ஜனவரி 10, 2011

ஜகத்குரு -9- குரு

விகிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

***********************************************************************************************
வீட்டில் தாயிடம் முறைப்படி அனுமதிப் பெற்று அவரை வணங்கி கிளம்பிய சங்கரர், வடதிசை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். தன் குரு எங்கே இருக்கிறார் , யார் அவர் ,அவரை சந்திக்க எப்பொழுது இயலும் இந்தக் கேள்விகள் மனதில் தொக்கி நிற்க பாதசாரியாய் பயணித்த சங்கரர் , நர்மதை நதிக் கரையை அடைகிறார்.

"மாமா ! சங்கரர் பிறவி ஞானின்னு சொல்றேள் . அப்புறம் எதுக்கு அவர் குருவை தேடி போகணும் ? அவருக்கே தெரியும் இல்லையா ??"

"அப்படி இல்லை வெங்கட் ! யாரை இருந்தாலும், துறவறம் மேற்கொள்ளனும்  என்றால் முறைப்படி ஒரு குருவை அணுகி அவர் அனுமதி வாங்க வேண்டும். குருவானவர் நீ துறவறம் வாங்க தகுதி உள்ளவன் தானா என்பதை சோதித்துப் பார்த்து பின் அதற்குண்டான விஷயங்களை போதித்து துறவறம் செல்ல அனுமதித் தருவார். "

"இந்தக் காலத்தில் எல்லா ஸ்லோகமும் சீடியில் கிடைக்குது. அதை போட்டு சொல்ல ஆரம்பிக்கிறோம் எல்லாரும். அது தப்பு. ஒரு சில ஸ்லோகங்கள் முறைப்படி யாரவது ஒரு குருவிடம் கற்றுக் கொண்டப் பிறகே சொல்லணும். குறிப்பா லலிதா சகஸ்ரநாமம் போன்றவை குருகிட்ட முறையா உச்சரிப்பு சுத்தமா கத்துகிட்டு சொல்லணும்."

"நமது மரபு அப்படி. எதுவாய் இருந்தாலும் குருமுகமாய் கற்றுக் கொள்ளவேண்டும். பிறவி ஞானியாய் இருந்தாலும், இந்தப் பாரம்பரியத்தை மரபை மாற்ற விரும்பவில்லை சங்கரர். நர்மதை நதிக் கரையில் அமர்ந்து த்யானிக்கிறார், தனக்கான குரு எங்கே இருக்கிறார் என்று மனதால் தேடுகிறார். "


 "அதே சமயத்தில் நர்மதைநதி வீழும் மலைச் சாரலில் உள்ள குகையில் இருந்து ஒருவித வெளிசாமும் ஈர்ப்பு சக்தியும் வர, அந்த குகையி நோக்கி நடக்கிறார். குகை வாசலை அடைந்த உடனே அவருக்கு மனதில் புரிந்து விட்டது ,நமது குரு இங்கேதான் உள்ளார் என்று. குகையை வலம் வந்து நெடுஞ்சாண்கிடையாய் தண்டனிட்டு வணங்கி ,குரு அழைக்கட்டும் என்று அங்கேயே காத்திருக்கிறார். 


"இந்து மதத்தில், குரு என்பவர் கடவுளுக்கும் மேலே. அதனால்தான் குருவுக்குப் பிறகே இறைவனை வைத்தார்கள் நமது முன்னோர்கள். கடவுள் கோபித்தால் குரு காப்பாற்றுவார். ஆனால் குரு கோபம் கொண்டால் யாராலும் காப்பாற்ற இயலாது. "

-தொடரும்

அன்புடன் எல்கே

45 கருத்துகள்:

பார்வையாளன் சொன்னது…

பதிவுலகை பாசிடிவாக பயன்படுத்துகிறீர்கள் . குட்

பெயரில்லா சொன்னது…

arumaya thagavalgal LK sir

கீதா சாம்பசிவம் சொன்னது…

குரு ஏற்கெனவே அங்கே வந்து சங்கரருக்காகக் காத்திருப்பார். நர்மதையைத் தன் கமண்டலத்தில் அடக்குபவனே உனது சீடன் என்ற தகவலும் அவருக்குச் சொல்லப் பட்டிருக்கும். ஒருவேளை இதெல்லாம் அப்புறமாய் எழுதும்போது வருமோ?

thiruchchikkaaran சொன்னது…

அன்புக்குரிய கார்த்திக், சங்கராச்சாரியார் பற்றி தொடர்ந்து எழுதுகிறீர்கள், பாராட்டுக்கள். சங்கராச்சாரியார் பற்றிய உங்களுடைய அணுகுமுறை சம்பிரதாய அணுகுமுறையை ஒட்டி உள்ளது.இந்த அணுகுமுறை சங்கராச்சாரியார் என்றால் இப்படித்தான் என்கிற வகையிலே, சங்கராச்சாரியாரை (ஆதி சங்கரரை) அனைவரும் அறிந்து கொள்ள முடியாதபடி செய்து விட்டது.This approach writes more about the mircle part in his life and less about the effect of his principles. ஆதி சங்கரரின் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே பொருத்தமானது. சங்கராச்சாரியார் பற்றி நானும் என் தளத்தில் எழுதுகிறேன்.

http://thiruchchikkaaran.wordpress.com/2010/10/24/sankaraachaaryaa-part-1/

http://thiruchchikkaaran.wordpress.com/2010/12/08/sankarachaarya-a-rationalis/

படித்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.


இந்து மதத்தில் குருவுக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால் குருதான் எல்லாம், குரு இல்லாவிட்டால் ஆன்மீகம் இல்லை என்ற கருத்தை பலரும் சொல்கிறார்கள். நீங்களும் அந்த வலையில் விழுந்து விட வேண்டாம்.

குரு இல்லாவிட்டால் ஆன்மீக முன்னேற்றம், விடுதலை கிடைக்காது என்று கீதையில் சொல்லி இருக்கிறதா? கீதையில் எனக்கு தெரிந்து குரு அவசியம் என்று சொன்னதாக ஒரு இடத்தில் கூட இல்லை.


அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கிடைத்தது போல , விவேகானந்தருக்கு பரமஹம்சர் கிடைத்து போல சிறப்பான குரு கிடைத்தால் நல்லது. அப்படி கிடைக்கவில்லை என்றால் ஆன்மீக முயற்சி செய்யாமல் இருக்க முடியாது. பொருத்தம் இல்லாதவரை குரு குரு என்று தலையில் வைத்துக் கொண்டாடினால், மக்களுக்கு, சமுதாயத்துக்கு, இந்து மதத்துக்கு பின்னடைவே உருவாகும்.

உண்மையை உணர்ந்த குரு கோபமே பட மாட்டார். அவர் கருணையே உருவானவர். கோவத்துக்கு அவர் மனதில் இடமே இல்லை. அதைத் தாண்டிய மன நிலையில் அவர் இருப்பார்.


முதன் முதலாக உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடுகிறேன்.Let me refrain from too much criticism. Young people like you can approach Sankaracharaya in analytical and rational way . Sankaracharya himself was a great radical reformist, a rationalist!

komu சொன்னது…

ஏ, அப்பா, துறவரம் மேற்கொள்வதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா. தெளிவாக சொல்லி வருவதில் நன்கு புரிந்து கொள்ள முடிகிரது.

எல் கே சொன்னது…

@பார்வையாளன்

நன்றி

@கல்பனா
நன்றி

எல் கே சொன்னது…

@கீதா

மாமி, வரும் வரும். கொஞ்சம் பொறுமை. உங்க ஸ்பீட் நமக்கு வராது. நிதானமா போலாம்

சே.குமார் சொன்னது…

தெளிவாக சொல்லி வருவதில் நன்கு புரிந்து கொள்ளமுடிகிறது.

