மார்ச் 09, 2011

நினைவுகள் 15


விடுமுறை முடிந்து கல்லூரித் திரும்பிய சாரு , பேருந்திலும் கல்லூரியிலும் அவனைக் காணாது திகைத்தாள். அவன் வழக்கமாய் இருக்கும் கேண்டீனிலும் இல்லாமல் போகவே லைப்ரரி பக்கம் சென்று தேடினாள். அவன் எங்கும் தென்படவில்லை. அவனைக் காணாத அவள் முகம்வாடி , வகுப்பறைக்கு சென்றாள்.

பாடங்களில் கவனம் செலுத்தாது , தங்களிடமும் பேசாது அமர்ந்து இருந்தவளைப் பார்த்த அவள் தோழி ," ஏண்டி என்ன ஆச்சு உனக்கு, வரப்ப நல்லாதானே இருந்த ? இப்ப ஏன் இப்படி எதையோ தொலைச்சவ மாதிரி உக்காந்து இருக்க ? என்று கேட்டாள்.

"கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு அமைதியா இருக்கியா ? நானே அவனைக் பாக்க முடியலைன்னு கடுப்புல இருக்கேன். இதுல சும்மா போட்டு குடைஞ்சிகிட்டு இருக்க ."

"இவ்வளவுதான் விஷயமா ? கொஞ்சம் இரு. " என்று சொன்னவள் ,அவர்கள் வகுப்பில் படிக்கும் ரமேஷை கூப்பிட்டாள்.

"ரமேஷ் இங்க வா."

"என்ன சொல்லு ?"

"நீ சீனியர்லாம் இருக்கற அதே மேன்சன்லதான தங்கி இருக்க ?"

"ஆமாம் . ஏன் என்ன விஷயம் ?"

"உனக்கு வெங்கட்டை தெரியுமா ?"

"தெரியாம என்ன . அடுத்த ரூம்தானே "

"அப்ப வசதியா போச்சு . அவர் ஊர்ல இருந்து வந்துட்டாரா ?"

"ஹ்ம்ம் எனக்குத் தெரிஞ்சு வரலை. காலையில் நான் கிளம்பினப்பக் கூட அவர் ரூம் பூட்டிதான் இருந்தது. மெஸ்ல கூட ஆளக் காணோம்னு கேட்டாங்க. ஊர்ல இருந்தே இன்னும் அவர் வரலைன்னு நினைக்கிறேன் "

"சரி அதெல்லாம் இருக்கட்டும். அவரைப் பத்தி எதுக்கு இப்ப நீ கேட்கற." இதைக் கேட்கும் பொழுதே இவர்கள் உரையாடலில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த சரஸ்வதியின் பக்கம் அவன் பார்வை சென்றது. இவன் பார்ப்பதை கவனித்த சாரு தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

"இல்லை .. சும்மாதான்....." அவள் ராகம் இழுக்க, இவன் விஷயத்தை புரிந்துகொண்டவன் போல் சரஸ்வதியைப் பார்த்து ஒரு குறும்பு புன்னகை மட்டும் செலுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். 

எப்படியும் அன்று வெங்கட் வரப்போவதில்லை என்று நினைத்த சாரு , வகுப்பறையில் இருந்து லைப்ரரி வந்து அமர்ந்தாள். பெயருக்கு எதோ ஒரு புத்தகத்தை எடுத்தவள் , அதில் கவனம் செலுத்தாமல், முதலில் அவனிடம் பேசியது ,தன் காதலை சொல்லியது போன்றவற்றை நினைத்துப் பார்க்கத் துவங்கினாள். 

முதல் நாளே அவனிடம் சண்டைப் போட்டதை நினைத்தவள், இந்த விடுமுறையில் அவன் மீண்டும் சிகரெட் அடித்திருப்பானோ என்று சந்தேகமும் கொண்டாள். பின் தன்னைத்தானே "எதற்கு தேவையற்ற சந்தேகம் ?". என்றுத் திட்டிக் கொண்டாள்.

இருக்கும் பொழுது சண்டைப் போடுவதும், இல்லாதபொழுது ஏங்குவதும் தான் காதலா என்று நினைத்துக் கொண்டே , வேறு ஒரு புத்தகத்தை எடுக்க புத்தக வரிசை அருகே சென்றாள்.

புத்தக வரிசையின் மறுபுறம் இரண்டு பேரு பேசிக்கொண்டிருந்தது இவள் காதில் விழ, அதைக் கேட்ட சாரு திகைத்து நின்றுவிட்டாள். அவர்கள் அங்கிருந்து அகன்றப் பிறகும் சில நிமிடங்கள் அங்கே நின்றுக் கொண்டிருந்த சாரு, மெள்ள தான் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தாள்.

