பிப்ரவரி 10, 2011

முடிவு

அன்றுக் காலையில் இருந்தே அவளது மனம் குழம்பிக் கொண்டிருந்தது. தான் செய்வது சரியா , தான் எடுத்த முடிவு சரியா என்றுப் புரியாமல் சில காலமாய் குழம்பிக் கொண்டிருந்தாலும், அன்று அவளின் குழப்பம் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது. அதைப் பற்றி யாரிடம் பேசுவது என்றும் புரியவில்லை அவளுக்கு. தான் எடுத்த முடிவு தன் அக்கம்பக்கத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகும் என்று தெரிந்தாலும் அதன் விளைவுகள் எத்தனை தூரம் இருக்கும் என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.

முதலில் எதோ ஒரு துணிச்சலுடன் ஒத்துக் கொண்டவள் , பின் அது சம்பந்தமான விஷயங்களைப் படித்தப் பின் குழப்பம் அடையத் துவங்கினாள். தான் செய்யவிருக்கும் செயலின் விளைவுகள் எத்தகையதாய் இருக்கும் ? யோசிக்க யோசிக்க அவளுக்கு குழப்பமே மிஞ்சியது .

குழப்பத்தில் என்ன சமைத்தோம்,என்ன சாபிட்டோம் என்றுக் கூடத் தெரியாமல் அமர்ந்து இருந்தவளை வாசலில் கதவு திறக்கும் ஓசை உலகுக்குத் திருப்பியது . அவளின் அடுத்த வீட்டுத் தோழி கமலா வீட்டிற்குள் அழுது வீங்கியக் கண்களுடன் நுழைந்தாள்.

"என்னக்கா ஆச்சு? "

"புதுசா என்ன ஆகப் போது? பொழுது விடிஞ்சு பொழுது போனா , வழக்கம்போல ஆரம்பிச்சுடுவாங்க எங்க வீட்ல . அதே பிரச்சனைதான் ."

"என்ன குழந்தை இல்லைன்னு மறுபடியும் பிரச்சனையா ? "

"அதேதான் கலா. நான் என்னடி பண்ண? குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க . தத்து எடுக்க நாங்க ரெடியா இருந்தாலும் என் மாமியாரும், மாமனாரும் தயாராய் இல்லை . வேறு ஏதாவது வழி இருக்கானும் எனக்குத் தெரியலை . தினம் தினம் நரகமாய் போகுது . ஏன்டா பிறந்தோம்னு தோணுது எனக்கு ."

கலா அங்கு குடிவந்தப் புதிதில் இருந்து அவளுக்கு பேச்சுத் துணைக்கும், உதவி செய்வதற்கும் தோழியாய் இருப்பது கமலாதான். கமலாவிற்கும் கலாவை விட்டால் வெறும் யாரும் இல்லை தன் வேதனைகளை சொல்ல. கலாவிடம் மனவிட்டு சிறிது நேரம் பேசினால் கமலாவிற்கு மனம் லேசாகும். எனவே வீட்டில் பிரச்சனைகள் வரும் பொழுது அவள் வீட்டிற்கு வந்து புலம்புவது வழக்கம்.

இன்றும் அதே போன்றுதான். கமலாவிற்கு கர்ப்பப் பையில் பிரச்சனை இருப்பதால் குழந்தை பிறக்க வாய்ப்பு மிகக் குறைவு என்றும், குழந்தை பெறுவது அவள் உடலுக்கு நல்லது அல்ல என்றும் டாக்டர் கூறி விட, பழமையில் ஊறிய அவளது மாமியாரும் மாமனாரும் தத்து எடுக்கவோ மற்ற முறைகளை உபயோகிக்கவோ விரும்பவில்லை.

அவளுக்கு ஆறுதலாய் வார்த்தைகள் கூறி அனுப்பியப் பின் கலாவின் மனது தெளிவடைந்து இருந்தது. குழந்தை இல்லாத தம்பதியருக்கு தன்னால் ஆன உதவியாய் அவர்கள் கருவை சுமக்க இருக்கும் வாடகைத் தாயாய் செல்வதை நினைத்து மகிழ்ச்சியே இருந்தது அவளிடம். தன்னால் கமலாவிற்கு உதவ இயலவில்லையே என்ற சிறு வருத்தம் மட்டும் உறுத்தியது .

சமூகம் என்ன சொல்லும் என்ற பயம் விலகி விட்டது அவளுக்கு . குழந்தை இல்லா ஒரு பெண்ணுக்கு தான் செய்யும் உதவிக்கு யார் என்ன சொன்னாலும் கவலைப் படத் தேவை இல்லை என்று முடிவு செய்தாள்.

இந்தக் கதை வல்லமை தளத்தில் வந்துள்ளது.


அன்புடன் எல்கே

35 கருத்துகள்:

S Maharajan சொன்னது…

அருமையான கதை....

சேட்டைக்காரன் சொன்னது…

எதார்த்தமான கதை...! இப்போது சர்வசாதாரணம்...!

ஸ்ரீராம். சொன்னது…

கனமான கரு...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எதார்த்தம். நல்ல பகிர்வு!

சே.குமார் சொன்னது…

எதார்த்தமான கதை...!

RVS சொன்னது…

கதையின் கரு நன்றாக இருந்தது. ;-)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையா இருக்கு...

Balaji saravana சொன்னது…

நைஸ் :)

சுசி சொன்னது…

வாழ்த்துகள் கார்த்திக்.

