பிப்ரவரி 14, 2011

நினைவுகள் 11

தன்னைப் பின்தொடர்ந்து அவன் வருகிறான் என்பதை அறிந்துக் கொண்டு தன் நடையின் வேகத்தைக் குறைத்து ,பாதங்கள் நோகுமோ இல்லை செருப்புதான் நோகுமோ என்று அன்ன நடை நடக்கலானாள். அவள் வேகத்தை குறைத்தவுடன், தனது வேகத்தை அதிகரித்து அவளை எட்டிப் பிடித்தவன், "அன்னிக்கு பசங்க அப்படி பண்ணி இருக்கக் கூடாது . அதுக்கு அவங்க சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் . இதை பெருசு பண்ண வேண்டாம் அப்படியே விட்டுடு" என்று அன்று நடந்த சம்பவத்தை துணைக்குக் கொண்டுவந்து பேச்சைத் துவங்கினான்,

ஒரு கணம் தனது நடையை நிறுத்தியவள் , அவனிடம் துடுக்காய் " அப்படி சொல்லாம இருந்தால் என்ன தருவீங்க ?" என்று வினவ,

"உன் இஷ்டம் எதுவேண்டுமானாலும். கேளு."

"சரி நான் எனக்குத் தோணும் பொழுது கேட்டு வாங்கிக்கறேன். "

" இது வரைக்கும் உங்க பேர் தெரியாது ? உங்க பேர் என்ன ? "

"வெங்கட் ராம். சுருக்கமா வெங்கட் ."

"ஹ்ம்ம் சரி. ஈவ்னிங் பார்க்கலாம்ங்க. "

புன்னகையோடு அவனிடம் இருந்து விடை பெற்று சென்றாள். அவனிடம் இன்னும் சிறிது நேரம் பேச வேண்டும் என்று விரும்பினாலும், பார்ப்பவர்கள் தப்பாக எண்ணுவார்களோ என்ற எண்ணம் அவளை சீக்கிரம் செல்லத் தூண்டியது. அவனிடம் பேசியது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்க , அவள் முகம் புன்னகையில் மின்ன வகுப்பறையை அடைந்தாள்.

வகுப்பில் பாடங்களில் ஒன்ற மனம் மறுக்க, தன்னையே நொந்துக் கொண்டிருந்தாள். அவன் உதவியது சாதாரண நிகழ்ச்சிதானே அதற்கு ஏன் நான் இப்படி நினைக்கிறேன் என்று அவளின் மனதின் ஒரு புறம் அவளிடம் சண்டைப் போட, அவள் வயதோ அதற்கு வேறு விடை அளித்தது. பலரும் ராகிங் செய்யப் பட்டாலும் தன்னை மட்டும் அவன் ஏன் காப்பாற்ற வேண்டும். தன் மேல் எதோ விருப்பம் இருப்பதனால்தானே அவன் அவ்வாறு செய்தான் என்று நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தது.

இவள் இங்கே தன் மனதுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த அந்நேரம், அங்கே, வெங்கட்டின் நண்பர்கள் அவனை கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

"என்னடா! ஒரே நாளில் இப்படி ஆய்ட்ட? " காலையில் இருந்து மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி சுத்திகிட்டு இருக்க?

"இல்லடா மச்சி. அவ பார்வையில் எதோ இருக்குடா . அந்தக் கண்ணை பார்த்தியா ? ஆளை ஊடுருவிப் பார்க்குது அது . கண்ணாடா அது ??"

ஏற்கனவே அவனை கிண்டலடித்துக் கொண்டிருந்தவர்கள் , அவனை மேலும்
வெறுப்பேற்ற அவர்களிடம் இருந்து தப்பினால் போதும் என்று அங்கிருந்து ஓட்டம் எடுத்தான் வெங்கட்.

