பிப்ரவரி 08, 2011

நினைவுகள் 9

அவர்களும் பேருந்தில் ஏறியவுடன் சாருவின் இதயத் துடிப்பு எகிறியது. பேருந்தில் ஓரளவு கூட்டம் இருந்தது அவளுக்கு வசதியாகப் போனது. தன் தோழிகளை இழுத்துக் கொண்டு கூட்டத்தில் மறைந்து கொண்டாள்.
பேருந்து வழக்கத்தை விட மெதுவாக செல்வது போல் இருந்தது அவளுக்கு.

"எங்கடா போனாளுங்க? "

"ஏறின உடனே உள்ளார போய் நிக்கறாளுங்க மாப்ளே!"

"இறங்கினவுடனே மடக்கிடலாமா மச்சி ?"

"வேண்டாம். பிரச்சனை பிடிச்ச வேலை. நாளைக்கு காலேஜ்க்கு வந்துதானே ஆகணும். அங்கப் பார்த்துக்கலாம் விடு. எங்க போய்டப் போறாங்க "

"அப்ப இங்கயே இறங்கிடலாம். சொல்லியவாறே , பஸ் உள்ளே நுழையும் முன் திருப்பத்திலேயே இருவரும் இறங்கி விட்டனர் ."

இவர்கள் இறங்கியதைக் கண்ட சாரு நிம்மதிப் பெருமூச்சு விட்டவளாய் தன் வீட்டிற்கு செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தாள். அவளின் நிம்மதி நெடு நேரம் நீடிக்கவில்லை. அவள் வீட்டிற்கு முன்பே அவளது தோழிகளின் வீடு இருப்பதால் அவர்கள் பிரிந்து என்றுவிட, தான் எப்பொழுதும் செல்லும் வழி என்பதாலோ என்னமோ வழக்கம்போல் சென்றவள் , தன் வீடு இருக்கும் தெருவிற்குள் நுழைந்து வீட்டிற்கு சென்றவுடன்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

இரவுத் தூக்கத்தில் அவர்கள் தன்னை ராக்கிங் செய்வது போன்றக் கனவுகள் வர காலையில் அந்தக் கலக்கத்துடனேயே தான் எழுந்து கல்லூரி சென்றாள்.அவள் பயந்தது போல் எந்த சம்பவங்களும் நடக்கவில்லை. யாரும் இவளைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அந்த வாரம் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சென்றுக் கொண்டிருந்தது.

வாரக் கடைசி நாள் இவள் கல்லூரி லைப்ரரியில் எதோ புத்தகம் படித்துவிட்டு கொஞ்சம் லேட்டாக வர ,இவளது தோழிகள் அவளுக்காகக் காத்திராமல் சென்று விட்டனர். பயந்து கொண்டேத் தனியாக பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க , அந்த இருவரும் இவளை நோக்கி வந்தனர்.

தப்பிக்க வழியே இல்லை, வசமாக மாட்டிக் கொண்டோம் என்று நடுங்கியவாறு நின்றுக் கொண்டிருந்த இவள் அருகில் வந்த இருவரும், வழக்கமான ராக்கிங் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். நடுங்கும் மெல்லியக் குரலில் பதில் அளித்த அவளிடம் அடுத்த கட்டமாக பாட சொல்ல , கிட்டத் தட்ட அழுகை வரும் நிலைக்கு சென்று விட்டாள் சாரு.

அவர்கள் சொன்னதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் குனிந்தப் படி நின்றிருக்க , அவள் விழிகளின் ஓரத்தில் , எந்த நிமிடமும் கீழே சிந்திவிடுவேன் என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது கண்ணீர் துளிகள். அவர்களது அதட்டலான குரலுக்குக் கட்டுப்பட்டு தலை நிமிர்த்த , அவளது கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் தவறி கீழே விழ , அணை உடைந்து வரும் வெள்ளமாய், சிறு கண்ணீர் அழுகையாய் மாறும் அபாயம் தெரிந்தது.

அந்த சீனியர்களோ இதைக் கண்டும் மனம் இறங்கியதாய் தெரியவில்லை . அவர்கள் மேலும் அதட்ட , அணை உடையும் நிலையில் இவர்களது ராக்கிங்கை சில அடிகள் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வெங்கட் அங்கு வந்தான்.

"டேய் . .உங்க அலும்புக்கு அளவே இல்லாம போச்சுடா. விடுங்கடா அந்தப் பொண்ணு போகட்டும். "

"மாப்ள ! நீ இதில் தலையிடாத ..ஓரங்கட்டிகோ ... நீ ராகிங் பண்றப்ப நாங்க ஏதாவது சொல்லி இருக்கமா?"

