மார்ச் 13, 2011

நினைவுகள் 17கேட்கிறேன் என்று சொன்னாளேத் தவிர அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வருவதை தெரியவில்லை. கண்கள் எங்கோ பார்த்துக்கொண்டிருக்க , அவள் கைகள் டேபிளில் வைத்திருந்த அவளின் நோட்டை புரட்டிக் கொண்டிருந்தது. இன்னுமே அவளது மனதில் ரமேஷிடம் இதைக் கேட்கலாமா வேண்டாமா என்று சந்தேகம் ஓடிக் கொண்டே இருந்தது. 

சொல்கிறேன் என்று சொல்லியும் சில நிமிடங்கள் அவள் எதுவும் பேசாமல் இருந்ததால் ரமேஷ் 

"சரஸ்வதி ! என்ன ஆச்சு ? அப்படி என்ன கேக்கணும் ?  என் கிட்ட கேட்கறதுல உனக்கு எதாவது பிரச்சனைனா வேண்டாம். விட்டுடு. யோசிக்கரதப் பார்த்தா அப்படிதான் தெரியுது. "

"இல்லை ரமேஷ் . அப்படிலாம் எதுவும் இல்லை. நான்தானே கேட்கனும்னு வந்தேன். எப்படி ஆரம்பிக்கரதுருன்னு தெரியலை. அதுதான் அமைதியா இருக்கேன்."


"புரியுது . ஒரு நிமிஷம் இரு ஒரு காபி வாங்கிட்டு வரேன். குடிச்சிட்டு அப்புறம் தெம்பா பேசலாம் . ஓகேவா ?"

 அவன் அங்கிருந்து சென்றால் தான் கொஞ்சம் யோசித்து பிறகு அவன் வந்தவுடன் கேட்க முடியும் என்று நினைத்தாள்.


"ம். வேண்டாம்னா விடப் போறியா ? போய் வாங்கிட்டு வா ."

ரமேஷ் காபி வாங்கி வர சென்றப் பின் , தன் முகத்தை ஒரு முறை கைக்குட்டையால் துடைத்தவள் தன்னை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொள்ள முனைந்தாள். அவள் ஓரளவு நார்மலுக்கு வருவதற்கும் ரமேஷ் இரண்டு காபியுடன் வருவதற்கும் சரியாக இருந்தது.


அவள் காபி குடித்து முடிக்கும் வரை அமைதியாய் இருந்த ரமேஷ் , " இப்ப சொல்லு சரஸ்வதி."

அவள் பதில் சொல்ல வாய் திறப்பதற்கும் , அவள் தோழிகள் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவர்கள் வருவதைப் பார்த்த சரஸ்வதி " இப்ப வேண்டாம். நான் அப்புறம் பேசறேன் உன்கிட்ட." என்று பேசிக் கொண்டிருந்த விஷயத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.


இவர்கள் இருவரும்  அமர்ந்திருப்பதைப் பார்த்த அவள் தோழிகள் அங்கே வந்தனர். 

"உன்னை காலேஜ் முழுக்க தேடிக்கிட்டு இருந்தா இங்க உக்காந்து ....." அவள் முடிக்கும் முன்னரே பேசத்துவங்கிய சாரு 

"இரு இரு. விட்டா பேசிட்டே போவ . தலைவலிக்குதுன்னு காபி குடிக்கலாம்னு கேண்டீன் வந்தேன். அப்ப ரமேஷும் வந்தார். அப்படியே பேசிட்டு இருக்கோம் அவ்ளோதான். "

என்ன இருந்தாலும் தன் தோழிகள் முன் தன் காதலனை பற்றி ரமேஷிடம் விசாரிக்க விரும்பவில்லை. அவர்கள் முன் விசாரித்தால் எப்படியும் அது வெளியில் பரவி விடும் என்று அவளுக்குத் தெரியும். எனவே பேச்சை மாற்றினாள். 


சிறிது பேசிக் கொண்டிருந்து விட்டு ரமேஷ் கிளம்பினான். அவன் கிளம்பும் பொழுது "ரமேஷ் , புக் வேணும்னு சொன்னியே . மறந்துட்டியா ?" என்று சொல்லியவாறே தன்னிடம் இருந்த ஒரு புத்தகத்தை அவனிடம் கொடுத்தாள்.
ஒரு கணம் யோசித்தாலும் பின் சுதாரித்துக் கொண்ட ரமேஷ் "சாரி. மறந்தே போச்சு . தேங்க்ஸ் " என்று சொல்லியவாறு அதை வாங்கிக் கொண்டான்.

