிலும்,ஹைதராபாத்திலும் கட்டுமான சமயத்தில் அவர்கள் சரியாக செயல்படவில்லை அதனால் மூன்று வருடங்களில் ஏழு பேர் பலி ஆகி உள்ளனர் எனவும் இன்னும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கூறுகின்றனர். இந்த நிறுவனத்துக்கு அரசாங்க கட்டுமானப் பணிகள் வழங்கக் கூடாது என்றும்  இரண்டு வருடங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் பாரளுமன்றத்தில் பிரச்சனை வந்த பொழுது ,அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளதாக ஜெயபால் ரெட்டி கூறினார். 

"தவறான டிசைன்கள் காரணமாகத்தான் விபத்துகள் ஏற்பட்டது. ஆனால்  நாங்கள்தான் சரியாக எல்லா பணிகளையும் முடித்து தந்துள்ளோம் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் 23.02.11 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் நடந்த விபத்துகளை பற்றி அவர் எந்த வித விளக்கமும் இது வரை அளிக்கவில்லை. இந்த நிறுவனத்தை தடை செய்யவேண்டும் என்று ஹைதராபாத்தில் உள்ள அரசாங்க பொறியியல் வல்லுனர்களும் ஆதாரத்துடன் அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். 

இத்தகைய எதிர்ப்பு இருக்கையில்  எதற்கு அந்த நிறுவனத்திற்கு இந்த காண்ட்ராக்ட்டை அளிக்கவேண்டும் ??? இதன் பின்னணி என்ன ??

மாஸ்மெட் ரோஸ்ட்ராய் என்ற ரஷ்ய நிறுவனம் மெட்ரோ ரயில் கட்டுமானத் துறையில் என்பது ஆண்டு அனுபவம் உள்ளது என்பது இவர்கள் அளிக்கும் விளக்கம். ஆனால் அந்த நிறுவனம் இப்பொழுது ரஷ்ய அரசு நிறுவனம் அல்ல அதை சென்ற வருடமே தனியாருக்கு விற்றுவிட்டனர். இதை வாங்கியவர்கள் ரஷ்ய  மாபியா கும்பல்கள் என்று மாஸ்கோவில்  சொல்கின்றனர். இவர்களுக்கு அளிக்கப்பட்ட  கான்ட்ராக்ட்டின் மதிப்பு 1947 கோடி. இந்த ஒப்பந்தத்தின் லாபம் 20 சதவீதம்  எனவும் ,லாபத்தில் சரிபாதி ரஷ்ய அமைப்புக்கு போகிறது எனவும் சொல்கின்றனர். கிட்டத்தட்ட அது 200 கோடி வரும். இது சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான லாபம் மட்டுமே. இன்னும் டெல்லி,ஹைதராபாத் போன்றவை உள்ளன. 

விஷயம் அறிந்தவர்கள் ரஷ்யா இந்தியக் கட்டுமானத் துறையை மெள்ள விழுங்கப் பார்க்கிறது என்று சொல்கிறார்கள். . இங்கு இருப்பவர்களோ அதை எதுவும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். வரைப்படங்கள் சரியாக இருக்கிறதா என்றுத் தெரியாமல் அல்லது கவனிக்காமல் கட்டுமானத்தை ஆரம்பித்து அதனால் பல உயிர்களை காவு வாங்கிய நிறுவனத்துடன் மீண்டும் ஒரு ஒப்பந்தம் போட்ட மத்திய அரசின் உள்நோக்கம் என்ன ??

(நன்றி :  9.3.2011, துக்ளக்கில்  வந்த பயமுறுத்தும் சென்னை மெட்ரோ ரயில் கான்ட்ராக்ட்)
 


அன்புடன் எல்கே

37 கருத்துகள்:

கீதா சாம்பசிவம் சொன்னது…

:((((( பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை!

Chitra சொன்னது…

வரைப்படங்கள் சரியாக இருக்கிறதா என்றுத் தெரியாமல் அல்லது கவனிக்காமல் கட்டுமானத்தை ஆரம்பித்து அதனால் பல உயிர்களை காவு வாங்கிய நிறுவனத்துடன் மீண்டும் ஒரு ஒப்பந்தம் போட்ட மத்திய அரசின் உள்நோக்கம் என்ன ??


