பிப்ரவரி 17, 2011

நினைவுகள் 12

சாருவை அங்குக் கண்ட வெங்கட் , வெகு நாள் தேடிக் கிடைக்காத பொருள் கிடைத்தது போல் மகிழ்ந்தான். அது அவன் முகத்தில் வெளிப்படையாய் தெரிந்தது. சில நொடிகளே இருந்த அந்தப் புன்னகையை விடுத்து முகத்தை சாதாரணமாய் மாற்றிக் கொண்டான். அவள் எதாவது நினைப்பாளோ என்ற எண்ணமே அதற்குக் காரணம்.

"சொல்லு சாரு . எதாவது புத்தகம் எடுக்க வந்தியா ?"

தான் எதற்கு வந்திருக்கிறோம் என்று தெரிந்து விளையாடுகிறானா இல்லை உண்மையிலேயே எதுவும் தெரியாமல் கேட்கிறானா என்று சில நொடிகள் குழம்பினாள் .

அவளிடம் கேள்வியைக் கேட்டுவிட்டு அவளை உற்றுப் பார்த்தான். அப்படிப் பார்ப்பது சரியில்லை எனத் தெரிந்தாலும் ,அவனால் பார்வையை விலக்க இயலவில்லை. அவள் முகத்தில் காதலின் அடையாளம் தெரிகின்றதா என்றுப் பார்த்தான். மையிட்டு கருத்த விழிகளில் குழப்பமே இருந்ததுக் கண்டு சோர்வுற்றான்.

"இல்லை ...." அவள் குரலில் சிறிய நடுக்கம் தோன்ற, வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தாள்.

"அப்ப, வேற என்ன விஷயம் ?"

"உங்கக் கிட்ட கொஞ்சம் பேசணும்."

"என்ன பேசணும் ?". கேட்டவன் , திடீரென்று எதோ நினைத்தவன் போல் ,

" சரி .வா . கேண்டீன் இல்லாட்டி பேஸ்கட்பால் கோர்ட்டுக்கு போய்டலாம். "

"கேண்டீன் வேண்டாம் ."

"ஏன் ?"

"அங்க உங்க பிரெண்ட்ஸ் இருக்காங்க. அங்க போய்ட்டுதான் இங்க வந்தேன்".

"ஓ ! சரி வா பேஸ்கட் பால் கோர்ட்டுக்கு போகலாம்."


கல்லூரிக் கட்டிடங்களில் இருந்து விலகி இடது புறம் தனியாய் இருந்தது பேஸ்கட்பால் கோர்ட். ஒருபக்கம் , ஆட்டத்தைப் பார்ப்பவர்கள் அமர வசதியாய் படிக்கட்டுகள் போல் சிமெண்டில் போடப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்துக் கொண்டிருந்தனர்.

வெங்கட் முன்னே வேகமாய் நடந்து சென்றுவிட, அவன் பின்னே , நிதானமாய் நடந்து சென்றாள் அவள். அவளின் நடை வேகத்திற்கு ,அவளது சிந்தனை இடையூறாய் இருந்தது. அவனிடம் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டாளேத் தவிர , எப்படி பேசுவது என்று சிந்திக்கவில்லை. எதுவும் பேசாமல் திரும்பி விடுவோமா என்று ஒரு கணம் நினைத்தாள். பின் அப்படி செய்வது நன்றாக இராது என்று நினைத்து வேகமாய் நடக்கத் துவங்கினாள்.

அவன் அமர்ந்து இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகே சாரு அங்கு வந்தாள். வந்தவள் அங்கு உட்காராமல் , நின்று கொண்டே இருக்க,

"ஏன் நிக்கற ? உட்காரு " அருகில் இருந்த இடத்தைக் காண்பித்த வெங்கட் தன் வலப்புறம் விலகி அமர்ந்தான்.

அவன் காண்பித்த இடத்தில் அமர்ந்தவள் , எதுவும் பேசாமல் கையில் இருந்த கைகுட்டையில் முடி போட்டுக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் அமைதியாய் இருந்த வெங்கட், பின் பொறுமை இழந்தவனாய்

"பேசணும்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?"

எப்படி பேசுவது என்ற சிந்தனையில் மூழ்கி இருந்த சாருவை அவன் குரல் இவ்வுலகுக்கு இழுத்தது.

"பேசணும் ஆனால் எப்படி ஆரம்பிக்கறது என்றுதான் தெரியலை."

"அப்படி என்ன விஷயம் ?"

