பிப்ரவரி 01, 2011

நினைவுகள் 7

அவர்கள் இருவரும் செல்வதைக் கண்டும் காணாதவன் போல் இருந்த வெங்கட் , பின் தன் கவனத்தை வேறு திசைகளில் செலுத்தத் துவங்கினான். பல தரப்பட்ட மக்கள் அவர்களின் ஊடே தங்கள் பொருட்களை விற்க முனையும் சிறு வியாபாரிகள் என்றுக் கலவையாய் மணல்வெளி நிறைந்திருந்தது .

வார இறுதி மக்கள் கூட்டம் தங்கள் ஒரு வாரக் களைப்பை நீக்கவும், அடுத்த வாரத்திற்குத் தேவையான புத்துணர்வுத் தேடியும் அங்கு வர, தங்கள் அடுத்த வேளை வயிற்றுத் தேவையை பொருட்கள் விற்றோ இல்லை தின்பண்டங்கள் விற்றோ நிறைவு செய்யும் அடித்தட்டு வியாபாரிகள்.

இந்தக் கூட்டத்தின் நடுவே அவன் கண்கள் ஒரு பெரியவரிடம் நிலை குத்தி நின்றது. அவரது கையில் கயிற்றால் இழுத்தால் ஆடும் பொம்மைகள் இருந்தன. அதைக் கண்டதும் மனிதர்களின் வாழ்வுதான் அவனுக்குத் தோன்றியது. யாரோ ஒருவன் எங்கோ இருந்து கயிற்றை ஆட்ட ,அதற்கேற்ப இங்கு அனைவரும் ஆடிக் கொண்டிருப்பது போல் இருந்தது.

அதன் ஊடாக , எதோ ஒரு புத்தகத்தில் படித்த வாசகங்களும் நினைவுக்கு வந்தது. வாழ்வில் துன்பங்கள் வரும் பொழுதுதான் மனிதன் தத்துவங்களை பற்றியும் இறைவனைப் பற்றியும் நினைக்கிறான் என்று யாரோ எதோ ஒரு புத்தகத்தில் எழுதி இருந்தது இப்பொழுது இவன் நினைவில் இடற மெல்லிதாய் புன்னகைத்தான்.

பின் சாருவும் ,ரமேஷும் சென்றப் பாதையில் பார்க்க, மனித அலைகளில் இவனுடையப் பார்வையில் இருந்து விலகி இருந்தனர் அவர்கள். அவன் வாழ்வில் இருந்து மறைந்தவள் ,மீண்டும் வராமலே இருந்திருந்தால் அவன் வாழ்வும் தெளிந்த நீரோடையாய் இருந்திருக்கும். ஆனால் இவன் ஒன்று நினைக்க , விதி ஒன்று நினைக்க இன்று ஆர்பரிக்கும் கடலலைகளில் சிக்கியவனாய் செய்வதறியாமல் விழிக்கின்றான்.

************************************************************************************
வெங்கட்டின் பார்வையில் இருந்து விலகியப் பின் , கடலைகள் நிலத்தில் மோதும் இடத்தில் சிறிது நேரத்தை கொன்றப்பின் , மணல்வெளியில் அமர்ந்த சாருவை ஆழ்ந்து நோக்கினான் ரமேஷ்.

அவள் கடல் அலையில் தன் கால்களை நனைத்துக் கொண்டிருந்த பொழுது அவன் சிந்தனை , சில வருடங்கள் பின்னோக்கி சென்றுத் திரும்பியது. அன்று அத்துணை நெருக்கமாய் இருந்தவளின் இன்றைய வெறுப்புக்குக் காரணம் என்னவென்றுப் புரியாமல் அவன் குழம்பினான்.


ஆனால் மற்றொன்று தெளிவாகப் புரிந்தது அவனுக்கு, அவள் தன் கரம் கோர்த்தது வெங்கட்டை வெறுப்பேத்த மட்டுமே என்று. அவன் பார்வை அவர்களிடம் இருந்து விலகியப் பின் அவள் தன் கரத்தை விடுவித்துக் கொண்டது அவனுக்கு இதை உணர்த்தியது.

