Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பொது புத்தி

சமீபத்தில் இரண்டு மாணவிகளின் தற்கொலை, மீடியாவிலும் பதிவுலகத்திலும் அதிகம் விமர்சிக்கப் பட்ட ஒன்று. அதில் இரண்டாவது நிகழ்வை மட்டும் கொஞ்சம் அ...

சமீபத்தில் இரண்டு மாணவிகளின் தற்கொலை, மீடியாவிலும் பதிவுலகத்திலும் அதிகம் விமர்சிக்கப் பட்ட ஒன்று. அதில் இரண்டாவது நிகழ்வை மட்டும் கொஞ்சம் அலசுவோம்.

தேர்வில் காப்பி அடிக்கிறார் மாணவி. அதைக் கண்டித்தார் ஆசிரியர். உடனே மாணவி தற்கொலை செய்துக் கொள்கிறார். உடனே பரபரப்புக்கு அலையும் மீடியாக்கள் ஆசிரியரை கண்டிக்க தொடங்கி விட்டன. நம் பதிவர்களும் ஆசிரியர் செய்தது மாபெரும் தவறு என்ற ரீதியில் பதிவெழுதி தள்ளி விட்டனர்.

இதையெல்லாம் படிக்கும் பொழுது சமீபத்தில் படித்த கேபிள் சங்கரின் "பொது புத்தி " சிறுகதைதான் நினைவிற்கு வருகிறது. அதில் அழகாய் விவரித்து இருப்பர். ஒரு விபத்து நடக்கிறது . வண்டியை ஒட்டியவன் எந்தத் தவறும் செய்யவில்லை ,வண்டியை ஒட்டியதை தவிர. ஆனால் அங்கிருக்கும் அனைவரும் அவனை அடித்து உதைப்பர், அந்த விபத்தில் சிக்கியப் பெண் நடந்ததை சொல்லும் வரை.

அதுதானே இங்கும் நடக்கிறது. என்ன இங்கு அந்தப் பெண் வந்து விளக்கம் சொல்ல இயலாது. அந்தப் பெண்ணின் தாயார் ஆசிரியரை தண்டிக்க வேண்டும் என்கிறார்.

அவருடைய மகள் செய்த தவறை யாரவது கண்டிக்கிறார்களா ? தேர்வில் காப்பி அடிப்பது சரி என்ற மனநிலைக்கு நாம் மாறி விட்டோமா ?? குறைந்த பட்ச ஒழுக்கங்கள் நம் குழந்தைகளுக்கு சொல்லி தருகிறோமா ?? எப்படியாவது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் நம் பிள்ளைகள் , அதைதானே நாம் விரும்புகிறோம்.

நம் பிள்ளைகளிடம் அன்றாடம் பேசுகிறோமா ? பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்கிறோமா ? அம்மா,அப்பா இருவரும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம் . பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்குதான் இதை செய்கிறோம் என்றாலும், நிகழ்காலத்திலும் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

இப்பொழுது அழுது புலம்பும் தாய், அந்தப் பெண்ணிடம் அன்றாடம் பேசி இருந்தால், பள்ளியில் நடந்ததை தெரிந்து கொண்டிருந்தால் இந்தத் தற்கொலை நிகழ்ந்து இருக்காது. பெரிய பள்ளியில் சேர்ப்பதும், காலாண்டுக்கு ஒருமுறை பெற்றோர் மீட்டிங்கில் சென்றுக் கலந்து கொள்வது மட்டுமே உங்கள் பணி அல்ல .


தினமும் மாலையில் உங்கள் பிள்ளைகளுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். அன்றுப் பள்ளியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள். இது பல விதங்களில் பின் உதவும். இதை பழக்கி விட்டால் உங்களை நண்பராகத்தான் அவர்கள் பார்ப்பார்கள், பெற்றோர்களாக அல்ல. இப்படி செய்தால் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் எதையும் மறைக்கவும் மாட்டார்கள் .