"இல்லை... அன்னிக்கு பஸ் ஸ்டாப்ல உங்களைப் பார்த்தப்ப இருந்து மனசு சரி இல்லை . "

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றுப் புரிந்தாலும் , வேண்டும் என்றே அவளை சீண்ட எண்ணி

"அப்ப சீக்கிரம் ஒரு டாக்டரை பார்க்க வேண்டித்தானே ?. என்கிட்டே ஏன் அதுக்கு பேசணும் ?"

என்று சிரிக்காமல் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு சொல்ல , தான் சீரியசாய் ஒரு விஷயம் பேசவந்தால் அதைப் பற்றி பேசாமல், ஜோக் அடிக்கும் வெங்கட்டின் மேல் சினம் கொண்டவளாய் , அவனை எரிப்பது போல் முறைக்க

"சரி சரி . ரிலாக்ஸ் ரிலாக்ஸ் . டென்சன் ஆகாத. நீ என்ன சொல்ல வரேன்னு எனக்குப் புரியுது ."

கொஞ்சம் வேடிக்கையை விட்டுட்டு சீரியஸா பேசறேன். நீ நினைக்கற அந்த உணர்வுகள் எனக்கும் இருக்கு . ஆனால் நாம பார்த்துப் பேசி ஒரு நாலு நாள் கூட ஆகலை. அதுக்குள்ள காதல் என்பது கொஞ்சம் ஓவரா இருக்கு . இருந்தாலும் இது வரைக்கும் நான் பார்த்தப் பழகின எந்த பெண் கிட்டயும் வராத உணர்வு இது.

நமக்குன்னு சில கடமைகள் இருக்கு. ஒழுங்கா படிக்கணும். பிறகு ஒரு வேலை வேணும். இதெல்லாம் நடக்கற வரைக்கும் பொறுமையாதான் இருக்கணும்.

அவன் பேச பேச , சாருவின் கண்களின் ஓரங்களில் கண்ணீர்க் கரைத் தட்டியது போல் சேரத் துவங்கியது.

அவளின் முகம் பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தவன் , அவள் பக்கம் திரும்பியபொழுது அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீரைப் பார்த்தவன், தன்னிச்சையாய் கை நீட்டி அவற்றை துடைத்து விட்டான்.

அவனின் அந்த செயல், அவன் மனதை சொல்லாமல் சொல்லியது போல் உணர்ந்தாள். அதன் பிறகும் பேசாமல் அமர்ந்திருந்தவளிடம் "ஏன் இப்ப என்னாச்சு ? இப்ப எதுக்கு வாய்க்கு பூட்டு போட்ட மாதிரி உட்கார்ந்திருக்க ??"

"என்னாதான் இருந்தாலும், உங்கள் வாயால் சொல்வது போல இல்லை ."

அவன் வார்த்தைகளில் அவன் மனம் வர வேண்டும் என்று உணர்த்தினாள். பல சமயங்களில் ஆண்களுக்கு அது புரிவதில்லை . வெளிப்படையாய் சில நேரங்களில் இருக்க அவர்களுக்குத் தெரிவதில்லை.

"இப்படி ஒரு ஆசையா ? நானும் உன்னை விரும்பறேன். போதுமா ? கொஞ்சம் சிரிச்சாதான் என்னவாம் ?"

அவன் வார்த்தைகளைத் தொடர்ந்து , அவள் முகத்தில் புன்னகை பூக்கத் துவங்கியது.

"சரி. நீ முதலில் கிளம்பு. வேற யாராவது பார்த்தால் பிரச்சனை. காலேஜ் முடிஞ்சப் பிறகு பஸ்ல பார்க்கலாம் "

அவனுடன் இன்னும் சிறிது நேரம் இருக்க விரும்பினாலும், அவன் சொல்வது சரியெனப் பட்டதால் , மெதுவாகக் கிளம்பினாள்.


-நினைவுகள் தொடரும்

அன்புடன் எல்கே

48 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

From Library to Basket Ball Court - Good going :) Where next?

middleclassmadhavi சொன்னது…

//நமக்குன்னு சில கடமைகள் இருக்கு. ஒழுங்கா படிக்கணும். பிறகு ஒரு வேலை வேணும். இதெல்லாம் நடக்கற வரைக்கும் பொறுமையாதான் இருக்கணும். //
சபாஷ்!

