பிப்ரவரி 27, 2011

பதிவர்கள் - இயக்குனர் கலந்துரையாடல்

கேபிள் சங்கரும், கே ஆர் பி செந்திலும் நேற்றைய பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். வழக்கமா கடற்கரையில் சந்திப்பு நிகழும். அதை மாற்றி கே கே நகர் டிஸ்கவரி புக் பேலசில் சந்திப்பை வைத்திருந்தார்கள்.

மாலை ஆறு மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப் பட்டதால், ஆறு மணிக்கு டிஸ்கவரி புக் பேலசில் நுழைந்தேன். எங்கள் ப்ளாக் கௌதமன், குகன்,மா.சிவக்குமார் ,தண்டோரா மணிஜி, காவேரி கணேஷ் போன்றோர் ஏற்கனவே வந்து காத்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திலேயே கே ஆர் பி செந்திலும், விந்தை மனிதன் ராஜாராமும் வந்தனர்.

அவர்கள் வந்தவுடன் சந்திப்பு இடம் மாறி, கீழே உள்ள டீக்கடைக்கு சென்றது. நாங்கள் அங்கு சென்றபொழுது, மயில் ராவணன், சங்கர நாராயணன் மற்றும் உண்மைத் தமிழன் அண்ணாச்சியும் வந்து சேர்ந்தனர். டீ ,பஜ்ஜி போன்றவற்றை முடித்து மீண்டும் புக் பேலசில் நுழைந்தபொழுது கேபிள் சங்கர் வந்து சேர்ந்து கொண்டார்.

இதன் பின் அண்ணன் ஆதி, அப்துல்லா அண்ணாச்சி, எறும்பு ராஜகோபால்,வலைமனை சுகுமார், ஆயிரத்தில் ஒருவன் மணி, பிலாசபி பிரபாகரன் ஆகியோரும், சென்னைப் பெண் பதிவர்களின் சார்பாக மதாரும் வந்து கலந்துக் கொண்டனர்.

இந்தமுறை பதிவர்கள் சந்திப்பை சுரேகா அவர்கள் ஒருங்கிணைத்து அருமையாக நடத்தினார். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சீனு ராமசாமி அவர்களும், சிங்கப் பதிவர் ஜோசப் அவர்களும் கலந்துக் கொண்டனர்.

அனைவரது அறிமுகங்களும் முடிந்தப் பின் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள்  தென்மேற்கு பருவக்காற்று என்ற தனது படத்தை வெளிக் கொண்டு வருவதில் இருந்த சிக்கல்களை பற்றி பேசினார். முக்கியமாக எந்தப் பத்திரிகையும் இதைப் பற்றி எழுதாத நிலையில் பதிவர்கள் மட்டுமே அந்தப் படத்தைப் பற்றி எழுதியதாகக் கூறி பதிவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின், லோ பட்ஜெட் படங்கள் இயக்கி வெளிக்கொண்டு வருவதில் இருக்கும் சிக்கல்களை பற்றியும் கூறினார். பின்பு ,பதிவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்க அதற்கு விளக்கம் அளித்தார்.

அவருக்குப் பின் சிங்கைப் பதிவர் ஜோசப் ,சிங்கை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தை பற்றியும், அவர்கள் செயல்படும் விதத்தை பற்றியும் சுருக்கமாக பேசி முடித்துக் கொண்டார்.

அதன் பின், வழக்கமான பதிவர் சந்திப்புகள் போல், புக் பேலசில் இருந்து கீழே வந்து டீக்கடையில் சந்திப்பு தொடர்ந்தது. சிலர் விடைபெற சிலர் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

மொத்தத்தில் பதிவர் சந்திப்பாக இல்லாமல் இயக்குனர்-பதிவர் கலந்துரையாடலாக இருந்தது.

அன்புடன் எல்கே

18 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

// மா.சிவக்குமார் //

அவர் மா.சிவகுமார் என்று நிறைய பேர் தவறாக புரிந்துக்கொண்டார்கள்... அவர் மெட்ராஸ் பவன் மற்றும் நண்பேண்டா வலைப்பூக்களின் உரிமையாளர் சிவகுமார்...

Philosophy Prabhakaran சொன்னது…

வலைமனை சுகுமார் அண்ணன் விரைந்து கொடுத்துவிட்டார் செய்தியை... நீங்கள் கொஞ்சம் லேட்...

சேட்டைக்காரன் சொன்னது…

வெரி குட்! :-)

vanathy சொன்னது…

நல்லா இருக்கு பதிவர் சந்திப்பு விபரங்கள். போட்டோ எடுக்கலையா???

komu சொன்னது…

பதிவர் சந்திப்பு பற்றி விளக்கமாகச்சொல்லி இருக்கீங்க. நல்லாஇருந்தது.

சே.குமார் சொன்னது…

பதிவர் சந்திப்பு பற்றி விளக்கமாகச்சொல்லி இருக்கீங்க.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சில கேள்வி பதில்களையும் கொடுத்திருக்கலாம்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பதிவர்-இயக்குனர் சந்திப்பு பற்றிய தகவல்களுக்கு நன்றி.

asiya omar சொன்னது…

பதிவர்கள் இயக்குனர் சந்திப்பு பற்றிய தகவலிற்கு நன்றி.

தம்பி கூர்மதியன் சொன்னது…

இந்த சந்திப்புக்காக காலையிலே எல்லா வேலையும் முடிச்சிட்டு 5 மணிக்கே கிளம்பினேன்.!! நாணயம் விகடன்லயிருந்து ஒரு போன் கால்.. இணைப்பு புத்தகத்துக்கு கொடுக்க வேண்டிய ஆர்ட்டிகல்-ஐ கொடுக்காமல் வந்துட்டேனாம்.. சரின்னு ஆபிஸ் போய் அந்த வேலைய முடிக்கவே 7 மணியாயிடுச்சு.. சோ ஐ ஆம் ஆப்சன்ட்..

ராம்ஜி_யாஹூ சொன்னது…

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் பற்றி ஏதும் விவாதம் செய்ய வில்லையா

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான சந்திப்பு வாழ்த்துகள் மக்கா...

RVS சொன்னது…

என்னாலையும் வர முடியலை.. குழுமம் பத்தி எதுவும் பேசலையா...;-)))))))

! சிவகுமார் ! சொன்னது…

தங்களை சந்தித்தது மகிழ்ச்சி. விரைவில் குழுமம் அமையும் என நம்புகிறேன்.

கீதா சாம்பசிவம் சொன்னது…

ம்ம்ம்ம் எல்லாரும் சந்திச்சு பஜ்ஜி சாப்பிட்டு டீ குடிச்சீங்க! :))) ஓகே.

கீதா சாம்பசிவம் சொன்னது…

தொடர

thirumathi bs sridhar சொன்னது…

பகிர்விற்கு நன்றி

Jaleela Kamal சொன்னது…

என்ன இருந்தாலும் பதிவிலேயேஎழுதிட்டு சந்திக்கும் போது ரொம்ப நலல் இருக்கும் இல்லையா?