மார்ச் 19, 2011

நினைவுகள் 19

ரமேஷை அழைத்து பாலிமர் உணவகத்துக்கு வர சொன்னவள், தன் உடை மாற்றிக் கொண்டு பாலிமர் சென்றாள். முதல் நாளே தான் தாமதமாய் போனதை நினைத்த சாரு, சிறிது வேகமாகவே வண்டியை ஓட்டிச் சென்றாள். பாலிமர் உணவகத்தின் உள்ளே நுழைந்து பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவள், உணவகத்தின் உள்ளே செல்லாமல், வெளியே தோட்டத்தில் காலியாக இருந்த மேசைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு அமர்ந்தாள். பின் தன் அலைபேசியில் இருந்து ரமேஷை அழைத்தாள்.

"ரமேஷ் எங்க இருக்க ?"

"இதோ வந்துட்டேன் . அஞ்சே நிமிஷம். "

"சரி உள்ள நுழைஞ்ச உடனே ரைட் சைட்ல  இருக்கற கார்டன்ல லாஸ்ட் டேபிள் "

"ஓகே வரேன் "

ஆர்டர் எடுக்க வந்த சர்வரை சிறிது நேரம் கழித்து வர சொன்ன சாரு , ஒரு வாரத்தில் தன் வாழ்வில் நடந்த குழப்பங்களை மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தாள். அவளின் மன நிலைக்கு அவள் காத்திருந்த ஐந்து நிமிடங்கள் ஐம்பது நிமிடங்களாய் தோன்றியது. மீண்டும் அவனை அழைப்போமா என்று அவள் அலைப்பேசியை எடுப்பதற்கும் ரமேஷ் வருவதற்கும் சரியாக இருந்தது.

அவள் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தவன், முதல் நாள் பார்த்த சாருவுக்கும், அவன் கண் முன் இருந்த சாருவுக்கும் சில மாற்றங்கள் இருப்பதை உணர்ந்தான். கண்கள் சிவந்து முகம் வாடி சோர்ந்திருந்தாள். முதல் நாள் உற்சாகத்துடன் வந்தவள் இன்று அதற்கு நேர் எதிராய் சோர்ந்து அமர்ந்து இருந்ததைப் புரிந்து கொண்டான்.

"நைட் ஒழுங்காத் தூங்கலியா ?"

"ம்."

"சரி என்ன சாப்பிடற. ஆர்டர் பண்ணிட்ட கொஞ்ச நேரத்துக்கு வரமாட்டான். "

"எனக்கு எதாவது ஒரு ஜூஸ் சொல்லு போதும் "

"ஓகே "

சர்வரை அழைத்த ரமேஷ் இருவருக்கும் ஜூஸ் ஆர்டர் செய்தான்.

"சொல்லு சரஸ்வதி. என்னப் பிரச்சனை ? எனக்கு தெரிஞ்சு காலேஜ் முடியறவரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லியே ?"

"ம் என்ன சொல்ல ? எல்லாம் விதி ."

"ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லு . விதிய மாத்த முடியுமா இல்லையான்னு பார்ப்போம் "

"சரி சொல்றேன். யார்கிட்டையாவது சொன்னாதான் மனசு கொஞ்சம் சரி ஆகும் ."

"முதல் வருஷம் ஒரு முறை உன்கிட்ட வெங்கட்டைப் பற்றி விசாரிச்சேன் ஞாபகம் இருக்கா ?"

