Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

காலம் கடந்த ஞானம்

வழக்கம்போல் அன்றும் நடந்த சண்டை சுரேஷிற்கு எரிச்சலையே தந்தது . அவன் வயது சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதையே சொர...

வழக்கம்போல் அன்றும் நடந்த சண்டை சுரேஷிற்கு எரிச்சலையே தந்தது. அவன் வயது சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதையே சொர்க்கமாக என்ன அவனோ வீட்டிற்கு வெளியில் இருப்பதையே வரமாக எண்ணினான்.

ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அவன் வீடும் சொர்க்கமாகதான் இருந்தது. எதோ ஒரு சிறுப் பிரச்சனையில் துவங்கிய அவனது பெற்றோரின் சண்டை நீடித்துக் கொண்டே செல்ல பலியாகியது சுரேஷ்தான். அவனளவில் எதோ சண்டை என்று மட்டுமே புரிந்தது. அவனின் பதிமூன்று வயதிற்கு அதற்கு மேல் எட்டவில்லை.

வீட்டிற்கு வந்தால்  இருவரும் இவனிடம் பேசாமல் இருப்பதும் , வெளியில் எங்கும் அவனை அவன் தந்தை அழைத்து செல்லாமல் இருப்பதும் அவனுக்கு சோகத்தை உண்டுபண்ணியது.

அன்று அப்படிதான் , அவன் அம்மாவிடம் "அம்மா ! வெளில போலாமா ? நாம எல்லாரும் சேர்ந்து வெளில போய் எவ்ளோ நாளாச்சு ?" கேட்டவனுக்கு கோபம் தெறிக்க பதில் வந்தது ராணியிடம் இருந்து, ,"அது ஒண்ணுதான் குறைச்சல் . போடா போய் படிக்கற வழியப்  பாரு. படிச்சு முடிச்சா கம்ப்யூட்டர்ல கேம் விளையாடு. நேரம் காலம் தெரியாம வந்து தொந்தரவு பண்ணிக்கிட்டு" .

முகத்தை தொங்கப் போட்டுக்கிட்டு வெளியில் வந்த சுரேஷ் , தினேஷிடம் மீண்டும்  அதேக் கேள்வியை கேட்க அட்சரம் மாறாமல் ராணி சொன்ன அதே பதில் வந்தது.

வாடிய முகத்துடன் வந்தவன் டிவியை ஆன் செய்து கார்ட்டூன் சேனல்களை மாற்றிக் கொண்டு வந்தான். எதுவும் பிடிக்காமல் எதோ ஒரு அழுகை மெகாத் தொடரை பார்க்கத் துவங்கினான். அதில் வந்தக் காட்சி அவன் மனதில் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது, அன்று ஒரு முடிவுடன் படுக்க சென்றான்.

மறுநாள் உடல்நிலை சரியில்லை என்று சொல்லி பள்ளிக்கு செல்லவில்லை . ராணி கொடுத்த மாத்திரையை போட்டுக் கொண்டு தூங்குபவன் போல் நடித்தான்இருவரும் அலுவலகம் செல்லும் வரைக் காத்திருந்தவன் , பின் எழுந்தான். தன் பள்ளி பையில் இருந்து நோட்டை எடுத்தவன் எதையோ எழுதினான். அவன் மனதில் முதல்நாள் பார்த்த சீரியல் நினைவிற்கு வர எழுதிய நோட்டை ஹாலில் வைத்துவிட்டு அபார்ட்மென்ட்டின் மாடியை நோக்கி செல்லத் துவங்கினான்.

ஒரு வாரம் கழித்துபுகைப்படமாய் காட்சி அளித்துக் கொண்டிருந்த சுரேஷின் முன் தினேஷும் ராணியும் இனி சண்டைப் போட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

டிஸ்கி 1 :  இது வல்லமையில் வெளிவந்துள்ளது.
டிஸ்கி 2 : உரிமையில்லை..கவிதை  வார்ப்பு இணையத் தளத்தில் வெளியாகி உள்ளது
அன்புடன் எல்கே

37 கருத்துகள்

Chitra சொன்னது…

உங்கள் எழுத்து நடை, நன்கு மெருகேறி உள்ளது.... இணையத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

கருத்துள்ள கதை நன்று.

எழுத்துப் பிழைகளை சரிசெய்யுங்கள்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

கடைசி பத்தியைப் படித்து கொஞ்சம்
அதிர்ந்து போனேன்.சம நிலைக்கு வர
கொஞ்சம் நேரமானது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

middleclassmadhavi சொன்னது…

காலம் கடந்த ஞானம்!

பத்மநாபன் சொன்னது…

குழந்தைகள் முன்பு பெரியவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதும் .... இந்த முட்டாள் தொலைக்காட்சி தொடர்கள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதும் காலம் கடந்த ஞானம் தான் ...
...

raji சொன்னது…

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.