"கம்முனு இரு மச்சி . நீ போம்மா " ,என்று சாருவை அனுப்பியவன் ,

"ஏன்டா அறிவு இருக்கா ? அது பாட்டுக்கு போய் ப்ரின்சி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிச்சுன்னா என்ன ஆகும்னு தெரியும்தான? என்று நண்பர்களைத் திட்டிக் கொண்டிருந்தான்.

"இதெல்லாம் போய் சொல்ற மூஞ்சியாத் தெரியலை மாப்ள "

"ஆமாம். பெரிய இவரு கண்டுபிடிச்சிட்டார். பார்த்தாலே பழம்னு தெரியுது . நேரா போய் சொன்னா எல்லாரும் காலி "

அவர்கள் இருந்த இடத்தை விட்டு சிறிது தள்ளி நின்றாலும் , அவர்கள் சத்தமாய் பேசியதால் அவனுடைய வார்த்தைகள் இவள் காதில் விழ, அவன் அப்பொழுதுதான் உதவி செய்திருந்தாலும் ,அவனை நோக்கி முறைத்தாள்.

அதே சமயத்தில் அங்கிருந்து கிளம்ப எண்ணி அவனும் திரும்ப, அவளது முறைப்பைக் கண்டான். அதை பெரிதாக சட்டை செய்யாதவன் அவளை சிறிது நேரம் உற்றுப் பார்த்தான். விழிகளுக்கு இட்ட மை, கண்ணீரால் சிறிது அழிந்திருக்க , கைக்குட்டையினால் அவள் சரி செய்ய முயன்று தோற்றது தெரிந்தது. ராகிங் செய்யப் பட்டதன் விளைவாய் முகம் சற்று சிவந்திருக்க , கோவைப் பழமாய் சிவந்திருந்த இதழ்களுக்கு செயற்கை உதவி தேவைப் படவில்லை.


அவன் உற்றுப் பார்த்தது அவளை எதோ செய்ய ,தனதுப் பார்வையைத் திருப்பி கொண்டாள். அங்கிருந்து நண்பர்களுடன் சென்ற வெங்கட் ,டீக்கடையில் நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரியில் அமர்ந்தாலும் , நின்றுக் கொண்டிருந்தவளை அவவப்பொழுது பார்க்கத் தவறவில்லை.

அப்படிப் பார்த்த ஒருமுறை அவளது கண்களும் இவனை நோக்க, அவளது கண்களில் தெரிந்தது என்ன என்று ஆராய முற்பட்ட சமயத்தில் பேருந்து வந்து நிற்க , அவனது கண் வீச்சு அத்துடன் முறிந்தது.

-நினைவுகள் தொடரும்

அன்புடன் எல்கே

38 கருத்துகள்:

Chitra சொன்னது…

New template is very nice.

middleclassmadhavi சொன்னது…

ம்ம் நல்லாப் போகுது, இன்னும் படிக்கலாம்னு நினைக்கறப்போ தொடரும் போட்டுடறீங்க!!

Ramani சொன்னது…

தொடர் ஆர்வ மூட்டிப்போகிறது
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

Balaji saravana சொன்னது…

நைஸ்! :)

Lakshmi சொன்னது…

காலேஜ்ல மட்டும்தானே ராக்கிங்க் பண்ணுவாங்க. பஸ் ஸ்டாப்லலாம் கூடவா ? மாட்டிக்கர பொண்களின் மன நிலை ஐயோபாவமா தான் இருக்கும்.

raji சொன்னது…

அப்புறம் என்னாச்சு?

S Maharajan சொன்னது…

வேலை பளு காரணமாக இடையில் இரண்டு நினைவுகளை
மறந்து விட்டேன்.
அடுத்ததுக்கு......... காத்து இருக்கிறேன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ம்.. புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு! நினைவுகள் இப்போ பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் வந்துடுச்சு.. பார்க்கலாம். அடுத்து எங்கே என்று..

கீதா சாம்பசிவம் சொன்னது…

ம்ம்ம்ம் அருமையான நடை. இதுக்கு முந்தினது படிக்கலைனு நினைக்கிறேன். ஊருக்குப் போயிருந்தேனா, விட்டுப் போயிருக்கு. :D

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தொடரட்டும்...

thirumathi bs sridhar சொன்னது…

சரி நானும் தொடர்ந்து படிக்கிறேன்

கோவை2தில்லி சொன்னது…

டெம்ப்ளேட் நல்லா இருக்கு. கல்லூரி நினைவுகளை தூண்டியது. சாருவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான்.
லஷ்மிம்மா பஸ் ஸ்டாண்டிலும் தான் ரேக்கிங் நடக்கும்.

Jaleela Kamal சொன்னது…

அட பஸ்டாப்புலேயும் ராக்கிங் ஆ

ம்ம்
அப்பறம்

ஹேமா சொன்னது…

தளம் குளிச்சியா இருக்கு எல்கே.
நினைவலைகள் எங்களையும் இழுத்துச் செல்கிறது !