அந்த ஆசிரியர் இப்பொழுது மாற்றப்பட்டு இருக்கிறார் . இதன் மூலம் மற்ற ஆசரியர்களுக்கு சொல்லப்படும் செய்தி என்ன ?? யார் காப்பி அடித்தாலும் கண்டுகொள்ளாதே . உன் கடமையை செய்தால் நீ தண்டிக்கப் படுவாய் என்பது தானே . இனி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்வார்களா ??

அன்புடன் எல்கே

54 கருத்துகள்

Unknown சொன்னது…

எனக்கென்னமோ சரியா புரிதலை ஏற்படுத்தாததே காரணம் என்று நினைக்கிறேன்

geetha santhanam சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் LK. அப்பா அம்மாவிடம் இருக்கும் பயம்தான் தற்கொலைக்குத் தூண்டியிருக்கும். நான் பள்ளியில் படித்த போது ஆறாம் வகுப்பு மாணவி இதே காரணத்திற்காக ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஒரு நண்பன் போல் பழகி நம்பிக்கை அளிக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெறும் பந்தயக் குதிரைகளாகப் பிள்ளைகளைப் பார்க்கக் கூடாது. மீடியாக்களும் செய்திகளுக்குத் தக்க அளவே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

raji சொன்னது…

அவசியமான பதிவு

பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருத்தல்
மிக அவசியம்.அதை விடுத்து ஆசிரியரை
குற்றம் சுமத்துதல் பிள்ளைகளை ஒழுக்கம் தவற வைக்கும்.

தங்களின் "முழுவதும் நீயே" என்ற படைப்பு
எனது டாஷ் போர்டில் டிஸ்ப்ளே ஆகிறது.ஓப்பன் ஆகவில்லையே

எல் கே சொன்னது…

@raji

ingap parunga

http://kavisolaii.blogspot.com/2011/02/blog-post_14.html

settaikkaran சொன்னது…

கார்த்தி...வாழ்த்துகள். இது போல எழுதுகிற துணிச்சல் எனக்கில்லாமல் போயிற்றே என்று எண்ண வைத்த இடுகை. பொத்தம்பொதுவாக குற்றம் சாட்டி ஆசிரியர்கள் மத்தியில் ஒரு பெரிய பீதியையே ஊடகங்கள் ஏற்படுத்தி விட்டனவோ என்று தோன்றுகிறது எனக்கு.பாராட்டுக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

சரியான பதிவு எல்.கே..
உண்மைதான்... இப்போதெல்லாம் தவறு செய்தவர்களை ஆசியர்கள் கண்டிக்ககூடாது என்ற எண்ணம் எல்லாரிடத்திலும் வந்தாச்சு. சும்மாவே கல்லூரிகளில் கண்டிப்பு என்பது இல்லவேயில்லை. இப்ப பள்ளிகளிலும் வந்தாச்சு... அப்புறம் எப்படி ஒழுக்கம் என்பது பிள்ளைகளிடம் வரும்...

Pranavam Ravikumar சொன்னது…

Nalla Padhivu... Vaazhthukkal!

பெயரில்லா சொன்னது…

>>> இது சற்று சென்சிடிவ் ஆன விஷயம் வேறு. இதனால் ஜாதி பிரச்சனைகள் கூட தலை தூக்குகின்றன.

பத்மநாபன் சொன்னது…

குழந்தைகளுக்கு பெற்றோருக்கும் உள்ள இடைவெளி ...குழந்தைகளின் மிது மிஞ்சிய எதிர்பார்ப்பு...இவைதான் குறைந்த பட்ச ஒழுக்கம் கூட இல்லாமல் குழந்தைகள் வளர்கின்றன...தப்பித்தால் தப்பில்லை எனும் மனோபாவம் ஒழிய வேண்டும்...

