பிப்ரவரி 03, 2011

நினைவுகள் 8

ஒவ்வொரு தினமும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. காதலர்களாய் இருந்தாலும், தம்பதிகளாய் இருந்தாலும், சிற்சில மாற்றங்கள் அன்றையப் பொழுதில் இருக்கத்தான் செய்யும். விதிவிலக்காய் அன்று மூவருக்கும் ஒரே மாதிரியாய் அமைந்தது விசித்திரமே .

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மனநிலையில் இருந்த மூவரில் வெங்கட் ஓரளவு மன நிம்மதியுடன் தூங்கினான் என்று சொல்லலாம். சாரு வேண்டாம் என்று சொன்னப் பிறகு அதை நினைத்து உபயோகம் இல்லை என்ற எண்ணம் அதற்கு காரணமாய் அமைந்தது.

ரமேஷோ ஏன் இவர்கள் பிரச்சனையில் தான் வந்து மாட்டினேன் என்று நினைத்து நொந்துக் கொண்டிருந்தான். எதற்காக சென்னை வந்தோம் என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டிருந்தான். வந்து சந்தித்ததோடு நிறுத்திக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சனையுமில்லையே என்று ஒரு பக்கம் வேதனைப் பட்டாலும், தனது நண்பர்களுக்கு இடையேயானப் பிரச்சனையைத் தனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி ஒரு பக்கம் அவனுக்கு திருப்தியே .

மூவரில் அதிகம் பாதிக்கப்பட்டது சாருதான். பழையதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துக் கொண்டிருந்தவள் ,பழைய நினைவுகளும் அதில் சம்பந்தப் பட்டவர்களும் திடுமென மீண்டும் தாக்க நடுக் கடலில் புயலில் சிக்கிய படகாய் திணறினாள்.

யாரை திரும்பவும் பார்க்கக் கூடாது என்று நினைத்தாளோ அவனே மீண்டும் அவளை பெண் கேட்டு வந்தது ஒரு புறம் என்றால், பழைய நண்பனுடன் பேசும் பொழுது அவன் பங்குக்கு பழைய நினைவுகளைக் கிளறி விட்டு சென்றது மறுபுறம்.

தூக்கம் வராமல் புரண்டவளின் மனம் காலவெளியில் பின்னோக்கி ஓட கல்லூரிக் கால நினைவுகள் இன்றும் பசுமையாய் நினைவுக்கு வந்தன. கல்லூரிக் காலத்தில் சாரு, ஒப்பனைகள் அதிகம் இன்றி , மிகக் குறைவான தேவையான ஒப்பனையை மட்டுமே செய்வாள். கூடிய வரையில் மற்றவரின் கவனத்தை ஈர்க்காத வண்ணமே உடையும் இருக்கும். தன்னுடைய மாற்றத்தை நினைத்துப் பார்த்தாள். காலமும் , இருக்கும் இடமும் ஒருவரை எப்படி மாற்றுகிறது என்று சிறிது வியக்கவும் செய்தாள்.

பள்ளியில் இருந்து கல்லூரிக்கு மாறிய வருடம். மனதில் பயமும் மகிழ்ச்சியும் கலவையாய் இருக்க கல்லூரிக்கு அவளின் முதல் பயணம். கல்லூரி பேருந்துகள் அவளதுக் கல்லூரியில் துவங்கப் படாதக் காலம் அது. தனியார் பேருந்திலோ இல்லை அரசுப் பேருந்திலோதான் பயணிக்க வேண்டும்.

பள்ளிச் சீருடைகளில் இருந்து விடுதலையாகி பல தரப்பட்ட உடைகளில் கல்லூரி செல்வதே முதலில் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியாய் இருக்கும். சாருவும் விதிவிலக்கில்லை. அவள் புதிதாய் வாங்கிய சிகப்பு நிற சுடியில் தன் தோழிகளுடன் கல்லூரி சென்று இறங்கினாள்.

