ஜனவரி 12, 2011

செல்போன் கம்பெனிகளின் புது கொள்ளை

செல்போன் இன்று நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது . சிக்னல் பிரச்சனை ,பில் பிரச்சனை என்று பல பிரச்சனைகள் இருந்தாலும் எதோ ஒரு கம்பெனியின் சிம் உபயோகித்து கொண்டுதான் இருக்கிறோம் அனைவரும்.

இதில் நம் பணத்தில் இருந்து பலவிதத்தில் கொள்ளையடிக்கும் கம்பெனிகள் உண்டு. ஏதாவது கட்டண சேவைக்கான மெசெஜ் வரும் , விவரம் தெரியாமல் அதை அழுத்திவிட்டால் சில பல தொகை உங்கள் கணக்கில் இருந்து காணாமல் போகும். மறுபடியும் அந்த சேவையை நீக்கணும்னா நீங்க வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு கால் செஞ்சாகனும். இந்த இடத்தில்தான் இப்ப செல்போன் கம்பெனிகள் புதியக் கொள்ளையை துவக்கி உள்ளனர்.

கொஞ்ச நாள் முன்பு வரை வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு நீங்க கால் செஞ்சா அது முற்றிலும் இலவசம். இப்ப அப்படி இல்லை. அதில் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டிருக்கும் விவரங்களை அறியக் கட்டணம் எதுவும் இல்லை. இதுவே உங்க பில்லிங் பிரச்சனை இல்லை வேற எதாவது பிரச்சனை என்று கஸ்டமர் கேர் பிரிவுக்கு பேச நினைத்தால் உங்களுக்கு அவங்க பில் பண்ண ஸ்டார்ட் பண்ணிடறாங்க.

ஆறு வருசமா உபயோகிச்சா ஏர்செல் நம்பரை சிக்னல் பிரச்சனையால் மாற்றினேன். புதுசா வாங்கின ஏர்டெல் நம்பருக்கு ஜீபிஆர்ஸ் சேவை வேண்டி மெசேஜ் அனுப்பினேன். அவர்களும் ஆக்டிவேட் பண்ணிட்டாங்க. ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. சரி கஸ்டமர் கேரில் அழைத்து பேசுவோம்னு கூப்பிட்டால் அப்பதான் இந்த புதிய விசயம் தெரிஞ்சது.

எனக்கு தெரிஞ்சு ஏர்செல்,ஏர்டெல் இரண்டிலும் இப்ப கஸ்டமர் கேரில் பேச காசு வாங்கறாங்க. வேறு எந்த எந்த கம்பெனிகள் இப்படி செய்கின்றது என்றுத் தெரியலை.

அவர்கள் அளிக்கும் சேவையில் எதோ ஒரு பிரச்சனை இருப்பதால்தான் அவர்களை அழைக்கிறோம். இப்படி அழைத்து பேசுவதற்கும் காசு கொடுக்கணும்னா என்ன பண்றது ? இது ட்ராய் விதிகளுக்கு உட்பட்டதா ?? இல்லை விதி மீறலா ??அன்புடன் எல்கே

37 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அவர்கள் சம்பாதிக்க புதுப் புது வழிகளை கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ட்ராய் இவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறது என்பது தான் சோகம்.

புதுகைத் தென்றல் சொன்னது…

ஆமாங்க நேற்று நானும் போன் செஞ்சப்ப அப்படித்தான் சொன்னாங்க. அடப்பாவிகளான்னு நினைச்சேன்.

பகல் கொள்ளையா இருக்கு

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

ஆம் ரிலையன்ஸ் நிறுவனம் முதலில் ஆரம்பித்து வைத்து கொள்ளை இது.. பின்னர் மொபைல் ஜாம்பவான்கள் ஒவ்வொருவராக.. இப்படி காசு புடுங்க ஆரம்பிச்சுட்டாங்க.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..

கொண்டாட அல்ல.. நம் குண்டாவை அல்லாமல் இருப்பதற்காகவாவது கொலம்பஸ் நமக்கொரு தீவு கண்டுபிடித்துக் கொடுத்தால் தேவலை...

பிரபு எம் சொன்னது…

கேள்வி கேட்க ஆள் இல்லாத நிலை இப்பொழுது இல்லை... ஆனால் பதில் சொல்ல ஆள் இப்போது நிச்சியம் இல்லை...

