பிப்ரவரி 20, 2011

ஜகத்குரு 14-சனந்தர்


"காசில மாற்றுக் கொள்கை உடையவர்கள் கிட்ட விவாதம் பண்ணத் துவங்கினார். விவாதத்தில் தோற்று அத்வைத சித்தாந்தாமே சரின்னு நெறயப் பேரு ஆதிசங்கரர் கிட்டே சீடரா சேர்ந்தா."

"அது எப்படி மாமா? தோல்வியை எப்படி ஒத்துப்பா ? அந்த மாதிரி நான் எங்கயும் பார்த்தது இல்லையே ?"

"நீ இந்த காலத்தை மனசுல வச்சிண்டு பேசற. அந்தக் காலத்தில் யாராவது இந்த மாதிரி விவாதம் பண்ணினா, விவாதத்தில் தோற்பவர்கள் , ஜெயிச்சவாளோட கொள்கையை ஒத்துக்கிட்டு அவங்கக் கூட சேர்ந்துப்பா. அதே சமயத்தில் இன்னிக்கு விவாதம் பண்றவங்க மாதிரி விதண்டாவாதம் இருக்காது. கொள்கைகள் மட்டும்தான் பெரும்பாலும் மோதும். ஒரு சில விதிவிலக்கு இருக்கு. இருந்தாலும் பொதுவா விவாதம் நேர்மையா இருக்கும். "


"இந்த மாதிரி நெறையப் பேர் அவர்கிட்ட விவாதம் பண்ணி தோற்று அத்வைத மார்க்கத்தை பின்பற்றத் துவங்கினர். காசியில் இருக்கறப்ப நெறைய சீடர்களும் அவரிடம் வந்து சேரத் துவங்கினர்.

அவருடைய சீடர்களில் முக்கியமானவர் சனந்தர்.எல்லோரையும் சோதித்தப் பிறகே சேர்த்துக் கொண்ட சங்கரர் , இவரை எந்த வித சோதனையும் செய்யவில்லை. உடனே சேர்த்துக் கொண்டார். அதுவும் இல்லாமல் அதிக முக்கியத்துவமும் தர ஆரம்பித்தார்.

என்னதான் குரு உத்தமராய் இருந்தாலும், சீடர்களில் ஒருவர் இருவர் , கொஞ்சம் முன்ன பின்னதான் இருப்பா. அதுமாதிரி புதுசா வந்த சனந்தருக்கு முக்கியத்துவம் தராது ,ஏற்கனவே இருந்தவாளுக்கு பிடிக்கலை.


ஞான மார்க்கம் தெரிந்துகொள்ள சீடர்களாய் சேர்ந்து இருந்தாலும், அ வர்கள் மனதிலும் இத்தகைய பொறாமை என்னும் விஷம் இருந்தது.சங்கரரும் இதைப் பற்றி அறிந்தார். கோபத்திற்கு பதில், மக்கள் இன்னும் இத்தகைய மூட நிலையிலேயே இருக்கின்றனரே என்று வருத்தம்தான் அவருக்கு.


அவர்களுக்கு சனந்தரின் மகிமையையும் குரு பக்தியையும் காண்பிக்க எண்ணினார்.

ஒருநாள், கங்கையின் ஒரு கரையில் அமர்ந்து ஜபம் செய்துக் கொண்டிருந்தார் சங்கரர். சனந்தர் மறுக்கரையில் எதோ வேலையாக இருந்தார். ஜபத்தை முடித்து எழுந்தவருக்கு ஈர வேட்டி உறுத்தியது. எதிர்க்கரையில் இருந்த சனந்தரை நோக்கி மடிவேட்டி எடுத்து வர சைகை செய்தார்.

சனந்தரும் வேட்டியை எடுத்துக்கொண்டு கங்கைக் கரைக்கு வந்து நிற்கிறார். கங்கையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. எப்படி அங்கு போவது என்று ஒரு கணம் தயங்குகிறார். எதிர் கரையில் இருந்து சங்கரர் மீண்டும் சைகை செய்கிறார். அவ்வளவுதான் சனந்தருக்கு தயக்கம் போய்விட்டது. குருவுக்கு மாற்று வேட்டி கொடுக்கவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் மனதில்.