பேருந்தில் இருந்து இறங்கியவுடனேயே அவளின் பார்வையில் பட்டது புளிய மரத்தின் பக்கத்தில் இருந்த டீக் கடையும் அதன் அருகே அமர்ந்து இருந்தவர்களும்தான். அவர்களைக் கண்டவுடன் மனம் படபடக்கத் துவங்கியது .அவர்கள் முதல் வருட ராக்கிங் பற்றிக் பல விஷயங்களைக் கேள்விப் பட்டிருந்ததால் , மனதில் பயம் சூழ, கைகள் அனிச்சையாய் இருந்த ஒரு நோட்டை இறுகப் பற்றியது.

அங்கு அமர்ந்து இருந்தவர்களை கண்டும் காணாமல் தவிர்த்து , எதிர்புறம் இருந்தக் கல்லூரியை நோக்கி நடக்கத் துவங்கினர். அமர்ந்து இருந்தவர்களின் கிண்டல்கள் இவர்களின் செவியைத் தாக்க கூச்சம் ஒருபுறமும், கோபம் ஒருபுறமுமாய் நடை மெது ஓட்டமாய் மாறி கல்லூரிக்குள் நுழைந்தவுடன் நிம்மதிப் பெருமூச்சு வந்தது அவர்களுக்கு.


கேண்டீனுக்கு போகலாமா என்றுத் துவங்கிய தோழியை கண்ணால் எரித்த சாரு , "ஒழுங்கா கிளாசுக்குப் போற வழியைப் பார்ப்போம். அப்புறம் பேசிக்கலாம் கேண்டீன் போறதைப் பற்றி " என்று சொல்லிவிட்டு வேகமாய் தகவல் பலகை அருகே சென்று தங்கள் வகுப்பு எங்கிருக்கிறது என்று பார்த்து இரண்டாம் மாடிக்கு செல்ல படிக்கட்டுகளில் நடக்கத் துவங்கினாள். வேறு வழி இல்லாமல் அவள் தோழிகள் இருவரும் அவளைப் பின்பற்றத் தொடங்கினர்.

முதல் நாள் வகுப்புகள் புதியவர்களை அறிவதிலே கழிந்தப் பின், மாலையில் வீடு செல்லும் நேரம், மீண்டும் மனதில் பயம் எட்டிப் பார்க்கத் துவங்கியது. பேருந்து நிறுத்தத்தில் நடுங்கும் மனதுடன் பேருந்திற்கு காத்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி இரண்டு மாணவர்கள் வர, சாருவின் கைகளும் நடுங்கத் துவங்கின.

வந்தவர்கள் இவர்களைக் கடந்து போய்விடமாட்டர்களா என்று மனதில் நினைத்துக் கொண்டே அந்த திசையை பார்ப்பதை தவிர்த்தாள். அவர்கள் ரோடைக் கடந்து வரவும் பேருந்து வந்து சேரவும் சரியாக இருக்க, அவசர அவசரமாய் பேருந்தில் ஏறினாள். இவர்களின் பின்னே அவர்களும் ஏற , சாருவின் இதயத் துடிப்பு எகிறியது.

-நினைவுகள் தொடரும்

அன்புடன் எல்கே

45 கருத்துகள்:

Jaleela Kamal சொன்னது…

ம்ம் பிலாஷ் பேக் அழகிய கனாக்காலத்தில் முதல் பகுதியா?
அப்பரம்

asiya omar சொன்னது…

சகோ.எல்.கே இந்த பகுதி வாசிச்சாச்சு,தொடர் பெரிசாக போகும் போல.பொதுவாக ரெட் கலர் எல்லாரையும் எடுப்பாக காட்டும் அதெப்படி கரெக்டாக சாருவுக்கு ரெட் சுடிதார்?

Balaji saravana சொன்னது…

பரபரப்பு என்னையும் தொத்திக்கிடுச்சு எல்.கே! :)

பாலா சொன்னது…

விறுவிறுப்பான ஆட்டோகிராபா இருக்கு சார்.

raji சொன்னது…

interesting

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ம்... விறுவிறுபாய் ஃப்ளாஷ்பேக் தொடங்கிடுச்சு!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சொல்லுங்க சொல்லுங்க....

middleclassmadhavi சொன்னது…

Suspense..When is the next part?

கோவை2தில்லி சொன்னது…

அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்.

Priya சொன்னது…

சுவாரஸியமா போயிக்கிட்டு இருக்கு.....

Porkodi (பொற்கொடி) சொன்னது…

red colora?? right right. apram?