செல்ஃபோன் கம்பெனிகளுக்கு நாம் "கஸ்டமர்கள்"தான்... "க்ளையண்ட்" அல்ல...
க்ளையண்ட் ஆன "ட்ராய்" அமைப்பை அணுகுவதற்கு முறையான வழிமுறைகள் இருக்கிறதா இல்லையா... எதுவும் புரியவில்லை... தேடிப்பார்க்கவேண்டும்.... உங்கள் கருத்தை நான் முழுமனதாக ஏற்கிறேன் வோடாஃபோனினால் ஏகப்பட்ட அல்லல் பட்டுவருபவன் என்னும் முறையில்....

Mitr Friend - Bhushavali சொன்னது…

Thala,
My Travelogue just touched the 100th post and its dedicated to all my readers!!! Thanks for all your comments and appreciations!!! :)
My 100th post - Dedicated to all
Fashion Panache - Experimenting Leopard Prints

சாதாரணமானவள் சொன்னது…

உண்மைதான் நண்பரே. ஆனால் புகார்களுக்கு என்று தனிப்பட்ட எண்கள் உண்டு. (ஏர்செல்லுக்கு அநேகமாக 198 என்று நினைக்கிறேன்.) அந்த எண்களுக்கு அழைத்து புகார் கூறினால் கட்டணம் வசூலிப்பதில்லை.

THOPPITHOPPI சொன்னது…

//
எனக்கு தெரிஞ்சு ஏர்செல்,ஏர்டெல் இரண்டிலும் இப்ப கஸ்டமர் கேரில் பேச காசு வாங்கறாங்க. வேறு எந்த எந்த கம்பெனிகள் இப்படி செய்கின்றது என்றுத் தெரியலை//

நண்பரே இது தவறுதான் ஆனால் எனக்கு தெரிந்த ஒரு காரணம் தேவை இல்லாமல் அனாவசியமாக சிலர் அழைப்பதால்தான்.

என் நண்பன் ஒருவன் சிலநாட்களுக்கு முன் ஆங்கிலம் கற்றுக்கொண்டு இருக்கும்போது ஆங்கிலம் பழகிக்கொள்ள இவர்களிடம் போன் போட்டு தேவை இல்லாததை(புது பிளான் ஏதாவது இருக்கா) பேசி அவர்கள் நேரத்தை வீணடிப்பான், அதுவும் தப்பு தப்பா ஆங்கிலத்துல.

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

@THOPPITHOPPI

//நண்பரே இது தவறுதான் ஆனால் எனக்கு தெரிந்த ஒரு காரணம் தேவை இல்லாமல் அனாவசியமாக சிலர் அழைப்பதால்தான்.//


நண்பரே இதற்காகத்தான் காசு வசூலிக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். பல முறை பிரச்சினைகளுக்காக கஸ்டமர் கேரை கூப்பிட்டாலே.. அவர்களால் பதிலளிக்க முடியாதபடி இருந்தால்... அழைப்பை துண்டித்துவிடுகிறார்கள்.. இது போன்ற தொல்லைகளை துண்டிக்க முடியாதா.. எப்படி மனசு வந்து இந்த சால்ஜாப்பை ஏத்துக்கறீங்க நண்பா...

அருண் பிரசாத் சொன்னது…

அட பாவிகளா... கஸ்டமர் கேர்க்கு போன் பண்ணா காசா? பகல் கொள்ளையால இருக்கு.... டிராய் என்ன புடுங்கிட்டு இருக்கு....

அது சரி.... மொபைல கம்பனிகாரங்க லைசன்ஸ் வாங்க நம்ம ராசாக்கு எவ்வளோ லஞ்சம் கொடுத்தாங்களோ...அது நம்ம தலைல விடிது இப்போ... நாசமா போக

Lakshmi சொன்னது…

நானும் இந்த தொல்லைல மாட்டிண்டு அவஸ்தை பட்டிருக்கேன்.
ஜிபிஆரெஸ்சுக்குதான் கேட்டேன்.

சசிகுமார் சொன்னது…

ஆமாம் அண்ணே இது கடந்த மூன்று மாதமாகவே அனைத்து கம்பெனிகளும் செயல் படுத்திய திட்டம் நிமிடத்திற்கு 50 பைசா வீதம் பிடித்தம் செய்யப்படும். இதுல இன்னும் எரிச்சலூட்டும் விஷயம் என்னவென்றால் நாம் ஏதோ தகவல் கேட்க இருங்க செக் பண்ணிட்டு சொல்றேன்னு போன வெச்சாங்கன்னா குறைந்தது 2 நிமிடம் கழித்து தான் பதில் கொடுப்பாங்க.

