மார்ச் 24, 2011

நினைவுகள் 20

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று எண்ணிக்கொண்டே அமைதியாக ஜூஸைக் குடித்து முடித்தாள். அவளிடம் அதை எப்படி சொல்வது என்ற யோசனையுடன் ரமேஷ் மெதுவாகக் குடித்துக் கொண்டிருந்தான்.  கோப்பையில் இருந்த ஜூஸ் காலி ஆகியும் ஒரு சில நிமிடங்களுக்கு அங்கு அமைதியே நிலவியது. பின் ஒருவாறு தைரியைத்தை வரவழைத்துக்கொண்டவனாக  பேச ஆரம்பித்தான்.

"வெங்கட் கிட்ட அதைப் பத்தி சொன்னது சித்ரா இல்லை. "

"அப்புறம் வேற யாரு...?"

"....நான்தான் "

 அவன் சொன்னது அவளுக்கு அதிர்ச்சி அளித்தது என்பது அவள் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. சில நிமிடங்களுக்கு அவளால் எதுவும் பேச இயலவில்லை.

"அப்ப சித்ரா சொன்னதா வெங்கட் சொன்னது ...."

"அதுவும் உண்மைதான். முதலில் சொன்னது நாந்தான். விளையாட்டா எதோ பேசிட்டு இருந்தப்ப எதோ சொல்லப்போய் இதைப்பத்தி சொல்லிட்டேன் .அப்புறம்தான் அதைப் பத்தி சித்ராகிட்ட அவர் கேட்டு இருக்கணும். எனக்கு முழு விஷயமும் தெரியாதே.... சாரி சரஸ்வதி. என்னை மன்னிச்சிடு."

"ஹ்ம்ம். சரி விடு இனி அதைப் பத்தி பேசி பிரயோஜனம் இல்லை .."

 "இப்ப என்னப் பண்ணப் போற ? வெங்கட் அந்த விஷயத்தை மறந்துட்டார். "

"அது தெரியுமே . "

"உன் முடிவு என்ன ? என்ன முடிவு பண்ணி இருக்க ?"

"ஹ்ம்ம் இன்னும் எதுவும் யோசிக்கலை. "

"எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சு முடிவெடு. அவசரப்படாத.  நான் நைட் ஊருக்கு கிளம்பறேன். எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு இன்பார்ம் பண்ணு ."

"ம். சரி கிளம்பலாமா ?"

அவன் மேல் கோபம் இல்லையென்று வாயால் சொன்னாலும், மனதினுள் ஒரு பக்கம் கோபம் இருந்தது. எனவே சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்றெண்ணிக் கொண்டிருந்தாள். பில் செட்டில் பண்ணிவிட்டு வெளியே வந்தவர்கள் நேரெதிர் திசைகளில் சென்றனர்.


உணவகத்தில் இருந்து வந்தவள் , மீண்டும் யோசிக்கத் துவங்கினாள். முதலில், ரமேஷ்,வெங்கட், சித்ரா என்று அனைவரின் மீதும் கோபம் வந்தாலும், யோசிக்க யோசிக்க தான் செய்தத் தவறு புரிந்தது அவளுக்கு .  நம்பிக் காதலித்தவனை சந்தேகப்பட்டது தவறென்றால் அதை மற்றவர்களிடம் கேட்டது அதைவிடப் பெரியத் தவறு . இப்படி தான் தவறு செய்துவிட்டு வெங்கட்டை குற்றம் சொல்வது தப்பு என்று உணர்ந்தவள் , அவனிடம் பேச முடிவெடுத்தாள்.

அலைபேசியைக் கையில் எடுத்தவள் , இரண்டு தினங்களுக்கு முன்பு தனக்கு வந்த அழைப்புகளில் இருந்த வெங்கட்டின் எண்ணை தேடி எடுத்து அழைத்தாள். மறுமுனையில் ரிங் மட்டுமே சென்றுக் கொண்டிருக்க, இவளுக்கு இதயம் துடிப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. சில நொடிகள் காத்திருப்புக்குப் பின்

"ஹலோ !"

