மார்ச் 02, 2011

நினைவுகள் 14

நினைவுகள் இதுவரை 
சரஸ்வதிக்கு வரன் தேடும் சமயம் அவளுடன் படித்த வெங்கட்டின் போட்டோவும்,ஜாதகமும் வருகிறது. ஆனால், அவள் வேண்டாம் என்று அதை நிராகரிக்க வெங்கட் சோகமடைகிறான். அதே சமயத்தில்,அவளுடைய கல்லூரித் தோழன் ரமேஷ் அவளை சந்திக்க, அந்த சந்திப்பில் வெங்கட்டைப் பற்றிய பழைய நினைவுகள் அவள் மனதில் ஓட ஆரம்பிக்கின்றன. இனி ...


மறுநாள் கல்லூரிக்கு செல்ல அவள் செல்லும் பேருந்திலேயே அவனும் ஏற, அவனைப் பார்த்தும் பார்க்காதவள் போல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். அவளின் இந்தப் புறக்கணிப்பு ஏன் என்று புரியாமல் முழித்தாலும், பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்தமையால் அவளிடம் எதுவும் பேச முயற்சிக்கவில்லை. கல்லூரி நிறுத்தத்தில் இறங்கியவன், ஒரு கணம் டீக்கடைக்கு செல்வதா இல்லை கல்லூரியின் உள்ளே செல்வதா என்று யோசித்து ,ஏற்கனவே கோபத்தில் இருப்பவளை இன்னும் கோபப்படுத்தவேண்டாம் என்று எண்ணியவனாய் அவளைத் தொடர்ந்து கல்லூரியின் உள்ளே நடந்தான்.

அவன் இறங்கியப் பின் பேருந்தில் இருந்து இறங்கியவள், டீக்கடைக்கு செல்லாமல், கல்லூரியினுள்ளே செல்லும் வெங்கட்டைப் பார்த்தவுடன் அவளை அறியாமல், புன்னகை பூத்தாள். அன்று முழுவதும் வெங்கட் அவளை பார்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அவளை கேண்டீனில் அவனைத் தேடியபொழுதும் கண்ணில் சிக்கவில்லை. 

டிசம்பர் மாத காலையில் படர்ந்திருக்கும் பனியைப் போல் அவள் மனதில் லேசான சோகம் படரத் துவங்கியது. எப்படியும் மாலைப் பேருந்தில் அவனைப் பார்த்து விட முடியும் என்ற நம்பிக்கை அவளின் உள்ளே இருந்தாலும், அப்பொழுதும் வராவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் இருந்தது. நேற்று அவனிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு கண்டித்து விட்டோமோ என்று ஒரு புறமும் ,   அவன் செய்தத் தவறைத் தானே சொன்னேன் இதில் ஏன் மேல் என்ன தப்பு இருக்கிறது என்று இன்னொருபுறமும் பலவாறாக எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இதைப் பற்றி யோசித்து யோசித்து தலை வலிக்கத் துவங்கியது. 

மாலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தவனைப் பார்த்தவுடன்தான் அவள் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. அவனருகில் சென்று நின்றவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள். காலையில் இருந்து அவனைப் பார்க்கவிட்டாலும், அவனே பேசட்டும், நான் எதற்கு முதலில் பேச வேண்டும் என்ற வீம்புடன் நிற்பதுபோல் தோன்றியது. 


அவள் வருவதை முன்பே பார்த்விட்ட வெங்கட், அருகில் வந்து நின்றப் பின்னும் பேசாமல் நிற்பதைக் கண்டு , இந்தப் பெண்கள் எல்லோருமே இப்படித் தானா , இல்லாதபொழுது தவிப்பது, இருக்கும்பொழுது வீம்புக்கு சண்டைப்போடுவது என்று மனதில் எண்ணிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன், பின் இது வேலைக்காகாது என்று எண்ணி அவனேப் பேச்சைத் துவங்கினான். 

"என்ன ஏன் மேல கோபமா ? அதுதான் விடறேன்னு சொன்னேன்தான?"

"ஹ்ம்ம். எல்லாம் வெறும் வாய் வார்த்தைதான்."

