மார்ச் 10, 2011

நினைவுகள் 16

அப்படி என்ன அவசரம்னு தெரியலையே என்று யோசித்துக் கொண்டே படுத்துக்கொண்டிருந்தான். ஒருவேளை அவளோட வீட்ல கல்யாணம் பண்ண முடிவு பண்ணி இருப்பாங்களோ அதுதான் அவசரமா கூப்பிட்டு பேச முயற்சி பண்ணி இருக்காளோன்னு என்று கூட யோசித்துக் கொண்டிருந்தான் .  பிறகு எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் போன் பண்ணா விஷயம் தெரியப் போகுது . எதுக்கு இப்படி தேவையில்லாமல் குழம்பனும் என்றுத் தெளிவடைந்து கொஞ்சம் நிம்மதி ஆனான்.


இவன் இங்கே நிம்மதியாய் படுத்துக் கொண்டிருக்க, அங்கே சாரு குழப்பம் பாதி , கோபம் பாதி என்ற இரண்டும் கலந்த மனநிலையில் இருந்தாள். அவள் காதில் விழுந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்றுத் தெரியாவிட்டாலும், தான் கல்லூரி வந்தே ஆறு மாதம்தானே ஆகிறது. அதற்கு முன்னால் நடந்தது தெரியாதே ? உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள். 


முழுவதும் அறியாமல் காதலிச்சது தவறோ? அவனைப் பத்தி நல்லா தெரிஞ்சிகிட்டு சொல்லி இருக்கலாமோ ? அவசரப்பட்டுட்டோமோ ?


யாரிடம் கேட்பது ? அப்படியே யாரிடமாவது கேட்டு ,அவள் கேள்விப்பட்ட விஷயம் பொய்யாக இருந்தால், தான் சந்தேகப்பட்டு விசாரிச்சது  வெங்கட் காதுக்கு போனா அவன் தன்னை பத்தி தப்பா நினைப்பானே ? அப்படி அவன் தப்பா நினைச்சா என்ன பண்றது ? முன்னமே விசாரிச்சு காதலிக்கறது எப்படி ? அப்படியே விசாரிச்சாலும் உண்மைத் தெரிஞ்சிருக்குமா ??


அவள் இருந்த மனநிலையில் பலவிதமாக எண்ணி தன்னைத்தானே குழப்பிக் கொண்டிருந்தாள். ஒருவேளை அவளிடத்தில் யார் இருந்தாலும் இப்படிதான் இருந்திருப்பார்களோ ??


பல நிமிடங்கள் யோசித்தப் பிறகு , மத்தவங்கக்கிட்ட பேசறதை விட வெங்கட்டுக்கே போன் பண்ணி பேசுவோம்னு ,கல்லூரி கேண்டீனில் இருந்த ஒரு ரூபாய் போனில் இருந்து அவன் வீட்டு எண்ணுக்கு அழைத்தாள். எதிர்ப்பாராமல் அவனுடைய அம்மா எடுத்துவிட, திக்கித் திணறி அவன் அன்று ஏன் வரலைன்னு கேக்கறதுக்குதான் போன் பண்ணியதாக சமாளித்து போனை வைத்துவிட்டாள்.

போன் பண்ணி முடித்தவுடன் புதிதாய் வேறு ஒரு குழப்பமும் சேர்ந்துக் கொண்டது. தான் போன் பண்ணியது தவறோ இதனால் அவனுக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்றுக் குழம்பியவாறு எதுவும் சாப்பிடக் கூடத் தோணாமல் இருந்தாள். 


அப்பொழுது அங்கு வந்த ரமேஷ் , சாரு அங்கு இருந்ததைப் பார்த்துவிட்டு , அவள் இருந்த டேபிளுக்கே சென்று அமர்ந்தான். 


"என்னப் பிரச்சனை சரஸ்வதி ? காலையில் இருந்து நீங்க நார்மலா இல்லையே "


"அப்படிலாம் ஒன்னும் இல்லை ரமேஷ். கொஞ்சம் தலைவலி அதுதான் டல் ."


"உண்மையாகவா ? பார்த்தா அப்படித் தெரியலையே "

ஒரு பக்கம் இப்படி போட்டு குடையரானே, பேசமா திட்டிடலாமா என்று நினைத்தாள். இன்னொருபுறமோ, இவன்கிட்ட கேட்டுப்பார்ப்போமா , எப்படியும் இவனுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சு போச்சு . அதனால் இனி முழுக்கத் தெரிஞ்சா ஒன்னும் பிரச்சனை இல்லை. இவன்கிட்டத் தான் கேட்க முடியும் இப்போதைக்கு .

