Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

வந்தே மாதரம்

வந்தே மாதரம்! ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம் ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்! வந்தே மாதரம்! ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம் புல்லகுஸுமித த்ரும...


வந்தே மாதரம்!

ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!
வந்தே மாதரம்!

ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம்
புல்லகுஸுமித த்ருமதள சோபினீம்
ஸுஹாசினீம் ஸுமதுர பாஷினீம்
ஸுகதாம் வரதாம் மாதரம்!
வந்தே மாதரம்!

கோடி கோடி கண்டா கலகலநிநாத கராலே
கோடி கோடி புஜைந்திர்திரித கர கரவாலே
அபலா கேனோ மா எதோ பாலே
பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்
ரிபுதலவாரிணீம் மாதரம்!
வந்தே மாதரம்!

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா
த்வம் ஹி ப்ராணா: ஷரீரே

பாஹுதே துமி மா சக்தி
ஹ்ருதயே தும் மா பக்தி
தொமார இ ப்ரதிமா கடி
மந்திரே மந்திரே!

த்வம் ஹி துர்கா தஷ ப்ரஹரணதாரிணீ
கமலா கமலதல விஹாரிணீ
வாணீ வித்யாதாயினீ நமாமி த்வாம்

நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
ஸுஜலாம் ஸுபலாம் மாதரம்!

ஸ்யாமளாம் சரளாம் சுஸ்மிதாம் பூஷிதாம்
தரணீம் பரணீம் மாதரம்!


தமிழில் 

தாயே வணங்குகிறோம்

இனிய நீர்

இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்


வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்

உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! 'அபலா '#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

அறிவு நீ

அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்

அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்

திருமகளே

மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்

தமிழாக்கம் : விக்கியில் இருந்து எடுத்தது . 




அன்புடன் எல்கே

21 கருத்துகள்

raji சொன்னது…

ஆஹா!இந்திய தாயின் சிறப்புகளும் பெருமைகளும்
தமிழாக்கத்தில் அருமை
பகிர்வுக்கு நன்றி
**************************

எனது வலையில் நினைவாஞ்சலி வெளியிட்டுள்ளேன்
கலந்து கொள்ள எண்ணமிருப்பின் பின்னூட்டம் மூலம் கலந்து கொள்ளலாம்

Unknown சொன்னது…

வந்தே மாதரம்

Chitra சொன்னது…

வந்தே மாதரம்!

ஜெய் ஹிந்த்!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

வந்தேமாதரம்..

S Maharajan சொன்னது…

ஜெய் ஹிந்த்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வந்தே மாதரம் தமிழாக்கத்தில் அருமை.

குறையொன்றுமில்லை. சொன்னது…

தமிழில் விளக்கங்கள் படிக்கவே சுகம்.

கோலா பூரி. சொன்னது…

வீடியோ சாங்க் கேக்கவும் பாக்கவும் மிக
நன்றாக இருந்தது

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமையான பகிர்வு எல் கே.

வந்தே மாதரம்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தாய்மண்ணே வணக்கம்....

அருண் பிரசாத் சொன்னது…

குடியரசுதின வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா?

அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.
.

பத்மநாபன் சொன்னது…

இனிய குடியரசு தின வாழ்த்துகள் ... வந்தேமாதிரம் --அழகான மொழிபெயர்ப்பு ....

ஹேமா சொன்னது…

சந்தோஷமும் நிம்மதியும் தர வாழ்த்துகள் கார்த்திக் !

சுந்தரா சொன்னது…

வந்தேமாதரத்தின் தமிழாக்கம் அருமை.

பகிர்வுக்கு நன்றி, வந்தேமாதரம்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல தமிழாக்கம். பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

கேட்டு ரெம்ப நாளாச்சு... நன்றி... ஜெய் ஹிந்த்!

சுசி சொன்னது…

வந்தே மாதரம்.

ஸ்ரீராம். சொன்னது…

முன்னால் எல்லாம் ஆள் இந்தியா ரேடியோ (மட்டும் இருந்த காலங்களில்) காலை ஒலிபரப்பு ஆரம்பிக்கும்போது வந்தே மாதரத்துடன் தொடங்கும். அது ஞாபகம் வந்தது. இது பொருத்தமாக தேஷ் ராகத்தில் இருப்பது வேறு சிறப்பு இல்லை? (நான் குறிப்பிட்டிருக்கும் பாடல்..வீடியோவில் இருப்பது அல்ல)

கோமதி அரசு சொன்னது…

வந்தே மாதரம் தமிழாக்கத்திற்கு நன்றி.வீடியோ பாடலும் ரொம்ப நல்லா இருக்கு. கேட்டு வெகு நாட்கள் ஆனப் பாட்டு அதை பார்க்க, கேட்க கொடுத்தற்கு நன்றி கார்த்திக்.

ADHI VENKAT சொன்னது…

வந்தே மாதரம் தமிழாக்கத்துக்கு நன்றி. ஜெய் ஹிந்த்…………