"நல்லாவே நியாபகம் இருக்கு, பாதி கேட்ட . அப்புறம் வேற எதோ கேட்கனும்னு சொன்ன, ஆனா கடைசி வரை கேட்கவே இல்லை. "

"ம் ஆமாம். சித்ராவும் வெங்கட்டும் காதலிக்கறதா கேள்விப் பட்டேன்.  அதை எப்படி உன்கிட்ட கேட்கறதுன்னு தயங்கிட்டு இருந்தேன். அப்பதான் எதேச்சையா சித்ராவ பார்த்தேன். பேசாம நேரடியா அவகிட்டயே கேட்டுடலாம்னு அவளை விசாரிச்சேன்.
அப்புறம்தான் தெரிஞ்சது அவங்க க்ளோஸ் பிரெண்ட்ஸ் மட்டும்தான். அதுக்கு மேல எதுவும் இல்லைன்னு"

"சரி அதான் எதுவும் பிரச்சனை இல்லையே ? அப்புறம் என்னாச்சு "

"அதுக்கப்புறம் ஒன்றரை வருஷம் எந்தப் பிரச்சனையும் இல்லை. கடைசியா வெங்கட் சர்டிபிகேட் வாங்க வந்தப்பதான் பிரச்சனை ஆரம்பிச்சது.  வெங்கட் கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்னு சொன்னா சித்ரா, நான் விசாரிச்சது பத்தி சொல்லிட்டா . அதை பத்தி என்கிட்டே வெங்கட் கேட்டார் .

"சித்ராகிட்ட என்ன கேட்ட நீ ?"

"ஒன்னும் கேட்கலை..."

"நிஜமா ஒன்னும் கேட்கலை. "

"ஒன்னே ஒண்ணுதான் கேட்டேன்..."

"அவ்வளவு நம்பிக்கை இல்லையே என் மேல உனக்கு. அதை என்கிட்டே கேட்டு இருக்கலாமே . அவகிட்ட ஏன் கேட்ட ?"

"நீங்க அன்னிக்கு வரலை. "

"ஆமாம் அப்படியே வராம போய்டுவேனா? மறுபடியும் காலேஜுக்கு வந்துதான ஆகணும் . அதுக்குள்ள அப்படி என்ன அவசரம் உனக்கு ?"

"சாரி ... மன்னிச்சுடு என்னை ...."

"மன்னிப்பாம் மண்ணாங்கட்டி. அவளுக்கு ஏற்கனவே நம்மளை பத்தித் தெரியும் அதனால எந்தப் பிரச்னையும் இல்லை. இதே அவளுக்கு நம்ம விஷயம் தெரியாம இருந்திருந்தா என்ன ஆகும் ? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம் "

"அதான் சாரி கேட்டுட்டேன் இல்லை. "

"சரி ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் .  இதே சந்தேகம் எனக்கு உன் மேல வந்திருந்தா ...?"

"என்னடா சொல்ற ?"

"நீ என்ன சந்தேகப் பட்ட மாதிரி , நான் உன்னை சந்தேகப் பட்டிருந்தா ? நீ யாரையாவது , சரி ஒரு உதாரணத்துக்கு ரமேஷை லவ் பண்றேன்னு சந்தேகப்பட்டு அவன்கிட்டையோ  இல்லை உன் பிரெண்ட்ஸ் யார்கிட்டையோ கேட்டிருந்தா நீ என்னப் பண்ணி இருப்ப ?"

"டேய் லூசா நீ ? அப்படி வேற நினைப்பியா நீ ?"

"நீ மட்டும் நினைக்கலாம் . நான் நினைக்ககூடாதா ?"

சொல்லிக் கொண்டிருந்த பொழுதே அவள் விழிகளின் ஓரத்தில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது, அவளுக்கு வெங்கட்டின் மேல் மனதில் இன்னும் இருந்தக் காதலைக் காட்டியது.

இப்படி ஆரம்பிச்ச சண்டை ,கடைசியா ரெண்டு நாள்ல லவ் கட் ஆகர அளவுக்கு கொண்டு போய்டுச்சு. ரெண்டு மூணு முறை பேச முயற்சி செஞ்சார். ஆனால் எனக்கு அன்னிக்கு அவன் என்னை சந்தேகப்பட்டது ரொம்ப தப்பா தெரிஞ்சது. அதனால அவனை விட்டு விலக ஆரம்பிச்சேன்.