அப்பாவி தங்கமணி சொன்னது…

//பேருந்திற்கு காத்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி இரண்டு மாணவர்கள் வர//

அந்த ரெண்டுல ஒருத்தர் தான் ஹீரோவா? ஒகே... கதை பஸ்சை விட வேகம் பிடிக்குது... சீக்கரம்
நெக்ஸ்ட் பார்ட் போடுங்க சார்...
(Red colour???? adhu dangeraa illa damagaraanu paarpom...ha ha..:))

கதை எழுதறத விட விமர்சனம் பண்றது ஜாலியாத்தான் இருக்கும் போல இருக்கே... ஹா ஹா...:))

மரா சொன்னது…

நானு எதையும் படிக்கலீங் சாமி...சொம்மா எட்டிப் பார்த்தன் :-)

Chitra சொன்னது…

good going.....

பத்மநாபன் சொன்னது…

முக்கோணத்தின் ஒவ்வொரு புள்ளியும் நகர்ந்து பெரிய முக்கோணமா மாறிவிடும் போல.....கல்லூரிக்காலம்னாலே வசந்தம் தான் கொஞ்ச எபிசோட் கல்லூரியிலேயே இருக்கட்டும்...

Srini சொன்னது…

” லயித்தேன் “

Porkodi (பொற்கொடி) சொன்னது…

//கதை எழுதறத விட விமர்சனம் பண்றது ஜாலியாத்தான் இருக்கும் போல இருக்கே... ஹா ஹா...:))//


அந்த நிதி குடும்பத்தார் சினிமாவுல நுழைஞ்சு மார்கெட்டிங் பண்ணனும்னு சொன்னாலும் சொன்னாங்க, அப்பவியோட விளம்பர அலப்பறையை அளக்க முடியலை!

ஹேமா சொன்னது…

தொடர்ந்தும் வாசிக்கிறேன் கார்த்திக்.

என்னாச்சு என் பக்கம் ரொம்ப நாளாக் காணோம் !

Philosophy Prabhakaran சொன்னது…

Present...

எல் கே சொன்னது…

@ஜலீலா

ஆமாங்க. முதல் பகுதிதான்

Vasagan சொன்னது…

Karthi

just be the start reading your blog after read your work comment will flow

எல் கே சொன்னது…

@ஆசியா
ஆமாம் சகோ கொஞ்சம் பெருசா போகும். (அப்பாவிக்கு போட்டி)...சாருவுக்கு அந்த கலர் பிடிக்கும் அதுதான் ரெட் கலர் போட்டா. ஓகேவா

எல் கே சொன்னது…

@பாலாஜி
உங்களையுமா ?? சரி

@பாலா
ஆட்டோ கிராப் ?? இல்லீங்க இதுல ஒருத்தர் தான் .

@ராஜி
நன்றிங்க

@வெங்கட்
ஆமாம்

@மனோ
சொல்லிட்டுதான இருக்கோம்

@மிடில் கிளாஸ்
சீக்கிரம் போட்டுடறேன்

@கோவை
நன்றி

@ப்ரியா
நன்றி

எல் கே சொன்னது…

@பொற்கொடி
ஏன் இந்த கலருக்கு என்னக் குறைச்சல் ??

எல் கே சொன்னது…

@அப்பாவி
இருக்கலாம் ...இல்லாமலும் போகலாம் ..உன் அளவுக்கு லேட் பண்ண மாட்டேன் .சீக்கிரம் போட்டுடுவேன் . ஆமாம் விமர்சனம் பண்றது ஈசி . எழுதறது கஷ்டம்

எல் கே சொன்னது…

@மரா
ஏன் ? இந்தக் கொலை வெறி ??

@சித்ரா
நன்றி

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
ரசிகமணி சொல்லிட்டா அப்ஜெக்சன் இல்லை ...

எல் கே சொன்னது…

@ஸ்ரீனி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@கொடி
சரியா சொன்னீங்க. விளம்பரம் தாங்க முடியலை

எல் கே சொன்னது…

@ஹேமா
கொஞ்சம் பிசி. சீக்கிரம் வரேன்

@பிரபாகரன்
நன்றி

எல் கே சொன்னது…

@வாசகன்
நீங்களும் இங்க வந்தாச்சா ? ரொம்ப சந்தோசம் சார்.