அவன் குரலைக் கேட்டவுடன், இவளால் பதிலுரைக்க முடியவில்லை. பொங்கி வரும் கண்ணீரை நிறுத்தக் கஷ்டப்பட்டாள்.ஒருவாறு சமாளித்துக் கொண்டு "நான் சரஸ்வதி பேசறேன்"

இவள் குரலைக் கேட்டவுடன் அவனுக்கு மனதில் இனம் புரியாத சந்தோசம் வந்தாலும், எதற்கு இப்பொழுது போன் செய்துள்ளாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

"உன் குரலை வெச்சே தெரிஞ்சிகிட்டேன். சொல்லு சாரு. என்ன விஷயம் ? ."

"உன்கிட்ட   கொஞ்சம் பேசணும் ."

"ம். போன்லய இல்லை நேர்லையா?"

"உன் இஷ்டம். நீ எப்படி சொன்னாலும் சரி. "

"சரி நேர்ல வரேன். எங்க வரட்டும் "

ஒரு கணம் யோசித்தவள்,

"நான் இப்ப தங்கி இருக்கற வீட்டுக்கு வர முடியுமா ? "

"நோ ப்ராப்ளம்.அட்ரஸ் சொல்லு "

அவள் அட்ரஸ் சொல்ல சொல்லக் குறித்துக் கொண்டவன்,அரை மணி நேரத்தில் அங்கு வருவதாக சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

அவன் போனைத் துண்டித்தவுடன், பரபரப்பானாள் சாரு. அவன் வரும் முன் தான் ரெடியாகவேண்டும் என்று நினைத்தவள் , குளித்து முடித்து என்ன உடை உடுக்கலாம் என்று யோசித்தாள். சில நிமிட யோசனைக்குப் பிறகு அவனுக்கு மிகப் பிடித்த சேலை அணிவது என்று முடிவெடுத்தாள்.

அவள் தயாராவதற்கும், வீட்டு அழைப்பு மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது.

பரபரப்புடன் சென்று கதவைத் திறக்க அங்கு வழக்கமான புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்தான் வெங்கட்.

சில நிமிடங்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரில் பார்ப்பதால், ஒருவர் மற்றொருவரை ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.

"நீ மாறவே இல்லை வெங்கட் "

"எதை வெச்சி சொல்ற ?"

"இன்னும் அந்தக் குறும்ப சிரிப்பு அப்படியே இருக்கு "

"ம். சரி என்ன விஷயம் ?"

அவள் நேரில் அதுவும் வீட்டிற்கே வர சொன்னபொழுதே நல்ல விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைத்தாலும் அதை அவள் வாயால் கேட்க வேண்டும் என்று எண்ணினான் .

"என்னை மன்னிச்சிடு வெங்கட் . நான் நெறையத் தப்புப் பண்ணிட்டேன். தப்பெல்லாம் என் மேல வெச்சிகிட்டு உங்களை திட்டி தேவை இல்லாமல் சண்டைப் போட்டு பிரிஞ்சு, இத்தனை நடந்தப் பிறகும் அதை எல்லாம் மறந்து எனக்கு நீங்க போன் பண்ணப்பக் கூட உங்க கிட்ட ஒழுங்கா பேசலை நான் . என்னை மன்னிப்பீங்களா ?"

"முட்டாளா நீ ? உன்னை நான் மன்னிக்காம இருந்தா எதுக்கு உனக்கு அன்னிக்கு போன் பண்ணி இருக்கப் போறேன் ?'

இதுவரை தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு பேசிய சாருவால் இதன் பின் தன்னை அடக்க இயலவில்லை. தன்னை மறந்து அழத் துவங்கினாள்.