......என்ன கொடுமைங்க இது?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

விழிப்புணர்வுப்பதிவு போல.. இருங்க படிச்சுட்டு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அட.. துக்ளக் மேட்டரா.. படித்தேன்.. உண்மைதான்

தமிழ்வாசி - Prakash சொன்னது…

நாம என்ன செய்ய முடியும்? இப்படி படிச்சுட்டு ஆதங்கப் படுவதை தவிர?

எனது வலைபூவில் இன்று:இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

அமைதிச்சாரல் சொன்னது…

என்ன பண்றது.. இதான் இந்தியான்னு ஆகிப்போச்சு :-(

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

விழிப்புணர்வு பகிர்வு.. நன்றி

அதைப்ப்த்தி அவர்களுக்கு கவலையில்லை..

அவர்களுக்கு தேவையெல்லாம் இதில் எவ்வளவு ஊழல் செய்யலாம் என்ற கணக்குதான்..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

முகமூடிகளை அழிவித்தெரிய
நீங்க யாராவது தயாராக இருக்கிறீர்களா..


விவரம் அரிய கவிதை வீதி வாங்க..

வித்யா சொன்னது…

ஏற்கனவே நெரிசல் மிகுந்த வடபழனி சாலையை, இன்னும் குறுக்கி, மூச்சுத் திணற வைக்கும் ட்ராபிக்கை அதிகப்படுத்தியது தவிர, வேறெந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியல இந்த மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட்ல:(

Balaji saravana சொன்னது…

ஐயோ அடுத்த ஊழலா? இதுல மக்களின் உயிரும் கேள்விக்குறியாகுமே?

asiya omar சொன்னது…

தேவையான பகிர்வு,இதன் பின்னாடி இப்படி ஒரு செய்தி இருப்பது அதிர்ச்சி.புது டெம்ப்லேட் மிக நேர்த்தி.

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரம், மக்கள் மீதும் அவர்களின் உயிர் மீதும் அரசிற்கு சரியான கரிசனை இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. பாவம் அந்த தொழிலாளர் குடும்பங்கள். ஊழல்,,, ஊழல் என்று அப்பாவி மக்களைத் தான் அழிக்கிறார்கள். என்று திருந்துமோ இந்த சமுதாயம்.

புதுகைத் தென்றல் சொன்னது…

:(((

Jaleela Kamal சொன்னது…

தலைபபே ரொம்ப பயமா இருந்துச்சி

சேட்டைக்காரன் சொன்னது…

ஏற்கனவே வாசித்து விட்டேன் கார்த்தி. கட்டுமானப்பணிகளில் ஒப்பந்தம் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதை நம் நாட்டில் அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள். என்னத்தை செய்ய?
பகிர்வுக்கு நன்றி!

செந்தில்குமார் சொன்னது…

திருத்தமுடியாத வாதிகள்..அரசியல்வாதிகள்..
முடிவே கிடையாத....இதுபோன்ற நிகழ்வுகளுக்கு

raji சொன்னது…

முடிவற்ற ஊழல்கள் விடிவற்ற பொது மக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஊழல்களுக்கு பஞ்சமில்லை! துக்ளக் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது கார்த்திக்! இங்கே சரியாகக் கிடைப்பதில்லை!

எல் கே சொன்னது…

@கீதா சாம்பசிவம்
ஆமாம் வேற வழி எதுவும் தெரியவில்லை

எல் கே சொன்னது…

@சித்ரா
ஆமாம் எப்படியும் சில மாதங்களில் வெடிக்கலாம்

@செந்தில்
ஆமாம் சித்தப்பு

@தமிழ்வாசி
முதல் வருகைக்கு நன்றி

@சாரல்
ஊழல் = இந்தியா :((

எல் கே சொன்னது…

@சௌந்தர்
சரியா சொன்னீங்க

எல் கே சொன்னது…

@வித்யா
தினமும் நூறடி ரோடைக் கடந்து கே கே நகர் செல்வதற்குள் ஷப்பா எவ்ளோ கஷ்டமா இருக்கு

