மார்ச் 15, 2011

நினைவுகள் 18

மறுநாள் கல்லூரிக்கு சென்றப் பிறகு , அவள் வகுப்புத் தோழிகள் எதோ ஒரு ஆல்பத்தை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அசுவாரசியமாக அதைப் பார்த்தவளிடம் " நம்ம சீனியர்ஸ் போன வருஷம் டூர் போனப்ப எடுத்த போட்டோ ஆல்பம் " என்ற விவரம் தெரிவிக்கப் பட்டதும் அவளிடம் ஒரு யோசனைத் தோன்றியது.

உடனடியாக அந்த ஆல்பத்தை அவர்களிடம் இருந்து வாங்கியவள் , வேகமாப் புரட்ட ஆரம்பித்தாள். புரட்டிக் கொண்டிருந்தவளின் கண்களில் அவள் எதிர்பார்த்த போட்டோக்கள் சிக்க, அதையே உற்றுப் பார்த்தவள் , "இந்த ஆல்பம் யார்கிட்ட இருந்து வாங்கினீங்க ? அவங்களை நான் பார்க்கணும் " என்றுக் கேட்டாள்.

"இது நம்ம சீனியர் சித்ரா . நீ எதுக்கு அவங்களைப் பார்க்கணும் இப்ப ?"

"அது உனக்கு தேவை இல்லாத ஒண்ணு. நான் கண்டிப்பா அவங்களைப் பார்த்தாகனும் ."

"ம். சரி ப்ரேக்ல வந்து ஆல்பம் திருப்பித் தரேன்னு சொல்லி இருக்கேன். அப்ப நீயும் வா ."

ப்ரேக் வரும்முன் இருந்த இரண்டு மணிநேரமும் முள்மேல் நிற்பது போல் இருந்தது சரஸ்வதிக்கு. அவள் கேள்விப்பட்டது உண்மை என்று நிரூபிப்பதைப் போல் அந்த போட்டோக்கள் இருந்தது அவளுக்கு அதிர்ச்சி அளித்தது. எதுவாய் இருந்தாலும் இன்னும் இரண்டு மணிநேரம்தானே. தெரிந்து விடப் போகிறது என்று கொஞ்சம் சமாதானம் ஆனாள்.

இடைவெளியில் படப்படக்கும் நெஞ்சத்துடன் சித்ராவைப் பார்க்க சென்றுக் கொண்டிருந்தாள் சாரு. அவள் உள்ளே நுழையும் பொழுதே முதல் நாள் லைப்ரரியில் பேசிக்கொண்டிருந்த இரண்டு மாணவிகள் அந்த வகுப்பில் இருப்பதைப் பார்த்துவிட்டாள். 
அவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல் தன் தோழியுடன் நேராக சித்ரா இருந்த இடத்திற்கு சென்றாள்.

சாருவின் தோழி அவளை அறிமுகப்படுதிவிட்டுக் காத்திருக்க சாரு அவளை கிளம்ப சொன்னாள். தான் கொஞ்சம் பேச வேண்டி இருப்பதாகவும் ,பேசிவிட்டு வருவதாகவும் சொன்னாள்.

சாருவைப் பார்த்தவுடன் அவள் யார் என்பதைப் புரிந்துகொண்ட சித்ரா , 

"வா , கேண்டீன் இல்லாட்டி வேற எங்கையாவது போய்டலாம். கிளாஸ்ல வேண்டாம்."

மௌனமாக சித்ராவைப் பின்தொடர்ந்தாள் சாரு.  முதலில் வெங்கட்டிடம் எந்த இடத்தில் தன் காதலை சொன்னாலோ அதே கூடைப்பந்து மைதானம். 

"சொல்லு சரஸ்வதி . என்ன கேட்கணும் உனக்கு ?"

"இல்லை அந்த போட்டோவைப் பார்த்தேன் . அதுல உங்க கூட இருக்கறது ....."

"ஆமாம் வெங்கட்தான். அதுல என்ன சந்தேகம் உனக்கு .?"

"இல்லை அதுல சந்தேகம் இல்லை ...."

