Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

திவ்யாவும் ஸ்கூலும் II

முதல் மூன்று நாட்கள் பள்ளி செல்ல அடம்பிடித்த திவ்யா ,நான்காம் நாள் நான் கூடி சென்ற பொழுது அழாமல் உள்ளே சென்றுவிட்டாள். என் மனைவிக்கு ஆச்சர்...

முதல் மூன்று நாட்கள் பள்ளி செல்ல அடம்பிடித்த திவ்யா ,நான்காம் நாள் நான் கூடி சென்ற பொழுது அழாமல் உள்ளே சென்றுவிட்டாள். என் மனைவிக்கு ஆச்சர்யம். நான் ஒன்னும் பெருசா எதுவும் செய்யவில்லை. அங்கே மீன்தொட்டி இருந்தது. அதில் இருந்த மீனை காட்டி சிறிது நேரம் விளையாடிவிட்டு அப்படியே வகுப்பறையில் விட்டுவிட்டேன்.

************************************************************************************
அன்று மாலை ,நான் வீடு திரும்பியப் பின் "இன்னிக்கு ஸ்கூல்ல என்ன பண்ண?"
"விளையாடினேன் "
"ரைம்ஸ் சொல்லித் தந்தாங்களா ??"
"இல்லை "
"அப்புறம் வேற என்ன பண்ண ?"
"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"
"..............??"

என்ன சொல்ல இதுக்கு நான் ??

************************************************************************************
இன்றைக்கு பள்ளியில் விடும்பொழுது என் மனைவியிடம் திவ்யா
"அம்மா டாட்டா. "
"சரி அழாம சமத்தா இரு "
"சரி. நீ சீக்கிரமா வந்து என்னை கூட்டிகிட்டு போய்டு. இல்லாட்டி நான் அழுவேன் "

************************************************************************************
ஒரு வாரத்திலேயே அந்த சூழலுக்கு ஒத்துப் போய் விட்டாள். இப்பொழுது பள்ளி செல்ல அடம்பிடிப்பது இல்லை. இன்னும் மற்ற குழந்தைகளுடன் அதிகம் பழக ஆரம்பிக்கவில்லை. ஒன்றிரண்டு வாரங்களில் சரியாகிவிடும் என்று எண்ணுகிறேன்

அன்புடன் எல்கே

37 கருத்துகள்

விஜி சொன்னது…

"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்//

க்யுட் :))

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//"அப்புறம் வேற என்ன பண்ண ?"
"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"//

இதுதான் இதுதாங்க குழந்தைங்ககிட்ட பிடிச்சது...

ஆர்வா சொன்னது…

//அப்புறம் வேற என்ன பண்ண ?"
"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"
"..............??"//

நச்சுன்னு ஒரு பதில்


வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக். இப்பல்லாம் குழந்தைங்கதான் டீச்சருக்கு பாடம் சொல்லிக்கொடுக்கறாங்க!

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_18.html

THOPPITHOPPI சொன்னது…

யார் இந்த திவ்யா ?

எல் கே சொன்னது…

@தொப்பி
என்னோட பொண்ணு

ADHI VENKAT சொன்னது…

திவ்யா ரொம்ப சமத்து தான். டீச்சருக்கே ரைம்ஸ் சொல்லி கொடுத்திருக்காளே!!! குழந்தைகள் எல்லாமே இப்ப விவரமாத்தான் இருக்காங்க.

middleclassmadhavi சொன்னது…

சமத்து திவ்யா!!

நல்ல டீச்சர்!

அருண் பிரசாத் சொன்னது…

சமத்து.......

ரைம்ஸ் உங்களுக்கு தெரியுமா? # டவுட்டு

பத்மநாபன் சொன்னது…

கொஞ்ச நாள்ல அப்பா பாடம் கேட்டுக்கலாம் திவ்யாவிடம் ......வாழ்த்துகள்

Thenammai Lakshmanan சொன்னது…

நல்ல வேளை அடுத்து ஸ்கூல விடும்போது அப்பாவும் அம்மாவும் அழாம இருங்கன்னு சொல்லப் போறா >>:))

Jaleela Kamal சொன்னது…

இன்னும் கொஞ்ச நாளில் தோழிகள் நிறைய கிடைத்து விட்டால்,

சனி ஞாயிறு கூட் ஸ்கூல் இருந்தா நல்ல இருக்குமேன்னு தோனும்

Menaga Sathia சொன்னது…

சமத்து பொண்ணு...

Chitra சொன்னது…

இன்றைக்கு பள்ளியில் விடும்பொழுது என் மனைவியிடம் திவ்யா
"அம்மா டாட்டா. "
"சரி அழாம சமத்தா இரு "
"சரி. நீ சீக்கிரமா வந்து என்னை கூட்டிகிட்டு போய்டு. இல்லாட்டி நான் அழுவேன் "


....ha,hA,HA,HA,HA,...