" சாரு! என்னமா இது ? எதுக்கு இப்படி ? நடந்ததை ஒருக் கனவா எண்ணி மறந்திருவோம். இனி எல்லாம் நல்லபடியா நடக்கும் ஓகே?"

அழுது முடித்தப் பொழுதும் கண்ணில் இன்னும் ஒட்டி இருந்த கண்ணீர்த் துளிகளுடன் 'ம்ம் சரி" என்று சொல்லியவாறே அவன் தோளில் சாய்ந்தாள்.

அதே சமயம் வெங்கட்டின் போன் ஒலித்தது.  போனை எடுத்த வெங்கட் " சீக்கிரம் வந்திருவேன். ஆமா. ஒரு நல்ல விஷயம் காத்திருக்கு. வந்து சொல்றேன் " என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

பின் சாருவிடம் "அம்மாதான் போன்ல .  நான் வேற உன்கிட்ட கேட்காம சொல்லிட்டேன் . ஓகே சொல்லிடலாம்தானே இல்லை ..."

"உதை படுவ. ஒழுங்கா ஓகே சொல்லிடு அம்மாகிட்ட "

அப்பொழுதுதான் அவனுடைய உதட்டை அருகில் பார்த்தவள் "அடப்பாவி மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டியா ? இனி பேசி பிரயோஜனம் இல்லை. இப்பவே உன் விரலை வெட்டப் போறேன் இரு ." என்று அவள் எழ , இவன் ஓட ஆரம்பித்தான்.

- நினைவுகள் முடிந்தது


பி. கு :இது வரைக்கும் இந்த தொடரை பொறுமையுடன் படித்த அனைவருக்கும் எனது நன்றிகள். காதலை மையமா வைத்து நான் எழுதுவது முதல் முறை. அப்பாவி அளவுக்கு எழுத முடியாட்டியும் ஓரளவு நல்லாவே எழுதி இருக்கேன்னு நினைக்கிறன். நான் சொல்றது சரியாத் தவறான்னு நீங்களே சொல்லுங்க.

அப்புறம் தொடர் முடிஞ்சிடுசேன்னு சிலர் சந்தோசப் படுவாங்க (நான் சத்தியமா அப்பாவியை சொல்லலை ) . அவங்களுக்காக நான் சொல்றது அடுத்தத் தொடர் மிக மிக விரைவில் துவங்கும் என்பதே. கண்டிப்பா அது காதலை அடிப்படையாக வைத்து அல்ல. நன்றி. 


அன்புடன் எல்கே

29 கருத்துகள்:

Chitra சொன்னது…

அடுத்தத் தொடர் மிக மிக விரைவில் துவங்கும் என்பதே. கண்டிப்பா அது காதலை அடிப்படையாக வைத்து அல்ல.


......அருமையான தொடரை தந்தற்கு பாராட்டுக்கள்! அடுத்த தொடர், ஒரு மர்மத் தொடராக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் எழுத்து நடைக்கு, அது நன்றாக வருமே.

GEETHA ACHAL சொன்னது…

அப்படா...போட்டுவிட்டிங்கள்..படித்துவிட்டு வந்து திரும்பவும் கமண்ட் போடுகிறேன்...

GEETHA ACHAL சொன்னது…

நல்லா இருந்தது முடிவு...அதுவும் கடைசியில் பகுதி அருமை...

சீக்கிரமாக அடுத்த தொடரினை ஆரம்பிக்க வாழ்த்துகள்...

geethasmbsvm6 சொன்னது…

கொஞ்சம் சப்புனு ஆயிடுத்தோ?? ம்ம்ம்ம்ம்??? ரமேஷ் தான் ஏதோ விளையாடி இருக்கான், ஆனால் அது கொஞ்சம் சீரியஸான விஷயம்னு நினைச்சேனே! :))))))))

geethasmbsvm6 சொன்னது…

தொடர

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நல்ல முடிவு...

asiya omar சொன்னது…

தொடரை கொண்டு போகவும் திறமை வேணும் எல்.கே.அருமை.முடிவை யூகிக்க முடியாமல் அதே சமயம் நல்ல முடிவை சொல்லியது பாராட்ட தக்கது,.அப்பாடா.. அடுத்த தொடருக்கு நாங்க ரெடி,அப்ப நீங்க?