"அப்புறம் வேற என்னப் பிரச்சனை உனக்கு ?"

"இல்லை .. போட்டோ ரொம்ப நெருக்கமா இருக்கற மாதிரி இருக்கு .. அதான் "

"ஷப்பா.. இப்ப என்ன உனக்கு வெங்கட்டும் நானும் காதலிக்கறோம்னு நினைக்கறியா?"

"ஆமாம்."

"முட்டாளா நீ ? ரெண்டு பேரும் க்ளோசா இருந்தா லவ் பண்றோம்னு அர்த்தமா ? அவன் எனக்கு நல்ல க்ளோஸ் பிரெண்ட் . அவ்ளோதான். ஆனால் அதை வெச்சு இங்க நெறையப் பேரு பல வதந்திகளைப் பரப்பி விட்டுகிட்டு இருக்காங்க. அதையெல்லாம் நீ நம்பாத . நீ அவனை காதலிக்கறேன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதை அப்பவே அவன் என்கிட்ட சொல்லிட்டான். 

தேவை இல்லாமல் அவனை சந்தேகப் படாத. ஆல் தி பெஸ்ட் ."

"என்னை மன்னிச்சிருங்க சித்ரா. நான்தான் அவசரப் பட்டுட்டேன். இதை அவர்கிட்ட..."

"கவலைப்படாத நான் சொல்லமாட்டேன். நீயும் எதுவும் சொல்லவேண்டாம். இதை இப்படியே விடு ."


இரண்டு நாட்களுக்குப் பிறகு வெங்கட் கல்லூரிக்கு வந்தான். காய்ச்சலினால் சிறிது மெலிந்தது போல் தோன்றினாலும், அவன் முகத்தில் இருந்த புன்னகை மாறவில்லை. இந்த இடைப்பட்ட இரண்டு நாட்களில் ரமேஷை சமாளிப்பது பேரு தலைவலியாக இருந்தது. மிகக் கஷ்டப்பட்டு எதோ ஒரு காரணத்தைக் கூறி அவனை ஒரு வழியாக சமாளித்தாள். 

அவன் திரும்பி வந்த அன்று வழக்கம்போல் கூடைப்பந்து மைதானத்தில் சந்தித்த அவனைப் பார்த்த பொழுது, அவளையும் அறியாமல், கண்களில் கண்ணீர் பெருகியது. அவள் வெகு நாள் பார்க்காததால் அழுகிறாள் என்று எண்ணிய வெங்கட் , அவள் விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தவாறே

 " ஏய் எதுக்கு இப்படி ? என்ன ஆச்சு இப்ப. அதுதான் வந்துட்டேன் இல்ல? இதுக்கே இப்படின்னா, நான் உனக்கு முன்னாடி காலேஜ் முடிச்சிடுவேன், அப்புறம் வேலைக்கோ,மேற்படிப்புக்கோ போயிட்டா இப்படி தினமுமா பார்க்க முடியும்?"

"பேசாத. அதைப்பத்தி நினைச்சாலே பயமா இருக்கு ."

"இருந்துதானே ஆகணும். கொஞ்சம் பொறுமை வேணும் இல்லையா ?"

"புத்திக்குத் தெரியுது ஆனால் மனசுக்குத் தெரியலையே "

"ஹ்ம்ம். அதெப்படித் தெரியாம போகும். மனசுக்குப் புரிய வை .."

"முயற்சிப் பண்றேன்."

அவன் கையை தன் கையுடன் சேர்த்து வைத்துக் கொண்டவள் அன்று வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தாள் அவனிடம். 


 மனமெனும் வாகனத்தில் ஏறி காலத்தில் பின்னோக்கி சென்றவள் நிகழ் காலத்திற்குத் திரும்பினாள். தூக்கம் வராமல் இருக்கவே, தன் அலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தவள் நேரம் நடு இரவைத் தாண்டியிருப்பதைக் கண்டு சிறிதேனும் உறங்க முற்பட்டாள். அடுத்தநாள் மீண்டும் ரமேஷை சந்திப்பதாய் சொல்லி இருந்ததும் அவளுக்கு ஞாபகம் வர , வலுக்கட்டாயமாய் தூங்க முயற்சித்து வெற்றியும் பெற்றாள்.