"இல்லை நான்தான் கண்டிப்பா விட்டுடறேன்னு சொன்னேனே?"

"பேசாத . அதை சொல்லி அரைமணிநேரம் கூட ஆகலை. நான் அந்தப் பக்கம் போனவுடனே  இந்தப் பக்கம் எடுத்து கொளுத்தியாச்சு. நான் சொன்னமாதிரி உன் விரலை கட் பண்ணி இருக்கணும் அப்பவே அங்க வந்து. அதை செய்யாததுதான் என் தப்பு."

அவள் வார்த்தைகளை சொல்ல சொல்ல இவன் முகம் மாறியது .

"அடிப்பாவி! நேத்து போற மாதிரி போயிடு இந்தப் பக்கம் வந்த வேவுப் பார்த்தியா?"

"அப்படி பார்த்ததால்தான் உன் வாக்குறுதியோட லட்சணம் தெரிஞ்சது ."

"நான் என்ன உடனே விடறேன்னா சொன்னேன் . கொஞ்சம் கொஞ்சமா விடறேன்னு தானே சொன்னேன் "

"ஹ்ம்ம். நீ மாறமாட்ட. நான் இருக்கறப்ப அடிக்க மாட்ட. என் தலை அந்தப் பக்கம் மறைந்தபின் ஊதிக்கிட்டு இருப்ப . "

"சரி சரி. இனி அடிக்கமாட்டேன் போதுமா ? கொஞ்சம் கோபத்தை விடேன்."

"ஓகே சொல்லு. "

"சனிக்கிழமை படத்துக்கு போலாமா ?"

"படத்துக்கு போறது ரொம்ப அவசியமா ?? யாராவது தெரிஞ்சவங்க பார்த்தா ??"

"எதுக்கு சுடிதார் துப்பட்டா இருக்கு ? முகத்தை மூடிக்க வேண்டித்தானே ?"

"அதெல்லாம் எனக்குப் பிடிக்காது . அப்படி பயந்து  ஒளிஞ்சுகிட்டு போய் என்ன சாதிக்கப் போறோம் ?"

அவளின் பதில் அவன் மனதில் அவளைப் பற்றிய மதிப்பை உயர்த்தியது. 

"ஹ்ம்ம் சரிதான்.. ஓகே பஸ் வருது போலாம் வா. "


கல்லூரி நிறுத்தமும்,லைப்ரரியும், மைதானமும் அவர்கள் சந்திக்கும் இடமாக , அவர்கள் காதல் மெல்ல  வளர்ந்தது. இடையில் செமெஸ்டர் தேர்வுகளும் முடிந்து ,விடுமுறைக்கு வெங்கட் ஊருக்கு செல்ல , இங்கோ சாரு சோகத்தில் ஆழ்ந்தாள். 
விடுமுறை முடிந்து முதல் நாள் கல்லூரிக்கு சென்றவள் ஆவலுடன் அவனைத் தேட அவன் அன்றும் அவள் கண்ணில் சிக்கவில்லை. நினைவுகள் தொடரும் 48 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் வாசகனாய்....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>காலையில் இருந்து அவனைப் பார்க்கவிட்டாலும், அவனே பேசட்டும், நான் எதற்கு முதலில் பேச வேண்டும் என்ற வீம்புடன் நிற்பதுபோல் தோன்றியது.

பெரியப்பாவுக்கு லேடீஸ் சைக்காலஜி அத்துபடி போல..

பார்வையாளன் சொன்னது…

write next part soon

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>
"எதுக்கு சுடிதார் துப்பட்டா இருக்கு ? முகத்தை மூடிக்க வேண்டித்தானே

அனுபவம் பேசுது.. அப்புறம் முகத்தை மூடிக்கிட்டா எப்படி படம் பார்க்க்றது? #டவுட்டு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>லைப்ரரியும், மைதானமும் அவர்கள் சந்திக்கும் இடமாக , அவர்கள் காதல் மெள்ள வளர்ந்தது

பெரியப்பா.. ரொம்ப நாளா ஒரு டவுட்,. மெல்ல - மெள்ள என்ன வித்தியாசம்?

எல் கே சொன்னது…

@செந்தில்
கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆனப்புறமும் தெரிஞ்சிக்காட்டி வேஸ்ட் .