புத்தகத்துடன் கேண்டீனை விட்டு வெளியில் வந்தவன், யோசனையுடன் அதைப் பிரித்தான், அதனுள் ஒரு பக்கத்தில் "யாரிடமும் சொல்ல வேண்டாம். பிறகுப் பேசுகிறேன்" என்று எழுதி இருந்தது.

அதைப் படித்தப் பிறகு சிறுப்புன்னகையுடன் ஒரு முறை திரும்பி கேண்டீனுள் இருந்த சரஸ்வதியைப் பார்த்தான்.

அங்கோ மாத்திரை உண்டதின் விளைவாய் காய்ச்சல் விட்டுவிட்டதால், கல்லூரிக்கு கிளம்பி விடலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தான் வெங்கட்.  உடல்நிலை கொஞ்சம் சரியானதால், அங்கு இருப்புக்கொள்ளவில்லை வெங்கட்டுக்கு.


மதியம் சரஸ்வதி போன் செய்ததால் தான் இப்பொழுது அவசரமாய் கல்லூரிக்கு கிளம்பினால் கண்டிப்பாக அம்மாவிற்கு சந்தேகம் வரும் என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் அந்த யோசனையை கைவிட்டான்.

என்னதான் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே நேரத்தை பார்த்தான். மாலை ஐந்து மணியை தாண்டியிருந்தது. அநேகமாய் ரமேஷ் வந்திருப்பான். போன் பண்ணலாம் என்றவாறே அவன் எழவும், அவன் அம்மா வெளியில் கடைக்கு போகவும் சரியாக இருந்தது. அது ஒரு வகையில் நிம்மதியாக  இருந்தது.


அவள் வெளியில் சென்று இரண்டு நிமிடத்திற்குப் பிறகு ரமேஷிற்கு போன் செய்தான்.

"ரமேஷ் ! நான்தான் வெங்கட் பேசறேன் "

"சொல்லுங்க தல . என்ன விஷயம் ? ஏன் வரலை இன்னிக்கு ?"

"இல்லடா உடம்பு கொஞ்சம் சரி இல்லை. அதான் வரலை."

"சரி .சரி. இப்ப எப்படி இருக்கு உடம்பு ? பரவாயில்லையா ?"

"ஹ்ம்ம் இப்ப கொஞ்சம் ஓகே . சரி அங்க வேற என்ன விஷேசம் ? எதாவது முக்கிய விஷயம் இருக்கா ?"

இந்தக் கேள்வியை ஒருவாறு எதிர்பார்த்த ரமேஷ் , என்ன சொல்வது என்று யோசித்தான் . பின் ,

"எதுவும் இல்லை தல . எல்லாம் வழக்கம் போலத்தான் போயிட்டு இருக்கு ".


"சரி . நான் எப்படியும் ரெண்டு நாளில் வந்திருவேன். யாராது கேட்டா சொல்லிடு. ஒன்னும் பிரச்சனை இல்லை . 

"சரி தல. உடம்பை பார்த்துகோங்க "

சரஸ்வதி தன்னிடம் பேசியதையும் கேட்டதையும் சொல்லலாமா என்று நினைத்தவன், பின் அதை மாற்றிக் கொண்டான். தான் எதாவது சொல்லி பின் அதனால் எதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று அந்த நினைப்பை கைவிட்டு பொய் சொன்னான் அவனிடம் .

வெங்கட்டுக்கோ ஏமாற்றமாய் இருந்தது. சாரு எதாவது ரமேஷிடம் கேட்டு இருப்பாள் என்று எதிர்பார்த்தான். அப்படி எதுவும் அவன் சொல்லாதது அவனுக்கு ஏமாற்றம் அளித்தது. அதே சமயம் வேறு எதுவும் பிரச்சனை இல்லை. தான் வராததால் தான் சாரு போன் செய்திருக்கிறாள் என்றெண்ணி சந்தோசம் அடைந்தான்.

அங்கோ தனது வீட்டில் தனது தோழிகளை மனதில் திட்டியவாறே உக்காந்திருந்தாள் சாரு. தான் கேக்கவந்ததை கேக்கும் தருணத்தில் வந்து காரியத்தை கெடுத்துவிட்டார்களே என்று அவளுக்கு ஆதங்கம்.