முதல் நாளிரவு தூங்க வெகு நேரமானதால் காலையில் ஒன்பது மணிக்குப் பிறகே எழுந்தாள். பின் தன் வழக்கமான வேலைகளை முடித்தவள், அன்று என்ன உடை அணியலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். முந்தைய நாள் நிகழ்வுகளால் மிகவும் அலைக்கழிக்கப்பட்டிருந்ததால் சாதாரணமான ஒரு டி சர்ட்டையும் , ஜீன்சையும் தேர்ந்தெடுத்தவள் , பின் ரமேஷை போனில் அழைத்து , சேத்துப்பட்டில் இருந்த பாலிமர் உணவகத்துக்கு வர சொன்னாள்.

அவனிடம் பேசிவிட்டு அவளும் கிளம்பத் தயாரானாள்.- நினைவுகள் தொடரும் 


டிஸ்கி : விரைவில் நினைவுகள் முடியும் 

44 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>> மனமெனும் வாகனத்தில் ஏறி காலத்தில் பின்னோக்கி சென்றவள் நிகழ் காலத்திற்குத் திரும்பினாள்.

சுந்தரராமசாமி கதை எல்லாம் நிறைய படிச்சீங்கன்னா இப்படித்தான்.. ஹி ஹி

சேட்டைக்காரன் சொன்னது…

//விரைவில் நினைவுகள் முடியும் //

பாதியிலேயே க்ளூ கொடுத்திட்டீங்க! ஆனாலும், நல்லா எழுதியிருக்கீங்க! வெரி குட்! :-)

கீதா சாம்பசிவம் சொன்னது…

ம்ம்ம் நல்லா இருக்கு.

கீதா சாம்பசிவம் சொன்னது…

தொடர

கீதா சாம்பசிவம் சொன்னது…

க்ர்ர்ர்ர்ர்ர் சரியாப் போகலை

Balaji saravana சொன்னது…

//விரைவில் நினைவுகள் முடியும் //
என்றும் நினைவுகள் தொடரும் ;)

சே.குமார் சொன்னது…

நல்லா இருக்கு.

எல் கே சொன்னது…

சித்தப்பு அதிகம் அவர் கதைகள் படித்து இல்லை . நன்றி

எல் கே சொன்னது…

சேட்டை, அப்படியா ? ஹ்ம்ம். நன்றி

எல் கே சொன்னது…

@கீதா
நீங்க நினைத்த மாதிரியா இல்லை மாறி இருக்கா ?

எல் கே சொன்னது…

@பாலாஜி
ஹ்ம்ம் நன்றி

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி

ஸ்ரீராம். சொன்னது…

அப்பா..வந்து பிடிச்சுட்டேன்...ம்...அப்புறம் என்ன ஆச்சு...

middleclassmadhavi சொன்னது…

நினைவுகள் முடிந்து நிகழ்காலத்திலிருந்து happily lived ever after தானே?!! (எங்கள் எதிர்பார்ப்பு!)

asiya omar சொன்னது…

என்ன எல்.கே. எப்ப நினைவு வேகமாகப்போகும்,சீரியல் மாதிரி பெரிய தொடர் தான் போல..

RVS சொன்னது…

//"புத்திக்குத் தெரியுது ஆனால் மனசுக்குத் தெரியலையே "//
அற்புதம்....

நினைவுகள் தொடரட்டும்...

சுசி சொன்னது…

நினைவுகளுக்கு முடிவா.. ஹூம்..

Ramani சொன்னது…

தொடர் சிறப்பாகத் தொடர்கிறது
ஆவலுடன் தொடர்கிறோம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

GEETHA ACHAL சொன்னது…

அப்பவே நினைத்தேன்..இது மாதிரி தான் எதவாது இருக்கும் என்று..

என்னது அதற்குள்ளே முடித்துவிட போறிங்களா...

