பிப்ரவரி 21, 2011

நினைவுகள் 13

காதலிப்பவர்களுக்கு எல்லாம் இன்பமாகத் தோன்றும். காதல் தோற்றால் வரும் சோகத்தை ஈடுகட்டுவது போல் காதலிக்கும் சமயத்தில் எதிலும் மகிழ்ச்சியையும் ,இன்பத்தையும் மட்டுமே காண்பர். இந்தக் கூற்றை மெய்பிப்பது போல் சாருவின் கண்களுக்கும் எல்லாம் நன்றாகவேத் தோன்றியது .

ஜூலை மாதத்திலும் சூரியன் தன் ஆட்சியைக் குறைக்க விரும்பாமல் தொடர்ந்து சர்வாதிகாரம் செய்துக் கொண்டிருக்க , மதிய நேரம் மைதானத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவளுக்கு வெய்யில் ஒரு பொருட்டாய் தோன்றவில்லை. அவளது மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருக்க அதன் விளைவாய் நடையில் ஒரு வேகம் இருந்தாலும், அவனிடம் அதிகம் பேச முடியவில்லையே என்ற எண்ணம் அவளது வேகத்தை குறைக்க , நிதானமாய் நடக்கத் துவங்கினாள். அவள் கேண்டீனை அடைவதற்கும், அவள் தோழிகள் வகுப்பிலிருந்து அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

லைப்ரரி பக்கம் இருந்து இவள் வந்ததை கவனித்த இவள் தோழி , 

"எங்க போன ? கிளாஸ்ல ரொம்ப நேரமா இல்லை நீ ?"

"தலை வலிச்சது சரி கொஞ்சம் நேரம் ப்ரீயா இருக்கலாம்னு லைப்ரரி போயிட்டு வந்தேன் ".

"சரி வா சாப்பிடலாம் " என்று சாதரணமாய் சொன்னாலும், சரஸ்வதி கவனிக்காத பொழுது தன் மற்றத் தோழிகளைப் பார்த்து கண் சிமிட்ட, அவர்கள் அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டனர். அவர்கள் நினைத்தது சரிதான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் தொலைவில் வெங்கட் வந்துக் கொண்டிருந்தான். வந்தவன் கேண்டீன் பக்கம் வராமல், வெளியே செல்லும் பாதை நோக்கி சென்றான். 

கேண்டீனின் உள்ளே சென்றுவிட்டாலும், அவள் பார்வையும் மனமும் வெளியேதான் இருந்தது. மதிய உணவைக் கொறித்துக் கொண்டே வெளியேப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் அவன் வெளியில் செல்லுவது தென்பட்டது. அவன் எங்கு எதற்கு செல்கிறான் என்று அவளுக்கு ஏற்கனவேத் தெரியும். முதலில் இதை நிறுத்த வைக்கணும் என்று மனதில் சொல்லிக் கொண்டாள்.

பெண்கள் காதல் கொண்டாலே உடனடியாய் செய்வது காதலனின் பழக்கவழக்கங்களை மாற்றுவதுதான். சரஸ்வதியும் விதிவிலக்கில்லை அதற்கு. மாலையில் பேருந்தில் , அவன் பேசுவதைக் கேட்டு கொண்டு மௌனமாய் நின்றுக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்தால் கோபம் போய் விடுமென வேறு பக்கம் பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தாள். 

அவள் கோபத்துடன் இருப்பதுத் தெரியாமல், பேருந்தில் இருப்பதால், வேறு பக்கம் பார்க்கிறாளோ என்று நினைத்த வெங்கட், கொஞ்சம் நகர்ந்து அவள் பார்க்கும் வண்ணம் நின்றான். அவன் அங்கு சென்றவுடன் இவள் பார்வை வேறு பக்கம் திரும்ப, அப்பொழுதான் அவனுக்கு உரைத்தது எதோ தவறு என்று ஆனால் என்னத் தவறு என்றுப் புரியவில்லை அவனுக்கு. 

"என்ன ஆச்சு ? எதுக்கு இப்ப இந்தக் கோபம் ?"

"ஒன்னும் ஆகலை. "

"இல்லை எதோ விஷயம் இருக்கு . சொல்லு "

"உதட்டை பாரு . கறுத்துப் போய் கன்றாவியா இருக்கு . பாக்கவே சகிக்கலை ."

"இதுதான் விஷயமா ? " மெலிதாய் விஷமப் புன்னகைப் பூத்தது அவன் உதடுகளில் . புன்னகை அவள் கோபத்தை இன்னும் அதிகரிக்கவே செய்தது. 