யாசவி சொன்னது…

கேபிள் கூட எழுதியிருக்கிறார். ஆனால் யாரிடமும் முழுவிவரம் இல்லை

எல்லாமே ஹிண்ட் டெவலப்மெண்ட் மட்டும்தான் இல்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சரியா சொல்லியிருக்கீங்க எல்கே!

கோலா பூரி. சொன்னது…

இதில் இரண்டு பிரிவிலும் தவறு இருப்பதாகத்தான் படுகிரது. குழந்தைகளை மற்றவர்களுடன் கம்பேர் பண்ணி பேசுவதை பெரியவர்கள் விடவேண்டும். ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு இதமாக நடந்து கொள்ளவும் வேண்டும்.

சுசி சொன்னது…

:(

ஸ்ரீராம். சொன்னது…

எனக்கும் இந்த செய்தியைப் பார்த்த போது இதே எண்ணங்கள் தோன்றின. மிக அநியாயமான விஷயம் ஆசிரியருக்கு தரும் தண்டனை. பள்ளிகளில் மாணவர்களுக்கு எழுத்தறிவிக்க ஆரம்பிக்குமுன் முதலில் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் போதிக்க வேண்டும்.

எல் கே சொன்னது…

@விக்கி உலகம்

ஆமாம். புரிதல் இல்லை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

:(

எல் கே சொன்னது…

@கீதா சந்தானம்
ஹ்ம்ம் . என் அம்மாவிற்கு பாடம் தெரியாவிட்டாலும் அவர்களிடம் அன்று என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும். இன்று வீட்டிற்கு வந்தால் தொல்லை காட்சிதான் அனைத்து வீடுகளிலும் .

எல் கே சொன்னது…

@ராஜி
இது தன் குற்றத்தை அடுத்தவர்கள் மேல் சுமத்தும் மனநிலை

எல் கே சொன்னது…

@சேட்டை
நன்றி. ஊடங்கங்கள் மட்டுமல்ல ,பதிவுலகமும் இதைதான் செய்கிறது. உணர்ச்சிவசப்பட்டு எழுதுவது இப்பொழுது அதிகம் ஆகி விட்டது

எல் கே சொன்னது…

@குமார்
சரியா சொன்னீங்க. நான் படித்தக் கல்லூரியைப் பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதறேன். இப்ப எப்படி இருக்குனு தெரியலை .

எல் கே சொன்னது…

@ரவி
நன்றி

எல் கே சொன்னது…

@சிவகுமார்
ஒரு சிக்கலான விஷயத்தை மேலும் மேலும் சிக்கலாகவே ஊடங்கங்கள் முயல்கின்றன.

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து விலகி விட்டனர் என்று நினைக்கிறேன் அண்ணா. அப்பா அம்மாவுடன் செலவிடும் நேரம் மிக மிக குறைந்து விட்டது

எல் கே சொன்னது…

@யாசவி
முதல் வருகைக்கு நன்றி. முழு விவரங்கள் வெளியிட வேண்டியது ஊடகங்களின் கடமை. அவற்றை அவைகள் ஒழுங்காக செய்கிறதா ? பரபரப்பு செய்திகள்தான் வெளியிட முனைகின்றன. இங்கு சிவகுமார் சொன்னது போல், இதை ஜாதி ,வர்க்க பிரச்சனை ஆக்கவும் சிலர் உள்ளனர்.

எல் கே சொன்னது…

@ராம்சாமி
நன்றி சார்

@கோமு
ஒரு சில தவறுகளுக்கு கண்டித்துதானே ஆக வேண்டும்

ஸாதிகா சொன்னது…

சரியான நெத்தியடிப்பதிவு.பிடியுங்கள் பூங்கொத்தினை.

ADHI VENKAT சொன்னது…

அன்று நடந்த நிகழ்வுகளை பெற்றோரிடம் குழந்தைகள் சொல்ல வேண்டும். பெற்றோரும் அப்படி நடந்து கொள்ள வேண்டும். தவறு செய்வதை கண்டிக்க ஆசிரியருக்கும் உரிமை இருக்கிறது.