சே.குமார் சொன்னது…

அவர்கள் சம்பாதிக்க புதுப் புது வழிகளை கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னத்தை சொல்ல...

Sriakila சொன்னது…

இந்தக் கொள்ளை பல வழிகளில் நடக்கிறது. அத்தனைப் பேருக்கும் இளிச்சவாயர்கள் நாம்தான். ஹூம்!!

கோவை2தில்லி சொன்னது…

ஆமாம் இப்படியெல்லாம் தான் பண்றாங்க. தெரியாம பட்டனை அழுத்திட்டா பாட்டு தரவிறக்கம் ஆகி பணம் கட்டாகி விடுகின்றது.

பத்மநாபன் சொன்னது…

ஊர்ல இறங்கி சார்ஜ் பண்ணியவுடன் 60 ருபாய் ஏர்செல் தானா மொய் எடுத்துக்கும் .. daily fortune க்கு 30 ..கிரிகெட் அப்டேட்டுக்கு 30 ..கேக்கவே இல்லையப்பான்னு 60 தடவை சொன்னாலும் கேக்க மாட்டிங்குது .....

S.Menaga சொன்னது…

ம்ம் இதான் பகல் கொள்ளை... ஆமா என்னாச்சு உங்க ப்ளாக்ல ஒட்டுபட்டைகளை காணாமே???

raji சொன்னது…

வாடிக்கையாளர் சேவை பிரிவுலயும் நாம பண்ணற காலுக்கு கட்டணம் உண்டுங்கற விஷயம் எனக்கு ஆறு மாசம் முன்னாடிதான் தெரிய வந்தது.இத தவிர புது சிம் கார்டு வாங்கும்போது நாம் குடுக்கற ஐடென்டிஃபிகேஷன் டாகுமென்ட்ஸ் ஏர்டெல் ஹெட் ஆஃபிஸ்க்கு போய்ச்சேரலைங்கற பேர்ல மறுபடி டாகுமென்ட் குடுக்க சொல்லி படுத்தறாங்க.அப்ப முதல்ல சிம்ல போடற பணம் காலாவதியாய்டுது

எல் கே சொன்னது…

@வெங்கட்
எனக்கு ட்ராய் விதிமுறைகள் பற்றி சரியாகத் தெரியவில்லை


@புதுகைத் தென்றல்
என்ன பண்ண ? பழகிட்டோம் இப்ப மாட்டிக்கிட்டோம்

எல் கே சொன்னது…

@ரமேஷ்
ஓஹோ இது அம்பானியோட விளையாட்டா ??

@பிரபு
எனக்குத் தெரிந்து நேரடியா அவங்களை அணுக முடியாது. நாடல் ஆபிசர் பிரச்சனை சரி செய்யாவிடில் மட்டுமே அவர்களை அணுக முடியும்

எல் கே சொன்னது…

@பூஸா

வாழ்த்துக்கள். வரேன் அங்க


@சாதாரணமானவள்
எல்லாம் சரி அந்த எண் எத்தனை பேருக்குத் தெரியும் ? சிம் கார்டில் 121

என்ற எண் மட்டுமே இருக்கும்

எல் கே சொன்னது…

@தொப்பி

தவறான வழிமுறை. இவர்கள் அத்தகைய அழைப்புகளுக்குத் தனியாக கட்டணம் வசூலிக்கலாம். அப்படிப்பட்ட முறைதான் சரியான வழி

@அருண்
அது சரி . நாங்களா லஞ்சம் கொடுக்க சொன்னோம் ??


@லக்ஷ்மி
நீங்களுமா ??


@சசி
அதுதான் பிரச்சனை. உடனடியா பதிலும் சொல்வது இல்லை


@குமார்
ஆமாம்


@

எல் கே சொன்னது…

@மனோ
ஒன்னும் பண்றதுக்கு இல்லை

@அகிலா
ஆமாம்

@கோவை

அது வேற ஒருபக்கம் இருக்கு


@

எல் கே சொன்னது…

@ராஜி
அது தனி கதை. மூன்று நான்கு கை மாறி போகும். எங்கையாவது தவற விட்டுவிடுகிறார்கள்


@பத்மநாபன்
எல்லோரும் திருடர்கள்தான்

@மேனகா
நீக்கி விட்டேன்

பதிவுலகில் பாபு சொன்னது…

ஆமாங்க.. நானும் இதுபற்றி எழுதனும்னு இருந்தேன்..