நல்ல கதை/கரு.

கோவை2தில்லி சொன்னது…

எதார்த்தமான கதை.

komu சொன்னது…

கார்த்திக், கதை உலுக்கிவிட்டது. கொஞ்ச நேரம் அந்தபக்கத்தையே பாத்துண்டே இருந்தேன்.காரணம்............................

S.Menaga சொன்னது…

நல்ல கதை!!

raji சொன்னது…

nice

Lakshmi சொன்னது…

கார்த்தி கலக்குரீங்க. ஒருபக்கம் ஜகத்குரு, ஒருபக்கம் நினைவுகள் தொடர்,ஒருபக்கம் சிறுகதை, கவிதையும் ஒருபுறம். எல்லாவற்றையுமே சிறப்பாக கையாள்கிரீர்கள். எப்படி? வாழ்த்துக்கள்.

பத்மநாபன் சொன்னது…

கமலாவின் சென்சிடிவான கதையை கலாவுக்கு சென்சிபிளாக முடித்துள்ளீர்கள்...

Chitra சொன்னது…

nice.

அப்பாவி தங்கமணி சொன்னது…

Sesitive subject...handled well Karthik...very nice..congrats for published in "Vallamai"... :)

ஹேமா சொன்னது…

மிக மிக அழகாக வந்திருக்கு கதை எல்கே !

Porkodi (பொற்கொடி) சொன்னது…

OH!! Kala is not surrogate for Kamala? naan kuzhambiten! =) super LK!

GEETHA ACHAL சொன்னது…

அருமையான கதை...நல்ல எழுத்து நடை...

முடிவு என்ற தலைப்பினை பார்த்தவுடன், நினைவுகள் கதையினை அதற்குள் முடித்துவிட்டிங்களே என்று பயந்தே விட்டேன்...

asiya omar சொன்னது…

நல்ல கதை.

எல் கே சொன்னது…

@மகாராஜன்

நன்றி
@சேட்டை
உண்மை. ஆனால் பலர் வீட்டில் இதுக்கு எதிர்ப்பு உண்டு அதுவும் உண்மை

@ஸ்ரீராம்
நன்றி

@வெங்கட்
நன்றி

@குமார்
நன்றி
@ஆர்வீஎஸ்
நன்றி

@மனோ
நன்றி

@பாலாஜி
நன்றி

@சுசி
நன்றி

@கோமதி
சாரி .....

@கோவை
நன்றி

@மேனகா
நன்றி

@ராஜி
நன்றி

vanathy சொன்னது…

//சமூகம் என்ன சொல்லும் என்ற பயம் விலகி விட்டது அவளுக்கு . குழந்தை இல்லா ஒரு பெண்ணுக்கு தான் செய்யும் உதவிக்கு யார் என்ன சொன்னாலும் கவலைப் படத் தேவை இல்லை என்று முடிவு செய்தாள்.//
நல்ல கருத்தான கதை. ஆனால், இது நடைமுறையில் சாத்தியமாகுமா??? அதுவும் தமிழ் நாட்டில்!!!!

அன்னு சொன்னது…

nalla kathai kaarthinna.kalakkungga. enakku intha concept avlavaa pidikkaathathu, athanaala no comments. but kathai sonna vitham azagu. kalaa vaazkkai paavam. ithu pola innum niraiya per irukkaanga. pch... :(

சென்னை பித்தன் சொன்னது…

இயல்பான நடையில்,நல்ல கரு உள்ள கதை!
(இரண்டு நாள் ப்ளாக் பிரச்சினை இப்பதான் சரியாச்சு)

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
அப்படிலாம் இல்லை. அப்ப மூட் எப்படி இருக்கோ அதை பொறுத்துதான். எஹ்தையும் முன்னே எழுதி வெச்சு போடற வழக்கம் எனக்கு இல்லை (சோம்பேறி)

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
இந்த முரண்பாடுதானே வாழ்க்கை ?? ஒருவருக்கு கஷ்டம் மறுபுறத்தில் இன்னொருவருக்கு லாபம். .

எல் கே சொன்னது…

@சித்ரா
நன்றி

எல் கே சொன்னது…

@அப்பாவி
நன்றி. கொஞ்சம் யோசனையுடந்தான் எழுதினேன்...

எல் கே சொன்னது…

@ஹேமா
நன்றிங்க

எல் கே சொன்னது…

@பொற்கொடி
இல்லை. அவளது தோழிக்கே அப்படி ஒரு நிலை. தான் எடுத்த முடிவு சரி இல்லைன்னு இவ நினைக்கற நேரத்தில் அவள் தோழியின் புலம்பல் இவளை தெளிவுப் படுத்துகிறது

எல் கே சொன்னது…

@கீதா
ஹஹஅஹா இல்லை இல்லை . முடிக்கலை.

@ஆசியா
நன்றி

எல் கே சொன்னது…

@வாணி
நடக்கிறது. இன்னும் அதிக அளவில் ஆரம்பிக்கவில்லை.

எல் கே சொன்னது…

@அன்னு
அதனால் என்ன ? இதில் வரும் கமலாவை போல் சிலரை (எனக்கு நெருங்கியவர்கள் ) நான் அறிவேன். அதன் பின்னணியில் எழுதியதுதான் இந்தக் கதை

எல் கே சொன்னது…

@பித்தன்

ஆமாம் சார். எனக்கும்தான் பிரச்சனை