GEETHA ACHAL சொன்னது…

சரியாக சொன்னீங்க...ஒழுக்கம் மிகவும் அவசியம்...

காப்பி அடிப்பது கண்டிப்பாக நல்லது கிடையாது...ஆனா இந்த காலத்தில் தான் நல்லதுக்கு காலமே கிடையாது...

சென்னை பித்தன் சொன்னது…

சரியான பார்வை!

Priya சொன்னது…

//தினமும் மாலையில் உங்கள் பிள்ளைகளுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். அன்றுப் பள்ளியில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள். இது பல விதங்களில் பின் உதவும். இதை பழக்கி விட்டால் உங்களை நண்பராகத்தான் அவர்கள் பார்ப்பார்கள், பெற்றோர்களாக அல்ல. இப்படி செய்தால் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் எதையும் மறைக்கவும் மாட்டார்கள்.//...மிக சரியா சொல்லி இருக்கிங்க எல்.கே.

Unknown சொன்னது…

சமீப காலமாக பெண்கள் சம்பந்தமாக நிறைய பரப்பரப்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் நிறைய, பெண்கள் காரணமாக வந்தாலும் நீங்கள் சொன்னது போல் அந்த பொது புத்தி அவர்களின் தவறை மீடியாக்கள் மறைத்துவிடுவதால் அவர்கள் திருந்துவதில்லை. ஆண்-பெண் யார் தவறு செய்தாலும் பாரபட்சம் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் என்ற ஒரே காரணத்தால் அவரை ஆதரிப்பது தவறு.

Asiya Omar சொன்னது…

ஆமாம் எல்.கே,என்ன செய்வது தகுந்த விசாரணைக்கு பின் விடுதலை கிடைக்கும்,இப்ப உள்ள சூழல்,ஆசிரியர்கள் மாணவர்களிடம் பயந்து நடப்பது போல் ஆகிவிட்டது.

Chitra சொன்னது…

I think, the parents and teachers should come together for a better understanding in bringing up the children.

Anisha Yunus சொன்னது…

சரியா சொன்னீங்ண்ணா. செய்த தவறு மாண்வையினுடையது. அதை விட தவறு அவள் எடுத்த முடிவு. கொஞ்சம் உக்கார்ந்து +ve ஆக முடிவெடுத்திருந்திருக்கலாம். ஆசிரியர் மேல என்ன தப்பிருக்க முடியும், அவர் உபயோகித்த வார்த்தைகள் என்னன்னு நமக்கு தெரியாது, அப்படி அந்தளவு கொடூரமான வார்த்தைகளை உபயோகித்திருந்தால் அவரை கண்டிக்கலாம். மத்த 2 கேஸ்ல நடந்தமாதிரி எதுவும் இல்லையே. இந்த காலத்து பிள்ளைங்களுக்கு ஈகோ, சுய கௌரவம் இருக்கற அளவிற்கு பகுத்தறிவும் பொறுமையும் இல்லை. வேறேன்ன சொல்ல...

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

விழிப்புணர்வு ஊட்டும பதிவு.

Anisha Yunus சொன்னது…

கீதா சந்தானம் அவர்களின் கருத்தும் சரியே..!! I repeat!!

ஹேமா சொன்னது…

சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்லி முடித்திருக்கிறீர்கள் எல்கே !

