பிப்ரவரி 09, 2011

நினைவுகள் 10

பேருந்து நின்ற அந்த கணத்தில், ஓடிப் போய் ஏறிவிடலாமா என்று எண்ணிய வெங்கட், பின் தன் நண்பர்கள் செய்யும் கிண்டலைத் தாங்க முடியாது என்று அதைக் கை விட்டான். சிறிது நேரம் மனம் தேன் அருந்திய வண்டாய் அவளையே சுற்றிக் கொண்டிருந்தது. பின் நண்பர்களின் அரட்டையில் கலந்து அவளை மறந்தான்.

பேருந்தில் சென்ற சாருவோ அவனின் பார்வை அவளைத் தொடர்வதாய் எண்ணிக் கொண்டாள். பள்ளி செல்லும் பொழுதும் ஆண்களின் பார்வைக் கணைக்கு இலக்காகி இருந்தாலும் , இவனின் அந்த சில நொடிப் பார்வை அவளை ஊடுருவி இருந்தது. அவளின் வயதும் பருவமும் அவளை ஆட்டுவிக்க , அந்தப் பார்வையின் பொருளென்ன என்றெண்ணிக் குழம்பினாள்.

அதுநாள் வரை நிற்காமல் செல்லும் தெளிந்த ஆற்று நீராய் இருந்த அவள் மனது, கல் பட்டுக் குழம்பும் குட்டையாய் ஆனது. ஒரு புறம் மனம் குழம்பினாலும், மறுபுறமோ, அவள் வளர்ந்த சூழல் அவளைக் கட்டுப்படுத்த முயன்றது. ஆண்களிடம் இருந்து விலகி இருக்க சொல்லி வளர்க்கப்பட்ட விதம் எச்சரிக்கை மணி எழுப்ப, இரண்டின் மத்தியில் சிக்கி எப்புறமும் செல்ல இயலாமல் குழம்பினாள்.

குழம்பிய மனதுடன் வீட்டிற்கு வந்தவள் ,மாலை வீட்டில் விளக்கேற்றி இறைவனை வழிப்பட்ட பின் அதை மெள்ள மறந்து இயல்புக்கு வந்தாள். சிறுவயதில் இருந்து இறைபக்தி இயல்பிலேயே இருந்ததால் , தன் மனதை மாற்ற இறைவனையே நாடினாள்.

அடுத்த நாள் சனிக்கிழமை என்பது அவளுக்கு வசதியாய் இருந்தது. அந்த நிகழ்வை மறக்க உதவியது. இல்லை ,மறந்துவிட்டதாய் நினைத்துக் கொண்டாள். அன்று மதியம் தொலைகாட்சியில் எதோ ஒரு தமிழ்ப் படம் ஓட, அதில் ஒரு பேருந்துக் காட்சி, பார்த்தவுடன் இவள் மனது முதல் நாளுக்கு பின்னோக்கி ஓடியது. என்னதான் கடிவாளம் போட்டு நிறுத்த நினைத்தாலும், அவளது வயதும் மனதிற்கு உதவியாய் இருந்தது .

கல்லூரி செல்லும் அந்தப் பருவம் , கடிவாளம் இல்லாமல் ஓடும் முரட்டுக் குதிரை போன்றது. வயதும் பருவமும் ஆட்டி வைக்க, குரங்காட்டியின் கோலுக்கு ஆடும் குரங்கை போல் ஆடியது அவள் மனம். கட்டிலில் படுத்தவாறு , செயினை கடித்து தின்னுவிடுபவள் போல் கடித்துக் கொண்டு மாற்றுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை அவள் தாயின் குரல் இவ்வுலகுக்கு இழுத்து வந்தது.

இங்கு இவள் மனம் பேதலித்து இருக்க , அங்கு வெங்கட் வாரவிடுமுறைக்கு ஊருக்கு வந்தவன் தன் நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருந்தான். முதல் நாள் நிகழ்வுகள் அவன் மனதில் இருப்பதாகத் தெரியவில்லை. பெண்களை விட ஆண்களுக்கு கவன ஈர்ப்புகள் அதிகமாய் இருந்ததாலோ என்னமோ, அவனது மனம் பின்னோக்கி செல்லவில்லை. ஊருக்கு வரும் வரையில் அவளை சுற்றிய மனது ஊரில் இறங்கியவுடன் தன் நண்பர்களையும் அன்றைய நிகழ்வுகளையும் மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தது. ஊரில் இருந்த இரு தினங்களும் அவன் சாருவை பற்றி அதிகம் எண்ணவில்லை.