எல் கே சொன்னது…

@திருச்சிக்காரன்
முதல் வருகைக்கு நன்றி நண்பரே. முதலில் ஒன்றுத் தெளிவுப் படுத்திவிடுகிறேன். இன்னமும் நான் அவருடைய வாழ்வின் முக்கியப் பகுதிக்கு செல்லவில்லை. அவரது வரலாறு என்று சொல்லும்பொழுது எல்லாவற்றையும் தொட்டு செல்லவேண்டும். ஒன்றை விட்டு மற்றொன்றை மட்டும் சொல்லிச் செல்வது சரியான முறை அல்ல என்பது என் கருத்து.

பாமர மக்களுக்கு கண்டிப்பாக குரு வேண்டும். ஏகலைவர்கள் எல்லா காலத்திலும் உண்டு. ஆனால் எல்லோரும் ஏகலைவர்கள் ஆகி விட முடியாது. குருவாக தகுதி அனைவருக்கும் இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் குறை சொல்ல முடியாது.

மாற்றுக் கருத்தும், விவாதமும் இல்லாமல் யாரும் கற்றுக் கொள்ள இயலாது.

எல் கே சொன்னது…

@கோமதி
நன்றி. இன்னமும் நெறைய இருக்கு. சமயம் வரும்பொழுது சொல்கிறேன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.

Chitra சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க...

thiruchchikkaaran சொன்னது…

பாமர மக்களுக்கு குரு கண்டிப்பாக வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

இன்றைய கால கட்டத்தில் பாமர மக்கள் என்று நீங்கள் கருதுவது யாரை?

எல்லோரும் பள்ளிக்கு செல்கிறார்கள். கீதை உபநிடதங்ககுள் இவை எல்லாம் மொழி பெயர்ப்பு செய்யப் பட்டு கடைகளில் கிடைக்கின்றனர். அவற்றைப் படித்து தான் பலரும் இந்து மதக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்கிறார்கள். கட உபநிடதம் போன்றவை புரிந்து கொள்ள மிக எளிதாகவும் உள்ளன.

இன்றைக்கு ஆன்மீக விடயங்களைப் பற்றி சிந்திக்கும் பலரும், பதிவுகளை இப்படிப் படிப்பறிவில் கற்றதிலும், வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியாலும் , தாங்கள் மனக் குவிப்பு, பூசனை போன்றவற்றின் மூலம் பெற்ற ஆன்மீக முன்னேற்றத்தையும் அடிப்படையாக வைத்தே எழுதுகிறார்கள். எல்லோருக்கும் குரு இருக்கிறார்களா?

ஆன்மீக முன்னேற்றத்துக்கு குரு கண்டிப்பாக வேண்டும் -இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று விளக்க முடியுமா? குரு கண்டிப்பாக வேண்டும் என்று கீதையில் சொல்லப் பட்டு உள்ளதா? இந்தக் கேள்விக்கு பதில் தர இயலுமா? குரு என்கிற வார்த்தையை கூட கிருஷ்ணர் சொன்னதாக நினைவு இல்லை.

துரோனாச்சாரியாரைக் குறிக்க ஓரிரு இடங்களில் அர்ஜுனன் குரு என்கிற வார்த்தையை உபயோகப் படுத்தி இருக்கிறார்- அது ஆன்மீக குருவைக் குறிக்க அல்ல, விழ வித்தை குருவைக் குறிக்க. இப்படி குரு என்று ஒருவர் இருந்தே ஆக வேண்டும், இல்லாவிட்டால் முடியாது என்று முட்டுக் கட்டை போடுவது சரியா?

நான் எந்த குருவையும் குறிப்பிட்டு குறை சொல்லவில்லையே. நீங்கள் சொல்ல விரும்பிய யாராவது ஒருவர் இருந்தால் குறிப்பிட்டு சொல்லலாமே. குரு என்று சொன்னால் அவர் ஆன்மீக முயற்ச்சியில் தானே வெற்றி பெற்றவராக இருக்க வேண்டும்- புத்தரைப் போல, ஆதி சங்கரரைப் போல, சுவாமி விவேகனதரைப் போல் . வெறுமனே எழுதப் பட்டுள்ளவற்றை படித்து சொல்வதானால் அதை நாமே படித்துக் கொள்ளலாம். இன்னொருவர் சொல்லிக் கொடுத்தால் தவறில்லை.

ஆனால் அப்படி படித்துப் பொருள் சொல்லும் குரு இல்லை என்றால் நாம் படித்து தெரிந்து கொள்ள முடியாதா? யார் வேண்டுமானாலும் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீராம். சொன்னது…

தொடருங்கள் கார்த்திக்...

கீதா சாம்பசிவம் சொன்னது…

புத்தருக்கும் சில நிகழ்வுகளே குருவாக அமைந்தன. அவை இல்லை எனில் அவரால் நிர்வாணம் நோக்கிச் சென்றிருக்க முடியாதோ??

ஆதி சங்கரருக்கு இவர் தான் குரு என ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இது அவரை ஒரு கட்டுக்குள் அடக்குவது என்றும் சொல்ல முடியாது. குருவால் தான் சந்நியாசம் கொடுக்க முடியும். அதற்காகப் பெயரளவுக்கானும் ஒருத்தர் வேண்டும் என்பதால் கோவிந்த பகவத்பாதர் அந்தப் பொறுப்பை ஏற்றார். இது குறித்து இன்னும் கொஞ்சம் தகவல் திரட்டிக்கொண்டு சொல்கிறேன்.

விவேகாநந்தருக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சர் குருவாய் இருந்தார். அவர் இல்லை எனில் விவேகாநந்தருக்கு வேறு எவரேனும் குருவாகி இருக்கலாம். சித்தர்களுக்குக் கூட குரு என ஒருத்தர் இருந்தே வந்திருக்கின்றனர். அகத்தியரில் இருந்து ஆரம்பித்து எல்லா சித்தர்களுக்கும் குரு என ஒருத்தர் உண்டு.

பாமர ஜனங்கள் என இங்கே எல்கே சொல்லி இருப்பது பெரும்பாலான மக்களைனு எடுத்துக்கொள்ளணும். சொல்லப்போனால் அந்தப்பாமர ஜனங்களின் கூட்டத்தில் நானும் உண்டு. எல்கேயும் உண்டு. மற்றும் இது குறித்துத் தெரியாத அனைவரும் உண்டு.

கீதா சாம்பசிவம் சொன்னது…

ஆசார்யாள் ஈஸ்வராம்சம் தான். அவருக்குமா குரு என்றால் அவர் அவதரித்தது மனிதராக. சாதாரண மனிதக் குழந்தைகளைப் போலவே ஆர்யாம்பாளும் அவரைப் பத்து மாதங்கள் சுமந்தே பெற்றெடுத்தாள். மேலும் அவர் முதலை காலைப் பிடித்த காரணத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு குருமுகமாக இன்றித் தானே ஸ்வீகரித்துகொண்டார். என்றாலும் அதையும் முறைப்படியே தண்ணீரின் மத்தியில் இருந்தே சந்நியாச ஆசிரமத்தை ஸ்வீகரித்துக்கொண்டார்.

சந்நியாசி ஆவதற்குப் பிரணவ உபதேசமும், மஹாவாக்யம் எனப்படும் உபதேசமும் பெறவேண்டும். அதை குரு மூலமே பெறமுடியும். மேலும் அவர் அவதார காரியமே சநாதன தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டவேண்டுமென்பது தான். அதற்கு உள்ள வழிமுறைகளை அவரே பின்பற்றாமல் இருப்பது எப்படி?? அவர் குருவை நாடாமல் இருந்திருந்தால் இன்று நாம் அவரை குருவாக ஏற்றுக்கொண்டிருப்போமா என்பதும் சந்தேகமே.