//அனுபவம் பேசுது.. அப்புறம் முகத்தை மூடிக்கிட்டா எப்படி படம் பார்க்க்றது? //
அதை அப்படி பாக்கவங்கக்கிட்ட கேளுங்க சித்தப்பு. நீதான் அடிக்கடி படம் பாக்கற. நான் இல்லை

//மெல்ல - மெள்ள என்ன வித்தியாசம்?//
சரி சரி . சரி பண்றேன். எதோ ஒரு தப்பு,

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

சீக்கிரமே முடிஞ்ச மாதிரி இருக்கு, அடுத்த அத்தியாயம் விரைவா எழுதுங்க..

middleclassmadhavi சொன்னது…

அடுத்தடுத்த பாகங்களை விரைவாகப் போடுங்களேன்...

asiya omar சொன்னது…

எல்.கே நல்லாயிருக்கு,என்ன தான் முடிவோ! இந்த கதை முடிவை கணிக்க முடியலையே!

raji சொன்னது…

கல்லூரிக் காதல் வளர்கின்றது.அது
ஊடலான காரணம்?????????????

வெங்கட் நாகராஜ் சொன்னது…

காத்திருப்பதில் சோகம் இருப்பது போலத் தோன்றினாலும் அதில் ஒரு மகிழ்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது! நினைவுகள் தொடரட்டும்.

எல் கே சொன்னது…

@செந்தில்
ஒருவாரமா எதுவும் உருபடிய எழுதலை தலைவரே. இன்னிக்குதான் எழுதினேன். வெள்ளிக்கிழமை போட்டுடறேன்

எல் கே சொன்னது…

@மாதவி
சீக்கிரம் போடறேன்

@ஆசியா
யூகிசிக்கிட்டே இருங்க

@ராஜி

சீக்கிரம் தெரியும்

எல் கே சொன்னது…

@வெங்கட்
உண்மைதான் பிரிவில் இன்பம் உண்டு

Jaleela Kamal சொன்னது…

ம்ம் நீள் கதை போல இருக்கே

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நினைவுகள் தொடரும்//

தொடரட்டும் நினைவுகள்...

S.Menaga சொன்னது…

வெள்ளிக்கிழமைக்காக வெயிட்டிங்...

கோவை ஆவி சொன்னது…

ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் அதிக இடைவெளி இருப்பதால் சரஸ்வதி-வெங்கட்டின் நினைவுகள் எங்கள் நினைவுகளில் நிற்க மறுக்கிறது!!

கதை சூடு பிடிப்பது போல் தெரிகிறது!!

அமைதிச்சாரல் சொன்னது…

கதை நல்லா போகுது..

சேட்டைக்காரன் சொன்னது…

நல்லா எழுதறீங்க கார்த்தி. முந்தைய இடுகையோட சுட்டியையும் முதலிலேயே கொடுத்தா திடுதிப்புன்னு வர்ற (என்னை மாதிரி) ஆளுங்களுக்கு சவுகரியமா இருக்குமே? (சுருக்கமா போட்டிருந்தாலும் கூட...!)

அப்பாவி தங்கமணி சொன்னது…

ஹ்ம்ம்... இங்கயும் சண்டை ஆரம்பமா? ஒகே ஒகே... சண்டை வரும் முன்னே சமாதானம் வரும் பின்னேவா? தட்ஸ் குட்...:)

Lakshmi சொன்னது…

கார்த்தி இதுவரை நடந்த கதையின் முன் சுருக்கம் தேவைதான். அதையும் கோர்வையா சொன்னவிதம் நல்லா இருந்தது.இடைவெளி நிறையா ஆச்சுஇல்லியா?
இப்ப அடுத்தபகுதி சீக்கிரமே போடுங்க.

Chitra சொன்னது…

உங்கள் எழுத்து நடை, கதையை நல்லா கொண்டு போகுது!