கங்கையின் நீர் பிரவாகத்தில் கால் வைக்கிறார். அவர் கால் வைக்கும் இடம் எல்லாம் தாமரை பூத்து அவரை தாங்கிக் கொள்கிறது. அவருக்கு இது எதுவும் தெரியாது, அவரது எண்ணம் பார்வை எல்லாம் எதிர் கரையில் இருக்கும் குரு மேலேதான் இருக்கு.

எதிர்க்கரையை அடைந்தவுடன் சங்கரர் கேட்கிறார் "எப்படி நீர் பிரவாகத்தை தாண்டி வந்த ,சனந்தா ?"

சனந்தர் அதற்கு "குருவின் துணை இருப்பின், சம்சார சாகரத்தையே தாண்ட முடியும், இதில் இந்த கங்கை எம்மாத்திரம் ?

இல்லை சனந்தா , கொஞ்சம் திரும்பிப் பார் என்று சொன்னார் சங்கரர்.

திரும்பிப் பார்த்த சனந்தருக்கு அப்பொழுதுதான் தாமரைகள் புலனாகின்றன.

உடனடியாக சங்கரரை நமஸ்கரித்து "இதுவும் குருவாகிய உமது அருள்தான்.என்னுடைய திறன் எதுவும் இல்லை " என்றார் அடக்கமாய்.

இதைப் பார்த்த மற்ற சீடர்கள் சனந்தரின் அருமையை உணர்ந்தனர். பத்மம் தாங்கியப் பாதங்களை உடையவர் ஆதலால் "பத்மபாதர்" என்று அழைக்கத் துவங்கினர்.

- தொடரும்
அன்புடன் எல்கே

28 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

சனந்தரின் குருபக்தியும் ...பத்மபாதர் எனும் பெயர் பெற்ற கதையும் சிறப்பாக இருந்தது ... பெரியவர்கள் முதல் சின்ன சிறுவர்கள் கதையை படித்து ஆதிசங்கரரை அறியும் வண்ணம் எழுத்தில் கொண்டுவருவது பாராட்டுக்குரியது ....

சே.குமார் சொன்னது…

Niraiya therinthu kolla mudikirathu... thodarunkal.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்லா இருக்குதுங்க...

மோகன்ஜி சொன்னது…

எத்தனை எளிமையாய் சொல்கிறீர்கள் எல்.கே! இத்தகு அற்புதமான நிகழ்வுகளை வரும் தலைமுறைக்கு எளிமையாயும் பாசாங்கில்லாமலும் எடுத்துக் கூறவேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கிருக்கிறது. உங்களால் இதில் திறம்பட செயலாற்ற முடியும் எல்.கே! நம் பண்பாட்டினை, ஞான செல்வத்தை அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள். என் அன்பும் வாழ்த்துக்களும்.

RVS சொன்னது…

எல்.கே.. ஒரு குழந்தைக்கு சொல்வது போல சொல்கிறீர்கள்! அற்புதமாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் இந்தப் பணி. நன்றி ;-)

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

அண்ணா ,இந்தத் தொடரின் நோக்கமே, ஆதி சங்கரர் அனைவருக்கும் நல்லா தெரியணும். அது நடந்தால் அடுத்த கட்டமா அவரோட அத்வைதம் ஈசியா புரியும்

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி


@மனோ
நன்றி மக்கா

எல் கே சொன்னது…

@மோகன் ஜி

உண்மை மோகன் ஜி. நமக்கு நம் பாட்டி/தாத்தா சொன்னதை அடுத்த தலைமுறைக்கு தரவேண்டும். கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அப்படி செய்யாவிடில் நமது கடமையில் இருந்து தவறியவர்கள் ஆகிறோம்

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்
நாம் எல்லோரும் குழந்தைகள் தானே அண்ணாச்சி

thirumathi bs sridhar சொன்னது…

எளிய நடையில் உள்ளதால் படிப்பவர்களுக்கு ஆர்வம் கூடும்.