லைப்ரரி சென்று தனிமையில் அமர்ந்தவன் அவளைப் பற்றி சிந்திக்கத் துவங்கினான். கடந்த ஒரு வருடத்தில் பலப் பெண்களை அவன் கல்லூரியில் கண்டுப் பழகியிருந்தாலும் தன் மனம் ஏன் சாருவை வட்டமிடுகிறது என்று அவனுக்குப் புரியவில்லை. பார்த்தவுடன் காதல் கொள்ளும் தன் நண்பர்களைக் கிண்டலடிக்கும் அவனுக்கு இது புதிதாய் இருந்தது. ஒருவேளை இதுதான் காதலோ என்றுக் குழம்ப ஆரம்பித்தான்.

ஒருவேளைக் காதல் என்றாலே குழப்பம்தானோ என்று நினைத்துக் கொண்டு கையில் இருந்த புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த பொழுது ,

"வெங்கட் .." என்று யாரோ அழைக்கும் சப்தம் உலகிற்கு இழுத்தது. புத்தகத்தில் இருந்து அசுவாரசியமாய் தன் பார்வையைத் திருப்பியவன் சாரு நிற்பதுக் கண்டு நொடியில் முகம் மலர்ந்தான்.

இதுநாள் வரை இப்படி குழப்பம் எதுவும் சந்தித்திராத சாரு , நேரடியாய் அவனிடம் பேசுவது என்றும், தேவை இல்லாமல் குழப்பங்கள் பிரச்சனையில்தான் சென்று விடும் என்று முடிவெடுத்து அவனை தேடிக் கொண்டு கேண்டீன் சென்றவள் , அவன் லைப்ரரி பக்கம் செல்வதைப் பார்த்தாள். உடனடியாக பின் தொடர்வது சரியல்ல என்று எண்ணியவள் ,சிறிது நேரம் கழித்து லைப்ரரி வந்தாள்.


- நினைவுகள் தொடரும்

அன்புடன் எல்கே

39 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

காதல் கதையா? இருங்க படிச்சுட்டு வர்றேன்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஓ தொடரா? அம்பேல்

>>>>ஒருவேளை இதுதான் காதலோ என்றுக் குழம்ப ஆரம்பித்தான்.

ஒருவேளைக் காதல் என்றாலே குழப்பம்தானோ என்று நினைத்துக் கொண்டு

நல்ல லைன்ஸ்

ஸ்ரீராம். சொன்னது…

என்ன பேசினாள்...?

பத்மநாபன் சொன்னது…

கதையில்,காதல் மொட்டு விட்டு மலர ஆரம்பித்ததை சரியாக காதலர் தினத்தில் தொடங்கி விட்டீர்கள்.....

RVS சொன்னது…

அப்புறம்.. சைலேன்ஸ் ... காதல் செய்யும் நேரமிது அப்படின்னு ரஜினி கெளதமி மாதிரி லைப்ரரில காதல் பண்ணினாங்களா.. ;-)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பஸ் ஸ்டேண்டிலிருந்து இப்போ நூலகத்திற்கு!! ரைட் ரைட்.....

கோவை2தில்லி சொன்னது…

நடக்கட்டும்…….நடக்கட்டும்……………

சுசி சொன்னது…

//அவ பார்வையில் எதோ இருக்குடா . அந்தக் கண்ணை பார்த்தியா ? ஆளை ஊடுருவிப் பார்க்குது அது . கண்ணாடா அது ??"//

ம்க்கும்.. அதுசரி.. ரைட்டு.. இதில எது பொருந்தும்??

கோவை ஆவி சொன்னது…

// ஒருவேளைக் காதல் என்றாலே குழப்பம்தானோ //

அது எப்பவுமே குழப்பம் தானே!!

komu சொன்னது…

இந்த எபிசோட் வாலண்டைன்ஸ் டே
ஸ்பெஷலா?