எல் கே சொன்னது…

@ஜலீலா
ரொம்பலாம் நீளம் இல்லை .. சீக்கிரம் முடிக்கறேன்

எல் கே சொன்னது…

@மனோ
நன்றி மக்கா

எல் கே சொன்னது…

@மேனகா

நன்றிங்க

எல் கே சொன்னது…

@கோவை ஆவி
பொதுவா ரொம்ப இடைவெளி தர மாட்டேன். வீட்டில் உறவினர் வருகை/அலுவலகத்தில் ஆணி அதிகம் இரண்டும் இடைவெளி அதிகம் ஆகக் காரணம்

எல் கே சொன்னது…

@சாரல்
நன்றிங்க

எல் கே சொன்னது…

@சேட்டை

நான் ஈ மெயில் போஸ்டிங் தான் பண்றேன். அடுத்த முறை லிங்க் கொடுக்கறேன் கண்டிப்பா

எல் கே சொன்னது…

@அப்பாவி

சண்டை இல்லாதா காதல் ஏது?

எல் கே சொன்னது…

@lakshmi

ஆமாம். இந்த முறை கொஞ்சம் கேப் ஜாஸ்தியா போய்டுச்சு. இனி அதிகம் கேப் இருக்காது

எல் கே சொன்னது…

@சித்ரா

நன்றிங்க

RVS சொன்னது…

அவனைக் கண் தேடுதே.. ;-))

அன்னு சொன்னது…

என்ன இது இப்படி சட்டு புட்டுன்னு நிறுத்திட்டீங்க?? :((

raji சொன்னது…

எல் கே சார் என் போஸ்ட் உங்க டாஷ்போர்டில
லேட்டா வரதா என் பதிவுல சொல்லிருந்தீங்க.

எனக்கும் அதுக்கான காரணம் என்னனு புரியல.
ஆனா எனக்கும் சில பதிவர்களோடது அப்படித்தான்
தாமதமா வருது.

அதிலும் சக பதிவர் கோவை 2 தில்லியின் பதிவுகள் எனக்கு
அப்டேட் கூட ஆக மாட்டேங்குது.

எனக்கு இதுக்கு காரணம் தெரியல.வேற யார் கிட்டயாவது தான்
கேக்கணும்.உங்களுக்கு தெரிய வந்தா எனக்கும் தெரியப் படுத்துங்க

ஜெய்லானி சொன்னது…

சூப்பர் கதை :-)

vanathy சொன்னது…

நல்லா இருக்கு கதை. ரொம்ப இயல்பான நடை.

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்
உறங்காமலே ......
(அடுத்த லைன் இதுதானே )

எல் கே சொன்னது…

@அன்னு

பின்ன எப்படி நிறுத்தனும் ???

எல் கே சொன்னது…

@ராஜி
தெரியலை அநேகமா ஆர் எஸ் எஸ் செய்தியோடை பிரச்சனையா இருக்கலாம்

எல் கே சொன்னது…

@ஜெய்
நன்றி தல

@வாணி

நன்றிங்க

raji சொன்னது…

எல் கே சார் என்ன இது 'ஃபான்ட்' டை
இப்பிடி சின்னதாக்கிட்டிங்க?

கண்ல பவர் இருக்கற பதிவர்களுக்கும்
சீனியர்(வயசுல) பதிவர்களுக்கும் இது
படிக்கறது கஷ்டம்.கொஞ்சம் பாருங்க

raji சொன்னது…

//எல் கே said...
அநேகமா ஆர் எஸ் எஸ் செய்தியோடை பிரச்சனையா இருக்கலாம்//

அப்பிடின்னா??

இதெல்லாம் கொஞ்சம் என் மரமண்டக்கு எட்டறாப்பல
சொல்லக் கூடாதா?

சே.குமார் சொன்னது…

தொடரட்டும் நினைவுகள்...

சுசி சொன்னது…

தொடருங்க கார்த்திக்.

புது வீடு நல்லாருக்கு.

எல் கே சொன்னது…

@குமார்
நன்றிங்க

@சுசி
நன்றி. பழைய வீடு சிலருக்கு சரியா வரலைன்னு சொன்னாங்க . அதுதான் மாத்தினேன்

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமாப் போகுது.

கோவை2தில்லி சொன்னது…

அவங்க காதல் லைப்ரரியிலும், மைதானத்திலும் வளருதா! அப்புறம் எப்படி பிரிஞ்சாங்க? விரைவில் எதிர்பார்க்கிறேன்.