என்னதான் பிரச்சனை அவர்களின் நடுவே என்று யோசிக்க யோசிக்க குழப்பம் மட்டுமே மிஞ்சியது. இறுதியில் அவளிடமே அதைப் பற்றி பேசி விடுவது என்று முடிவெடுத்தான்.

அப்பொழுது எடுத்த முடிவின் விளைவாக, அவளை ஆழ்ந்து நோக்கியவன் அந்தக் கேள்வியைக் கேட்டான் .

"என்னப் பிரச்சனை உனக்கும் வெங்கட்டுக்கும் ?"

"அதை பத்தி பேசவேண்டாம்னு அப்பவே சொன்னேன். ஞாபகமில்லையா ?"

"எல்லாம் இருக்கு. ஆனால் இப்படி அவரை தவிர்க்கும் அளவுக்கு என்ன பிரச்சனை ?"

மௌனமே பதிலாக அளித்த சாரு, பார்வையை கடலின் பக்கம் திருப்பி கடலை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தாள். கால்களில் தலையை முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்தவளின் உடல் சிறிது குலுங்க ஆரம்பித்தது.

அவள் அழத் துவங்கியதின் அடையாளமாய் உடல் குலுங்கியதைக் கண்டவன் , செய்வதறியாமல் திகைத்தான். தானொன்று நினைத்து கேட்க, மற்றொன்று நடக்க என்ன செய்வது என்றுப் புரியாமல் , அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்காமல் அவளை அழைத்துப் பார்த்தான் .

சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டவள், தன் முகம் நிமிர்த்தி இவனைப் பார்க்க, கண்களில் இட்டிருந்த மை கண்ணீரில் அழிந்து , வழிந்த கண்ணீர் போக இன்னும் சிறிது கண்களில் குளம் கட்டி இருக்க , தன் கைக்குட்டையை எடுத்து அதை துடைத்துக் கொண்டாள்.

பின் அவனிடம் மன்னிப்புக் கேட்ட சாரு "நாளைக்கு எப்ப கிளம்பற ?" சம்பந்தம் இல்லாமல் கேள்விக் கேட்டாள்.

எதற்கு அந்த கேள்வி அப்பொழுது என்றுப் புரியாவிட்டாலும் மறுநாள் இரவுதான் கிளம்புவதாய் சொன்னான்.

"சரி. இப்ப நாம கிளம்பலாம். நாளைக்கு மதியம் மறுபடியும் உன்னைப் பார்க்க வரேன். அப்ப இதுபத்தி நான் சொல்றேன். "

அவள் வார்த்தைக்கு என்ன பதில் சொல்வது என்று மனம் யோசித்தாலும், அவன் தலை அனிச்சையாய் அவள் சொன்னதை ஒத்துக் கொண்டது.

************************************************************************************
ரமேஷை அவன் தங்கியிருந்த இடத்தில் விட்டுவிட்டு வந்த சாரு சோர்வாய் படுக்கையில் விழுந்தாள். அன்றைய நிகழ்வுகள் அவளை மிக சோர்வாக்கி இருந்தன. மகிழ்ச்சியுடன் ஆரம்பித்த தினம் பின் அழுகையில் முடிந்தது. வாழ்வில் யாரை மறக்கவேண்டும் என்று இருந்தாளோ அவனை சுற்றியே அவளின் கடந்த சில தினங்கள் செல்வது அவளுக்கு ஒரு வகையில் எரிச்சலையே தந்தது.

தூக்கமும் வராமல் புரண்ட அவளின் மனம் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. எந்தக் கடிவாளமும் இல்லாமல் மனக் குதிரை அவளது கல்லூரிப் பருவத்தில் சென்று நின்றது.

- நினைவுகள் தொடரும்
அன்புடன் எல்கே

59 கருத்துகள்:

raji சொன்னது…

interesting.
waiting for d flashback.

post it soon

Lakshmi சொன்னது…

இப்ப ப்ளாஷ்பேக் ஆரம்பமா? தொடருங்க கார்த்தி.

அமைதிச்சாரல் சொன்னது…

ஆஹா!!.. ஃப்ளாஷ்பேக்கா.. நடக்கட்டும்.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நல்ல தொடர்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இப்ப தான் ஃப்ளாஷ்பேக் ஆரம்பமா? நடக்கட்டும்.

asiya omar சொன்னது…

ப்ளாஷ்பேக்கா அடுத்து சந்திப்பா?எதுவாயிருந்தாலும் அடுத்தடுத்து எழுதுங்க சகோ.