இணையத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்

கோலா பூரி. சொன்னது…

கடைசி பாரா மனதைக்கலக்கிவிட்டது. தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள் குழந்தை
கள் மனதை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன. பெரியவர்களும் குழந்தைஅகளுக்கு முன் தங்கள் கோப தாபங்களைக்காட்டாமல் இருக்க முயற்சி செய்யனும். இப்ப பாதிப்பு யாருக்கு?

enrenrum16 சொன்னது…

கதையின் முடிவு பகீர்னு இருக்கு :(..ஆனால் இது போல் நிஜமாவே அங்கங்க நடந்துதுன்னு கேள்விப்படும்போது மனதுக்கு கஷ்டமாயிருக்கும்... இதை கதை என்று சொல்வதை விட பெற்றோருக்கு ஒரு முன்னெச்சரிக்கை எனலாம். பகிர்வுக்கு நன்றி.

வலையில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

கார்த்தி, அருமையான கதை. 13-வய்சு
என்பது டீன் ஏஜ் ஆரம்பம். அந்தக்குழந்தைகளிடம் எவ்வளவு ஜாக்கிரதையுடன் இருக்கனும்னு ஏன் பெத்தவங்களுக்கு புரிவதே இல்லை. இப்போ வருத்தப்பட்டு என்ன யூஸ்?

எல் கே சொன்னது…

@சித்ரா
நன்றி

@கலாநேசன்
நன்றி நண்பரே. சரி செய்துவிட்டேன்

எல் கே சொன்னது…

@ரமணி
கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் இது போன்று இன்று நடக்கிறதே

எல் கே சொன்னது…

@மாதவி
ஆமாம்

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
ஆமாம் அண்ணா. குழந்தைகளை மிக மிக கவனமாகக் கையால வேண்டும். இல்லையேல் இப்படிதான்

எல் கே சொன்னது…

@ராஜி
உண்மை

எல் கே சொன்னது…

@கோமதி
என்னதான் சண்டைகள் இருந்தாலும், குழந்தைகள் முன் வெளிக் காட்டக் கூடாது. அதுதான் முக்கியம்

எல் கே சொன்னது…

@என்றென்றும்
எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அன்று படிப்பறிவில்லாத பெற்றோர்கள் குழந்தைகளை அருமையாக வளர்த்தனர் . ஆனால் இன்று ?

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
உண்மைமா. பத்து வயதுக்கு மேல் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்

ராமலக்ஷ்மி சொன்னது…

விழிப்புணர்வைக் கோரும் கதை. வார்ப்பில் கவிதையும் நன்று. வாழ்த்துக்கள் எல் கே.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாழ்த்துக்கள் மக்கா வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூப்பர் பதிவு...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஒன்றுமறியா குழந்தைகளுக்கு சில வேண்டாத விஷயங்களை கத்துக்கொடுக்கறதே இந்த தொல்லைக்காட்சிதான்..

ஸ்ரீராம். சொன்னது…

பெற்றோர்கள்/பெரியவர்கள் தங்கள் சண்டையில் குழந்தைகளை நினைப்பதில்லை. வார்ப்பு தளத்தில் கவிதை வந்ததற்கும் பாராட்டுக்கள்.

சுசி சொன்னது…

வாழ்த்துகள் கார்த்திக்.

ADHI VENKAT சொன்னது…

கருத்துள்ள கதை. பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிய வைக்கிறது. வாழ்த்துக்கள்.

vanathy சொன்னது…

super. continue..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வல்லமை இணைய இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்!! பலன் பூஜ்யம் : (

எல் கே சொன்னது…

@ராமலக்ஷ்மி
நன்றி மா


@மனோ
நன்றி மக்கா


@சாரல்
அதேதான் சகோ. ஒரு அளவுக்கு மீறினால் இப்படிதான்

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

ஆமாம் அண்ணா .

@சுசி
நன்றி

@கோவை
ஆமாம் சகோதரி நன்றி


@வாணி
நன்றி

@வெங்கட்
நன்றி நண்பா

Menaga Sathia சொன்னது…

நல்ல கதை!! வாழ்த்துக்கள்!!

GEETHA ACHAL சொன்னது…

நல்லா இருக்கின்றது...

நல்ல கதை...

எல் கே சொன்னது…

@மேனகா
நன்றி

@கீதா அச்சில்
நன்றிங்க

Asiya Omar சொன்னது…

முடிவு இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கலை.அருமை.

Vidhya Chandrasekaran சொன்னது…

வாழ்த்துகள் LK. கதை நன்றாக இருக்கிறது.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Nice story Karthik. Very true, these days TV serials very badly influencing not only elders but also kids.... enga poi mudiyumo?

Congrats for got published too...:)

எல் கே சொன்னது…

@ஆசியா
சில சமயம் அதிர்ச்சி முடிவு அவசியம் ஆகிறது

@வித்யா
நன்றி

@அப்பாவி
சில சமயம் நம் கையில் இருக்கும் பொழுது பொருளின் மதிப்புத் தெரியாது .நன்றி

Jaleela Kamal சொன்னது…

nalla kruththuLLa kathai

vaazththukkaL

Jaleela Kamal சொன்னது…

naam thaan sariyaana vazikaaddiyaaka irukkanum.