ஆனால், பேருந்தில் ஏறி திரும்பி வரத் துவங்கியவுடன் கல்லூரி நினைவுகளும் அதனுடன் இலவச இணைப்பை சாருவின் உருவமும் அவனை ஆட்கொள்ள துவங்கின. மையிட்ட அப்பெரியக் கருவிழிகள் அவன் கண் முன் தெரிய ,அதில் அவள் பார்த்தப் பார்வையில் இருந்த கோபம் ஒருகணமும் பின் கோபம் கனிவாய் மாறிக் காதலும் தோன்றியது அவனுக்கு.

முதல் சந்திப்பிலேயே காதல் வரும் என்று நம்பாத அவனுக்கு அவனது எண்ணங்கள் சிரிப்பாய் வரவழைக்க , தன் கற்பனையை எண்ணி ஒரு கணம் வாய்விட்டு சிரித்துவிட்டான். அதிகாலையில் ஊர் வந்து சேர்ந்தவன், பரபரப்பாய் கல்லூரிக் கிளம்பத் துவங்கினான். என்றும் இல்லாத அதிசயமாய் அவனது வேகம், அவனது அறை நண்பர்களுக்கு வியப்பளித்தது. வழக்கத்தை விட முன்னரே கல்லூரி வந்து சேர்ந்தவன், வழக்கமான டீக் கடையில் மங்கையவள் வருகைக்காய் காத்திருந்தான்.


வழக்கமாய் தன் ஒப்பனையில் அதிகம் கவனம் செலுத்தாத சாரு அன்று ஒன்றுக்கு பலமுறை கண்ணாடியில் தன் ஒப்பனையை சரிசெய்துக் கிளம்பினாள். மனதில் ஏதோப் படபடக்க , கல்லூரி சென்றவள் தன்னிச்சையாய் டீக் கடை பக்கம் ஒருகணம் பார்த்துவிட்டு பின் கவனிக்காதவள் போல் கல்லூரி நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் நோக்கியது ஒரு கணமே என்றாலும், அரைமனியாய் அங்குக் காத்திருந்தவன் கண்களில் சரியாக அது புலப் பட, தன் கையில் இருந்த சிகரெட்டை போட்டுவிட்டு அவளைப் பின்பற்றத் துவங்கினான்.

-நினைவுகள் தொடரும்


அன்புடன் எல்கே

39 கருத்துகள்:

raji சொன்னது…

பருவ வயசு கோளாறை தெளிவாக எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்.
கதை தொய்வில்லாமல் விறுவிறுப்பாகவும் சுவாரசியம் கொஞ்சமும்
குறையாமலும் செல்கிறது.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஐந்தாவது பாரா பிரமாதம் ...

சமுத்ரா சொன்னது…

nice..continue :)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அப்படியா? அப்போ முதல்ல அதை இன்னொருக்கா பார்த்துட்டு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கதையை படிக்கிறப்ப உங்க டைரியை படிக்கற மாதிரி இருக்கு.. அதே மாதிரி சம்பவங்கள் அப்படியே நினைவுகள்ல ஓடுது.. இது கதையின் வெற்றி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல உவமைகள் கொடுத்தது கதையின் அழகைக் கூட்டியுள்ளது. வயசு கோளாறு என்ன செய்வது - எல்லார் வாழ்விலும் நடந்து கொண்டிருப்பது....

பகிர்வுக்கு நன்றி.

அமைதிச்சாரல் சொன்னது…

விடுபட்ட நினைவுகளையும் சேர்த்து படிச்சிட்டேன்.. கதை அருமையா போகுது.

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நினைவுகள் அருமை...

சேட்டைக்காரன் சொன்னது…

நல்லா வந்திட்டிருக்கு கார்த்தி! வாழ்த்துகள்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நினைவுகள் தொடரும்//


நானும் கூடவே துணைக்கு வந்துட்டு இருக்கேன்....

S Maharajan சொன்னது…

அருமை!அருமை!

asiya omar சொன்னது…

அட்டகாசமாக போகுது கதை,தொடருங்க சகோ.

RVS சொன்னது…

எந்த பாத்திரத்தையும் பேச விடாம.... காட்சி விளக்கங்கள் கொடுத்து போயிருக்கீங்க... நல்லா இருக்கு எல்.கே. வாழ்த்துக்கள். ;-)

middleclassmadhavi சொன்னது…

//nice..continue :)//

Repeattu!