இம்முறை அவள் பார்த்த பார்வைக்கு சக்தி இருந்தால் வெங்கட் அங்கேயே பஸ்மம் ஆகி இருப்பான். சுட்டெரிப்பது போல் பார்த்தாலும், அந்த விழிகளின் அழகு அவனை மயக்கியது. அவனது மயக்கம் அவனது விழிகளில் வெளிப்படத் தெரிந்தது .

"இனி நீ சிகரெட்டைத் தொடக் கூடாது "

"இப்ப அது என்ன பண்ணது உன்னை ? உன்னை ஒரு வாரமாத் தான் தெரியும். ஆனா இதை ஒரு வருசமாத்தான் தெரியும் ."

"புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா ? பதினேழு பதினெட்டு வருஷம் அது இல்லாமதான வளர்ந்த . அது இல்லாமல் இருக்க முடியாதுன்னு வழக்கமா விடற டயலாக்லாம் விடாத. இனி உன்னை சிகரெட்டோட பார்த்தேன் ..."

"என்ன என் கிட்ட பேச மாட்டியா ?"

"இல்லை உன் விரலை வெட்டிடுவேன் ."

ஒரு கணம் அவளது பதிலால் அதிர்ந்தான். ஒரு வேளை வேடிக்கையாய் சொல்கிறாளோ என்று அவள் முகத்தைப் பார்த்தான். அதில் தெரிந்த உறுதியும் இன்னும் குறையாத கோபமும் அவள் செய்தாலும் செய்வாள் என்று சொல்லாமல் சொல்லியது .

"சரி சரி விடறேன். ஆனால் உடனே முடியாது. கொஞ்சம் கொஞ்சமாய் விட்டுடுவேன். "

"பாக்கறேன். நான் விளையாட்டுக்கு சொல்லலை . நெஜமா செஞ்சிடுவேன். மறந்திராத . சரி பஸ் ஸ்டேன்ட் வரப் போது நான் முன்னாடி போறேன். "

போகும் முன், காதல் துவங்கிய அன்றே அவனிடம் அதிகமாய் கோபித்துக் கொண்டோமோ என்றுத் தோன்ற, அவன் கைவிரல்களுடன் தன் விரல்களைக் கோர்த்து அவன் கையை ஒரு முறை அழுத்தமாய் பிடித்து விட்டு, கண்களால் விடை பெற்று சென்றாள். 


அவள் முன்பக்கமாய் இறங்க , பேருந்தின் பின் பக்கம் இறங்கியவன், அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றான். மனதினுள் எல்லாப் பெண்களும் இப்படிதானா , காலையில் காதலை சொன்னவள் மாலையில் உரிமை எடுத்துக் கொண்டு சண்டை இடுகிறாளே? என்று வியந்தான். 

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் நடையினில் ஒரு கணம் தன்னை மறந்தான். அவள் பஸ் ஸ்டேண்டை விட்டு வெளியில் சென்றவுடன், இவன் கால்கள் அனிச்சையாய் டீக்கடையை நோக்கி சென்றன. 

வழக்கம்போல ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தவன் , அவள் சொல்லிய விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். உள்ளே இழுத்த நிகோடின் அவன் நுரையீரலை நிரப்பி வெளியே வர அவன் தீவிர யோசனையில் இருந்தான். பின் எதோ முடிவுக்கு வந்தவனாய் கீழே போட்டு அதன் ஆயுளை முடித்தவன் , தன் அறை நோக்கி நடக்கத் துவங்கினான். நினைவுகள் தொடரும் 


47 கருத்துகள்:

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

நினைவுகள்தொடரட்டும்...

RVS சொன்னது…

சிகரெட்டை விட்டுடுவான்! தெரிஞ்சுபோச்சு.. அப்புறம் என்ன.. கல்யாணம் ஆறதுக்கு முன்னால கைய முறிப்பாங்க.. அப்புறம் கழுத்தையா.. சும்மா சோக்குக்கு.. ;-)

கவிதை காதலன் சொன்னது…

இந்த நினைவுகள் ஏதேதோ நினைவுகளை கிளறிவிடுகிறது..

Lakshmi சொன்னது…

நினைவுகள் நல்லா இருக்கு.