அமைதிச்சாரல் சொன்னது…

அருமையா போகுது..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>"அப்ப சீக்கிரம் ஒரு டாக்டரை பார்க்க வேண்டித்தானே ?. என்கிட்டே ஏன் அதுக்கு பேசணும் ?"


லொள்ளு?

பத்மநாபன் சொன்னது…

காதல் வந்தால் கண் மண் தெரியாதே .. வெங்கட் இவ்வளவு பொறுப்பா பேசுவது ஆச்சர்யம்...இப்படி பேசினாத்தான் இன்னமும் காதல் கூடும் என்று தெரிந்து தான் பொறுப்பை கூட்டிக்கொள்கிறானோ...

சாருவின் ரியாக்சன் என்ன..எப்படி உடைகிறது ஒரே சஸ்பென்ஸா போகுது..

raji சொன்னது…

பொறுப்பான காதல்.
இருந்தாலும் இந்த நிலைமை மாறி இருவரும் நகர்ந்தது
எப்படி என அறிய ஆவல் அதிகரிக்கிறது.கொஞ்சம் சீக்கிரம்..

அப்பாவி தங்கமணி சொன்னது…

// பல சமயங்களில் ஆண்களுக்கு அது புரிவதில்லை . வெளிப்படையாய் சில நேரங்களில் இருக்க அவர்களுக்குத் தெரிவதில்லை//
ஹா ஹா ஹா... ஒண்ணுமில்ல... சும்மா சிரிப்பு வந்தது...:)

சூப்பர்...slow & steady காதல்... நடக்கட்டும்... ஆனா போஸ்ட் அநியாயத்துக்கு குட்டி போஸ்ட்... படிக்க ஆரம்பிச்சதும் முடிந்தது போல் இருக்கு... அடுத்த போஸ்ட் பெருசா போடலைனா நான் உங்க வீட்டு முன்னாடி தர்ணா பண்ணுவேன்... அப்புறம் நீ டீ காப்பி டிபன் எல்லாம் வேற சப்ளை பண்ணனும்... யோசிச்சுக்கோ.... :))))

அப்பாவி தங்கமணி சொன்னது…

//அப்ப சீக்கிரம் ஒரு டாக்டரை பார்க்க வேண்டித்தானே ?. என்கிட்டே ஏன் அதுக்கு பேசணும்//

இந்த காதல்/கண்றாவி ஆரம்பிச்சா எப்படியும் கடைசீல அங்க தான் போகணும்...ஏன் இப்பவே போகணும்னு சாரு நினைச்சாளாம்... சாருவோட மைண்ட்வாய்ஸ் சொல்லுச்சு... :))))

வித்யா சொன்னது…

நிறைய அட்வைஸ்ற நினைவுகள்:))

asiya omar சொன்னது…

கதை மெதுவாத்தான் நகரும் போல,தொடருங்க சகோ.

ஸ்ரீராம். சொன்னது…

நிறைய சமயங்களில் வெளிப்படையாகப் பேச ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் வராது!! அமையும் காரணம் அபபடி!

S.Menaga சொன்னது…

ரொம்ப நல்லா போகுது....

Chitra சொன்னது…

very nice.... :-)

thirumathi bs sridhar சொன்னது…

பவ்யமான காதல்

Philosophy Prabhakaran சொன்னது…

// அவளின் முகம் பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தவன் , அவள் பக்கம் திரும்பியபொழுது அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீரைப் பார்த்தவன், தன்னிச்சையாய் கை நீட்டி அவற்றை துடைத்து விட்டான். //

சூப்பர்ப்...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

interesting..

கோவை2தில்லி சொன்னது…

சினிமாவா இருந்தா காதலை வெளிபடுத்திய இந்நேரம் கனவுல ஒரு டூயட் பாடியிருப்பாங்க!
இவங்க ரொம்ப பொறுப்பா இருக்காங்கலே!
அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்.

சுசி சொன்னது…

அப்போ நானும் கிளம்பறேன்.. அடுத்த பகுதிக்கு வரேன் :)

கோவை ஆவி சொன்னது…

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு..

எல் கே சொன்னது…

@வெங்கட்

வேறங்க போலாம் ? நீங்களே சொல்லுங்களேன் ?

எல் கே சொன்னது…

@மாதவி

நன்றிங்க

@சாரல்
நன்றி

எல் கே சொன்னது…

@செந்தில்
ஆமாம் சித்தப்பு

எல் கே சொன்னது…

@ரசிகமணி அண்ணா

அப்படி ஒரு கோணம் இருக்கா ??