எல் கே சொன்னது…

@பாலா சரவணன் கணேஷ்
ஆமாங்க

எல் கே சொன்னது…

@ஆசியா
என்ன பண்ணி என்ன பிரயோஜனம்

எல் கே சொன்னது…

@நிரூபன்
ஆமாம் நண்பரே. ரொம்ப கஷ்டம்

@ஜலீலா
:(

எல் கே சொன்னது…

@சேட்டை

ஒன்னும் பண்றதுக்கு இல்லை

@செந்தில்
தெரியலை செந்தில்

எல் கே சொன்னது…

@ராஜி
ஆமாம்

@வெங்கட்
யாரோ ஒரு நண்பர் ஒரு வலைப்பூவில் போட்டுக் கொண்டிருந்தார் . லிங்க் கிடைத்தால் தருகிறேன்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நாசமா போச்சி போங்க..
மறுபடியும் முதல்ல இருந்தா....

சுசி சொன்னது…

:(

vanathy சொன்னது…

ஆ! மறுபடியுமா???? எனக்கு ஒரு இலாகா கிடைக்குமா??

அப்பாவி தங்கமணி சொன்னது…

//இத்தகைய எதிர்ப்பு இருக்கையில் எதற்கு அந்த நிறுவனத்திற்கு இந்த காண்ட்ராக்ட்டை அளிக்கவேண்டும் ??? இதன் பின்னணி என்ன ??//

அவாளோட ஒண்ணு விட்ட இல்ல நாலு விட்ட சொந்தம் அவாளாம்...அதான் விசயம்னேன்... (சும்மா சு.சாமி ஸ்டைல் ட்ரை பண்ணினேன்...:)

Jokes Apart, I really dream that they re-consider giving this contract to someone else and save some lives. Otherwise, appoint some non-biased quality engineers to over see the work and ensure safety...ஆனா நம்மள யாரு கருத்து கேக்கறாங்க சொல்லு?

அப்பாவி தங்கமணி சொன்னது…

-

கோமதி அரசு சொன்னது…

மக்களுக்கு நல்லது நடைபெற வாழ்த்துவோம்.

வாழ்க வளமுடன் மக்கள்.

vadakarai appan சொன்னது…

all are requested to read THUKLUK

ஸ்ரீராம். சொன்னது…

நானும் படித்தேன். இதனால் ஏற்படும் சாலைத் தொந்தரவுகள் வேறு கடுப்பேற்றுகின்றன. இந்தப் பணி முடியும் போது அதற்குள் அதிகமாகியிருக்கும் வாகன நெரிசல்களால் பெரிய மாற்றம் ஏதும் வருமா என்றும் சொல்ல முடியாது.

Arun Ambie சொன்னது…

//வரைப்படங்கள் சரியாக இருக்கிறதா என்றுத் தெரியாமல் அல்லது கவனிக்காமல் கட்டுமானத்தை ஆரம்பித்து அதனால் பல உயிர்களை காவு வாங்கிய நிறுவனத்துடன் மீண்டும் ஒரு ஒப்பந்தம் போட்ட மத்திய அரசின் உள்நோக்கம் என்ன ??//
Handled is dancing to the tunes of handler. Handler is KGB! Handled is AMG!! OMG!!!

இன்பம் துன்பம் சொன்னது…

ஓதக்கபட்ட அமவுண்டில் பாதிக்குமேல் லஞ்சம் அனால் கலக்கபடும் சிமெண்டில் பாதிக்குமேல் சாம்பல் கலந்துவிடும். கட்டிடம் விழாமல் என்னசெயும்,இனி அதற்க்கு அவசியம் இல்லை என்னில் மெட்ரோ திட்டம் காலாவதி ஆகிவிட்டது அதற்க்கு இதுவரை செய்த செலவு மக்கள் தலையில் கடனாக விடியும்,இனி மோனோ ரயில் எப்படிவருகிறது பார்போம் தொடரட்டும் பணி பார்போம் உங்கள் பதிவுகளை