தன் காதில் விழுந்த விஷயங்களை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் குழம்பிக்கொண்டிருந்தாள். 

அதே நேரம் ஊரில் காய்ச்சலுடன் படுத்துக் கொண்டிருந்தான் வெங்கட். கல்லூரிக்குத் திரும்ப ஒருநாளே இருந்த சமயத்தில் ,காய்ச்சல் வந்துவிட வீட்டில் இருப்பவர்களை மீறி காய்ச்சலுடன் அவனால் பயணிக்க இயலவில்லை. 

காய்ச்சலுடன் ஊருக்குத் திரும்பி சென்று சாருவை பார்க்க இயலாத சோகமும் சேர , சோர்வுடன் படுத்துக் கொண்டிருந்தான். மருத்துவரின் அறிவுரைப் படி இரண்டு நாட்கள் கழித்துதான் அனுப்புவோம் என்று அவன் தாய் சொல்லிவிட என்ன செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு , "மேன்சனுக்கு போன் செய்யும் ஐடியா வந்தது. எப்படியும் மாலையில்தான் நண்பர்கள் மேன்சனுக்குத் திரும்புவார்கள் அதற்குப் பிறகு பேசலாம் என்றெண்ணி கொஞ்சம் உறங்க முற்பட்டான். 

மாத்திரை தந்த மயக்கத்தில் சில மணி நேரங்கள் உறங்கி இருப்பான். அவன் உறக்கத்தில் இருந்து எழுந்தவுடன் அவன் அம்மா "என்னடா புதுசா என்னவோ நடக்குது ?"

"என்னமா நானே இப்பதான் தூங்கி எழுந்தேன். இப்படி புதிர் போடறீங்க ?"

"யார்டா அந்தப் பொண்ணு ? என்னிக்கும் இல்லாத திருநாளா உன்னை விசாரிச்சு போன்லாம் வருது . என்ன விஷயம் ?" குரலில் கோபம் தொனிக்க கேட்டாள்.

அவள் சொல்லுவதை கேட்டவன் , யார் போன் செய்து இருப்பார்கள் என்று உடனடியாகப் புரிந்துகொண்டான். 

"இல்லமா. இன்னிக்கு காலேஜ் முதல் நாள் இல்லை, அதான் கூடப் படிக்கறவங்க யாரவது போன் பண்ணி இருப்பாங்க "

இவன் பதிலால் அவன் அம்மா திருப்தி அடைந்தமாதிரி தெரியவில்லை என்றாலும் , அந்த சமயத்தில் மேற்கொண்டு பேச விரும்பாத அவன் அம்மா "ஒழுங்கா இருந்துக்கோ . அவ்ளோதான் நான் சொல்லுவேன் " என்று எச்சரித்துவிட்டு சென்றாள்.

மிக அவசரமான , முக்கியாமான விஷயம் இருந்தால் மட்டுமே போன் செய்ய சொல்லி இருந்தான் சாருவை. இப்ப எதுக்கு இவ போன் பண்ணி இருப்பா என்று நினைத்தவன், உடனடியாக எதுவும் செய்ய முடியாது , எதற்கும் மாலையில் மேன்சனுக்கு போன் செய்து ரமேஷிடம் பேசலாம் என்று முடிவு செய்தான்.

-நினைவுகள் தொடரும் 36 கருத்துகள்:

Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னது…

Well structured thoughts. Impressed by the way you said!

komu சொன்னது…

வீட்டில் உடம்பு சரி இல்லாத நேரத்திலும் சாருவின் நனைவுதானா.சாருவும் இவனின் நினைவை விரட்டி அடிக்க முடியாமல் தவிக்கிரா. இருவரின் மன உணர்வுகளும் நல்லா சொல்லி இருக்கீங்க.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையா போகுது....

சே.குமார் சொன்னது…

சஸ்பென்ஸ் கொல்லுதுங்க...
நல்லா போகுது... நல்ல எழுத்து நடை.

நிரூபன் சொன்னது…

நினைவுகளை அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள். இதனை வாழ்வின் நினைவுகளாகவும் எடுக்கலாம் போல இருக்கிறது. கல்லூரி வாழ்வின் காத்திரமான பாகங்களுடன் கதையை கொஞ்சம் ஆர்வம் அதிகரிக்கும் வண்ணம் நகர்த்துகிறீர்கள்.