ஸ்ரீராம். சொன்னது…

இந்தக் காலத்தில் விதண்டாவாதம் இல்லாத விவாதம் ஏது? நேர்மைதான் ஏது? ஹூம்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எளிமையாக சொல்லி, எல்லோருக்கும் புரிய வைக்க முயற்சி அழகு! நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி.

komu சொன்னது…

மிகவும் எளிய நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் ஜகத்குருவை
சொல்லி வருகிரீர்கள்.

Lakshmi சொன்னது…

சனந்தரின் குருபக்தியே அவரை பத்மபாதராக உயர்த்த உதவியது.

எல் கே சொன்னது…

@திருமதி ஸ்ரீதர்

நன்றிங்க . எல்லோருக்கும் புரிஞ்சா நல்லது

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா, இன்று விவாதங்கள் பலவற்றை பார்க்கும் பொழுது எனக்கு சங்கரரின் பல விவாதங்கள் ,குறிப்பா மிஸ்ரரிடம் நடக்கும் விவாதம் நினைவுக்கு வருது

எல் கே சொன்னது…

@வெங்கட்


நன்றி

எல் கே சொன்னது…

@கோமு

நன்றி

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

ஆமாம். அதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று

அமைதிச்சாரல் சொன்னது…

நல்லா போகுது..

கோமதி அரசு சொன்னது…

//குருவின் துணை இருப்பின், சம்சார சாகரத்தையே தாண்ட முடியும், இதில் இந்த கங்கை எம்மாத்திரம் ?//

உண்மைதான்.

பத்ம பாதர் வாழ்க்கை குரு பக்திக்கு எடுத்துக்காட்டு.

நல்ல பகிர்வு எல் கே.

ஜிஜி சொன்னது…

எளிமையா புரியற மாதிரி சொல்லி இருக்கீங்க.நன்றி

சுசி சொன்னது…

இப்போதான் தெரிஞ்சுக்கறேன்.. பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.

கோவை2தில்லி சொன்னது…

சனந்தரின் குரு பக்தியை பற்றி தெரிந்து கொண்டோம். பகிர்வுக்கு நன்றி.

எல் கே சொன்னது…

ஆமாம் மேடம். புராணங்களில் இருந்து நாம் கற்க வேண்டியது நெறைய இருக்கிறது . நன்றி

எல் கே சொன்னது…

@ஜி ஜி

நன்றிங்க

@சுசி
நன்றி

@கோவை
நன்றி

raji சொன்னது…

தங்களது இந்த தொடரை ஆரம்பத்தில்
இருந்து நன்கு படித்து அறிந்தால் மட்டுமே பின் கருத்துரை
போட இயலும் என்பதால் இத்தனை நாள் போட இயலவில்லை.
இன்றுதான் பூரணமாக படிக்க கூடிய சமயமும் பாக்கியமும்
அமையப் பெற்றேன்.
ஆதி சங்கரரைப் பற்றி கதை கேட்டும் படித்தும் அறிந்திருந்தாலும்
இப்பொழுது மீண்டும் படித்து அறியப் பெறுவது மிகுந்த பாக்கியமே

அது மட்டுமின்றி இத்தொடரை படிக்க ஆரம்பித்த சில
நிமிடங்களிலேயே, எங்கள் குடும்பத்தில் ஒரு முடிவும் எடுக்க இயலாத
விஷயம் ஒன்று சுபமான செய்தியாய் நல்ல ஆரம்பமாக ஆகி விட்டது.
பகிர்வுக்கு நன்றி எல் கே சார்,தொடருங்கள்
இனி உடனுக்குடன் படிக்க இயலும்

எல் கே சொன்னது…

@ராஜி

நன்றிங்க. எல்லாம் அந்த ஆதி சங்கரர் மற்றும் மகாப் பெரியவாளின் அருள். உங்கள் வீட்டில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கப் பிரார்த்திக்கிறேன்