கீதையிலே கிருஷ்ணன் "மூன்று உலகிலும் எனக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லை" என்கிறார். என்றாலும் அவர் பார்த்தனுக்கு சாரதியாக இருந்தார். அதோடு பாண்டவர்களுக்காக தூது நடந்தார். இதெல்லாம் சொந்த லாபத்துக்காகவா? இல்லையே? கிருஷ்ணன் தலையிடவில்லை எனில் குழப்பம் இன்னும் அதிகமாகவும் ஆகி இருக்கலாம் அல்லவா? இன்று கண்ணனை தெய்வமாய் நினைக்கும் நாமும் அப்போது அட, கண்ணனே ஒண்ணும் செய்யவில்லை, நமக்கு என்ன வந்தது கடமையும், சுயதர்மமும் என்றும் நினைப்போமே! தர்மத்தை நிலைநாட்டவேண்டி வந்தவர்கள் அந்த தர்மத்தைப் பின்பற்றி ஒரு முன்னுதாரணமாய்த் திகழவேண்டும். அதனாலேயே ஆசாரியர் குருவை நாடிப் போனார்.

கோவை2தில்லி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.

thiruchchikkaaran சொன்னது…

பாமரர்களுக்கு குரு கண்டிப்பாக தேவை என்றால், பண்டிதர்களுக்கு தேவை இல்லையா? சரி பண்டிதர்கள் நன்றாக இருக்கட்டும்.

இன்றைக்கு இந்தியாவில் உள்ள 120 கோடி பாமரர்களுக்கும் சொல்லித் தர குரு இருக்கிறார்களா? (அதாவது தகுதியான குருவை பற்றிக் குறிப்பிடுகிறோம்).

அப்படி குரு இல்லாத, கிடைக்காத பட்சத்திலே, அவர்கள் தாங்களாக முயற்சி செய்யலாமா, கூடாதா, ஒருவன் தானே கீதை , உபநிடதங்களைப் படித்து தெரிந்து தானே வீட்டிலே உட்கார்ந்து தியானமோ கண்ணப்ப நாயனாரைப் போல பூசையோ செய்தால் அவனுக்கு ஆன்மீக முன்னேற்றம் கிடைக்குமா, கிடைக்காதா? இதைத் தெளிவாக சொல்லுங்கள்.

ஒரு மனிதன் தன்னளவிலே தன்னைத் தானே உயர்த்திக் கொள்வதற்கு முட்டுக் கட்டை போல, வூஹும், குரு இல்லைன்ன முடியாது என்று அழுத்தி சொல்லி அவன் முன்னேற்றத்தை தடுப்பது ஏன்?

ஒரு குருவும் இல்லாமல், அமைதியாக ஆத்தாளுக்கு பொங்கல் வைப்பவர் ஆதி சங்கரரின் சரியான பக்தி மார்க்கத்தை எந்த குருவும் இல்லாமல், தன்னை அறியாமலே பின் பற்றுகிறார்.

அப்படியே ஆத்மாவைக் கையிலே பிடித்து கண்ணிலே காண்பிப்பார் என்று "குரு"வைத் தேடி ஓடிய படித்த கனவான்கள்,(அவர்கள் பாமரரோ பண்டிதரோ),எவ்வளவோ பில்ட் அப் கொடுத்தார்கள். இப்போது உலகமே பார்த்தாலும், மீசையிலே மண் ஒட்டவில்லை என்கிறார்கள்.

கருமாரி அம்மனை, கோவிலில் வணங்குபவரின் ஆன்மீகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அன்றும் இன்றும் நம்பிக் கட்டுற கம்பி, இவர்கள் தான் ஆதி சங்கரரை உண்மையாக பின்பற்றுகிறார்கள், அவர்கள் எந்த குருவையும் நம்பவும் இல்லை, சகதியில் விழாவும் இல்லை.இவர்கள்தான் இந்திய சமுதாயத்தின், இந்து மதத்தின் தூண்கள், இவர்களையும் ஏதாவது "குரு" வின் கடாட்சத்தில் சிக்க வைத்து மொத்தமாக அழிக்க வேண்டுமா?

சுசி சொன்னது…

தொடருங்க கார்த்திக்.

பத்மநாபன் சொன்னது…

படிப்படியாக நிதானமாக அழகாக கொண்டு போகிறீர்கள்....

துறவறம் என்று முடிவெடுத்தவுடன் , குருவை நாடிச் சென்ற செயல் அவருக்குண்டான பணிவையும், கர்வமற்ற தன்மையும் காட்டுகிறது..

கீதா மேடம் அவர்களின் விளக்கமும் சிறப்பாக இருக்கிறது...

இப்போது உள்ள கார்ப்பரேட் குருமார்களையும், போலி சாமியார்களையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் ..பொறுமையாக இந்த தொடரை படித்துவந்தால்..ஆதிசங்கரரின் மேன்மையான ஆன்மீகத்தை உணரலாம்..

நல் வாழ்த்துக்கள் எல்.கே..

thiruchchikkaaran சொன்னது…

குரு இருந்தால் நல்லதுதான். தகுதியான குரு கிடைக்கும் போது அவரை விட்டு விட்டு செல்வது , பாலைவனத்தில் கிடைத்த தண்ணீர் பானையை உடைத்தது போலாகும்!


ஆனால் குரு என்ற ஒருவர் இருந்தே ஆக வேண்டும் என்பது இல்லை. தீவிரமான வைராக்கியம் உள்ள யாரும் அப்படியே சந்நியாசி ஆக விடுவான், இந்த உலகப் பொருட்கள் , சொத்து, சுகம் உட்பட எதுவும் தன்னைக் காக்க வராது, காக்கவும் அவற்றால் முடியாது என்பதை திண்ணமாக மனதில் பதிந்தவனுக்கு அப்போதே சன்யாசம் தான்.


குரு சன்யாசம் குடுத்தாலும், வாழ்க்கையின் கூறுகளை ஆராயாதவன் சந்நியாசி ஆனாலும் மறுபடியும் ஆசை வலையில் விழுந்து விடுவான்.


விவேகத்தினால ஏற்பட்ட வைராக்கியம்- அறிவினால் உண்டான மன உறுதிதான் ஒருவனை சன்யாசி ஆக மாற்றுகிறது.


சகஸ்ர நாமம் கற்றுக் கொள்ள கூட குரு வேண்டும் என்றால், உபநயனத்தின் போது குரு சொல்லி, தந்தை காயத்ரி மந்திரத்தை சொல்கிறார். குருவும் அந்த மந்திரத்துக்கு அர்த்தம் சொல்வது இல்லை. தந்தையும் சொல்வது இல்லை. குரு தக்ஷினையை வாங்கிக் கொண்டு கிளம்புகிறார். காயத்ரி மந்திரத்துக்கான அர்த்தத்தை புத்தகத்தைப் பார்த்துதான் பலரும் அறிந்து கொள்கின்றனர்.
மனதிலே உண்மையை தெரியச் செய்யும் ஒளியை வேண்டி, அந்த ஒளிதான் முக்கியமானது என்று அதைத் தவிர வேறு எதையும் எண்ணாமல் காயத்ரி மந்திரத்தை மனக் குவிப்புடன் சொன்னாலேதான் ஆன்மீக முன்னேற்றம் சாத்தியமாகும். வெறுமனே அர்த்தம் தெரியாமல் , 'குரு' சொன்னது போல மந்திரத்தை ஒப்பித்து விட்டு போனால் பலன் கிடைக்குமா? இதைத்தான் சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்) நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரனே என்றார் .