Lakshmi சொன்னது…

கார்த்தி சரியான முடிவு. ஓரளவு எதிர்பார்த்ததும்கூட. தொடரை போரடிக்காம நல்லாவே கொண்டு போனின்ங்க. அடுத்து சீக்கிரமே ஆரம்ப்பிக்க ட்ரை பண்ணுங்க. ஆமா
ஜகத்குரு எங்கபோனார்? ரொம்ப சுவாரசியமா படிச்சிண்டு இருந்தேன்.

அமைதிச்சாரல் சொன்னது…

நல்ல முடிவு.. சீக்கிரமே முடிச்சிட்டீங்களே??

komu சொன்னது…

நல்லா இருந்தது முழு கதையும். அடுத்து எப்போ?

ஹுஸைனம்மா சொன்னது…

கதை வித்தியாசமா இருந்தாலும், முடிவு எதிர்பார்த்ததுபோலவே அமைந்துவிட்டது.

அடுத்த தொடருக்கு ஆவலா இருக்கேன்.

கோவை2தில்லி சொன்னது…

நல்ல முடிவு. படம் ”வணக்கம்” போட்டாச்சு எல்லாரும் எழுந்து போலாம்னா அடுத்த படம் போடப்போறீங்களா!

அடுத்த தொடரை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

middleclassmadhavi சொன்னது…

ரொம்ப வளவளன்னு இழுக்காம கரெக்டா எழுதி அழகா முடிச்சிட்டீங்க! அடுத்த தொடருக்காக காத்திருக்கோம்!

சுசி சொன்னது…

சுபம்.

முயற்சிக்கு வாழ்த்துக்கள் கார்த்திக்.

raji சொன்னது…

முடிவு எதிர்பார்த்த மாதிரியே அமைஞ்சது திருப்தியா இருக்கு.
இத்தனை நாள் நினைவுகளோட கழிஞ்சது சந்தோஷமாருந்தது.அடுத்து?
என்னனு சொல்லாம சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே?காதல் இல்லனு எங்களுக்கே தெரியாதாக்கும்.
வேறென்னனுதான எங்களுக்கு தெரிஞ்சுக்கணும்

ஸ்ரீராம். சொன்னது…

சுப முடிவுகள் எப்பவுமே சுக முடிவுகள். நல்லா கொண்டு போய் முடிச்சீங்க. ஆனால் முடித்ததில் ஒரு அவசரம் - 'சட்'டென முடிந்த உணர்வு. நல்லா எழுதறீங்க கார்த்திக்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நினைவுகள்! நன்றாக இருந்தது கார்த்திக். முடிந்துவிட்டதா! சரி சரி… அதான் அடுத்த தொடர் ஆரம்பிக்கறதா சொல்லியாச்சே! ஆரம்பிங்க!! ஆரம்பிங்க!!

அப்பாவி தங்கமணி சொன்னது…

லவ்லி எண்டிங் கார்த்திக். சுவாரஷ்யம் குறையாம கொண்டு போன விதமும் சூப்பர்... எல்லாரையும் போல நானும் அடுத்த கதைக்கு வெய்டிங்... :)))

//அப்பாவி அளவுக்கு எழுத முடியாட்டியும் ஓரளவு நல்லாவே எழுதி இருக்கேன்னு நினைக்கிறன்//
நல்லாதானே போயிட்டு இருக்கு...வொய் திஸ் கொல வெறி நௌ...ஹா ஹா...