விதியோட விளையாட்டு, இப்ப என்னை பொண்ணு கேட்டு அவங்க வீட்ல இருந்து போட்டோ வந்து இருக்கு. அது விஷயமா அவன் போன் பண்ணப்பக் கூட எனக்கு அவன் மேல இருந்த கோபம் போகலை. இஷ்டம் இல்லைன்னு சொல்லிடு கட் பண்ணிட்டேன்.

"லூசா நீ ? நீ அவரை சந்தேகப் படலாம் . ஆனால் அவர் அந்த மாதிரி ஒரு கேள்விக் கூடக் கேட்கக்கூடாதா ? எந்த ஊரு நியாயம் இது ?"

"ஏன்டா நீயும் அவரை மாதிரியே பேசற ?"

"ஆமாம் பின்ன எப்படி பேசுவாங்கலாம்? நீ அவரை சந்தேகப்பட்டு வேற ஒருத்தர்கிட்ட போய் கேட்டு இருக்க. அவர் அப்படி பண்ணாரா ?"

"இல்லை."

"அப்புறம் என்ன ? சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னொரு விஷயம் சொல்லணும் உன்கிட்ட முதல்ல. "

"என்னடா விஷயம் ?"

முதல்ல ஜூசைக் குடி. அப்புறம் சொல்றேன் ."


நினைவுகள் தொடரும்
32 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தல... தோராயம இன்னும் எத்தனை அத்தியாயம் எழுதுவீங்க...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அவங்களுக்கு மட்டும் தான் ஜூசா? எங்களுக்கு? நாங்க மட்டும் என்ன பார்த்துட்டு மட்டுமா இருக்க முடியும். சீக்கிரம் குடிச்சு முடிச்சு என்ன பேசுனாங்கன்னு போடுப்பா :)

raji சொன்னது…

இவ சந்தேகப்படலாமாம்.ஆனா வெங்கட் மட்டும் ஒரு பேச்சுக்கு கேட்டா
அது பெரிய தப்பாக்கும்?நல்ல ஆளுதான்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் said...
தல... தோராயம இன்னும் எத்தனை அத்தியாயம் எழுதுவீங்க...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

komu சொன்னது…

இந்த எபிசோட் படீக்கும்போதுதான் இத்தனை நாளா ப்ளாஷ்பாக் போயிட்டிருக்க்ன்னே ஞாபகம் வந்தது.
நல்லாவே போயிட்டிருக்கு.தொடர்.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

தொடர் சுவாரஸ்யமாக போய்ட்டிருக்கு..

தமிழ்வாசி - Prakash சொன்னது…

ஜூஸ் குடிச்சு முடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு... விஷயத்த சொல்லுங்க...


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

Lakshmi சொன்னது…

ம்ம்ம் கதை முடிவை நெருங்கிட்டுதுன்னு புரியுது. நல்ல சுபமான முடிவுதானே

asiya omar சொன்னது…

முடிவு கிட்ட நெருங்கின மாதிரி தெரியுது.அப்பாடா...விஷயம் இது தானா?

கோவை2தில்லி சொன்னது…

விறுவிறுப்பா போயிகிட்டு இருக்கு! என்ன பேசினாங்கன்னு சீக்கிரம் சொல்லுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்!

Balaji saravana சொன்னது…

கூடிய விரைவில் சுபமஸ்து போட்டுடுவீங்க, அப்படிதான எல்.கே?! :)

சேட்டைக்காரன் சொன்னது…

இப்படிக் கேட்கறேனேன்னு கோவிச்சுக்கக்கூடாது. போனவாட்டியே இது அடுத்த பகுதியோட முடியுமுன்னு சொன்னீங்களே? ஏன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை மாதிரி நீண்டுக்கிட்டே போகுது? :-))

ஐயையோ, அடிக்காதீங்க கார்த்தி...ப்ளீஸ்! :-))

அமைதிச்சாரல் சொன்னது…

சுவாரஸ்யமா போகுது..