எப்படியெல்லாம் கொள்ளையடிக்கறாங்க.. ம்ஹும்..

ரிஷபன் சொன்னது…

கஸ்டமர் (டோண்ட்) கேர்!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

நல்லா சொன்னீங்க எல்.கே.....நான் கேட்காத ட்யுனைப் போட்டுவிட்டு, 30 ரூபாய் பிடித்துக் கொண்டார்கள். கேட்டால் பதிலே சரியாக வரவில்லை. கஸ்டமர் கேருக்கு போன் செய்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம்....ஏதாவது செய்யவேண்டும்......

Chitra சொன்னது…

எனக்கு தெரிஞ்சு ஏர்செல்,ஏர்டெல் இரண்டிலும் இப்ப கஸ்டமர் கேரில் பேச காசு வாங்கறாங்க. வேறு எந்த எந்த கம்பெனிகள் இப்படி செய்கின்றது என்றுத் தெரியலை.


...என்ன கொடுமைங்க, இது?

சுசி சொன்னது…

:(

Philosophy Prabhakaran சொன்னது…

பாஸ்... கஷ்டமர் கேருக்கு கால் செய்து கஷ்டப்படுத்தும் prank callers பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்... அவர்களை தடுக்கவே இந்த முயற்சி... மற்றபடி கொள்ளையடிக்க எவ்வளவோ வழிகள் இருக்கிறது... இதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமா என்ன...?

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

@பிலாசஃபி பிராபகர்


//பாஸ்... கஷ்டமர் கேருக்கு கால் செய்து கஷ்டப்படுத்தும் prank callers பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்... அவர்களை தடுக்கவே இந்த முயற்சி... //

நண்பரே இதற்காகத்தான் காசு வசூலிக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். பல முறை பிரச்சினைகளுக்காக கஸ்டமர் கேரை கூப்பிட்டாலே.. அவர்களால் பதிலளிக்க முடியாதபடி இருந்தால்... அழைப்பை துண்டித்துவிடுகிறார்கள்.. இது போன்ற தொல்லைகளை துண்டிக்க முடியாதா.. கஸ்டமர்கேரிலேயே வேலை செய்திருக்கும் உங்களுக்கு அதன் தகிடுதத்தங்கள் தெரியாதா என்ன? நானும் ஏர்டெல் நிறுவனத்தில் ஒருவருடம் வேலை செய்தவன் தான் நண்பா... தெரிந்த விசயங்களை பொது மக்களுக்கு சொல்லி அவேர்னஸை ஏற்படுத்துங்கள்... தவறென்றால்.. யார் செய்தாலும் தவறுதான்.. இதில் நாம் வேலை செய்த நிறுவனம் ஆயிற்றே என்ற பாகுபாடெல்லாம்.. தேவையில்லை...

//மற்றபடி கொள்ளையடிக்க எவ்வளவோ வழிகள் இருக்கிறது... இதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமா என்ன...?///

எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுப்பார்கள்.. அவர்கள் தேர்ந்தெடுத்த வழிகளில் இதுவும் ஒன்று..

ஸ்ரீராம். சொன்னது…

1) கஸ்டமர் எண் என்ற இந்த என்னைக் கூப்பிட்டால் காசு என்று சரியாகச் சொல்லாமல் (எப்போதாவது ஒரு மெசேஜ்அனுப்பியிருப்பார்கள்) டோல் ஃப்ரீ நம்பர் வேறு ஒன்று தந்திருப்பார்கள்.

2) எல்லா நிறுவனங்களுமே பொங்கல் தீபாவளி மெசேஜ் களுக்கு காசு பிடுங்குவது அடுத்த வகை. இதற்கான ஸ்பெஷல் பூஸ்டர் வாங்கியிருந்தாலும் அந்த நாளில் இது செல்லாது. சட்டப் படி இது செல்லுமா...நமக்குத் தெரியாது. பி எஸ் என் எல் இதில் ஒரு படி மேலே போய் பேப்பரில் ஒரு செய்தியாகவே சொல்லியிருந்த ஒரு விஷயம் (தினமணியில் பார்த்தேன்) குறைந்த கட்டணத்துக்குப் பேச பூஸ்டர் போட்டிருந்தால் கூட அது புத்தாண்டு அன்று நடைமுறையில் இருக்காது. என்ன அநியாயம்?