எல் கே சொன்னது…

@செந்தில்
முடிவா என்ன சொல்ல வர ??? நன்றி

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
சீக்கிரம் சொல்லிடறேன் அண்ணா

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
அண்ணா அப்படி எல்லாம் இல்லை. நேத்தே போடறதா இருந்தேன். ஜகத்குரு கொஞ்சம் இடைவெளி அதிகம் ஆனது மாதிரி தோணுச்சி சோ நேத்து அதை போட்டுட்டு இன்னிக்கு இதை போட்டேன்

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

அண்ணே ,இது கதைதான் .எனவே பாடல் எல்லாம் இல்லை. நீங்களே பாடிக்கலாம். நோ அப்ஜெக்சன்

எல் கே சொன்னது…

@வெங்கட்

கொஞ்சம் கொஞ்சமாதானே முன்னேரனும்

எல் கே சொன்னது…

@ஆதி

நடக்கும்

எல் கே சொன்னது…

@சுசி
என்ன சந்தேகம் இது ? எனக்குப் புரியலை

எல் கே சொன்னது…

@கோவை ஆவி

அதுவும் சரிதானே

எல் கே சொன்னது…

@கோமு
அப்படி எதுவும் இல்லீங்க

அப்பாவி தங்கமணி சொன்னது…

ஆஹா... கதை கலக்கலா போகுது... என்ன ஆகும்? எல்லாம் நல்லாதானே போகுது இது வரை... அப்புறம் என்ன சண்டை? ம்ம்... பார்ப்போம்... :)

raji சொன்னது…

காதலர் தினத்தன்னிக்கு காதலைப்
பற்றிய சிச்சுவேஷன்!!!!!!!

நல்லா இருக்கே.

கன்டின்யூ.....

vanathy சொன்னது…

super kathai. waiting for the next part.

Lakshmi சொன்னது…

நினைவுகளை நல்லாவே அசை போட வைக்கரீங்க.

thirumathi bs sridhar சொன்னது…

ப்ராக்டிக்கலான காதல் உணர்வு.தொடருங்கள்.

Philosophy Prabhakaran சொன்னது…

முழுவதும் நீயேன்னு ஒரு பதிவை பார்த்தேனே...

எல் கே சொன்னது…

@அப்பாவி

எதுவும் ஆரம்பத்தில் நல்லாத்தான் இருக்கும் . போக போக தான் பிரச்சனைகள்

நன்றி

எல் கே சொன்னது…

@ராஜி
இதெல்லாம் பிளான் பண்ணி பண்றது இல்லை. அதுவா அமையறது அவ்ளோதான்

எல் கே சொன்னது…

@வாணி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

ரொம்ப நன்றி மா

எல் கே சொன்னது…

@திருமதி ஸ்ரீதர்
நன்றிங்க

@பிலாசபி

அது இடம் மாறிடுச்சி

அன்னு சொன்னது…

kalakkalaa poguthungna. continue ... :)

வித்யா சொன்னது…

காதல் ஸ்பெஷல் பகுதியா??

நல்லாருக்கு.

சென்னை பித்தன் சொன்னது…

காதல் என்றால் குழப்பமேதான்!
சுவாரஸ்யமாகப் போகிறது!

Jaleela Kamal சொன்னது…

நினைவுகள் ம்ம்ம்ம்ம் நல்ல இருக்கு

எல் கே சொன்னது…

@அன்னு
நன்றி..


@வித்யா

அப்படி எதுவும் இல்லை. நன்றி

எல் கே சொன்னது…

@சென்னை பித்தன்

அது சரி...


@ஜலீலா

நன்றிங்க

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

ம்ம்ம் நல்லாயிருக்கு எல்கே.நன்றி

asiya omar சொன்னது…

அழகாக சுருக்கமாக எழுதுவதால் நினைவுகள் INTERESTING.பெரிய தொடரா?

Porkodi (பொற்கொடி) சொன்னது…

waiting for next part.. serthu comment panidalamnu :D