பிப்ரவரி 06, 2011

அப்பா

" தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். "

இந்தக் குறளுக்கு ஏற்ப நான் வாழ்வில் முன்னேற அடித்தளம் அமைத்து தந்த எனது தந்தைக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் . 

நம் அனைவருடைய வாழ்விலும்  தந்தை ஆற்றும் பங்கு அளவிட முடியாது. ஆனால் நம்மில் எத்தனை பேர் அதை வெளிப்படையாக சொல்லுகிறோம் அல்லது காட்டுகிறோம் ? தாய் பாசத்தைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை. தந்தை பாசத்தை எத்தனை பேர் எழுதி உள்ளனர் ??

பொதுவாக , குழந்தைப் பிறந்தப் பின் குடும்பத்தின் செலவுகள் அதிகரிக்கும். அதை சமாளிக்கவும், தன் குழந்தைக்கு ஒரு வளமான எதிர்காலத்தை அமைக்கவும் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டிய ஒரு கட்டாயம் தகப்பனுக்கு உள்ளது. இருவரும் வேலைக்கு சென்றாலும் , பொருளாதாரம் சரி இல்லையென்றால் தகப்பனை (குடும்பத் தலைவனை ) குறை சொல்லுவோர் இன்றும் அதிகம் உள்ளனர். இதன் காரணமாகவே அவன் தன் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியாத நிலையில் இருப்பான்.
அதனால் பாசம் இல்லை என்று சொல்ல முடியுமா ?? தன் மகள் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்லும் பொழுது கண்கலங்கும் எத்தனையோ தந்தைகளைப் பார்த்திருக்கிறேன்.பாசத்தை நெஞ்சுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு குடும்பத்தின் வளமான எதிர்காலத்திற்காக உழைக்கிறான் அவன். 

இது போன்ற தந்தைதான் எனக்கும் . அவர்  பி யூ சி, முடித்தப் பின் , மேற்கொண்டு படிக்க ஆசை . ஆனால் குடும்பத்தின் நிலை மேல் கொண்டு படிக்க இயலவில்லை. அப்பொழுது அரசாங்க அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்கள் நெறையப் பேர் இருந்தனர். அப்படி பத்திரப் பதிவு அலுவலகத்தில் கொஞ்ச நாள் வேலை செய்து கொண்டே வேறு வேலை தேடி வந்தார்.

இடையில் குடும்பத்திலும் பிரச்சனைகள். வங்கியில் வேலைக்கு அப்ளை செய்துவிட்டு காத்திருந்த நேரம் , எனது தாத்தாவின் எதிர்பாராத திடீர் மரணம். அப்பொழுது எனது தந்தைக்கு நிரந்தர வேலையும் இல்லை அதிக உலக அனுபவமும் இல்லை. விதி எனது தந்தை வாழ்வில் நன்றாக விளையாடிய நேரம் அது. எந்த வங்கி வேலைக்கு அப்ளை பண்ணியிருந்தாரோ அந்த வேலையில்  உடனடியாக சேர ஆர்டர் வந்தது ஆனால் இங்கோ அவரது தந்தை மறந்து முழுதாக இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. அந்த வேலையும் கை நழுவிப் போக, குடும்பத் தொழிலுக்கு வந்தார்.

சேலம் செவ்வாய்பேட்டையில்  சிறிய மெஸ். இதுதான் எங்கள் குடும்பத் தொழில். எதோ கல்லாப்பெட்டியில் அமர்ந்து காசு வாங்கிப் போடுவது இல்லை, விறகு அடுப்பின் சூட்டில் காலை மூன்று  மணி ,மாலை மூன்று மணி நேரம்  நின்றாக வேண்டும். கடைக்கு செல்லும்முன் வீட்டில் அதற்கு தேவையான பொருட்களை (சட்னி, சாம்பார் ,மாவு ) வீட்டில் தயார் செய்தாக வேண்டும். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால்தான் , காலை ஏழு மணிக்கு கடை ரெடி ஆகும் .அவருடன் கடையில் ஒருவர் மட்டுமே ,இன்றுவரை.


அடுப்பின் சூட்டில் வந்துதான் எங்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார் எனது தந்தை. தன்னால் படிக்க முடியாமல் போனதை, என்னையும் எனது அக்காவையும் படிக்கவைத்து சாதித்துக் கொண்டார்.