3) எனக்குத் தெரிந்து ஏர் டெல்லில், மற்றவற்றில் எப்படியோ தெரியாது, திடீரென ப்ரீ பெய்டில் நாற்பது ஐம்பது என்று குறைந்திருக்கும். எப்படி என்று தெரியாது. கஷ்டமர் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் அல்ல!) காலில் அழைத்துச் சொன்னால் அரை மணியில் சரி செய்கிறோம் என்பார்கள். அரை மணியில் உங்கள் காசு மறுபடி உங்கள் அமவுண்டில் சேர்க்கப் பட்டிருக்கும். நீங்கள் கவனித்துக் கேட்கவில்லை என்றால் அம்போ தான்.

எல் கே சொன்னது…

தம்பி பிரபாகரா , இது ஒத்துக் கொள்ள முடியாத ஒன்று. எனக்குத் தெரிந்து சிலக் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் சார்ஜ் (கட்டணம் விதிக்கும் ) வசதி உண்டு. இந்த மாதிரி தொல்லைப் படுத்தும் கஸ்டமர்களுக்கு மட்டும் அப்படி சார்ஜ் செய்யலாம். அதை விடுத்து அனைவருக்கும் சார்ஜ் செய்வேன் என்பது சரியான முறை அல்ல.

Philosophy Prabhakaran சொன்னது…

@ பிரியமுடன் ரமேஷ்
// கஸ்டமர்கேரிலேயே வேலை செய்திருக்கும் உங்களுக்கு அதன் தகிடுதத்தங்கள் தெரியாதா என்ன? //

தெரியும்தான்.... ஆனால் அதை எதிர்த்துப் பேச ஏனோ மனம் வரவில்லை... ஜஸ்ட் லைக் தட் சப்ஸ்க்ரிப்ஷன் சர்வீஸ் என்று முப்பது ரூபாயை பிடுங்குவதை எல்லாம் பார்த்திருக்கிறோமே... உண்மை என்னவென்று அங்கே வேலை செய்த உங்களுக்கும் எனக்கும் நன்றாகவே தெரியும்... ஆனாலும் நாமெல்லாம் வாடிக்கையாளர்களிடம் பொய் சொல்லத்தானே பழக்கப்பட்டிருக்கிறோம்...

சீரியசாகவே வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைக்கும்போது சார்ஜ் செய்வது கால் சென்டருக்கு வரும் அழைப்புகளை குறைக்க மட்டுமே என்பது எனது கருத்து... இதன்மூலம் முன்னூறு பேர் பணிபுரியும் கால் சென்டரில் நூறு பேரை கொண்டே வேலையை முடித்துவிடலாம்...

Philosophy Prabhakaran சொன்னது…

@ எல் கே
// இந்த மாதிரி தொல்லைப் படுத்தும் கஸ்டமர்களுக்கு மட்டும் அப்படி சார்ஜ் செய்யலாம் //

யார் தொல்லை பண்ணும் கஸ்டமர் என்று எப்படி கண்டுபிடிப்பது... ஒரு நாள் நைட் ஷிப்டில் பணிபுரிந்துக் கொண்டிருந்தபோது எங்க டீம் லீடரே தண்ணியை போட்டுட்டு கால் பண்ணி லந்தை கொடுத்தார்... நம்மூரில் நிறைய பேர் தனியா இருக்கும் பொது பூனையா இருப்பாங்க... நாலுபேர் ஒண்ணா சேர்ந்துட்டா எவன்டா சிக்குவான்னு பாப்பானுங்க... எவனும் சிக்கலைன்னா பேலன்ஸ் இல்லாத போனில் இருந்து கஸ்டமர் கேருக்கு கால் பண்ணி வாந்தி எடுக்க வேண்டியது... அந்த நம்பருக்கு அவன் ரீசார்ஜ் பண்ணியே ஆறு மாசம் ஆகியிருக்கும்...

பலே பிரபு சொன்னது…

இந்தியாவின் பெரிய பிச்சைக்காரர்கள் இவர்கள் தான்

ஜிஜி சொன்னது…

ஆமாங்க.செல்போன் கம்பனிகளின் கொள்ளை தாங்க முடியலைங்க.இதற்கு தீர்வு எப்போ கிடைக்குமோ தெரியலை.