S.Menaga சொன்னது…

தொடர் நல்லா போகுது...

கோவை2தில்லி சொன்னது…

காதல் தொடரட்டும்!

Balaji saravana சொன்னது…

நைஸ்! :)

vanathy சொன்னது…

நல்லா இருக்கு கதை. நீங்களும் அப்பாவி அக்கா போல இழுக்கிறீங்க???? நிறைய எழுதி, சீக்கிரம் முடிவு என்னன்னு சொல்லுங்க. ஓக்கை.

அப்பாவி தங்கமணி சொன்னது…

@ Vanathy -
//நல்லா இருக்கு கதை. நீங்களும் அப்பாவி அக்கா போல இழுக்கிறீங்க???? //
ப்ளாக் விட்டு ப்ளாக் வந்து டேமேஜ் செய்யும் வானதியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... உங்கள அந்த "பக்கத்துல" "கவனிச்சுக்கறேன்" வாங்க மேடம்...:))))

கார்த்திக் - அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்கன்னு கதைய ஸ்பீட் பண்ணாதே Please... இந்த flow நல்லா இருக்கு... இப்படியே எழுதுங்க ரைட்டர் சார்... நன்றி... :))
(இப்ப என்ன பண்ணுவீங்க வாணி இப்ப என்ன பண்ணுவீங்க...:))

ஒகே, பிரச்சனை என்னங்கறதை நெருங்கிட்டோம்... சீக்கரம் அடுத்த போஸ்ட் போடு ப்ளீஸ்..:)

Lakshmi சொன்னது…

நல்ல போயிண்டு இருக்கு கதை.

Chitra சொன்னது…

nice... Keep going.... :-)

raji சொன்னது…

அங்கிட்டு நம்ம பதிவுல விவாதத்துல கொஞ்சம்
பிசியாய்ட்டதால (ஓகே ஓகே புரியுது..பில்டப்பை நிறுத்தறயான்னு முறைக்கறீங்க)
இங்கிட்டு வர லேட்டய்டுச்சு.வந்தப்பறமும் உங்க போன பதிவுல கோபி சாருக்கு
பதில் போட வேண்டியதா போச்சு (யப்பா!எத்தினி பேருக்கு பதில் சொல்ல வேண்டியதா
இருக்கு.கண்ணைக் கட்டுதுடா சாமி)

சரி மேட்டருக்கு வரேன்,அட! இதுலயும் வானதி மேடத்துக்கும் அப்பாவி மேடத்துக்கும்
விவாதம் போலருக்கே.இது விவாத வாரம்....(சன் டி வி ல முன்னாடி வருமே)

கதை நல்லா போகுது.ஆனா என்ன ரொம்ப கொஞ்சூண்டு போடறீங்களே?

raji சொன்னது…

ஒரு ப்ராடக்ட் மார்க்கெட்ல நல்லா போக ஆரம்பிச்சுடுச்சுன்னா
பாக்கெட் மட்டும் அதே அளவு இருக்கும் .உள்ள சாமான் அளவை
குறைச்சுடுவாங்க.ஜனங்கள் எல்லாம் புலம்புவாங்க.
அப்பிடிலாம் புலம்ப விடாதீங்க சார் ப்ளீஸ்

சுசி சொன்னது…

தப்பான முடிவு. உடனவே இல்லை ஃபோன் பண்ணி கேக்கணும்ம்ம்ம்ம்ம் :)

அப்பாவி தங்கமணி சொன்னது…

//Raji Says:
ஒரு ப்ராடக்ட் மார்க்கெட்ல நல்லா போக ஆரம்பிச்சுடுச்சுன்னா
பாக்கெட் மட்டும் அதே அளவு இருக்கும் .உள்ள சாமான் அளவை
குறைச்சுடுவாங்க.ஜனங்கள் எல்லாம் புலம்புவாங்க.
அப்பிடிலாம் புலம்ப விடாதீங்க சார் ப்ளீஸ்//

ha ha ha ha.....super Raji... :)))

Karthi - naan sonnaa nambalai illa nee...now you see, even Raji says posts are "too small".... :))))

(appaadaa, namma katchikku oru aal irukku...:)))

அமைதிச்சாரல் சொன்னது…

கதை சரியான வேகத்துலயும் திசையிலும் போகுது.. தொடருங்க :-))

ஸ்ரீராம். சொன்னது…

லைப்ரரி மறைவுல என்ன பேசினாங்கன்னு தெரிந்தால் நலம்!