சேட்டைக்காரன் சொன்னது…

//போகும் முன், காதல் துவங்கிய அன்றே அவனிடம் அதிகமாய் கோபித்துக் கொண்டோமோ என்றுத் தோன்ற, அவன் கைவிரல்களுடன் தன் விரல்களைக் கோர்த்து அவன் கையை ஒரு முறை அழுத்தமாய் பிடித்து விட்டு, கண்களால் விடை பெற்று சென்றாள். //

இடையிலே வாசிக்கத் தொடங்கினேன் என்றாலும், சில இடங்களில் சொல்லாட்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வாழ்த்துகள் கார்த்தி!

அப்பாவி தங்கமணி சொன்னது…

சொல்றத செய்யறான், அதான் சிகரட்டை விடறான்...அப்புறம் என்ன பிரச்சன, ஏன் பிரிஞ்சாங்க... நடந்தது என்ன? சாருவும் வெங்கட்டும்... ஹ்ம்ம்...நல்லா பொலம்ப விடற எங்களையும்... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் ப்ளீஸ்...:)

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தங்களோடைய நினைவுகளோடு.. என்னுடைய நினைவுகளையும் அசைப்போட வைத்தற்கு நன்றி..!
மற்றும் வாழ்த்துக்கள்..

பத்மநாபன் சொன்னது…

காதலின் வெற்றி சிகரெட்டை விடுவதில் ஆரம்பிக்கிறது ...தோற்றால் தொடர் சிகரெட்டுக்கு போய் விடுகிறது ...

//ஜூலை மாதத்திலும் சூரியன் தன் ஆட்சியைக் குறைக்க விரும்பாமல் தொடர்ந்து சர்வாதிகாரம் செய்துக் கொண்டிருக்க //

வர்ணனைகள் அருமையாக வந்திருக்கிறது ...

எல் கே சொன்னது…

@கருண்
நன்றி நண்பரே

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

நான் எதுவுமே சொல்லலையே ..

//கல்யாணம் ஆறதுக்கு முன்னால கைய முறிப்பாங்க.. அப்புறம் கழுத்தையா.//

உங்க சொந்த அனுபவமோ ???

எல் கே சொன்னது…

@கவிதை காதலன்

ஹ்ம்ம். பார்த்துங்க அப்படியே மூல்கிடப் போறீங்க.


@லக்ஷ்மி

நன்றிமா

எல் கே சொன்னது…

@சேட்டை

உங்களை போன்றோரின் வாழ்த்துக்கள் என்னை ஊக்குவிக்கிறது நன்றி

எல் கே சொன்னது…

@அப்பாவி

இது உனக்கே நியாயமா இருக்கா ?? நான்தான் வாரத்தில் இரண்டு அல்லது மூணு பதிவு போட்டுடறேன். நீ கேட்டக் கேள்வியை நான் கேட்டா அர்த்தம் இருக்கு ..

இதை கேட்க ஆள் இல்லையா ?? எங்கே அனாமிகா ??

எல் கே சொன்னது…

@சௌந்தர்
நன்றி நண்பரே... பலருடைய நினைவுகளையும் இது கிளரும்

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

நன்றி அண்ணா. எல்லாம் பெரியவா ஆசிர்வாதம்


ஹ்ம்ம் அப்படியும் போகலாம்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ம்ம்… நூலகத்தில் இருந்து கேண்டீன், பின் அங்கிருந்து பஸ் ஸ்டேண்ட். நினைவுகள் தொடர்கின்றன – நன்று. அடுத்த பகுதியில் சந்திப்போம்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

இப்ப பிரச்சனை சிகரெட்டா.. அப்பிடின்னா விடவேண்டியதுதானே.. :))

சுசி சொன்னது…

காதல் வந்தா இந்த பசங்களும் சொல்பேச்சு கேக்க(றதா நடிக்க) ஆரம்பிச்சிடறாங்க இல்லை..

asiya omar சொன்னது…

நல்லா போகுது.தொடரவும்.

ஸ்ரீராம். சொன்னது…

முதல் நாளே சிகரெட்டில் ஆரம்பிக்கும் அதிகாரம் அப்புறம் எங்கெங்கே போகுமோ என்ற பயத்தில் காதலின் தீவிரம் அவனுக்குக் குறைய ஆரம்பித்து விடும்...!!!

vanathy சொன்னது…

நல்லா இருக்கு. பரவாயில்லையே நான் சொன்னதும் வாயில் இருந்த சிகரெட்டை வீசீட்டாரே ஹீரோ!!!!