குறையொன்றுமில்லை. சொன்னது…

பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் நல்ல புரிந்துகொள்ளல் இருந்தால் பிரச்சினையே இல்லை.
எந்த விஷயம் பற்றியும் பெற்றவர்களுடன் மனம் விட்டுப்பேசும் ஃப்ரீ நெஸ் இருந்தால் நல்லா இருக்கும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

நெத்தி அடி Post... இந்த நியூஸ் படிச்சப்ப எனக்கும் இதே தான் தோணுச்சு... சரியான விசாரணை இல்லாம இது போல வர்ற தீர்ப்புகள் ரெம்ப அநியாயம்... இனி காப்பி அடிப்பதை தடுக்கும் தைரியம் ஆசிரியர்களுக்கு குறையும்... இது இளைய சமுதாயத்திற்கு ஆசிரியர்கள் மேல் உள்ள பயத்தை இல்லாமல் செய்யும் (இப்பவும் இல்லைங்கறது வேற விஷயம்). இது நல்லதுக்கு இல்லைனு மட்டும் தோணுது

புருனோ Bruno சொன்னது…

அருமையாக எழுதியுள்ளீர்கள்

வாழ்த்துக்களும், நன்றியும்

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா, இன்றைக்கு பாதிக்கப் பட்டவருக்கு சப்போர்ட் பண்ணனும்னு பண்றாங்களே ஒழிய எது சரி எது தவறுன்னு பார்க்க மாட்டேங்கறாங்க

எல் கே சொன்னது…

@சாதிகா

ரொம்ப நன்றிக்கா

எல் கே சொன்னது…

@ஆதி

அதுதான் இப்ப பிரச்சனை. ஆசிரியர்களுக்கு அந்த உரிமை தர மறுக்கிறோம் இப்பொழுது. அவர்களை பாடம் எடுக்கும் நபராக மட்டுமே பார்க்கிறோம்

எல் கே சொன்னது…

@கீதா ஆச்ச்சல்

அது சரி. நல்லதுக்கு இப்பலாம் யார் மதிப்புத் தராங்க ??

எல் கே சொன்னது…

@பித்தன்

நன்றி சார்

@ப்ரியா
நன்றி

எல் கே சொன்னது…

@விஜயன்

ஹ்ம்ம் நீங்கள் இப்படி ஒரு கோணத்தில் பார்க்கிறீர்கள். அலுவலகத்தில் கூட பெண் ஊழியரை கண்டு பயப்படும் நிலைமை உள்ளது.

எல் கே சொன்னது…

@ஆசியா

ஆனாலும் இப்ப அவரை மாற்றல் செய்து இருப்பது தவறு சகோதரி

எல் கே சொன்னது…

@சித்ரா
சரியா சொல்லி இருக்கீங்க

எல் கே சொன்னது…

@அன்னு

இந்த மாதிரி விவகாரங்களில் அவர் என்ன சொன்னார் என்பது வெளியில் வருவது இல்லை. அதுதான் பிரச்சனை. நன்றி

எல் கே சொன்னது…

@திருமதி ஸ்ரீதர்

நன்றிங்க

@ஹேமா

நன்றி சகோ

இளங்கோ சொன்னது…

நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ஒரு கணத்தில் திசை மாறும் முடிவுகள், தற்கொலையை நோக்கிச் செல்கின்றன.

சுந்தரா சொன்னது…

மிக அவசியமான பதிவு கார்த்திக். பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படும் புரிதல் இடைவெளியே இதற்கெல்லாம் காரணம்.

//இதன் மூலம் மற்ற ஆசரியர்களுக்கு சொல்லப்படும் செய்தி என்ன ?? யார் காப்பி அடித்தாலும் கண்டுகொள்ளாதே . உன் கடமையை செய்தால் நீ தண்டிக்கப் படுவாய் என்பது தானே //

அதேதான்...

பாவம் ஆசிரியர்கள்.

vanathy சொன்னது…

very good post. Parents involvement is a must.

RVS சொன்னது…

இப்பெல்லாம் ஆசிரியர்கள் அவர்கள் ஒழுக்கத்தில் சரியாக இல்லை என்பது பொதுக் கருத்து. அரிதாக ஒன்றிரண்டு பேர் மதிக்கும்படி இருக்கிறார்கள். அதனால் மரியாதை குறைந்துவிட்டது. மாதா பிதா குரு தெய்வம் கான்செப்ட் போய் ரொம்ப நாள் ஆச்சு எல்.கே!!!! ;-)