குரு குரு என்று ஓவர் ஹைப் குடுப்பதால் கார்ப்பரேட் குருமார்கள் என்று சொல்லப் படுபவர்க்ளுக்குத் தான் லாபம், அதோடு அவர்களை சுற்றி சுற்றி வந்து சேவை செய்யும் முக்கியஸ்தர்களுக்கும் கொஞ்சம் லாபம் கிடைக்கும். - நஷ்டம், இந்து மதத்திற்குத் தான்.

குரு பக்தி என்ற பெயரிலே "குரு இருந்தால்தான்" என்று குருவுக்கு ஹைப் குடுப்பவர்களிடம் இருந்து இந்து மதத்தைக் காப்பதே பெரும்பாடாக உள்ளது.


கடந்த முப்பது நாற்பது வருடத்தில் இப்படி குரு ஹைப் குடுத்தே பில்லியநேர் குருக்களையும் உருவாக்கி இந்து மதத்தை பின்னடைவு அடைய வைத்து விட்டனர்.


அப்பாவி பாமர மக்களின் அமைதியான கடவுள் பக்தியே இப்போது இந்து மதத்தைக் காத்து நிற்கிறது.
நல்ல குரு இருந்தால் வரட்டும். இல்லையேல் குரு இல்லாமலே இருக்கலாம்.


ஆதி சங்கரர் , இராமானுஜர், மத்வர் இவர்கள் காலத்துக்கு அப்புறம் எந்த குரு வந்து மக்களை வழி நடத்தினார்கள்? மக்களுக்கு எந்த குருவையும் தெரியாது.
புத்த மதத்தால் அப்புறப் படுத்தப் பட்ட கடவுள்களை ஆதி சங்கரர் மீட்டுக் கொடுத்து எல்லோரும் வழி பட செய்தார். அதை வைத்தே ஆயிரம் வருடங்களுக்கு மேலாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். இன்னும் பல்லாயிரம் வருடம் அப்படியே நடக்கும்.


சுவாமி விவேகானந்தர் வந்து மேலை நாட்டினருக்கு இந்து மதம் ஒரு சிறப்பான மதம் என்பதை அறியச் செய்து, இந்து மதத்தின் மீது போடப்பட்ட குப்பைகளை நீக்கி, மக்களுக்கு நம்பிக்கையை அளித்தார்.
அது போல நல்ல குருக்கள் வருவதானால் வரட்டும். இல்லையானால் யாரும் வேண்டாம், மக்களே பார்த்துக் கொள்வார்கள்.


குரு துதி பாடி ஹைப் குடுத்து பேரையும் புகழையும் உருவாக்கி.... கீழே விழும்போது பாதிப்பு இந்து மதத்திற்குதான்.


மரியாதைக்குரிய குரு பக்த சிரோன்மணிகளே, நீங்கள் இந்து மதத்திற்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு, குரு அவசியம் என நினைத்து, இப்படி அவ்வப்போது யாரையோ பிரபலமான குருவாக்கி இந்து மதத்தைக் காயப் படுத்தாமல் இருந்தால் போதும். இந்து மதம் அதன் பாட்டிலேயே சிறப்பாக செல்லும்.

Philosophy Prabhakaran சொன்னது…

இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

எல் கே சொன்னது…

@திருச்சிக்காரன்
நண்பரே, நீங்கள் ஏன் இன்றைய கார்ப்பரேட் குருக்களை வைத்து எடைப்போடுகிரீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

உங்களுக்கு புதிய விஷயம் சொல்லித் தரும் யாரும் குருதான். இந்தப் பதிவுலகில் நான் ஒரு சிலரிடம் பல ஆன்மீக விளக்கங்கள் கற்றுக் கொண்டுள்ளேன். அவர்களும் எனக்கு குருதான். அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு ?

கலியுகத்தில் ஒரு கண்ணனோ இல்லை வஷிச்டரோ இல்லை துரோணரோ குருவாக வர வாய்ப்புகள் குறைவு. ஆனால் அதற்காக கண்டவரை குருவாய் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நிஜமான உண்மையான ஆன்மீக விளக்கங்கள் அளித்து தந்து சிஷ்யர்களை வழிநடத்தக்கூடிய குருக்கள் பலர் இன்றும் உள்ளனர். அவர்கள் விளம்பரம் இன்றி தங்கள் பணியை செய்துகொண்டுதான் உள்ளனர். அத்தகையவர்களை நான் அறிவேன்.

thiruchchikkaaran சொன்னது…

அன்புக்குரிய கார்த்திக்,

குரு கண்டிப்பாக வேண்டும்...என்று எல்லாம் நீங்கள் கண்டிசனல் கிளாஸ் (clause) வைக்கிறீர்கள். இப்படி எல்லாம் சொன்னால் ஓவர் ஹைப் குடுப்பவர் பலர் தங்களுக்காக உபயோகப் படுத்திக் கொள்கின்றனர்.

நான் கேட்டது எதற்கும் நீங்கள் எந்த பதிலும் தரவில்லை. குரு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கீதையில் சொல்லி இருக்கிறதா என்று மூன்று முறை கேட்டு விட்டேன்.

உங்களின் அடுத்த கோட்பாடு, "இந்து மதத்தில், குரு என்பவர் கடவுளுக்கும் மேலே. அதனால்தான் குருவுக்குப் பிறகே இறைவனை வைத்தார்கள் நமது முன்னோர்கள். கடவுள் கோபித்தால் குரு காப்பாற்றுவார். ஆனால் குரு கோபம் கொண்டால் யாராலும் காப்பாற்ற இயலாது. " - இந்தக் கோட்பாடு எந்த உபநிடதத்தில் இருக்கிறது? அல்லது நீங்களாக த்யானத்தில் ஈடுபட்டு செய்து கண்டு பிடித்தீர்களா - அதாவது இந்தக் கோட்பாடு இந்து மதத்தில் உங்களால முன் வைக்கப் படும் புதிய கோட்பாடா? அல்லது கடவுளே வந்து நான் கோவித்தால் குரு காப்பாற்றுவார், ஆனால் குரு கோவித்தால் நான் கூட காப்பற்ற முடியாது என்று சொன்னாரா?
கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் வேறு ஏதொ சொல்கிறீர்கள்.

புதிய விஷயம் சொல்லித் தரும் யாரும் குருதான். ஒன்றாம் வகுப்பு டீச்சரில் இருந்து, ம்யூசிக் டீச்சர், காலேஜ் லெக்சரர் வரை எல்லோரும் குருதான். அவர்களுக்கு குடுக்கும் அதே மதிப்பை குருவுக்கும் கொடுக்கலாம்.
எனவே காலேஜ் லெக்சரர் கோவம் கொண்டால் கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று, அந்த பவரை எல்லா காலேஜ் லெக்சரர் குருக்களுக்கும் எக்ஸ்டென்ட் செய்வீர்களா? (....continued)

thiruchchikkaaran சொன்னது…

அன்புக்குரிய கார்த்திக்,

....

இன்றைக்கு செல்வாக்கு இழந்த கோடீஸ்வர குருக்களை பற்றி பத்து வருடங்களுக்கு முன்னாள் ஏதாவது சொல்லி இருந்தால், அப்போது அப்படியே தெய்வக் குத்தம் ஆனது என்று பாய்வார்கள். இப்போது பல விடயங்கள் அம்பலமானதால் கார்ப்பரேட் குரு என்று புதுப் பெயர் சூட்டி, அந்த குருக்களை நாங்க சொல்லல்லை என்று மீடியம் ஸ்கேல் இண்டஸ்ட்ரி குருக்களுக்கு தாவுகிறார்கள். இவர்களுக்கும் பிரச்சினை என்றால் பிறகு ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி குருக்களுக்கு தாவுவார்களோ என்னவோ.

.........
//கலியுகத்தில் ஒரு கண்ணனோ இல்லை வஷிச்டரோ இல்லை துரோணரோ குருவாக வர வாய்ப்புகள் குறைவு.// புத்தர், ஆதி சங்கரர்,பட்டினத்தார் இவர்கள் எல்லாம் எந்தக் யுகம், திரேதா யுகமா?

தியாகராஜர், விவேகானந்தர் ஆகியோர் எந்தக் காலம், துவாபர யுகமா, ஹர்ஷர் காலமா, கனிஷ்கர் காலமா?
இவர்கள் எல்லாம் பொன்னையும் காசையும் உதறி விட்டு எளிமையாக் வாழ்ந்தவர்கள். இதனால் இவர்கள் தவறு செய்ய மனமும் நாடியதில்லை, வாய்ப்பும் இல்லை, அதனால அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே மக்கள் அவர்களை உறுதியாக அடையாளம் கண்டு கொண்டனர்.
தியாகராசர் இல்லறத்தவர் , ஆயிரம் பொன்னுடன் சரபோஜி மன்னரின் ஆட்கள் அவரை வீட்டுக்கு சென்று வரவேற்றபோது, வீட்டிலே மணி அரிசி இல்லாத நிலையிலும் பொன்னை வேண்டாம் என்று மறுத்து விட்டு "நிதி சால சுகமா ராமு நீ சந்நிதி சால சுகமா" என்று பாடி பிக்ஷயில் இறங்கினார்.

மக்கள் இதை எல்லாம் புரிந்து கொண்டு அவர் வாழும் காலத்திலேயே குறிப்பிட்டு சொன்னார்கள்.
இன்றைக்கு பொருளில் புகழில் நாட்டம் இல்லை, உண்மையான ஆன்மீகத்தில் மட்டுமே நாட்டம், என்று சொல்லக் கூடிய குருக்கள் இருந்தால் அத்தகையவர்களை சுட்டிக் காட்டி தெளிவாக குறிப்பிட வேண்டியதுதானே.

அப்படி இல்லை, அவர்களும் எல்லோரயும் போல சொத்து , பத்து சேர்ப்பார்கள், ஆசா பாசம் உண்டு, ஆன்மீக கருத்துக்களை புத்தகத்திலிருந்து எடுத்து சொல்லி விளக்கும் குருக்கள்- என்று சொன்னால் அவர்கள் காலேஜ் லெக்சரர் போல தானே. அப்படிப் பட்டவர்களைப் பற்றி "குரு கோபம் கொண்டால் யாராலும் காப்பாற்ற இயலாது" என்ற பில்ட் அப் எதற்கு?

தக்குடு சொன்னது…

//குரு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கீதையில் சொல்லி இருக்கிறதா என்று மூன்று முறை கேட்டு விட்டேன்//

நானுன் LK சொல்லுவார்னு ஆர்வமா எதிர்பார்த்தேன். ஒரு கேள்விக்கு பதில் சொன்னாளே புரியர்துக்கு வாய்ப்பு உண்டு. கீதையில் குரு அவசியம்னு கண்ணன் சொன்னாரா என்றால், ஆமாம் என்று தான் தெரிகிறது. கீதைக்கு கீதாபதேசம் என்று ஒரு பெயரும், கண்ணனுக்கு கீதாச்சாரியன் என்று ஒரு பெயர் உண்டு என்பதை அனைவரும் அறிவர். அர்ஜுனன் நல்ல கல்வி அறிவு வாய்க்கப் பெற்றவனே இருந்தும் மிகப் பெரிய குழப்பத்தில் வீழ்ந்தான். அந்த சமயத்தில் யுத்த களத்தில் பார்த்தன் சீடனாக மண்டி இட்டு அமர்ந்து குருவான கண்ணனிடம் கீதையை உபதேசமாக பெற்றான். குருவோட மஹிமை இந்த இடத்திலேயே தெளிவாக தெரிகிறது, மறுபடியும் கண்ணன் குரு அவசியம்!னு வார்த்தைல சொன்னானா?னு மனசுக்குள் கேட்டுக் கொண்டால் அது ஒக்கலில் பிள்ளையை வைத்துக் கொண்டு ஊர் முழுவதும் தேடுவது போன்ற செயலே.

நிற்க, அதற்காக யாரை வேண்டுமானாலும் குருவாக ஏற்கவும் முடியாது.

தக்குடு சொன்னது…

பாகவத்தில் ஒரு குட்டி கதை உண்டு, ஒரு ரிஷி நதி கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வருவார்.அந்த ரிஷிக்கு தினமும் ஒரு பால்காரபெண்மணி பால் தயிர் கொண்டு வந்து தருவது வழக்கம். ஒரு நாள் அவள் மிகவும் தாமதமாக வருவாள். என்ன விஷயம்?னு கேட்ட ரிஷியிடம் ஆற்றில் வெள்ளம் ஸ்வாமி! அதனால்தான் ஓடத்தை செலுத்த வெகு காலம் ஆகி விட்டது என்பாள். இனி அவ்வாறு நிகழ்ந்தால் 'குருனாதர் துணை' என்று சொல்லி நதியை தாண்டி வா! என்பார். அடுத்த நாளும் வெள்ளம், ஆனால் அவள் சரியான நேரத்துக்கு வந்துவிடுவாள், ஆச்சரியப்பட்ட ரிஷி காரணம் வினவ, இப்படித்தான் வந்தேன் என்று சொல்லிக் கொண்டே அவள் ஆற்றில் நடந்து சென்று விடுவாள். ஆனால் அந்த ரிஷியால் செய்ய முடியாது.இந்தக் கதையை நேர் பொருளாக "தலைப்பாகை & தாடி,வசீகர புன்னகை உள்ள யாரை வேண்டுமானாலும் குருவாக ஏற்கலாம்" என்று கொள்ளாமல், திடமான நம்பிக்கையை காட்ட இந்த கதை சொல்லப்படும்.

தக்குடு சொன்னது…

நீங்கள் சொன்னது போல் நல்ல ஆத்ம ஞானம் உள்ள குரு ஒரு நாளும் கோவம் கொள்ளமாட்டார்.

குருவே வேண்டாம் என்று சொல்லும் மனது, நல்ல குரு கண் முன்பு இருந்தாலும் எடுத்துக் கொள்ளாமல் தவறவிடும்.

நல்ல குருவை அடையாளம் காண்பது எப்படி? என்பது அடுத்த கேள்வியாய் முளைக்கும்..;) அது ஆத்மானுபவத்தால் மட்டுமே அறிய முடியும்.

எல் கே சொன்னது…

திருமதி கீதா அவரால் பின்னூட்டம் இட இயலவில்லை என்றுத் தனி மடலில் அனுப்பியது.

பாமரர்களுக்கு குரு கண்டிப்பாக தேவை என்றால், பண்டிதர்களுக்கு தேவை இல்லையா? சரி பண்டிதர்கள் நன்றாக இருக்கட்டும்.//

பாமரன் என்பது இங்கே சாமானிய மனிதன் பொது ஜனம் என்ற அர்த்தத்திலேதான் எல்கே சொல்லி இருக்கிறார் என நான் நம்புகிறேன். பண்டிதர்களாக இருந்தாலும் எல்லாருக்குமே குரு தேவைப்படமாட்டார்தான். யார் தேடுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே குரு தேவை. தேடல் என்பதும் இங்கே ஆன்மீகத் தேடல்தான். இத்தனை விவாதம் செய்யும் உங்களுக்குக் கண்டிப்பாய் ஆன்மீகமும், பக்தியும் வேறு வேறு என்பதும் அவற்றின் எல்லைகளும் வேறு என்பதும் தெரிந்திருக்காமல் இருக்காது. ஆகவே ஆன்மீகத் தேடலுக்குக் கட்டாயமாய் குரு என்பவர்தான் வழிகாட்டுவார். மற்றபடி நானும் தான் தினமும் வீட்டில் உட்கார்ந்து தியானமும், நாமஜபமும் செய்து வருகிறேன். புராணங்களையும் மற்ற ஸ்லோகங்களையும் படித்து வருகிறேன். என்றாலும் எல்லாவற்றையும் மீறிய தேடல் ஒன்று உள்ளது. அதுக்கு நம் சொந்த முயற்சி மட்டுமே போதாது. விபரீதத்தில் கொண்டு விடும்.

இன்றைக்கு இந்தியாவில் உள்ள 120 கோடி பாமரர்களுக்கும் சொல்லித் தர குரு இருக்கிறார்களா? (அதாவது தகுதியான குருவை பற்றிக் குறிப்பிடுகிறோம்). //

முதல்லே 120 கோடி பாமரர்களுக்கும் ஆன்மீகத் தேடல் இருக்கா? தகுதியான குரு இருந்தாலும் விளம்பரம் செய்துகொண்டிருக்க மாட்டார்கள். மேலும் 120கோடி மனிதர்களுக்கும் ஆன்மீகத் தேடல் இருக்கிறதா? நீங்க சொல்வது ஆசிரியர்களைத்தான் குரு என்று. முதலில் குரு வேறே ஆசிரியர் வேறே என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். குருவுக்கு உதவி செய்பவர்களே ஆசிரியர்கள் அதாவது உபாத்யாயர்கள் . உங்களோட பதிவுகளிலே காயத்ரி மந்திரத்துக்குத் தப்பாய்ப் பொருள் சொல்லி இருக்கிறாப்போல் இல்லை இது!

எல் கே சொன்னது…

//அப்படியே ஆத்மாவைக் கையிலே பிடித்து கண்ணிலே காண்பிப்பார் என்று "குரு"வைத் தேடி ஓடிய படித்த கனவான்கள்,(அவர்கள் பாமரரோ பண்டிதரோ),எவ்வளவோ பில்ட் அப் கொடுத்தார்கள். இப்போது உலகமே பார்த்தாலும், மீசையிலே மண் ஒட்டவில்லை என்கிறார்கள். //

ஆத்மாவை எல்லாம் கையால் பிடிக்கமுடியும் அளவுக்கான பருப்பொருள் அல்ல அது. யாராலும் கையில் பிடிச்சுக் கொடுக்க முடியாது. அப்படித் தேடி ஓடினவர்கள் ஏமாந்தார்கள் என்பது சரியே, ஆனால் இங்கே யாருமே அவரை குரு என்றே சொல்லவில்லையே? அப்படி இருக்கும்போது இங்கே வந்து ஏன் கோவிக்கவேண்டும் என்பது புரியவில்லை?? இவர்களைத் தான் எல்கே கார்ப்பரேட் குருமார்கள் என்றார்.


//சகஸ்ர நாமம் கற்றுக் கொள்ள கூட குரு வேண்டும் என்றால், உபநயனத்தின் போது குரு சொல்லி, தந்தை காயத்ரி மந்திரத்தை சொல்கிறார். குருவும் அந்த மந்திரத்துக்கு அர்த்தம் சொல்வது இல்லை. தந்தையும் சொல்வது இல்லை. குரு தக்ஷினையை வாங்கிக் கொண்டு கிளம்புகிறார். காயத்ரி மந்திரத்துக்கான அர்த்தத்தை புத்தகத்தைப் பார்த்துதான் பலரும் அறிந்து கொள்கின்றனர். //

எந்த உபநயனத்தில் பார்த்தீர்களோ தெரியாது. ஆனால் எங்கள் வீடுகளில் நடக்கும் உபநயனங்களில் நாங்கள் இதை ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்கிறோம் என்பதோடு சிலர் வீடுகளில் அச்சடித்தும் கொடுக்கின்றோம். எங்கள் பையரின் உபநயனத்தில் தேர்ந்த ஒரு உபந்யாசகர் மூலம் உபநயனத்தின் பொருளையும், காயத்ரி மந்திரத்தின் சிறப்பையும் பற்றிச் சிறப்பு உபந்யாசமே செய்ய வைத்தோம். மேலும் வாமனருக்குக் காசியபர் செய்த உபநயனத்தையும், அப்போது பராசக்தி இட்ட முதல் பிக்ஷையையும் குறிப்பிடுவோம் பிக்ஷை போடும்போது. இது இன்று வரையிலும், எங்கள் உறவு, நண்பர் வட்டங்களில் விடாமல் நடைபெற்று வருகிறது.

எல் கே சொன்னது…

//கடவுள் கோபித்தால் குரு காப்பாற்றுவார். ஆனால் குரு கோபம் கொண்டால் யாராலும் காப்பாற்ற இயலாது. " - இந்தக் கோட்பாடு எந்த உபநிடதத்தில் இருக்கிறது? அல்லது நீங்களாக த்யானத்தில் ஈடுபட்டு செய்து கண்டு பிடித்தீர்களா - அதாவது இந்தக் கோட்பாடு இந்து மதத்தில் உங்களால முன் வைக்கப் படும் புதிய கோட்பாடா? அல்லது கடவுளே வந்து நான் கோவித்தால் குரு காப்பாற்றுவார், ஆனால் குரு கோவித்தால் நான் கூட காப்பற்ற முடியாது என்று சொன்னாரா?
கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் வேறு ஏதொ சொல்கிறீர்கள்.//

இது ஒன்றும் கோட்பாடெல்லாம் இல்லையே? நிதரிசனமான ஒன்று. ஆனானப்பட்ட அநுமனுக்கு சூரியன் தான் குரு என்றாலும் அவரின் விஷமம் பொறுக்க முடியாமல் அவரோட சக்தியைத் தேவைப்படும் சமயத்தில் பிறரால் நினைவூட்டப் படும்போது மட்டுமே நினைவுக்கு வரும் என்றும் அதுவரையில் தன் சக்தியைப் பற்றித் தானே அறியாதவனாய் இருப்பான் என்றும் ரிஷிகள், முனிவர்கள் கூறவில்லையா?? மேலும் மஹாபாரதக் கர்ணனுக்குப் பரசுராமரின் சாபம் நினைவில் இல்லையா?? குருவின் சாபத்தினால் தானே அர்ஜுனனை அவனால் வெல்ல முடியவில்லை??

thiruchchikkaaran சொன்னது…

திரு. தக்குடு அவர்களே ,

என்னுடைய முதல் பின்னூட்டத்திலே நான் குறிப்பிட்டதை படித்தீர்களா?

//அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கிடைத்தது போல , விவேகானந்தருக்கு பரமஹம்சர் கிடைத்து போல சிறப்பான குரு கிடைத்தால் நல்லது.//நான் எங்காவது குரு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேனா?

குரு வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை, கீதையிலும் சொல்லவில்லை.

"குரு என்று ஒருவர் கண்டிப்பாக இருந்துதான் ஆக வேண்டும் என்று கீதையில் எந்த இடத்திலாவது சொல்லி இருக்கிறதா" என்றுதான் தெளிவாக கேட்கிறோம்

//குரு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கீதையில் சொல்லி இருக்கிறதா என்று மூன்று முறை கேட்டு விட்டேன்//

அதற்க்கு கீதையில் இருந்து மேற்கோள் காட்டி இங்கே இருக்கிறது பார், என்று எழுதினால் அது சரி. அதை விடுத்து அதனால் தான் அப்படி தோன்றுகிறது என்று எல்லாம் எழுதுவது - கீதையில இருக்கோ இல்லையோ , ஆனாலும் நாங்க சொல்லுறோம் கேட்டுக்க என்கிற பாணியிலே உள்ளது.

//நானுன் LK சொல்லுவார்னு ஆர்வமா எதிர்பார்த்தேன். ஒரு கேள்விக்கு பதில் சொன்னாளே புரியர்துக்கு வாய்ப்பு உண்டு. கீதையில் குரு அவசியம்னு கண்ணன் சொன்னாரா என்றால், ஆமாம் என்று தான் தெரிகிறது. கீதைக்கு கீதாபதேசம் என்று ஒரு பெயரும், கண்ணனுக்கு கீதாச்சாரியன் என்று ஒரு பெயர் உண்டு//

//ஆமாம் என்று தான் தெரிகிறது//

எங்கே தெரிகிறது. கீதையில் இருந்து மேற்கோள் காட்டுங்களேன்.

கண்ணன் கீதாச்சாரியன் இல்லை, கண்ணன் குரு இல்லை என்று நாங்கள் எங்கேயாவது சொன்னோமா, குரு வேண்டாம் என்று எங்கயாவது சொன்னோமா?

//வார்த்தைல சொன்னானா?னு மனசுக்குள் கேட்டுக் கொண்டால் அது ஒக்கலில் பிள்ளையை வைத்துக் கொண்டு ஊர் முழுவதும் தேடுவது போன்ற செயலே.//

நான் உனக்கு உபதேசித்ததைப் போல ஒவ்வொர்வருக்கும் குரு உபதேசம் கண்டிப்பாக வேண்டும், இல்லாவிட்டால் ஆன்மீக முயற்சி சாத்தியம் இல்லை என்று கிருஷ்ணர் சொன்னாரா? ஒக்களில் உரலை வைத்து துணியால் மூடி பிள்ளை என்று காட்டினால் ஒத்துக் கொள்வார்களா? குரு கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லாததை சொன்னது போல சாதிக்க ஒக்களில் உரலை வைத்து துணியால் மூடிக் காட்ட வேண்டுமா? இப்படி எல்லாம் இருந்தே ஆக வேண்டும் என்று தேடி யாரையாவது குருவாக வைத்து ஏமாற வேண்டாம் என்றுதான் கிரிஷ்ணர் ஒரு இடத்தில் கூட, குரு கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லவில்லை.

கீதையில இல்ல, கிரிஷ்ணரும் சொல்லவில்லை. ஆனாலும் தங்கள் கோட்பாட்டை சரி போலக் காட்ட வேண்டும் என்று சாதிக்க நினைத்து எழுதுகிறார்கள்.

thiruchchikkaaran சொன்னது…

திரு. தக்குடு அவர்களே ,

குரு வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.


நான் இட்ட பின்னூட்டத்தில் எழுதி இருக்கிறேன்.

//குரு இருந்தால் நல்லதுதான். தகுதியான குரு கிடைக்கும் போது அவரை விட்டு விட்டு செல்வது , பாலைவனத்தில் கிடைத்த தண்ணீர் பானையை உடைத்தது போலாகும்!//


//குருவே வேண்டாம் என்று சொல்லும் மனது, நல்ல குரு கண் முன்பு இருந்தாலும் எடுத்துக் கொள்ளாமல் தவறவிடும்.//
என்னுடைய தளத்திலே நான் நேற்றே பதிவிட்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகளை தருகிறேன்.

//இந்தியாவைப் போல குருவிற்கு மரியாதை கொடுக்கும் சமுதாயம் இருக்குமா என்பது சந்தேகமே. ஒன்றாம் வகுப்பில் ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் முதல் , கராத்தே ஆசிரியர், இசை ஆசிரியர் , ஆன்மீக குரு வரை எல்லோருக்கும் என்றும் மதிப்புக் கொடுக்கிறான் இந்தியன். பின்னாளில் தான் பெரிய ஆளாக வந்தாலும், பள்ளி டீச்சர் எதிரில் வந்தால் சிரித்து, வணக்கம் செலுத்தி நலம் விசாரிப்பான் சராசரி இந்தியன். குருவுக்கும் , மாணவனுக்கும் உள்ள பந்தம் அலாதியானது, பிரிக்க முடியாதது.

நானும் எனது ஒன்றாம் வகுப்பு ஆசிரியை முதல் எல்லா ஆசிரியர்களிடமும் மிக்க மரியாதை வைத்திருப்பவன் தான். ஆன்மீகத்தில், தத்துவத்தில் என்னுடைய குருவாக நான் பாடம் கற்றது ,சுவாமி விவேகானந்தர், ஆதி சங்கரர், கிருஷ்ணர், சாக்ரடீஸ், புத்தர், இயேசுகிறிஸ்து, முஹம்மது நபி, குரு நானக், கபீர், பெரியார், பாரதியார், பட்டினத்தார், தியாகராஜர்… ஆகியோரிடம் இருந்து.

இந்து மதத்தில் குருவுக்கு முக்கிய இடம் உண்டு.

குரு மீது ஒரு இந்து வைத்திருக்கும் மரியாதையும், அன்பும் பிணைப்பும் அளவற்றது. ஒரு மனிதனின் மனநிலை அடையக் கூடிய உச்ச கட்ட நிலைக்கு அவனைக் கொண்டு சொன்று, துன்பத்திலே துடிக்காத மனநிலைக்கு ஒருவனை உயர்த்தி, ஒருவன் தன் இயல்பின் உண்மையான நிலையை அறியும்படி செய்து, அவனை சுதந்திரமுள்ளவனாக ஆன்மீக குரு ஆக்குகிறார் என்பதே மாணவனின் எண்ணம். சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சென்னை சொற்பொழிவில் “நான் சொல்லியதில் மனித குலத்துக்கு ஏதாவது நன்மை இருந்தால் அது என்னுடைய குரு இராம கிருஷ்ண பரமஹம்சரால், நான் சொல்லியதில் ஏதாவது தவறு இருந்தால் அதற்க்கு காரணம் நானே” என்றார்.

சுவாமி விவேகானந்தருக்கு இராமகிரிஷ்ணர கிட்டியது போல, அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கிட்டியது போல எல்லோருக்கும் ஆன்மீக குரு கிடைத்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்கும். அப்படிக் கிடைக்காத பட்சத்திலே என்ன செய்ய முடியும்? குரு கிடைக்கவில்லை என்றால், முந்தைய குருக்கள் சொல்லியதை வைத்து படித்துப் பார்த்து நாமே நம்மை ஆன்மீக ரீதியில் உயர்த்திக் கொள்ள முயல்வதுதானே நடக்கக் கூடியது? சரியான குரு கிடைக்கவில்லை என்றால் , கிடைக்கும் யாரையாவது குருவாக வைத்துக் கொள்ள முடியுமா?//

thiruchchikkaaran சொன்னது…

//நல்ல குருவை அடையாளம் காண்பது எப்படி? என்பது அடுத்த கேள்வியாய் முளைக்கும்..;) அது ஆத்மானுபவத்தால் மட்டுமே அறிய முடியும்.//

கொஞ்சம் நிதானம் இருந்தால் போதும், தகுதியான குருவை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

தமிழ் நாட்டில் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நிதானமும், பொறுமையும் இருந்தது.

தியாகராஜரை சரியாக அடையாளம் கண்டு சத்குருவாக்கியது தமிழகம் தான். ஆந்திராவை விட தமிழ் நாட்டில் தியாகராஜர் அதிகம் அறியப் பட்டு, மதிக்கப் பட்டு இருக்கிறார்.