அமைதிச்சாரல் சொன்னது…

சிகரெட் பிடிச்சா விரலை ஒடிச்சிடுவேன்ன்னு ஹீரோயின் சொல்றாங்க. ஹீரோவுக்கு வேற ஏதாவது பழக்கம் இருக்கா?? அப்புறம் கழுத்தை முறிச்சிடுவேன்னு கிளம்பிடப்போறாங்க :-))

எல் கே சொன்னது…

@வெங்கட்
தப்பு. பஸ் ஸ்டாண்ட்ல இருந்த நூலகம், அங்கிருந்து கேண்டீன் அப்புறம் இப்ப பஸ் , ஓகேவா ?

எல் கே சொன்னது…

@தேனம்மை
பார்ப்போம் சிகரெட்டா இல்லையான்னு ?

எல் கே சொன்னது…

@சுசி
ஆமாம் சுசி. நடிச்சுதான ஆகணும். உங்க கண்ணாலனும் அப்படிதானா ?>

எல் கே சொன்னது…

@ஆசியா
நன்றி சகோ

@ஸ்ரீராம்
ஆமா அண்ணா. பொண்ணுங்க இப்படிதான். கொஞ்சம் இடம் கொடுத்தா .....

எல் கே சொன்னது…

@வாணி
ஓஹோ அப்ப நீங்கதான் அந்த சாருவா ??

எல் கே சொன்னது…

@சாரல்

அவ் ஏன் வெங்கட் மேல இந்தக் கொலை வெறி

வித்யா சொன்னது…

காலேஜ் டேஸ்...

நினைவுகள் நல்லா போகுது..

S Maharajan சொன்னது…

நினைவுகள் நல்லா போகுது..

எல் கே சொன்னது…

@வித்யா
நன்றி..

@மகாராஜன்

நன்றி

raji சொன்னது…

காதல் என்னவெல்லாம் செய்ய வைக்குதப்பா!!!

Chitra சொன்னது…

காதலிப்பவர்களுக்கு எல்லாம் இன்பமாகத் தோன்றும். காதல் தோற்றால் வரும் சோகத்தை ஈடுகட்டுவது போல் காதலிக்கும் சமயத்தில் எதிலும் மகிழ்ச்சியையும் ,இன்பத்தையும் மட்டுமே காண்பர். இந்தக் கூற்றை மெய்பிப்பது போல் சாருவின் கண்களுக்கும் எல்லாம் நன்றாகவேத் தோன்றியது


......எதார்த்தம்!

எல் கே சொன்னது…

@ராஜி
ஆமாம். காதல் வந்தாலே இப்படிதானே

@சித்ரா
நன்றி

Jaleela Kamal சொன்னது…

ரொம்ப அருமை, ரசிக்கும் படியாக இருக்கு, சிக்ரெட் விடலன்னா விரல வெட்டிடுவேன்னது பக் என்று இருந்தது.

எல் கே சொன்னது…

@ஜலீலா

அப்படி சொல்லியும் அவன் விடலையே ??

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்க லவ்வர்ஸ் பேரு சொல்லவே இல்லையே.. ஹி ஹி

சே.குமார் சொன்னது…

நினைவுகள் தொடரட்டும்...

கோவை2தில்லி சொன்னது…

கதை நல்லா போயிட்டு இருக்குது. பார்ப்போம் சிகரெட்டை விடுவாரா, இல்லையா என்று!

அன்னு சொன்னது…

good going... (naan cigarettai vida mudivu seythathai sonnen.. hi hi )

எல் கே சொன்னது…

@செந்தில்

யோவ் நான் காலேஜ்ல படிச்சப்ப சரஸ்வதி மாதிரி யாரும் இல்லை இருந்த முயற்சி பண்ணி இருக்கலாம்

எல் கே சொன்னது…

@குமார்

நன்றி

எல் கே சொன்னது…

@ஆதி
பார்ப்போம்

எல் கே சொன்னது…

@அன்னு
அவன் எங்க விட்டான்

கோவை ஆவி சொன்னது…

சூப்பரா போகுதுங்கோவ்!!

எல் கே சொன்னது…

@கோவை
நன்றி நண்பரே

geethasmbsvm6 சொன்னது…

பெண்கள் காதல் கொண்டாலே உடனடியாய் செய்வது காதலனின் பழக்கவழக்கங்களை மாற்றுவதுதான்//

ம்ம்ம்ம் சரிதான், அப்போ possessiveness தான் பிரச்னையா? ம்ம்ம் சரி, சரி, போங்க பார்க்கலாம், என்ன சொல்லப்போறீங்கனு! :)))))