என் தந்தையிடம் நான் கற்றுக் கொண்டது நெறைய. கிரிக்கெட், அரசியல், ஆன்மிகம் ,புத்தகம் வாசிக்கும் பழக்கம் அனைத்துக்கும் அவர்தான் எனது முதல் குரு. அவரிடம் இருந்து இன்னும் என்னால் கற்றுக் கொள்ளமுடியாத ஒன்று கோபத்தை தவிர்ப்பது.  பொது இடங்களில் அவர் அதிகம் கோபப்பட்டு பார்த்தது இல்லை. அவர் கோபத்தை தூண்ட பலர் முயன்றும் நிதானம் இழந்தது இல்லை.

ஒரு விஷயத்தை எப்படி திட்டமிட்டு செய்துமுடிப்பது என்வதை அவர் கோவிலை எடுத்துக் கட்டியபொழுது கற்றுக் கொண்டேன். இடிந்து பாழடைந்து கிடந்தக் கோவிலை திரும்ப புனர் நிர்மாணம் செய்து இன்று செவ்வாய்பேட்டையில் அதுவும் ஒரு முக்கியக் கோவிலாய் விளங்க இவரும் ஒரு காரணம். ஆனால் அதை நிர்வகித்தப் பொழுது எத்தனை அவதூறுக்கு ஆளானார் ? எத்தனை அவச் சொற்கள் வந்தன ? நாங்கள் கோபப் பட்டாலும் அவர் சொல்லும் ஒரே சொல் " அந்த ஆண்டவனுக்கு உண்மைத் தெரியும் . அவன் பார்த்துப்பான்" .

எங்களை எந்த விஷயங்களிலும் கட்டாயப் படுத்தியது இல்லை. நான் மேல்நிலைப் பள்ளியில் சேரும் பொழுதே சொல்லிவிட்டேன் , பொறியியல் படிக்கப் போவது இல்லை என்று. உன்னுடைய இஷ்டம் , எதை வேணுமானாலும் படி ஆனால், ஒழுங்காப் படி , இது மட்டும்தான் அவர் சொன்னது.

வள்ளுவர் சொன்னது போல் அவர் தன்னுடையக் கடமையை செய்துவிட்டார். திருப்பி நான் செய்ய வேண்டியக் கடமைதான் அப்படியே இருக்கு.

அப்பா ! மீண்டும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்  

அன்புடன் எல்கே

43 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

உங்கள் தந்தைக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். நல்ல பதிவு.

dheva சொன்னது…

அப்பாவுக்கு வாழ்த்துக்களோடு கூடிய எனது அன்பையும் தெரிவியுங்கள் கார்த்திக்!

Ramani சொன்னது…

உங்கள் அன்புத் தந்தைக்கு
எனது இதயம் கனிந்த பிறந் த நாள் வாழ்த்துக்கள்
தங்கள் பதிவின் மூலம்
எங்களுக்குள் எங்கள் தந்தை குறித்த
நினைவுகளை கிளரச் செய்த உங்களுக்கும்
மனங்கனிந்த நன்றி

Chitra சொன்னது…

கண்களில் நீருடன் வாசித்தேன், கார்த்திக்.....
எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களையும் அன்பின் வணக்கங்களையும் தெரியப்படுத்துங்கள்.... அவர்களின் ஆசிர் என்றும் நமக்கு வேண்டும்.

கலாநேசன் சொன்னது…

அப்பாவிற்கு எனது அன்பு வாழ்த்துக்கள்.

raji சொன்னது…

படிக்கும் பொழுதே மனம் நெகிழ்கிறது.
என் தந்தை கூட சிறு வயதிலேயே(7 வயதில்)
அவர் தந்தையை இழந்தவர்.கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து
என் அத்தையின் திருமணம்,குழந்தை பேறு போன்ற
பொறுப்புகளையும் சுமந்து அவர் பையன்கள்,பெண்களான
எங்களையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்தவர்.

தங்கள் தந்தையின் பிறந்த நாளுக்கு
அவரிடமிருந்து நானும் ஆசி பெற விரும்புகிறேன்.
(வாழ்த்த வயதில்லை)

middleclassmadhavi சொன்னது…

நீங்களும் உங்கள் கடமையை அருமையாகச் செய்கிறீர்கள் - 'இவன் தந்தை எந்நோற்றாங்கொல்' என்று உங்கள் அப்பாவுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்களும் உங்கள் தந்தைக்கு வணக்கங்களும்.

