பிப்ரவரி 26, 2011

பதிவர் சந்திப்பு

bloggers-meet-2

அன்பான பதிவர் பெருமக்களே.. நாமெல்லாம் ஆங்காங்கே புத்தக கண்காட்சியிலும், புத்தக வெளியீட்டிலுமாய் தொடர்ந்து டிசம்பர், ஜனவரி மாதங்களில் சந்தித்துக் கொண்டாலும், எல்லோரும் ஒட்டு மொத்தமாய் சந்தித்து பல காலமாகிவிட்டது என்பதால், ஏன் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தக் கூடாது? என்று பல புதிய பதிவர்கள் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். மேற்ச்சொன்ன காரணத்தினாலும், சிங்கையிலிருந்து பதிவர் ஜோசப் பால்ராஜ் அவர்கள் வந்திருப்பதாலும், இவ்வளவு காலம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த நமது  சந்திப்பு இன்று சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.

இன்று சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில் நம் பதிவர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. நம் சந்திப்பினூடே நம்முடன் வந்திருந்து கலந்துரையாட தென்மேற்கு பருவக்காற்று இயக்குனர் திரு. சீனு ராமசாமி வருகிறார். புதிய, பழைய,வாசக பெருமக்கள் அனைவரும் வந்திருந்து சந்திப்பை சிறப்பிக்க வேண்டுமாய் எல்லா பதிவர்கள் சார்பாய் வேண்டுகிறோம்.

இந்தப் பதிவர் சந்திப்பில் ’சென்னை வலைப்பதிவாளர் குழுமம்’ துவங்குவது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற இருப்பதால் சென்னைப் பதிவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டுகிறோம்.


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை,
முதல் மாடி, கே.கே.நகர் (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்)
நேரம் : மாலை 6 மணி
தேதி   : 26/02/11
கிழமை: சனிக்கிழமை

சிறப்பு விருந்தினர் : இயக்குனர் திரு. சீனு ராமசாமி.
பதிவர்கள் அனைவரும் தங்களது பதிவில் இந்நிகழ்வை தெரிவித்து ஒரு பதிவிட்டு சக பதிவுலக அன்பர்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். 

அனைவரும் வருக..வருக.. வருக..

நன்றி..

15 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

சென்னை வந்தா பதிவர் சந்திப்பு வச்சு பார்டி கீர்டி கொடுப்பீகளா?

அமைதிச்சாரல் சொன்னது…

பதிவர் சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்துகள்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள். நான் வந்தா ஓ சி சாப்பாடு உண்டா?

shortfilmindia.com சொன்னது…

vaanga.. vaanga..

பெயரில்லா சொன்னது…

Best wishes for a good enjoyable meet Karthik

ஜெய்லானி சொன்னது…

நல்ல விஷயம் ..!!இங்கேயும் அரசியல் கலக்காம இருந்தா சரிதான் :-))

Jaleela Kamal சொன்னது…

ரொம்ப சந்தோஷம்

Lakshmi சொன்னது…

பதிவர் சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பாண்டிசேரி பக்கம் என்பதால் பாட்டல் உண்டு மக்கா...

asiya omar சொன்னது…

பதிவர் சந்திப்பு முடிந்து விபரம் எழுதுங்கள்,வாழ்த்துக்கள்.

Priya சொன்னது…

மிகவும் சந்தோஷம்... சந்திப்பு முடிந்ததும் பதிவிடுங்கள்...

சேட்டைக்காரன் சொன்னது…

சந்திப்பு இனிதே நிகழ்ந்தேற எனது வாழ்த்துகள்! :-)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பதிவர் சந்திப்பு இனிது நடக்க வாழ்த்துக்கள்.

எல் கே சொன்னது…

@அப்பாஜி

வரப்ப சொல்லுங்க. நம்ம ஆர்வீஎஸ் தலைமையில் ஏர்போர்ட்ல இருந்து தாரை தப்பட்டை சகிதம் பட்டாய கிளப்பலாம்

எல் கே சொன்னது…

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி