Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

ஆஞ்சநேய ஜெயந்தி

மார்கழி மாதம் , மாதங்களில் மிகச் சிறந்தது. வைகுண்ட ஏகாதஷி,ஆருத்ரா தரிசனம் ,அதிகாலை நேர வழிபாடு இவற்றுடன் ராமதாசனின் பிறந்த நாளும் இந்த மாதத...


மார்கழி மாதம் , மாதங்களில் மிகச் சிறந்தது. வைகுண்ட ஏகாதஷி,ஆருத்ரா தரிசனம் ,அதிகாலை நேர வழிபாடு இவற்றுடன் ராமதாசனின் பிறந்த நாளும் இந்த மாதத்தில்தான் வருகிறது.

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். அஞ்சனை மற்றும் கேசரி தம்பதியருக்கு பிறந்த இவர் ருத்ராம்சம் வாய்ந்தவர் . தனக்கு மகனாய் ஈஸ்வரன் பிறக்கவேண்டும் என்று அஞ்சனை இருந்த தவத்திற்கு பலனை அவருடைய அம்சம் வாய்ந்த ஆஞ்சநேயர் பிறந்ததாய் சொல்லுவர்.

பொதுவாக, ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை, சிவன்,விஷ்ணு,அம்பாள்,முருகன் மட்டும் வணங்குபவர்கள் உண்டு. ஆனால், அந்த தெய்வத்தின் குறிப்பிட்ட ஒரு அவதாரத்தை மட்டும் வணங்குபவர்கள் உண்டா ?? இராமாயண அவதார நோக்கம் முடிந்து ராமன், வைகுண்டம் திரும்பும் நேரம், அனைவரும் அவருடன் செல்கின்றனர்,ஒருவரைத் தவிர.
ஆம் . ஆஞ்சநேயர் வைகுண்டம் செல்ல விரும்பவில்லை.

ராமரிடம் கேட்கிறார் அவர் "வைகுண்டத்தில் ராம நாமம் உண்டா ?,ராமர் இருப்பாரா ?"
"எப்படியப்பா முடியும்? வைகுண்டத்தில், விஷ்ணு மட்டுமே, அவரது நாமம்தான் அங்கே ." என்கிறார் ராமர்.

"ராம நாமம் இல்லாத இடம் எதுவாய் இருந்தாலும் அது எனக்குத் தேவை இல்லை . பூலோகத்தில் ராம நாமம் இருக்கிறது . இங்கேயே நான் இருக்கிறேன். " என்று பதிலுரைத்து பூலோகத்திலேயே சிரஞ்சீவியாய் நிலைத்து விட்டார் ஆஞ்சநேயர்.


மற்ற தெய்வங்களுக்கு அவர் அவர்களுக்கு உண்டான ஸ்லோகங்கள் சொல்லவேண்டும். ஆனால் இவருக்கோ "ராமா !" என்று சொன்னால் போதும். உங்கள் துயரைத் தீர்த்துவைப்பார்.

ஆஞ்சநேயருக்கு உண்டான காயத்ரி
"ஆஞ்சனேயாய வித்மகே !
வாயு புத்ராய தீமகி !
தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத் !"


ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

மேலும்  சில ஆஞ்சநேய சுலோகங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் .

அன்புடன் எல்கே

32 கருத்துகள்

pichaikaaran சொன்னது…

பயனுள்ள பதிவு . ஆஞ்சநேயர் காயத்ரிக்கு அர்த்தம் கொடுத்து இருக்கலாம்

பெயரில்லா சொன்னது…

சிரஞ்ஜீவி அனுமன், எங்கெல்லாம் ராம கதை கூறப்படுகிறதோ அங்கெல்லாம் அரூபமாய் இருப்பார் என்று என் பாட்டி சொல்லுவார்கள்! அனுமன் ஜெயந்தியை நினைவு படுத்தியதற்கு நன்றி எல்.கே!

பத்மநாபன் சொன்னது…

அனுமனின் ஜெயந்தி பற்றிய பதிவுக்கு நன்றி எல்கே ... எங்கள் அம்மமாவின் சொந்த ஊரான தாராபுரத்தில் காடு அனுமத்த ராயர் எனும் ஆஞ்சநேயரின் பெரிய மூர்த்தி யோடு கோவில் உண்டு அங்கு அனுமத் ஜெயந்தி சிறப்பாக நடக்கும் .. சிறு வயதில் தவற விட்டதில்லை .. தாத்தாக்கள் சொல்லிக்கொடுத்த ''புத்திர்பலம்'' இன்னமும் தைரியம் கொடுக்கிறது... ராசிபுரத்தில் இருந்த கொஞ்ச நாட்களில் நாமக்கல் ஆஞ்சநேயரை பார்த்து விட்டுதான் ஒவ்வொரு முறையும் கடல் தாண்டுவேன் ...இப்பொழுது நங்கநல்லூர் . வாயு புத்திரனை நினைத்த மாத்திரத்தில் மலை தூக்கும் பலம்...

Sriakila சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்தக் கடவுள் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் கோயிலில் தரும் செந்தூரம், அதை வைத்துக்கொள்ளும்போது மனதிற்கு இதமான ஒரு உணர்வு எனக்கு ஏற்படுவதுண்டு.

ஆஞ்சநேயர் படம் அழகு.

தக்குடு சொன்னது…

Correct boss, indialenthu foreign poona first NRI aanju thaan..:) nice post and photos.

சசிகுமார் சொன்னது…

விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி சார். எனக்கும் இது போல் நிறைய அறிந்து கொள்ள ஆசையாக உள்ளது. ஏதேனும் இணையம் இருந்தால் கூறுங்கள் சார்.

Madhavan Srinivasagopalan சொன்னது…

என்னைப் போன்றோருக்கு தேவையான பதிவு...
நன்றி..

Gayathri சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு.
நன்றி .

சாந்தி மாரியப்பன் சொன்னது…

படத்துல இருக்கிறவர் நங்கநல்லூர் ஆஞ்சநேயரா.. ரொம்ப அழகாருக்கு.
சுசீந்திரத்திலுள்ள ஆஞ்சநேயரும் ரொம்ப உயரமானவர்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

பயனுள்ள பதிவு.
நன்றி எல்.கே.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

நன்றி.

அருண் பிரசாத் சொன்னது…

:)

Hats off to you for removing Voting widgets

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பதிவு. நெய்வேலியில் ஒரு ஆஞ்சனேயர் கோவிலில் வெண்ணைக்காப்பு செய்வார்கள். அந்த வெண்ணை 24 மணி நேரம் ஆனாலும் உருகுவது இல்லை.....

வடக்கில் ஹனுமான் சாலிசா [chalisa] மிகப் பிரபலம்.

பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல பதிவு எல் கே.

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக்.
அழகான ராமர், ஆஞ்சநேயர் படம்.

Geetha Sambasivam சொன்னது…

வடக்கே ஆஞ்சநேயர் பஜ்ரங் பலி என அழைக்கப் படுவார். சிந்தூரத்தால் அலங்கரிக்கப் படுவார். முதல் முதல் ஸ்ரீராமஜயம் எழுதினதும் ஆஞ்சநேயர் தான். அசோகவனத்தில் இருந்த சீதாதேவியிடம் ஸ்ரீராமர் ஜெயிச்ச விஷயத்தைச் சொல்லப்போன அநுமன் பேச்சு வராமல் எழுதிக்காட்டினான் என்று காலக்ஷேபங்களில் கூறுவார்கள்.

சனி தோஷம் நீங்கவும் அநுமனைத் துதிக்கலாம். அநுமன் பெண்ணாக வந்த சனியைக் காலில் போட்டு மிதிக்கும் சிற்பமும், ஓவியமும் வடமாநிலங்களில் பிரபலம். இது குறித்தும் ஒரு பதிவு போட்டிருக்கேன். தேடிப் பார்க்கிறேன். :D

Geetha Sambasivam சொன்னது…

இங்கே பார்க்கலாம்.

தக்குடு சொன்னது…

//இது குறித்தும் ஒரு பதிவு போட்டிருக்கேன். தேடிப் பார்க்கிறேன்// Geetha patti, neenga yeluthatha topic yethaavathu michsam irukka blogla?? blog ulaga suura'vali' aachey neenga!..:P

பெயரில்லா சொன்னது…

அடேயப்பா திரட்டிகள் இணைப்பு இல்லாமல் பதிவா

பெயரில்லா சொன்னது…

காலையில் எங்க ஊர்ல இருக்கற ஆஞ்சநேயரை தரிசனம் செய்து விட்டு வந்தேன் நல்ல தைரியம் கிடைக்கிறது..மனசுக்கு தெம்பா இருக்கு

எல் கே சொன்னது…

@பார்வையாளன்

நன்றி. பிறிதொரு சந்தர்ப்பத்தில் தருகிறேன்

@பாலாஜி
உண்மை. ராம நாமம் உள்ள இடத்தில் ஹனுமான் இருப்பார்

@பத்மநாபன்
சேலத்தில் இருந்தவரை, ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறும் நாமக்கல்தான்

@அகிலா
நன்றிங்க

@தக்குடு
தப்பு. சீதைதான் முதல்

@சசி
கண்டிப்பாகத் தருகிறேன்

@மாதவன்
நன்றி

@காயத்ரி
நன்றி

எல் கே சொன்னது…

@சாரல்
இவர் நாமக்கல் ஆஞ்சநேயர். திறந்தவெளியில் இருப்பார். தலைக்கு மேல் கூரை இல்லை

@குமார்
நன்றி

@புவனேஸ்வரி
நன்றி

@அருண்
இதில் என்ன இருக்கு? திரட்டி இல்லாமல் எழுத முடியாதா ?

@வெங்கட்
இங்கும்தான்.

@ராமலக்ஷ்மி
நன்றி

@கீதா
இந்த விஷயம் எனக்கு புதுசு. அந்தப் பதிவை படித்து இருக்கிறேன். டீச்சர் கூட எழுதி இருந்தாங்க

ஸ்ரீராம். சொன்னது…

பிரிய 'ஆஞ்சி' உம்மாச்சியைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள்...சந்தோஷம். ஆஞ்சநேய பாஹிமாம்..ஜெய் பஜ்ரங் பலி..

கோலா பூரி. சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு.

குறையொன்றுமில்லை. சொன்னது…

நல்ல விஷயங்க பதிவாகப்போடுகிரீர்கள். நாமக்கல் ஆஞ்ச நேயருக்கு க்கூறைமட்டுமா இல்லை? கதவே கிடையாதே. எப்பவேணாலும் தரிசனம் செய்யலாமே.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Thanks for sharing Karthik..

ராஜி சொன்னது…

viththiyaasamaana padhivu. mokkai, kavithaikalukkidaiyil aanmigam unmaiyileye super. paarattukkal.

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
எனக்கும் மிகப் பிரியமானவர்தான்

@கோமு
???

@லக்ஷ்மி
இப்ப கதவு உண்டு. புதுப்பித்து கட்டி உள்ளார்கள். கூரை மட்டுமே அதுவும் மூலவருக்கு மேல் மட்டும் இல்லை

@அப்பாவி
:)

@கந்தசாமி
நன்றி அய்யா

@ராஜி
நன்றி. அதுவும் உண்டு என் இன்னொரு வலைப்பூவை பாருங்க

பத்மநாபன் சொன்னது…

தமிழ் மணம் மூன்றாம் சுற்றில் நுழைந்ததற்கு வாழ்த்துக்கள்... பதக்கம் வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

Porkodi (பொற்கொடி) சொன்னது…

Congratulations on moving on to 3rd round LK!

தக்குடு சொன்னது…

//தமிழ் மணம் மூன்றாம் சுற்றில் நுழைந்ததற்கு வாழ்த்துக்கள்//

Congrats LK!..:))

பெயரில்லா சொன்னது…

"ஆனால், அந்த தெய்வத்தின் குறிப்பிட்ட ஒரு அவதாரத்தை மட்டும் வணங்குபவர்கள் உண்டா ?"

நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோயிலுக்குப் போவது எப்படி என்று கூகுளில் தேடும்போது உங்கள் பதிவு காணக்கிட்டியது. ஆனால் ஏமாற்றமே. வழி தெரியவில்லை.

அது கிடக்க. இப்போது நீங்கள் எழுதியது, நான் சுட்டியதைப், பார்க்கவும்.

இராம அவதாரத்தை மட்டும் வணங்கியோர் ஏராளம். ஹரிதாஸ், இராமதாஸ் இருவரைப்பற்றி மட்டும் இங்கே சொல்லலாம் இப்போது.

ஹரிதாஸ் ஒரு செருப்புத்தைக்கும் பஞ்சமர் கங்கைக்கரையில். நம்பினால் நம்புங்கள் இல்லாவிட்டால் போங்கள். இவர் அனுமனைக்கடவுள் எனக்கூப்பிடாமல், தன் அண்ணன் என நினைத்துக் கூப்பிடுவார். அனுமன் இவரருகில் எப்போதும் இருப்பது போல பேசுவார்.

இதற்குக் காரணம், இவர் இராம-சீதை தம்பதிகளை, தன் பெற்றோராக எடுத்துக்கொண்டு, அப்பா, அம்மா என்றுதான் சொல்வார். அனுமன் இவருக்கு அண்ணன். பின்னாளில் பிராமணர்கள் இவருக்குச் செய்த துவேசத்தினால், சீக்கிய மதததில் இணைத்துக்கொண்டாலும், இவர் இராம-சீதையை விடவில்லை. இவரெழுதிய இராம பக்தி பாடல்கள் விசேசமானவை. ஆதி கிரந்தத்தில் சேர்க்கப்பட்டு, குருபானியில் பாராயணம் குருத்துவாராக்களில் பண்ணப்படுகிறது நித்தம்நித்தம்.

இராமதாசர் எனப்பலருண்டு. பத்ராசாலம் இராமதாசர் உங்களுக்குத் தெரியும். அவர் வேண்டுகோளிக்கிணங்கவே ஹைதராபாத் சுல்தான் அக்கோயிலை புதுப்பித்தான்.

நான் சொல்லும் இராம‌தாச‌ர் ம‌ராட்டிய‌ர். இவ‌ர் ப‌க்கா இராம‌ ப‌க்த‌ர். இராம‌ - சீதையைத் த‌விர‌ வேறெவ‌ரையும் கும்பிட‌மாட்டார். அனைத்துத் தெய்வ‌ங்க‌ளும் இவ‌ர் க‌ண்ணுக்கு அப்ப‌டித்தான் தெரிய‌ வேண்டும். இல்ல‌யென்றால் வெளியேறி விடுவார்.

விட்ட‌ல‌ர் என்ப‌து விஷ்ணுவின் உருவ‌ம் மராட்டிய‌ர்க‌ளுக்கு. கோலாப்பூர் அருகில் உள்ள‌ ப‌ன்த‌ர்ப்பூரில்தான் விட்ட‌ல‌ர் கோயிலுண்டு. அங்கு சென்று வ‌ண‌ங்க‌ச்சென்ற‌ இராம‌தாச‌ர் விட்ட‌ல‌ர் உருவ‌மாக‌ விஷ்ணுவைக்க‌ண்டார். வ‌ண‌ங்க‌ மாட்டேன் என‌ச்சொன்னார். ஏனென்றால் இராம‌-சீதையாக‌த்தான் வ‌ர‌வேண்டும் என‌ச்சொல்ல‌, விட்ட‌ல‌ர் அவ‌ர் துணைவியாரும், த‌ன் முழுமுத‌ற்ப‌டிவ‌த்தை விட்டு, இராம‌ - சீதையாக‌ இவ‌ருக்குத் த‌ரிச‌ன‌ம் செய்தார்க‌ள் என‌ப‌து இராம‌ தாச‌ர் வ‌ர‌லாறு.

இப்ப‌டிப்ப‌ட்ட‌ இராம‌ ப‌க்த‌ர்க‌ள் வ‌ரிசையில் அனுமார் முத‌லில் வ‌ருப‌வ‌ர் என்று ம‌ட்டுமே சொல்ல‌லாம்.

இவ‌ண்

ஜோ. அம‌ல‌ன்

Cd u tell me the route from T.Coromodal, Nungambakkam High Road to Nanganalluur Anumaar koil -today. Because I am leaving for Chennai tomorrow evening.