எல் கே சொன்னது…

@ராஜி
நன்றி . சீக்கிரம் போட்டுடறேன்

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
ஆமாம் .. சீக்கிரம் போடறேன்

எல் கே சொன்னது…

@சாரல்
ஆமாம்

எல் கே சொன்னது…

@ஆர் கே சதீஷ்
நன்றி நண்பா

எல் கே சொன்னது…

@வெங்கட்
ஆமாம் ?? நீங்க என்ன நினைச்சீங்க?

எல் கே சொன்னது…

@ஆசியா
நன்றி சகோ. சீக்கிரம் போடறேன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

படிக்க படிக்க அருமையா இருக்கு எல் கே......

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

Interesting LK. All the best.

S.Menaga சொன்னது…

கதை சூப்பரா போகுது...

கோவை ஆவி சொன்னது…

இப்பதான் படிக்க ஆரம்பிச்சேன். ரொம்ப நல்ல இருக்கு கார்த்திக்!!

Jaleela Kamal சொன்னது…

ஒகே சஸ்பென்ஸ் தான் அடுத்து ம்ம் மேலே சொல்லுங்க

GEETHA ACHAL சொன்னது…

என்ன ஆச்சு...அவள் போய் நாளைக்கு கண்டிப்பாக flashback சொல்வாளா....

Chitra சொன்னது…

நினைவுகளில் ... மலரும் கல்லூரி நினைவுகள்.... அருமை.

middleclassmadhavi சொன்னது…

அடுத்தடுத்த பகுதிகள் எப்போ என ஆவலைத் தூண்டும்படி எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்

கோமதி அரசு சொன்னது…

//யாரோ ஒருவன் எங்கோ இருந்து கயிற்றை ஆட்ட ,அதற்கேற்ப இங்கு அனைவரும் ஆடிக் கொண்டிருப்பது போல் இருந்தது//

ஆட்டுவித்தா லாரொருவ ராடாதாரோ!

எல்லாம் கடவுளின் விளையாட்டு.

நினைவுகள் நல்லா இருக்கு தொடருங்கள்.

வித்யா சொன்னது…

ஓ கொசுவத்தியா?

வெயிட்டிங்..

மதுரை சொக்கன் சொன்னது…

மனக்குதிரை ஓடக் காத்திருக்கிறேன்!

komu சொன்னது…

ஒவ்வொருவரின் மன உணர்வுகளையும் அழகா விவரிக்கிரீங்க. படிக்கவே நல்லா இருக்கு.

அப்பாவி தங்கமணி சொன்னது…

அநியாயத்துக்கு சின்ன எபிசொட்... LK டௌன் டௌன்... அடுத்த எபிசொட் இதுல ரெண்டு மடங்கு இருக்கணும்... இல்லைனா நான் இன்னொரு தொடர் கதை ஆரம்பிச்சுடுவேன்... எப்படி வசதி? ....:))))) (எப்படி எல்லாம் ப்ளாக்மெயில் பண்ண வேண்டி இருக்கு... ஹ்ம்ம்.. )

பத்மநாபன் சொன்னது…

வெங்கட்டை இவ்வளவு தூரம் வெறுப்பேற்றி...கண்ணீர் சிந்தியது எல்லாம் படிக்கும்பொழுது.. பலமான பின்கதை இருக்கும் போலிருக்கு... சீக்கிரம் போடுங்கள்

Philosophy Prabhakaran சொன்னது…

ஏன் ஓட்டுப்பட்டைகளையே இணைப்பதில்லை...

எல் கே சொன்னது…

@மனோ
நன்றி நண்பா

எல் கே சொன்னது…

@நித்திலம்
நன்றி

எல் கே சொன்னது…

@மேனகா

நன்றிங்க

எல் கே சொன்னது…

@கோவை ஆவி

எதோ அப்பாவி அளவுக்கு இல்லாட்டிலும் ஓரளவாது நல்லா இருக்கா ??