Balaji saravana சொன்னது…

என் வணக்கங்களும் எல்.கே!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அப்பாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

ஹுஸைனம்மா சொன்னது…

படிக்க வியப்பாக இருக்கிறது. நீங்களும் தந்தையின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறீர்கள். இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

அப்பாவுக்கு நமஸ்காரங்களும், வாழ்த்துக்களும். அவரைப் போன்ற அப்பா அமையப் பெற வரம் வாங்கியிருக்கிறீர்கள். இப்போ எல்லாம் அம்மா அன்பு போல அப்பா அன்பு பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.பெண் குழந்தைகளுக்கு எப்பவுமே அப்பாதான் முதலில். ஆண் குழந்தைகளிடம் அன்பை வெளிப் படுத்துவதற்கு அப்பாக்களிடம் ஒரு கூச்சம் அல்லது தயக்கம் இருக்கிறது. நம்மைப் போன்றே நாளை அவனும் ஒரு அப்பா ஆகப் போகிறவன் என்று நினைப்போமோ..? அம்மாவிடம் சுதந்திரமாகப் பேசும், பழகும், கொஞ்சும் குழந்தைகள் அப்பாக்களிடம் அந்த அளவு சவுஜன்யம் வருவதில்லையே...ஏன்?

Sriakila சொன்னது…

உங்கள் அப்பாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

சுந்தரா சொன்னது…

நெகிழ்ச்சியான பதிவு கார்த்திக்...

உங்கள் அப்பாவுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்!

Geetha6 சொன்னது…

எல்கே இன்று என் தந்தை பிறந்த நாள் நன்றி ஞாபக படுத்தியதற்கு..
நல்ல பதிவு.நன்றி!!

Rathnavel சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

RVS சொன்னது…

இதைவிட சிறந்த வாழ்த்து சொல்லமுடியாது எல்.கே. உங்கள் தந்தைக்கு என்னுடைய வணக்கங்களும்.. ;-)

! சிவகுமார் ! சொன்னது…

>>> தங்கள் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் எல்.கே. சார்!!

asiya omar சொன்னது…

மிக நல்ல பதிவு.உங்கள் தந்தைக்கு வாழ்த்துக்கள.

asiya omar சொன்னது…

எல்.கே தாய்ப்பாசத்தை விட தந்தைப்பாசம் நிஜமாலுமே மேலானது தான்.இந்த பதிவை இரண்டு முறை வாசித்தாயிற்று.தாய் எப்பவும் வெளிப்படையாக அன்பை காட்டுவது வழக்கம்,தந்தைகள் பாசத்தை மனதில் வைத்து கடமையை நெறி தவறாமல் செய்வதில் வல்லவர்கள்.

ஹேமா சொன்னது…

பெற்றவர்களுக்குப் பிள்ளைகள் எப்படி ஒரு அதிஸ்டமோ அதேபோலவே பெற்றவர்கள் அமைவதும் அதிஸ்டம்தான் எல்கே.அன்பு அப்பாவுக்கு என் வணக்கம் !

பத்மநாபன் சொன்னது…

மகன் தந்தைக் காற்றும் உதவி - இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல் ..... எனும் வள்ளுவனின் வாக்கினுக்கு இணங்க வாழ்ந்து தந்தையின் தவத்தின் பலத்தை நிருபிக்கிறிர்கள்.... அதை இப்பதிவு தெளிவாக சொல்கிறது ... அப்பாவிற்கு உடல்நலத்தோடும் , நீள் ஆயுளோடும் பல்லாண்டு வாழ எல்லா வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள்

S.Menaga சொன்னது…

தங்கள் தந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! இந்த பதிவைபடிக்கும் போது என் அப்பா ஞாபகம் வந்துவிட்டது..

Sethu சொன்னது…

உங்கள் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல மனிதர் நீடூழி வாழ்க. அடுத்த தடவ சேலம் போகும் போது உங்க கடை தேடிப் பொய் சாப்பிட்டு வருவேன்.

எல் கே சொன்னது…

வாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள் நண்பர்களே

எல் கே சொன்னது…

@சித்ரா
மிக உண்மை. அவர்களின் ஆசி இல்லாமல் எதுவும் செய்ய இயலாது


@ராஜி
கிட்டத் தட்ட இதே போன்றுதான் என் தந்தையும் :)


@ஹுசைனம்மா
இன்னும் அந்த அளவுக்கு நான் எதுவும் சாதிக்கவில்லை

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
அண்ணா இப்ப நெறையப் பேர் வெளிப் படுத்த ஆரம்பிக்கறாங்க. எனக்குத் தெரிஞ்சு அம்மாக்கள் எல்லாம் பசங்களுக்கு செல்லம் தருவாங்க. அதை ஈடு செய்ய வீட்டில் ஒருவர் கண்டிப்புடன் இருக்கணும். அது தந்தையின் தோள்களில் விழுகிறது. அதுதான் காரணம் என்று எண்ணுகிறேன் .