"ரமேஷ் ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும். முடியுமா ?"

"என்ன ஹெல்ப் ? சொல்லு சரஸ்வதி "


"முதலில் பண்ணுவீங்களா மாட்டீங்களான்னு சொல்லுங்க . அப்புறம் என்ன விஷயம்னு சொல்றேன் ."


"சரி என்னால முடிஞ்சா பண்றேன்."

"இந்த விஷயம் நமக்குள்ள இருக்கணும்,. வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது."

"சரி ஓகே "

அவளிடம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே என்ன உதவியாய் இருக்கும் ? ஒரு வேலை வெங்கட்டை இவ லவ் பண்றாளோ அதை அவர்கிட்ட சொல்லணுமோ அதுக்குதான் ஹெல்ப் கேக்கராளோ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.


"வெங்கட்டை  பத்தி உனக்கு என்னத் தெரியும் ? அவரைப் பத்தி கொஞ்சம் விவரம் வேணும் எனக்கு ."


"இப்ப வெங்கட்டை பத்தி எதுக்கு கேட்கற . காலைல உன் பிரெண்ட் கேட்டா . இப்ப நீ கேட்கற ? என்ன விஷயம் ?"


"இப்ப அதை பத்தி உனக்கென்ன ? கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு ."


"அப்ப என்னனு சொல்ல மாட்ட? அப்ப நானும் பதில் சொல்ல முடியாது ."

மனதிற்குள் பழி  வாங்குறானே என்று திட்டினாலும் வெளியில் "அப்ப எதுக்குன்னு தெரிஞ்சாதான் சொல்லுவியா ?"

"ஆமாம். தெரிஞ்சாதான் சொல்லுவேன் ."


மனதில் இருந்த எரிச்சலை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மெல்லியக் குரலில் " நான் வெங்கட்டை லவ் பண்றேன் "


"நினைச்சேன் . அதான் இப்படி சி பி ஐ விசாரணை நடத்தறியா?"


"அதான் பதில் சொல்லிட்டேன் தானே. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு ."


"ம்ம் சொல்றேன். எனக்கும் ஆறு மாசமாத்தான் அவரைத் தெரியும். பக்கத்து அறையில் தங்கி இருக்கார். அதனால ஒரு ஜூனியரா இல்லாமல்  கொஞ்சம் அதிகமாவே அவர்கிட்ட பழகி இருக்கேன். ரொம்ப நல்ல மனுஷன். எல்லார்கிட்டயும் ஜாலியா பேசுவார் நல்லா பழகுவார். 

எனக்குத் தெரிஞ்சு அவர்கிட்ட இருக்கற ஒரே கெட்டப் பழக்கம் தம் அடிக்கறது மட்டும்தான். அவர் தண்ணி அடிச்சு கூட நான் பார்த்தது இல்லை. 


"ஹ்ம்ம் இதெல்லாம் எனக்கேத் தெரியும். மேல சொல்லு "


"வேற என்ன சொல்ல இருக்கு . ஓரளவு நல்லாவே படிப்பார்." 

அவள் வேறு என்ன எதிர்பார்க்கிறாள் என்றுப் புரியாமல் விழித்தான் ரமேஷ். தானாக இதை எப்படி ரமேஷிடம் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சாரு. 


"இல்லை.. வந்து.. வேற ஒண்ணு தெரியனும். எப்படி கேக்கறதுன்னு தெரியலை "


"கேக்க தெரியாட்டி விட்டுடு. எப்படியும் அவர் நாளைக்கு வந்திருவார்னு நினைக்கிறேன். நேரடியா அவர்கிட்டயே கேட்டுக்கோ . 


"அவர்கிட்ட இதை கேட்க முடியாது. சரி கேக்கறேன் இரு. "-நினைவுகள் தொடரும் 


31 கருத்துகள்:

geethasmbsvm6 சொன்னது…

ஒரு மாதிரி புரிஞ்சுடுச்சு! :)))) சரி,முடிவு சுபம் தானே? :))))

geethasmbsvm6 சொன்னது…

தொடர

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எனக்கென்னவோ இது கற்பனைக்கதை மாதிரி தெரியல.. பெரியப்பாவோட ஃபிளாஷ்பேக் லவ் ஸ்டோரி மாதிரி தெரியுது...