சுசி சொன்னது…

ஜூசெல்லாம் வேணாம்.. விஷயத்தை சொல்லுங்க முதல்ல..

சே.குமார் சொன்னது…

கதை முடிவை நெருங்கிட்டுதுன்னு புரியுது.

கீதா சாம்பசிவம் சொன்னது…

ஹிஹிஹி, நினைச்சேன். :))))

ஸ்ரீராம். சொன்னது…

ரமேஷ் சொல்ல வர்ற விஷயம் அதானே...கரெக்ட்தானே..!!

RVS சொன்னது…

இன்னும் என்ன விஷயம் சொல்லணுமாம்?!?! ;-)))

vanathy சொன்னது…

nalla irukku. continue..

அப்பாவி தங்கமணி சொன்னது…

//முதல்ல ஜூசைக் குடி. அப்புறம் சொல்றேன்///

ஜூஸ் குடிச்சாச்சு... இப்ப சொல்லியே ஆகணும்... grrrrrrrrrrrrrrr.... இப்படி சஸ்பென்ஸ் வெச்சு கொல்வதேன் பிரதர்...:)))

அன்னு சொன்னது…

இந்த உப்பு சப்பில்லாத மேட்டருக்குதான் அம்மணி கோவிச்சுகிட்டாங்களா... ஆஹா... காலேஜ் முடிஞ்சும் அந்த கோபம் போகலியா??!!

GEETHA ACHAL சொன்னது…

அடுத்த பகுதி எப்போ...

எல் கே சொன்னது…

@செந்தில்

தல சீக்கிரம் முடிச்சிடுவேன்

எல் கே சொன்னது…

@வெங்கட்
சரி சரி சீக்கிரம் சொல்லிடறேன்

எல் கே சொன்னது…

@ராஜி
ம். நல்லா கேளுங்க ராஜி. இந்தப் பொண்ணுங்க எப்பவுமே இப்படிதான்

எல் கே சொன்னது…

@மனோ
ஏன் ஏன் ?

@கோமு
ஹ்ம்ம் நன்றிங்க

@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றிங்க

எல் கே சொன்னது…

@பிரகாஷ்
சரி சரி நாளைக்கு வந்து சொல்லுவாங்க

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
ஹ்ம்ம் ஆமாம் முடியப் போது

@ஆசியா
ஆமாம்.

@ஆதி
சரி சரி சொல்லிடறேன்

எல் கே சொன்னது…

@பாலாஜி
ஆமாம். எழுத்துல எப்பட இவன் சுபமஸ்து சொல்லுவான்னு உங்க ஆர்வம் மின்னுது

@சேட்டை
நான் எங்கய்யா அப்படி சொன்னேன் . விரைவில் முடியும்னுதானே சொன்னேன் ? எத்திய பகுதின்னு சொன்னேனா ??? ஒழுங்காப் படிச்சு பாரும் .

எல் கே சொன்னது…

@சாரல்
நன்றி

@சுசி
சரி ஆர்டர் கேன்சல்

@குமார்
ஆமாம்

@கீதா
காயப் போட்டுடுங்க


@ஸ்ரீராம்
ஆமாம் அதே தான்

@ஆர்வீஎஸ்
இருக்கே

@வாணி
ஹ்ம்ம் நன்றிங்க

எல் கே சொன்னது…

@அப்பாவி
நீ வந்து படிக்கணும்னுதான் அடுத்தது போடலை புவனி. சீக்கிரம் முடிச்சிடறேன்

@அன்னு
இந்தப் பொண்ணுங்க எப்பவுமே இப்படித்தானே

@கீதா
புதன் கிழமை

thirumathi bs sridhar சொன்னது…

அடுத்த பகுதிக்கு எதிர்பார்ப்புடன்.