//நான் சத்தியமா அப்பாவியை சொல்லலை//
எங்கப்பன் குதிருக்குள்ள இல்லயா? ஹா ஹா ஹா... :)))

Jokes apart... I know how hard it is to write a series and keep up with the readers expectations & anxiety (!!)... you aced it with that part for sure... good luck with the next one too..:))

vanathy சொன்னது…

நல்ல முடிவு. அம்மா எப்ப காதலுக்கு பச்சைக் கொடி காட்டினாங்க!!! வெங்கட்டை திட்டினதா ஞாபகம். எது எப்படியோ? நல்ல முடிவு.

RVS சொன்னது…

கை கூப்பி சுபம் போட்டுட்டீங்க... நாட்டை சுலபமா உருவி இழுத்துட்டீங்க..
வாழ்த்துக்கள்... சீக்கிரமே அடுத்த தொடர் ஆரம்பிங்க.. படிக்க நாங்க ரெடி.. நன்றி எல்.கே. ;-)

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நல்ல தொடர் எல் கே அடுத்தது எப்போ..??

வித்யா சொன்னது…

தொடர் நல்லாவே இருந்தது எல்.கே.

வாழ்த்துகள் அடுத்த தொடருக்கும்.

thirumathi bs sridhar சொன்னது…

நல்ல முடிவு.அடுத்த கதைக்கு எதிர்பார்ப்புடன்.....

எல் கே சொன்னது…

அனைவருக்கும் நன்றி அநேகமாய் உலகக் கோப்பை முடிந்தப் பின் அடுத்த கதை துவங்கும்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தொடரை சுபமாக முடித்ததிற்குப் பாராட்டுக்களும், அடுத்த தொடருக்கு வாழ்த்துக்களும்.

கோவை ஆவி சொன்னது…

Superb Ending!!

Waiting for the Next one L.K..

அனாமிகா துவாரகன் சொன்னது…

கார்த்தி சார், கொஞ்சம் நீளமாக புது கதையை எழுதுங்க. இன்னைக்குத் தான் இந்தக்கதையின் பாகங்கள் எல்லாத்தையும் உக்காந்து படிச்சேன். நீங்க அப்பாவிய விட திரில் அதிகம் வச்சு எழுதறதால நான் நகத்த கடிச்சு கடிச்சு போட்டுட்டு இருந்தேன். அதனாலேயே பாதியில விட்டுட்டு முழுவதும் வந்த பிறகு படிக்க வேணும் என்று நினைச்சுக் கொண்டிருந்தேன். இன்னிக்கு கொஞ்சம் டைம் கிடைச்சதால முழுதும் உக்காந்து படிச்சேன். சும்மா சொல்லக்கூடாது. அடப்பாவிக்கு சரியான போட்டி. முதல் முதலாக ரொமான்ஸ் தொடர் கதை எழுதிய கார்த்தி சாருக்கு ஒரு ஓ போடுங்க.

எல் கே சொன்னது…

அடுத்த கதை போயிடு இருக்கே தெரியாதா ?? வியாபாரம் கதைதான். அப்பாவி அளவுக்கு நீளமா எழுத தெரியாது அனாமிகா.

கதையை பாதியிள் விட்டு மீண்டும் படித்ததற்கு நன்றி

அனாமிகா துவாரகன் சொன்னது…

ஐயோ தெரியும் கார்த்தி சார். நீக்க போடற தொடரும் கொஞ்சம் டென்சனை எகிற வைக்குது. நகம் கடிக்க எதுவும் மிச்ச மில்லை. இரண்டு அத்தியாயம் படிச்சிட்டு இது வேலைக்காகாதுன்னு விட்டு வைச்சிருக்கேன். நீங்க ஆறுதலாக எழுதுங்க. பொறுமையாக வெயிட் பண்ணி படிப்பேன். வெயிட் பண்ணி படிக்க வேர்த்தான கதை தான்.

அடப்பாவி மாதிரி நீளமான எழுத ஆண்டவனாலேயே முடியாது. ஹி ஹி.