எல் கே சொன்னது…

@கீதா

நீங்க நினைக்கிற மாதிரியும் இருக்கலாம் . இல்லாமலும் போகலாம்

எல் கே சொன்னது…

@செந்தில்
சித்தப்பு நான் படிச்ச காலேஜ்ல பொண்ணுங்ககிட்ட பேசவே முடியாது

சே.குமார் சொன்னது…

sari nadaththunga... nadaththunga... nalla poguthu ninaivugal...

கோவை2தில்லி சொன்னது…

சாருவின் விசாரணை தெரிந்து தான் பிரிஞ்சிட்டாங்களா! அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்.

middleclassmadhavi சொன்னது…

நினைவுகள் sweet 16 - வாழ்த்துக்கள்!

கோவை ஆவி சொன்னது…

நல்லா போகுது எல். கே

GEETHA ACHAL சொன்னது…

சூபப்ராக போகுது...என்னது அது...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தொடர் வண்டி.....

komu சொன்னது…

தான் விரும்பும் ஒருவரைப்பற்றிய விஷயங்களை வேரொருவரிடம் எப்படி கேட்பது என்ற சாருவின் தயக்கத்தை நல்லா சொல்லி இருக்கீங்க.

vanathy சொன்னது…

சூப்பரா போகுது. வெயிட்டிங் அடுத்த பாகத்திற்கு...

சேட்டைக்காரன் சொன்னது…

கார்த்தி! இதை படமா எடுத்தா நிறைய சிச்சுவேஷன் சாங்-குக்கு ஸ்கோப் இருக்குது. பின்னிப்பெடலெடுக்கறீங்கப்பு....!

raji சொன்னது…

காதல் வந்தா என்னல்லாம் கஷ்டங்கள் வந்து
சேர்ந்து தொலையுதுடா சாமி!

தமிழ்வாசி - Prakash சொன்னது…

தொடருங்கள்...தொடருங்கள்... அருமை...

எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

அப்பாவி தங்கமணி சொன்னது…

aahaa..."thodarum" too soon...aaaaaaaaaaahhhhh..... next part soon please...:))))))

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி

எல் கே சொன்னது…

@ஆதி
அவசரப்பட்டா எப்படி ? கொஞ்சம் பொறுமையோட இருங்க

எல் கே சொன்னது…

@மாதவி

இல்லீங்க அவங்க ரெண்டு பேருமே அதுக்கு மேலதான்
ஆனா நீ ??

எல் கே சொன்னது…

@கோவை ஆவி
நன்றி

எல் கே சொன்னது…

@மனோ
ஆமாம் மக்கா

எல் கே சொன்னது…

@கோமு
ஆமாம். நமக்கும் இந்த மாதிரி ஒரு சமயம் வந்து இருக்குமில்லையா ??

.

எல் கே சொன்னது…

@வாணி
நன்றி

எல் கே சொன்னது…

@சேட்டை
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சேட்டை. மோதிரக் கையில் குட்டு :))

எல் கே சொன்னது…

@ராஜி
ஆமாம் எல்லா கஷ்டத்துக்கும் அதுதானே காரணம்

எல் கே சொன்னது…

@பிரகாஷ்
நன்றி

எல் கே சொன்னது…

@அப்பாவி
நான் தினமும் ஒரு பார்ட் போடறேன்

அமைதிச்சாரல் சொன்னது…

சஸ்பென்சோட முடிச்சிட்டீங்களே.. அடுத்த பகுதியில் உடைங்க :-))

ஸ்ரீராம். சொன்னது…

கதாநாயகியோட சங்கடம் பாவமா இருக்கு. சந்தேகம் வந்துடுச்சாமா..

RVS சொன்னது…

//@கீதா

நீங்க நினைக்கிற மாதிரியும் இருக்கலாம் . இல்லாமலும் போகலாம்//
சஸ்பென்சு வச்சு எழுதறீங்க... உம்.. ;-))
தொடர் தொடர வாழ்த்துக்கள்.. ஒரே நேரத்ல எல்லோரும் தொடர் எழுத ஆரமிச்சுட்டோமோ? ;-)))