வித்யா சொன்னது…

நைஸ்...

இளங்கோ சொன்னது…

Good one..

சுசி சொன்னது…

தொடருங்க தொடருங்க.. :))

அப்பாவி தங்கமணி சொன்னது…

//Porkodi (பொற்கொடி) said... //கதை எழுதறத விட விமர்சனம் பண்றது ஜாலியாத்தான் இருக்கும் போல இருக்கே... ஹா ஹா...:))// அந்த நிதி குடும்பத்தார் சினிமாவுல நுழைஞ்சு மார்கெட்டிங் பண்ணனும்னு சொன்னாலும் சொன்னாங்க, அப்பவியோட விளம்பர அலப்பறையை அளக்க முடியலை //

நான் பேசினாலே விளம்பரம்னு நினைக்கற உன் கடமை உணர்ச்சியை என்னால்....(ஆனந்த கண்ணீர்....).... ஹா ஹா ஹா... ஹையோ ஹையோ... (என்கிட்டயேவா... :)))

Porkodi (பொற்கொடி) சொன்னது…

அ.த. கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாருங்க, எங்கயாவது நீங்க கதை எழுதறீங்கன்னு தெரிவிக்காம கமெண்டை போடறீங்களான்னு..:P அதை தான் விளம்பரம்னு சொல்றேன். மத்த படி பேசினாலே விளம்பரம்னு எல்லாம் நான் ஏன் சொல்லப் போறேன்! :O

அப்பாவி தங்கமணி சொன்னது…

Porkodi (பொற்கொடி)-

ஏம்மா கொடி? அப்படியே சந்துல சிந்துவா... நாறோடு சேர்ந்த பூவா(you பூ okay:)... உனக்கும் சேத்து தானே மார்க்கெட்டிங் பண்றேன்... அதுக்காகவாச்சும் கொஞ்சம் கிரெடிட் குடுக்க கூடாது? இப்படியா பப்ளிக்ல டேமேஜ் பண்றது...அதுவும் எக்கசக்க டிராபிக் இருக்கற LK ரோடுல இதெல்லாம் ஞாயமா... சொல் பொற்கொடி சொல்...
(ரெம்ப பீலிங் எல்லாம் இல்லீங்க அம்மணி... டயலாக் சான்ஸ் கிடைச்சதும் சைடு ஆர்டிஸ்ட் டைரக்டர் முன்னாடி உணர்ச்சிவசப்பட்டு திறமை எல்லாம் காட்டுற மாதிரி நானும் இப்படி... ஹி ஹி ஹி...:)))

ஸ்ரீராம். சொன்னது…

பத்மநாபன் கருத்தை ஆமோதிக்கிறேன்.

komu சொன்னது…

பள்ளி முடிந்து காலேஜில் புதிதாகச்சேரும் பெண்களின் மன நிலையை அழகா சொல்லி இருக்கீங்க.
ஒருபகுதி படிச்சொடனே அடுத்தபகுதியை
எபோன்னொன்னு எதிர்பார்க்க வைக்குது,

Lakshmi சொன்னது…

கார்த்தி, தொடர்,சுவாரஸ்யமா போயிண்டு இருக்கு.சீக்கிரம் தொடருங்க.

எல் கே சொன்னது…

@வித்யா
நன்றி

@இளங்கோ
நன்றி

@சுசி
ஹ்ம்ம் சரி

எல் கே சொன்னது…

@அப்பாவி
என் ப்ளாக் ட்ராபிக் ஜாஸ்தியா இருக்கா ? ஏன் இந்தக் கொலை வெறி ?? பொற்ஸ் இவங்க சொல்றத நம்பாதீங்க ? அப்பாவிக்கு வரதை விடவா இங்க ஜாஸ்தி ??

எல் கே சொன்னது…

@கோமு
சரியா சொல்லி இருக்கேனா ?? அப்பாடி ஒரு தாய்க்குலம் சர்டிபிகேட் தந்தாச்சு

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
நன்றிமா

@ஸ்ரீராம்
நன்றி

RVS சொன்னது…

கல்லூரிப் பக்கம் போன நினைவுகள்... அந்த இரண்டு மாணவர்கள் யார்? வெங்கட்டும் ரமேஷுமா?