எல் கே சொன்னது…

@ராஜி
அட ,ரொம்ப பாஸ்டா வந்து இருக்கீங்க ... பாராட்டுக்கு நன்றி லாஜி

எல் கே சொன்னது…

@செந்தில்
நன்றி தலைவரே

@சமுத்ரா
நன்றி

எல் கே சொன்னது…

@செந்தில்
சித்தப்பு , சொந்தக் கதைலாம் இல்லை. குடும்பத்தில பிரச்சனை பண்ணி விட பாக்கறியே ...

எல் கே சொன்னது…

@வெங்கட்
ஆமா. கண்டிப்பா . ஒண்ணா நாமா பண்ணி இருப்போம் இல்லாட்டி நம்ம நண்பர்கள் பண்ணி இருப்பாங்க. நன்றி

எல் கே சொன்னது…

@சாரல்
நன்றி சாரல்

@கவிதை வீதி சௌந்தர்
முதல் வருகைக்கு நன்றிங்க

@சேட்டை
நன்றி வாத்யாரே ...

@மனோ
ஓகே மக்கா

@மகாராஜன்
நன்றி நண்பா

@ஆசியா
நன்றி சகோ

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்
உரையாடலை விட இந்தக் கதைக்கு உணர்வுகள் முக்கியம்னு நினச்சேன் . குறிப்பா இந்த பகுதிகளுக்கு. நன்றி

S.Menaga சொன்னது…

சூப்பர்ர்,நல்லா விறுவிறுப்பா போகுது....

Ramani சொன்னது…

மிக இயல்பாக கதைசொல்லிப் போகும் பாங்கு
கதையுடன் ஒன்றிச் செல்ல வைக்கிறது
தொடர்ந்து வருகிறோம்.
தொடர வாழ்த்துக்கள்

vanathy சொன்னது…

நல்லா இருக்கு கதை. ஆனா, ஹீரோக்கு ஏன் வாயில் சிகரெட் ( cigarette ) வைச்சீங்க. இனிமே வைக்காதீங்க!!??

Chitra சொன்னது…

keep going...

komu சொன்னது…

சாரு, வெங்கட்டின் மன உணர்வுகளை
உங்க எழுத்தில் ரொம்ப அழகா விவரிச்சிருக்கீங்க.கதை சுவாரஸ்யமா போகுது.

அப்பாவி தங்கமணி சொன்னது…

சூப்பர்...கலக்கலா போகுது... nice narration of emotions and reactions... next part soon :)

Lakshmi சொன்னது…

கார்த்தி, கதை ரொம்ப நன்னா கொண்டு
போரீங்க.சுவாரசியமா போயிண்டு இருக்கு. உங்க ப்ளாக்கும் அழகா வடிவமைச்சிருக்கீங்க. நன்னா இருக்கு.

எல் கே சொன்னது…

@மேனகா

நன்றி

@ரமணி
உங்களுடைய ஊக்கம்தான் முக்கியக் காரணம் . நன்றி சார்

எல் கே சொன்னது…

@வாணி
ஏன் ? உங்களுக்கு சிகரெட் பிடிக்காதோ?? அதுதான் கீழ போட்டுட்டாரே ??

எல் கே சொன்னது…

@சித்ரா
நன்றி

@கோமு
கதைக்கு அது அவசியம் இல்லையா ??

எல் கே சொன்னது…

@அப்பாவி
ஆஹா? நல்ல காதல் கதை எழுதும் ஆசிரியரிடம் இருந்து பாராட்டா? நன்றி நன்றி

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
ரொம்ப நன்றி மா . பழைய டெம்ப்ளேட் ரொம்ப டார்க்கா இருந்துச்சுனு சொன்னாங்க

வித்யா சொன்னது…

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்..

கோமதி அரசு சொன்னது…

கதை நல்லா இருக்கு.

பத்மநாபன் சொன்னது…

பருவத்தே வரும் உணர்வுகளை அழகாக எழுத்தில் வடித்துள்ளீர்கள்...

கோவை2தில்லி சொன்னது…

அந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படும் மாற்றங்களை அழகா விளக்கியிருக்கீங்க. தொடரட்டும்.

Shriram சொன்னது…

Very much Interesting. Super........

சென்னை பித்தன் சொன்னது…

//கல்லூரி செல்லும் அந்தப் பருவம் , கடிவாளம் இல்லாமல் ஓடும் முரட்டுக் குதிரை போன்றது. //சரியாகச் சொன்னீர்கள்!

எல் கே சொன்னது…

@வித்யா
சீக்கிரம் போடறேன்

@கோமதி அரசு
நன்றி

@பத்மநாபன்
நன்றி அண்ணா

@ஆதி
நன்றிங்க

@ஸ்ரீராம்
நன்றிடா

@பித்தன்
:)