தெளிவாய் இருந்த குளத்தில் கல் எறிந்தால் எப்படி ஆகுமோ அப்படி இருந்தது அவள் மனம். ஏன்தான் காதலிக்க தொடங்கினமோ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டிருந்தாள்.அதே சமயம், இப்பொழுது வெங்கட் என்ன செய்துக் கொண்டிருப்பானோ என்று நினைக்கவும் செய்தது அவள் மனது.


டிஸ்கி : படம் சகப் பதிவர் ப்ரியா அவர்களின் தளத்தில் இருந்து எடுத்தது. நன்றி ப்ரியா.

-நினைவுகள் தொடரும்


அன்புடன் எல்கே

40 கருத்துகள்:

அப்பாவி தங்கமணி சொன்னது…

இப்ப சொல்ல போறியா இல்லையா? உன்னை கேக்கலை. உன்னை கேக்கலை எல்.கே... இந்த சாருவை தான்...ஆஆ.....பொறுமை போகுது போ...:))

(போட்டோ பாத்ததும் அதுல உள்ள ப்ரியா சிக்னேச்சர் பாக்கறதுக்கு முந்தியே அவங்களுது தான்னு தெரிஞ்சு போச்சு... சூப்பர் ப்ரியா...:)

asiya omar சொன்னது…

நினைவுகள் மெதுவாக அசைபோடப்படுகிறது...நாங்களும் மெதுவாகவே வாசிக்கிறோம்..

எல் கே சொன்னது…

@அப்பாவி

எப்படி அவ்வளவு ஈசியா கேட்க முடியும் ? கொஞ்சம் யோசிச்சு பாருமா ?? புரியும்,

எல் கே சொன்னது…

@ஆசியா

நினைவுகளை மெதுவாக அசைப்போடுவது என்னிக்கும் சுகம்

Balaji saravana சொன்னது…

தெளிந்த நீரோடை மாதிரி போகுது தொடர் எல்.கே! :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

15, 16 மற்றும் 17 ஆம் பாகங்களை படித்தேன். நன்கு போகிறது தொடர். தொடரட்டும்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அந்த படமும் அழகா இருக்கு...

எல் கே சொன்னது…

@பாலாஜி

நன்றி பாலா

எல் கே சொன்னது…

@வெங்கட்
ம் எங்கடா ஆளை காணோம்னு நினச்சேன் நன்றி வெங்கட்

எல் கே சொன்னது…

@மனோ

நன்றி மக்கா

கோவை2தில்லி சொன்னது…

தொடர் சுவாரசியமாய் போகுது.

நிரூபன் சொன்னது…

தெளிவாய் இருந்த குளத்தில் கல் எறிந்தால் எப்படி ஆகுமோ அப்படி இருந்தது அவள் மனம். ஏன்தான் காதலிக்க தொடங்கினமோ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டிருந்தாள்.அதே சமயம், இப்பொழுது வெங்கட் என்ன செய்துக் கொண்டிருப்பானோ என்று நினைக்கவும் செய்தது அவள் மனது.//

வணக்கம் சகோதரம், கன்ரீனடிச் சந்திப்பு, புத்தகத்தினுள் எழுதி வைத்த வசனம், தன் தாயிடம் மறைக்க நினைக்கும் மகனின் உள்ளத்து உணர்வுகள், அனலிடைப் பட்ட மெழுகு போல மெல்லவும் விழுங்கவும் முடியாமல் இப் பாகத்தின் இறுதியில் தள்ளாடுபவளாக சித்திரிக்கப்படும் சாரு.. அனைத்துப் பகுதிகளையும் அழகாகச் செதுக்கியிருக்கிறீர்கள்.

ஆனாலும் கொஞ்சம் விறு விறுப்பைக் கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. காதலின் மறக்க முடியாத தருணங்களை இறுதியில் கொண்டு வந்து போட்டு எங்களையெல்லாம் அடுத்த பகுதிக்காக கட்டிப் போட்டு விட்டீர்கள்.

RVS சொன்னது…

காதல் ஒரு ப்ராண அவஸ்த்தை எல்.கே. என்ன பண்றது.. நல்லா கொண்டு போறீங்க.. வாழ்த்துக்கள். ;-)))

Ramani சொன்னது…

கதை சுவாரஸ்யமாகப் போகிறது
தொடர வாழ்த்துக்கள்

சேட்டைக்காரன் சொன்னது…

முந்திய பகுதியைப் போயி வாசிச்சிட்டு திரும்ப வந்தேன் கார்த்தி! :-)

நல்லாயிருக்கு! ஸ்கெட்சும் அழகு! பாராட்டுக்கள்!