நல்லா இருக்கின்றதே...இன்னும் சில பகுதிகள் அதிகம் தொடரலாமே...

vanathy சொன்னது…

கார்த்திக், என்ன இது அப்பாவி அக்கா போல கொஞ்சம் எழுதிட்டு தொடரும் போடுறது???? நல்லா போகுது கதை.

raji சொன்னது…

சந்தேகம் என்பது காதலை மட்டும் அல்ல எந்த உறவையும் அழிக்க
கூடிய பயங்கரமான ஆயுதம்.

**********************************

நிகழ்காலத்துக்கு வந்துட்டாளா?
இனி என்ன செய்யப் போறான்னு பாக்கலாம்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

அடப்பாவி, இப்படி கொசுவத்திய பாதில நிறுத்திட்டியே... இதுல "விரைவில் நினைவுகள் முடியும்" வேற சொல்லி இருக்க....ஹ்ம்ம்... நெக்ஸ்ட் பார்ட் ப்ளீஸ்...:)

komu சொன்னது…

ரொம்ப நாட்களுக்குப்பிறகு சந்திக்கும்காதலர் மன நிலை அழகாக விளக்கி உள்ளீர்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சீக்கிரம் முடியுமா! ம்…. என்ன ஆகிறது என்று படிக்கக் காத்திருக்கிறேன்.

raji சொன்னது…

நினைவுகளிலேயே மூழ்கிட்டீங்களே.
ஜகத்குரு அருள் எப்ப கிடைக்கும்?

Lakshmi சொன்னது…

தொடர் சிறப்பாக போய்க்கொண்டு இருக்கு.அவ்வளவு சீக்கிரம் முடிக்க என்ன அவசரமோ?

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

வாங்க ஆளக் காணோமேன்னு பார்த்தேன். வந்துடீங்க

எல் கே சொன்னது…

@மாதவி

உங்கள் எதிர்பார்ப்பை சொல்லிட்டீங்க. அப்புறம் என்ன ஆகுதுன்னு பார்ப்போம்

எல் கே சொன்னது…

@ஆசியா

ரொம்ப ஸ்லோவா போதோ ??

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

நன்றி மைனரே

எல் கே சொன்னது…

@சுசி

இந்த "நினைவுகள்" கதைக்குத்தான் முடிவு

எல் கே சொன்னது…

@ரமணி

நன்றி சார்

எல் கே சொன்னது…

@கீதா ஆச்சல்

இப்படி நீங்க சொல்றப்பவே முடிச்சா நல்லது. ஏன் இன்னும் தொடருதுன்னு யாரும் கேட்கக் கூடாது

எல் கே சொன்னது…

@வாணி

கொஞ்சம் ஆணி ஜாஸ்தி. கொஞ்சம் கொஞ்சமாதன் எழுத முடியுது

எல் கே சொன்னது…

@ராஜி
ஆமாம் சந்தேகம் கொள்ளும் வியாதி. நிகழ்காலத்துக்கு வந்தாச்சு

எல் கே சொன்னது…

@அப்பாவி

நான் என்ன உன் மைன்ட் வாய்ஸ் மாதிரி பாதில நிருத்தினேனா

எல் கே சொன்னது…

@கோமு

நன்றிங்க

@வெங்கட்
ஆமாம். முடிச்சிடறேன்

எல் கே சொன்னது…

@ராஜி

அதுவும் சீக்கிரம் . ஞாயிறு அன்று

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

அம்மா அவசரம் இல்லை. அதன் போக்கிலியே முடிதுவிடுதல் நலம்.

கோவை ஆவி சொன்னது…

ரொம்ப நேச்சுரலா, நெகிழ்வா இருந்தது !!

thirumathi bs sridhar சொன்னது…

ஜீன்ஸ் டீ சர்ட் போடும் மார்டன் பொண்ணூதானா ,ஒகே,தொடருங்ள்.

thirumathi bs sridhar சொன்னது…

அச்சச்சோ,தப்பு. modern பொண்ணுனு சொன்னேன்

கோவை2தில்லி சொன்னது…

நினைவுகள் விரைவில் முடியப் போகுதா! :(