Ram சொன்னது…

//என்ன சொல்ல இதுக்கு நான் ??
//

நான் தான் அப்பவே சொன்னன்ல.. என்ன மாதிரியே புத்திசாலியா வருவாங்கன்னு...

குறையொன்றுமில்லை. சொன்னது…

ரொம்பவே சமத்துக்குழந்தையா இருக்கா.

Asiya Omar சொன்னது…

பகிர்வுக்கு மகிழ்ச்சி,இதனை வீட்டில் சொன்னேன்,எல்லாரும் ரசிச்சாங்க.

Vidhya Chandrasekaran சொன்னது…

ஸ்மார்ட் கேர்ள்:)

raji சொன்னது…

அவள் ஒரு தொடர்கதை சார்.'ரம்யா வச்சுருக்கறா மாதிரி ரப்பர் வாங்கித்தா.ப்ரியா கிட்ட இருக்கறாப்பல பேனா வாங்கித்தா.
எல்லாம் இனிமேதான் ஒண்ணொண்ணா வரும்.தயாரா இருந்துக்கங்க சமாளிக்க.ஆல் தி பெஸ்ட்

Sriakila சொன்னது…

பிள்ளைங்க வெளில எல்லாம் ரொம்பச் சமத்து தான்.. ஆனா வீட்ல மட்டும் terror-ஆ இருக்குதுங்க..

மழலைகளை ரசிக்கும் பாக்கியம் கிடைத்ததில் ப்ளே ஸ்கூல் டீச்சர்ஸ் கொடுத்து வச்சவங்கதான்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//"அப்புறம் வேற என்ன பண்ண ?"
"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"//

நான் திவ்யாவிடம்: ம்ம்.. வெரிகுட். அப்படித்தான் இருக்கணும். டீச்சர் நல்லா படிக்கிறாங்களா?.. இல்லைன்னா நெறைய ஹோம்வொர்க் கொடுக்கணும் சரியா??..

ஆமினா சொன்னது…

//"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"
"..............??"////

:)

கியூட் பேபி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்//

டீச்சர்கிட்ட பீஸ் கேக்காம விட்டாளே உன் பொண்ணு... ஹா ஹா ஹா... செம cute...

Porkodi (பொற்கொடி) சொன்னது…

குருவுக்கே உபதேசம் பண்ணிட்டு வந்துட்டாளா.. :))

Philosophy Prabhakaran சொன்னது…

இது என்னங்க தலைப்பு பாபுவும் அப்பாவும் ன்னு வர்ற ஷாருக்கான் விளம்பரம் மாதிரி இருக்கு...

Philosophy Prabhakaran சொன்னது…

உங்க குழந்தையோட குறும்புகள் ரசிக்கும் வண்ணம் இருந்தன...

ஹேமா சொன்னது…

கார்த்திக்...திவ்யாவைவிட நீங்கதான் இப்போ குழந்தையா இருக்கீங்கபோல !

ஸ்ரீராம். சொன்னது…

தேனம்மை கமெண்ட் ரசனையாக இருந்தது. நடந்தாலும் நடக்கும்!

Madhavan Srinivasagopalan சொன்னது…

// ஒன்றிரண்டு வாரங்களில் சரியாகிவிடும் என்று எண்ணுகிறேன் //

அதே.. அதே.

கோலா பூரி. சொன்னது…

குழந்தையோட நீங்களும் குழந்தை ஆயிட்டீங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

குழந்தைகள் இப்ப விவரமாத்தான் இருக்காங்க.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"
"..............??"//


டீச்சர்தான் சமத்து.....

pudugaithendral சொன்னது…

அந்த காலத்துல ஒரு சாமிநாதன். இப்ப எல்லா குழந்தைகளும் சாமிநாதன்கள். நமக்கே வகுப்பெடுக்கும்பொழுது டீச்சரெல்லாம் ஜுஜுப்பி. டீச்சராக என் அனுபவம் இது. திவ்யாவுக்கு என் அன்புகள்

சுசி சொன்னது…

செல்லக் குட்டி திவ்யாவுக்கு ரெண்டு சாக்லேட் எக்ஸ்ட்ரா குடுங்க.

பெயரில்லா சொன்னது…

>>> திவ்யா மற்றும் தங்கள் குடும்பத்தினர் நலமுடன் வாழ வாழ்த்துகள்!!

கோமதி அரசு சொன்னது…

எல்லா குழந்தைகளும் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் எனத் தெளிவாகிறது.

திவ்யாவின் மழலையை ரசித்தேன். சீக்கீரம் என்னை கூட்டிக்கிட்டு போய்டு. இல்லாட்டி அழுவேன்.

goma சொன்னது…

உங்கள் எண்ணப்படி ,எல்லாம் நல்லபடி நடக்க எங்கள் ஆசியும் வாழ்த்தும்