எல் கே சொன்னது…

@ராஜி

கண்டிப்பா சீக்கிரம் போடறேன்

எல் கே சொன்னது…

@அப்பாவி

உண்மை அதுதானே. இந்த மாதிரி உண்மைய ஒத்துக்க மனசு வேண்டும்.. ஓகேவா?


தாராளமா வா. டிபன் நீ பண்ண இட்லி ஓகே ??

எல் கே சொன்னது…

@அப்பாவி

சாருக்கு மைன்ட் வாய்ஸ் இல்லை. அவ என்ன இட்லி ......?

எல் கே சொன்னது…

@வித்யா

நன்றிங்க

@ஆசியா
ஹ்ம்ம் ஆமாம்

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

ஓஹோ அப்படியா ? எனக்கு தெரியாது

எல் கே சொன்னது…

@மேனகா
நன்றி


@சித்ரா

நன்றி

@திருமதி ஸ்ரீதர்

நன்றி

எல் கே சொன்னது…

@பிரபாகரன்
நன்றி

@செந்தில்
நன்றி தலைவரே

எல் கே சொன்னது…

@ஆதி


அப்ப ஒரு டூயட் போட்டுடலாம் .. ஓகேவா ?

எல் கே சொன்னது…

@சுசி

அப்படியா சரி சரி பை

எல் கே சொன்னது…

@கோவை ஆவி


மலரும் மலரும் ....

vanathy சொன்னது…

தல, கதை நல்லா போவுது. சோகமா முடிச்சுடாதீங்க சரியா?

எல் கே சொன்னது…

@வாணி

கவலை வேண்டாம். சோகம் இருக்காது

GEETHA ACHAL சொன்னது…

ஆஹா...சூப்பராக போய்கொண்டு இருக்கின்றதே...தொடரட்டும்...

RVS சொன்னது…

காதல் சொல்லியாச்சு.. கடைசியா சொல்லச் சொல்லச் இனிக்குதடான்னு இருக்கு லவ்வு...

லவ்வுன்னா லவ்வூ மண்ணெண்ன ஸ்டவ்வு.. ;-)
பத்திக்கிச்சுன்னு சொன்னேன்! ;-)

சென்னை பித்தன் சொன்னது…

’மையிட்டுக் கருத்தவிழிகளை’ உங்களுக்கு மிகவும் பிடிக்குமோ!
தொடரட்டும் காதல்!

எல் கே சொன்னது…

@கீதா அச்சில்
நன்றி

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

இந்த வரிகளில் ஒரு பாடல் இருக்கு . படம் விக்ரம் நடித்த மீரா என்று நினைவு .

எல் கே சொன்னது…

@பித்தன்


ஆமாம் சார். கருவிழிகளின் காதலன் நான்

அன்னு சொன்னது…

ஹ்ம்ம்... போகட்டும் போகட்டும் :)

எல் கே சொன்னது…

@annu

enga porathu???

ஜிஜி சொன்னது…

கதை ரொம்ப விறுவிறுப்பா போய்ட்டிருக்கு.எப்படி முடிக்கப் போறீங்கலோன்னு ஒரே ஆவலா இருக்கு.காத்திருக்க விடாம சீக்கிரம் அடுத்த பாகத்தை எழுதுங்க.

எல் கே சொன்னது…

@ஜி ஜி
நன்றி.. அடுத்த பகுதி போட்டாச்சு

Jaleela Kamal சொன்னது…

படிக்க நல்ல இருந்தது, நேரமின்மையால் லேட்டு, அதுக்காக பெஞ்சு மேல ஏத்தக்கூடாதாக்கும்

எல் கே சொன்னது…

@ஜலீலா
அதெப்படி கண்டிப்பா பனிஷ்மென்ட் உண்டு. என் பதிவுகள் எல்லாத்தையும் நூறு முறை படிக்கணும் டெஸ்ட் வைப்பேன்

geethasmbsvm6 சொன்னது…

பல சமயங்களில் ஆண்களுக்கு அது புரிவதில்லை . வெளிப்படையாய் சில நேரங்களில் இருக்க அவர்களுக்குத் தெரிவதில்லை. //

நல்லா இருக்கு, பொதுவாய் ஆண்கள் இப்படினாலும் ஒரு சிலர் வெளிப்படையாகவும் இருப்பாங்க. அதே போல் சில பெண்களும் இருக்காங்க. இது அவங்க வளர்ந்த சூழ்நிலையாய் இருக்கலாமோ என்னமோ.