எல் கே சொன்னது…

@ஆதி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@நிரூபன்

உங்கள் கருத்துகளுக்கு நன்றி வரும் அத்தியாயங்களில் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிப்பேன்

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்
ஆமாம் மைனரே. முழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது.

எல் கே சொன்னது…

@ரமணி

நன்றி சார்

எல் கே சொன்னது…

@சேட்டை

கதை மட்டும்தான் என்னுது. எனக்கு வரையத் தெரியாது :))

middleclassmadhavi சொன்னது…

கதையும் பொருத்தமான படமும் ஜோர்!

komu சொன்னது…

சுவாரசியமாக போய்க்கொண்டு இருக்கு
தொடர்.

raji சொன்னது…

சார், ஐயாம் சாரி!இந்த பதிவுல உங்களுக்கு
கமென்ட் மட்டும்தான்,பாராட்டெல்லாம் ப்ரியாவுக்கு
கொடுக்கறேன்.(அவங்க கிட்டேர்ந்து பிடுங்கிக்க பாக்காதீங்க!
சொல்லிட்டேன்)

வை கோபாலகிருஷ்ணன் சார் கதை பாணில சொல்லணும்னா
இந்த சாரு சரியான வழுவட்டையா இருக்காளே,எழுச்சியா
சொல்ல வேண்டாமோ.என்ன பொண்ணு போங்க சார்

அமைதிச்சாரல் சொன்னது…

கதையும் படமும் ஒண்ணோடொண்ணு போட்டி போடுது.. சூப்பர்.

vanathy சொன்னது…

நல்ல விறு விறுப்பா போகுது கதை. அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங்!!!

thirumathi bs sridhar சொன்னது…

தொடர்களை இப்போதுதான் படித்தேன்,இந்த பொண்ணு ரொம்ப யோசிக்கிது, ஓவியம் அழகாக உள்ளது.

கீதா சாம்பசிவம் சொன்னது…

சாரு இழுத்தடிக்கிறா இல்ல?? படம் நல்லா இருக்கேனு நினைச்சேன், அப்புறம் கையெழுத்தையும், உங்களோட டிஸ்கியையும் பார்த்ததும் புரிஞ்சது. நல்லா வரைஞ்சிருக்காங்க. வாழ்த்துகள் அவங்களுக்கு! :P

கீதா சாம்பசிவம் சொன்னது…

தொடர

கோவை ஆவி சொன்னது…

அட சீக்கிரம் சொல்லிடு சாரு!!

படம் நல்லா இருந்தது!!

வித்யா சொன்னது…

பதிவும் படமும் சூப்பர்.

கொஞ்சம் ஸ்பீடப் பண்ணா நல்லாருக்கும் எல் கே. தப்பா எடுத்துக்காதீங்க. ஜஸ்ட் ஃபெல்ட் சோ:)

எல் கே சொன்னது…

@மாதவி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@கோமு

நன்றி

எல் கே சொன்னது…

@ராஜி

நான் எனக்கு கிரெடிட் கேட்கலையே :)))

சீக்கிரம் சொல்லிடுவா லாஜி

எல் கே சொன்னது…

@சாரல்

நன்றிங்க


@வாணி

சீக்கிரம் போடறேன்

எல் கே சொன்னது…

@ஆச்சி

எனதுக் கதைகளையும் படித்ததற்கு நன்றிங்க.

எல் கே சொன்னது…

@கீதா

நல்லா இருக்கபவே தெரியவேண்டாம் ... என்னுது இல்லைன்னு . ஹிஹி

எல் கே சொன்னது…

@கீதா

நல்லா இருக்கபவே தெரியவேண்டாம் ... என்னுது இல்லைன்னு . ஹிஹி

எல் கே சொன்னது…

@கோவை ஆவி

சீக்கிரம் சொல்லிடுவா

எல் கே சொன்னது…

@வித்யா

கண்டிப்பா .. அடுத்த அத்தியாயம் இல்ல அடுக்கடுத்ததில் எக்ஸ்ப்ரெஸ் ஆகும்

ஸ்ரீராம். சொன்னது…

லேட்...எனவே பெஞ்சு மேல ஏறி நின்னு படிச்சிகிட்டு இருக்கேன்..!