எல் கே சொன்னது…

@ஆசியா
மிக சரியா சொன்னீங்க சகோ. மனதில் வைத்து புலம்புவுவோம் எப்பவும் . வேறு வழி இல்லாமல்

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
அண்ணா அந்த அளவுக்கு நான் இன்னும் எதுவுமே செய்யலை.


@சேது
கண்டிப்பா போங்க சார்

VAI. GOPALAKRISHNAN சொன்னது…

”அப்பா”... அப்பப்பா அருமையானதொரு பதிவு. அப்பாவின் கஷ்டங்களை உணர்ந்த அருமையான மகன் நீங்கள்.
தங்கள் அப்பாவுக்கு என் வாழ்த்துக்கள் / நமஸ்காரங்கள்.

அன்னு சொன்னது…

May Almighty bless your father with the best of this world and guidance to live and lead in the right way. Aameen. Ofcourse Every Father is a treasure, and every moment with him is to be cherished and held dear to heart. Convey our heartfelt wishes and respects to him.

Peace,
Annu

Vasagan சொன்னது…

உங்கள் தந்தைக்கு எனது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவியுங்கள் கார்த்திக்.

\middleclassmadhavi said...

நீங்களும் உங்கள் கடமையை அருமையாகச் செய்கிறீர்கள் ... \

உங்களுக்கும் பாராட்டுக்கள்.

Philosophy Prabhakaran சொன்னது…

டெம்ப்ளேட் மாற்றினீர்களா...?

komu சொன்னது…

கார்த்திக் அப்பாவுக்கு பிறந்த நாள் பரிசை அருமையாக கொடுத்திருக்கீங்க.
அப்பா உங்க பதிவு படிப்பாங்களா? படித்தால் கண்டிப்பா உங்க அன்பில் நெகிழ்ந்து போவாங்க.எங்க நமஸ்காரங்களைத்தெரிவிக்கவும்.

Lakshmi சொன்னது…

கார்த்தி, அப்பாவுக்கு எங்க சார்பாகவும் வாழ்த்துக்களையும் வணக்கத்தயும் தெரிவியுங்க. அருமையான பிறந்த நாள் பரிசு. நீங்களும், உங்க அப்பாவும் ரொம்பவே லக்கி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பிறந்தநாள் கண்ட உங்கள் தந்தைக்கு எனது வணக்கங்கள்.

கோவை2தில்லி சொன்னது…

தங்கள் அப்பாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடவும். இதை படித்ததும் மறைந்த என் அப்பாவின் ஞாபகம் வந்து என் மனதை அழுத்துகின்றது.

அமைதிச்சாரல் சொன்னது…

வாழ்த்துக்களும் வணக்கங்களும்..

vanathy சொன்னது…

அப்பா எப்போதும் சூப்பர் தான். அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
கோபத்தை குறைக்கிற வழியைப் பாருங்கோ, எல்கே.

GEETHA ACHAL சொன்னது…

உங்கள் தந்தைக்கு இனிய பிறந்த்நாள் வாழ்த்துகள்...

அப்பாவி தங்கமணி சொன்னது…

Lovely post LK...Really touching... Happy Birthday to Appa...

//தன் மகள் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்லும் பொழுது கண்கலங்கும் எத்தனையோ தந்தைகளைப் பார்த்திருக்கிறேன்//
Such a true statement...I don't think I can get that picture of my mind ever...

எல் கே சொன்னது…

@பிரபாகர்
ஆமாம்

@கோமு
அப்பா கணிணி பக்கமே வர மாட்டார். நான் எழுதுவது கூட தீபாவளி அப்பத்தான் அவர்க்கு தெரியுமே

@லக்ஷ்மி
நன்றிமா

@வெங்கட்
நன்றி

@கோவை
நன்றிங்க

@சாரல்
நன்றி

@வாணி
அதைதான் விட முடியலை.

@கீதா
நன்றி

@அப்பாவி
நன்றி.. என் திருமணத்தின் பொழுதும், என் மச்சினியின் திருமணத்தின் பொழுதும் கண்ணீர் விட்ட என் மாமனார் முகம் இன்றும் என் நினைவில் இருக்கு

thirumathi bs sridhar சொன்னது…

தாமதமாக படித்துள்ளேன்,எனது வாழ்த்துக்களும்,நமஸ்காரங்களும்

அகநாழிகை சொன்னது…

இப்போதுதான் வாசிக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி. அருமையான பதிவு.