எல் கே சொன்னது…

@ஜலீலா

பெருசா சஷ்பென்ச்லாம் இல்லை.. கல்லூரி நண்பரை நாம் இடைவெளி விட்டு காணும் பொழுது போன சந்திப்புக்கும் இதற்கும் நடுவில் உள்ளவை எல்லாம் சச்பென்ச்தான்

எல் கே சொன்னது…

@கீதா ஆச்சல்

தெரியலையே . இப்பதான் இவளே நினச்சு பார்க்க ஆரம்பித்து இருக்கா

எல் கே சொன்னது…

@சித்ரா

நன்றி

எல் கே சொன்னது…

@மிடில்க்ளாஸ் மாதவி
எதிர்பார்ப்பு பொய்க்காது ....ஆனால் தினமும் போட்டாலும் நல்லா இருக்காது

எல் கே சொன்னது…

@கோமதி
மிக சரி..எல்லாம் அவன் விளையாட்டுத்தான். அவன் எழுதிய நாடகத்தை நடிக்கின்றோம்

எல் கே சொன்னது…

@வித்யா
கதைக்குள்ள கொசுவர்திங்க.. என் கொசுவர்த்தி இல்ல

எல் கே சொன்னது…

@சொக்கன்

வருகைக்கு நன்றி அய்யா

எல் கே சொன்னது…

@கோமு
நன்றிங்க

எல் கே சொன்னது…

@அப்பாவி

ஆஹா இந்த அப்பாவி பண்ற கொடுமைய கேட்க யாருமே இல்லையா ?? இந்த அனாமிகா பொண்ணு வேற காணோம் எங்க போச்சுன்னே தெரியலை போன எபிசொட் அளவுதான் இருக்கு,


எதுக்கும் வெய்ட் பண்ணு .பொற்கொடி வந்து தீர்ப்பு சொல்லுவாங்க

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

ஹ்ம்ம் இருக்காதா பின்ன ??

எல் கே சொன்னது…

@பிரபாகரன்

இணைத்து என்ன ஆகப் போது தம்பி ??

கோவை2தில்லி சொன்னது…

இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. அடுத்த பகுதி எப்போ?

சுசி சொன்னது…

சீக்கிரம் காலேஜ் கதவை திறங்க..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

கதையை நடுவில் இருந்து வாசிக்கிறேன் கார்த்திக்..

kadar சொன்னது…

வந்துட்டோம்ல.....

kadar சொன்னது…

கமென்ட் அப்ரூவல தூக்கி போடுங்க தல.... அப்போ தான் பெரிய மனுஷன் மாதிரி இருக்கும். உங்கத படிச்சி இருக்கேன் கொஞ்ஜ நாள் முன்னாடி. ஆனால் கமென்ட் போடுரது இதுதான் ஃபர்ஸ்ட்னு நினைக்கிறேன்.

kadar சொன்னது…

நீங்களுமா??? ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதில் கமென்ட் போட்டு ஸ்கோர் ஏத்திக்கிட்டு இருக்கீங்க???
இது ஏதோ என்னால முடிஞ்ஜ மூனு.....

தெய்வசுகந்தி சொன்னது…

சீக்கிரமா எழுதி முடிங்கப்பா. நான் அப்பறமா படிச்சுக்கறேன்.

அப்பாதுரை சொன்னது…

இன்று தான் முதலிலிருந்து படித்தேன். நானும் தொடர்கிறேன்.

ஸ்ரீராம். சொன்னது…

காதலில் சோகங்களும் சில சமயம் சுகம்தான்...

எல் கே சொன்னது…

@கோவை

முடிஞ்சா இன்னிக்கு மாலைக்குள்

எல் கே சொன்னது…

@சுசி

திறந்துவிடலாம்.

எல் கே சொன்னது…

@தேனம்மை
ஈசியா புரியும் அக்கா

எல் கே சொன்னது…

@காதர்
ச்கோர்லாம் ஏத்த செய்யலை. பின்னூட்டம் போடறவங்களுக்கு ஒரு வித மரியாதை இது அவ்வளவுதான். படிச்சா கமென்ட் போடணும். அப்பதான் நீங்க வந்தது தெரியும் :)

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி

ஹ்ம்ம் சரி சரி

எல் கே சொன்னது…

@அப்பாதுரை
ஆஹா நன்றிஜி

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
காதலில் அதிகம் சோகம்தானே

vanathy சொன்னது…

சூப்பரா இருக்கு. தொடருங்கோ...