எல் கே சொன்னது…

@ரவிகுமார்
நன்றி சார்

எல் கே சொன்னது…

@கோமு

ஆமாங்க இந்தக் காதல் ரொம்ப மோசமானது. எந்த நிலைமைல இருந்தாலும், இந்த நினைப்பு வந்து பிரச்சனை பண்ணும

எல் கே சொன்னது…

@மனோ
நன்றி மக்கா

எல் கே சொன்னது…

@குமார்

நன்றி

எல் கே சொன்னது…

@நிரூபன்

ஆமாம். இது நம் எல்லோர் வாழ்விலும் கடந்து வந்திருப்போம் ..

எல் கே சொன்னது…

@மேனகா
நன்றி

@ஆதி

நன்றி

@பாலாஜி

நன்றி

எல் கே சொன்னது…

@வாணி
ஹஹஹா எப்படியோ அப்பாவி கதைய இல்லுக்கரத ஒத்துக்கறீங்க .. நேரமின்மையால் இழுக்குது வாணி. உலககோப்பையை முன்னிட்டு இன்னொரு பதிவிலும் எழுதி வருகிறேன். அதுதான் லேட்

எல் கே சொன்னது…

@அப்பாவி

ஹ்ம்ம். என்ன நீ வாங்கற திட்டுலா நானும் பங்கு எடுத்துகனுமா ?? நடக்காது அ(ட)ப்பாவி நடக்காது..

நன்றி சீனியர் ரைட்டர்

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

நன்றி


@சித்ரா

நன்றி

எல் கே சொன்னது…

@ராஜி

பார்துக்கிட்டுதான் இருந்தேன். பறந்து பறந்து பதில் போட்டுக்கிட்டு இருக்கீங்க. சூப்பர் ...


அது வேற ஒன்னும் இல்லை. சீக்கிரம் அடுத்த பகுதி வரும் . கவலை வேண்டாம்

எல் கே சொன்னது…

@அப்பாவி

ரொம்ப ரொம்ப பேசக் கூடாது.. என் பக்கத்தில் பலம் ஜாஸ்தி. ராஜி கூட என்னைத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க

எல் கே சொன்னது…

@சாரல்

கொஞ்சம் சத்தமா இந்த அப்பாவி காதில் கேக்கர மாதிரி சொல்லுங்க சாரல்

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

சீக்கிரம் சொல்றேன்

geethasmbsvm6 சொன்னது…

@ Vanathy -
//நல்லா இருக்கு கதை. நீங்களும் அப்பாவி அக்கா போல இழுக்கிறீங்க???? //

ஹிஹிஹி, பதிவிலேயே நான் ரசிச்ச ஒரே விஷயம் இது தான்! :P

ஏடிஎம், நீங்க முழ நீளம் எழுதிட்டு இழுக்கிறீங்க, கார்த்திக் கொஞ்சம் தானே போடறார், அதனால் இழுக்கறாப்போல் இருக்கு. என்ன இருந்தாலும் உங்க ரப்பர் யாருக்கும் வராது, என்ன சொல்றீங்க?

அப்பாடா, நிம்மதியா இருக்கு இப்போ! :))))

geethasmbsvm6 சொன்னது…

எல்கே, கதை புதுக்கோணத்திலே போகுதே, ம்ம்ம்ம்ம்?? இதை எதிர்பார்க்கலை. அது என்ன ரகசியமாப் பேசினாங்க>? மண்டை குடைச்சல் தாங்கலை! :D

எல் கே சொன்னது…

//என்ன இருந்தாலும் உங்க ரப்பர் யாருக்கும் வராது, என்ன சொல்றீங்க?//

இன்னும் நல்லா சொல்லுங்க. அப்பவும் இந்த அ(ட)ப்பாவிக்கு புரியாது

எல் கே சொன்னது…

//ல்கே, கதை புதுக்கோணத்திலே போகுதே, ம்ம்ம்ம்ம்?? இதை எதிர்பார்க்கலை. அது என்ன ரகசியமாப் பேசினாங்க>? மண்டை குடைச்சல் தாங்கலை//

அதான் இன்னிக்கு போட்டுட்டேன்

அப்பாவி தங்கமணி சொன்னது…

Geetha Maami -
//ஹிஹிஹி, பதிவிலேயே நான் ரசிச்ச ஒரே விஷயம் இது தான்!//

you too maami...hum hum... (appavi crying....)

LK said -
//இன்னும் நல்லா சொல்லுங்க. அப்பவும் இந்த அ(ட)ப்பாவிக்கு புரியாது//

unnai innaikki postla kalaaichadhu thappe illa... brootas....grrrrrrrrrr.....