சென்னை பித்தன் சொன்னது…

காத்திருக்கிறேன்!

Latha Vijayakumar சொன்னது…

இரவுத் தூக்கத்தில் அவர்கள் தன்னை ராக்கிங் செய்வது போன்றக் கனவுகள் வர காலையில் அந்தக் கலக்கத்துடனேயே.. ஒரு INNOCENCE தெரியுது கார்த்தி. very nice

RVS சொன்னது…

அண்ணலும் நோக்க அவளும் நோக்க... ச்சே.. இந்த பஸ் வந்து நின்னுடுச்சே.. ;-)

பத்மநாபன் சொன்னது…

சொன்ன மாதிரி கல்லூரிக்காலத்தை பதிவில் கொண்டு போகிறிர்கள்...

ரேக்கிங்கில் தப்பிக்க உதவுவது காதலுக்கு வித்தாக அமைகிறதா...போக போக த்தெரியும்...

எல் கே சொன்னது…

@சித்ரா

நன்றி

@மாதவி
அடுத்தப் பகுதி சீக்கிரம் போடறேன்


@ரமணி
நன்றி அய்யா

@பாலாஜி
நன்றி

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
அம்மா, பஸ்ஸில் கூட பண்ணுவாங்க. பண்ணி இருக்கோம். பண்ணப்பட்டும் இருக்கோம் (சொந்த அனுபவம் )

எல் கே சொன்னது…

@ராஜி
நாளைக்கு சொல்றேங்க


@மகாராஜன்
வேலைதானே முக்கியம். நன்றிங்க.


@வெங்கட்
நன்றி. பஸ் ச்ட்டேன்ட்ல இருந்து காலேஜ்தான் அடுத்து

எல் கே சொன்னது…

@கீதா
ஆமாம். போன வாரம் போட்டேன். நீங்க ஊர்ல இல்லை . நன்றி


@மனோ
ஒகே மக்கா

@திருமதி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@கோவை
அடடே உங்கள் நினைவுகளை பதிவா போடுங்க..


@ஜலீலா

ஆமாம் அக்க நடக்கும்

@சென்னை
வாங்க சார்


@

எல் கே சொன்னது…

@ஹேமா
பார்த்து ஜாக்கிரதை. உங்கள் கல்லூரி காலத்துக்கு இழுத்துகிட்டு பாடப் போது

எல் கே சொன்னது…

@லதா
முதல் பின்னூடத்திற்கு நன்றி

komu சொன்னது…

ஓ, சொந்த அனுபவமா. அப்படின்னா சொல்ல எதுவுமில்லே.

சுசி சொன்னது…

என்ன பார்வையோ போங்க.. பட்டுன்னு விஷயத்தை சொல்ல வேண்டாமா :(

ஸ்ரீராம். சொன்னது…

இனிய காதலின் ஆரம்பமா...

அப்பாவி தங்கமணி சொன்னது…

ஆஹா...சூப்பர்.... கதை பிக் அப் ஆகுது... சீக்கரம் அடுத்த பார்ட் போடு... புது template ... புது கதை...கலக்கற கார்த்திக்... :)))

Philosophy Prabhakaran சொன்னது…

அண்ணே... சாரு, சாருன்னு எழுதறீங்க... எனக்கு ரொம்ப பயமா இருக்கு...

வித்யா சொன்னது…

நல்லா போய்ட்டிருக்கு LK..

கோமதி அரசு சொன்னது…

பஸ் ஸ்டாண்ட் நினவுகள் நல்லா இருக்கு.

அடுத்த சந்திப்பு எங்கே என்று அறிய ஆவல்.

சே.குமார் சொன்னது…

அருமையான நடை.

எல் கே சொன்னது…

@கோமு
ராகிங் மட்டும் சொந்த அனுபவம் இருக்கு., ஓடும் பஸ்ஸில் பண்ணி இருக்காங்க ..மத்தபடி கதை என் அனுபவம் இல்லை

எல் கே சொன்னது…

@சுசி
ஹஹஅஹா. அதெப்படி சுசி .டக்குனு சொன்னா சுவாரஸ்யம் இல்லாமல் போய்டுமே

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
காத்திருக்கவும்
..

@பிரபாகரன்
தம்பி இது அந்த சாரு இல்லை

@வித்யா
நன்றி

@கோமதி அரசு
சீக்கிரம் அடுத்த சந்திப்பு வரும்

@குமார்
நன்றி

எல் கே சொன்னது…

@அப்பாவி
எல்லாம் சரி . புதுக் கதையா >>அதே கதைதான்

vanathy சொன்னது…

எல்கே, நல்லா இருக்கு. விறுவிறுப்பான நடை.