விவேகானந்தர் சாதாரண பிட்ச்சாண்டி துறவியாகவே தமிழகம் வந்தார். அவரை சரியாக அடையாளம் கண்டு அமேரிக்கா செல்ல உதவியது தமிழகத்தில் இருந்தவர்களே. அவர் அமெரிக்காவில் கொண்டு போன பணம் எல்லாம் செலவான நிலையில், "குளிராலோ , பசியாலோ நான் இங்கு இறக்க நேரிடலா, ஆனால் இந்தியாவில் வாழும் கோடி மக்களை மீட்டு எடுக்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்று எழுதினார். "பிச்சை எடுப்பதற்காக தெருவுக்கு சென்று இருந்தால் அமெரிக்காவில் சிறை வாசமே என் முடிவாகி இருக்கும்" என பிறகு குறிப்பிட்டார். அந்த நிலையில் அவருக்கு பணம் அனுப்பி உதவியது சென்னையில் இருந்தவர்களே.


இன்றைக்கு நிதானம் இல்லை, ஆச்சாரியார் என்ற குரல் காதில் விழுந்ததும் அவசரமாக அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு அ.தி.மு.க அமைச்சர் விழுவது போல நெடுஞ்சான் கிடையாக காலில் விளுவதிலே கவனம் செலுத்துகிறார்கள். அன்றைக்கு இருந்தது ஆன்மீகம், இன்றைக்கு இருப்பது அடியற்ற மரம் போலக் கீழே விழுவது.

குரு பக்தி என்ற ஒரே வார்த்தையால், யார் யாரோ பிராதனப் படுத்தப் பட்டு உண்மையான ஆன்மீகம் மறைக்கப் பட்டு விடுகிறது.

thiruchchikkaaran சொன்னது…

//உங்களோட பதிவுகளிலே காயத்ரி மந்திரத்துக்குத் தப்பாய்ப் பொருள் சொல்லி இருக்கிறாப்போல் இல்லை இது!//

நான் என் தளத்தில் எழுதியதில் தவறு இருந்தால் அதை அங்கேயே சுட்டிக் காட்டுவது நன்றாக இருக்கும்.

அட்லீஸ்ட் இங்கேயாவது மேற்கோள் காட்டி இந்த விளக்கம் தவறு என்று எழுதலாம்.

எந்த மேற்கோள் காட்டுவதும் இல்லாமல் ,வெறுமனே, "தவறாக எழுதி இருக்கிறீர்கள்" என்றால் அது முறையா?

thiruchchikkaaran சொன்னது…

//ஆத்மாவை எல்லாம் கையால் பிடிக்கமுடியும் அளவுக்கான பருப்பொருள் அல்ல அது. யாராலும் கையில் பிடிச்சுக் கொடுக்க முடியாது. அப்படித் தேடி ஓடினவர்கள் ஏமாந்தார்கள் என்பது சரியே, ஆனால் இங்கே யாருமே அவரை குரு என்றே சொல்லவில்லையே? அப்படி இருக்கும்போது இங்கே வந்து ஏன் கோவிக்கவேண்டும் என்பது புரியவில்லை?? இவர்களைத் தான் எல்கே கார்ப்பரேட் குருமார்கள் என்றார்.//

மாட்டாத வரைக்கும் பெரிய புள்ளி , மாட்டிய பிறகு...என்பதுதானே வழக்கமாக உள்ளது. மாட்டுகிற வரைக்கும் சகட்டு மேனிக்கு ஆச்சாரியார், ஆச்சாரியார் என்று ஹைப் கொடுப்பது, மாட்டிய பிறகு கார்ப்பரேட் குரு என்று ஒதுக்குவது.


நான் என்ன கோவப் படுவது, இந்திய சமுதாயமே கேட்டாலும் சரி, இந்து மதமே அழிந்தாலும் பரவாயில்லை, யாரையாவாது குரு என்று பிரதானப் படுத்தியே ஆக வேண்டும், அந்தக் குரு பக்தியின் அடிப்படையில் முட்டுக் கொடுப்போம் ..... என்பதில் முனைப்புக் காட்டும் போது நாம் கோவிக்கிறோம் என்று சொல்வதை விட நொந்து என்ன பலன் என்று கேட்டால் பொருத்தமாக இருக்கும்.

கீதா சாம்பசிவம் சொன்னது…

திருச்சிக்காரரே, யாரோ எங்கேயோ, யாரையோ ஏமாத்தினாங்க என்பதற்காக நீங்க இங்கே வந்து திரும்பத் திரும்ப குரு என்பவரே கூடாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்க மனதளவில் இப்படி யாரோ ஒரு குருவினால் காயப்பட்டிருப்பீங்களோ?? உங்களுக்கும், உங்கள் கொள்கைகளை ஆதரிக்கிறவங்களுக்கும் குருவே வேண்டாம்னா யாரும் தடுக்கப்போவதும் இல்லை. அவரவர் கருத்து அவரவருக்கு. இங்கே எழுதிக்கொண்டிருக்கும் விஷயங்களுக்கும், நீங்க சொல்வதற்கும் சம்பந்தமே இல்லை என்பதால் இதோடு நான் நிறுத்திக்கொள்கிறேன். நன்றி. நீங்க சொல்லுகிறாப்போல் எந்த ஆன்மீகவாதியையும் இங்கே அடையாளம் காட்டியும் எழுதவில்லை. ஆகவே உங்கள் கோபம் காட்டவேண்டிய இடமே வேறு. மன்னிக்கவும். இந்தக் குறிப்பிட்ட பதிவில் இதோடு என் பின்னூட்டத்தை நிறுத்திக்கொள்கிறேன்.

கீதா சாம்பசிவம் சொன்னது…

அது என்னமோ இரண்டு நாளா உங்க பதிவு என்னோட பின்னூட்டத்தை ஏத்துப்பேனானு ஒரே அடம்! :P ரொம்பக் கஷ்டப் பட்டு இப்போ அனுப்பினேன், வந்திருக்கா தெரியலை! :(

thiruchchikkaaran சொன்னது…

//இத்தனை விவாதம் செய்யும் உங்களுக்குக் கண்டிப்பாய் ஆன்மீகமும், பக்தியும் வேறு வேறு என்பதும் அவற்றின் எல்லைகளும் வேறு என்பதும் தெரிந்திருக்காமல் இருக்காது. ஆகவே ஆன்மீகத் தேடலுக்குக் கட்டாயமாய் குரு என்பவர்தான் வழிகாட்டுவார்//


இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை அம்மா.

நஹி நஹி ரக்ஷதி "டுக்ருங்கரனே" என்று சொல்லி அதற்க்கு முன் வரியிலே "பஜ கோவிந்தம் , பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே" என்று சொல்லி இருக்கிறார்.

ஆன்மீக முன்னேற்றத்துக்கு பக்தி எளிய வழி என்பது இந்து மதத்தின் முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று இல்லையா?

கீதையில் பக்தியை ஒரு முக்கிய வழியாக சொல்லவில்லையா? "என்னுடைய பக்தன் தீய வழியில் சென்றாலும், விரைவில் நல் வழிக்கு வருவான்" என்று கூட படித்ததாக நினைவு.

துருவன், பிரஹலாதன், மார்க்கண்டேயன் என்று .... தியாகராஜர் வரை பக்தியை வழியாகக் கொண்ட ஒரு நட்ச்சத்திரப் பட்டாளமே இருக்கிறதே அம்மா. இவர்கள் எல்லாம் ஆன்மீக வாதிகள் இல்லையா?

"உருவ வழிபாட்டை முதலில் எள்ளி நகையாடிய நான், உருவ வழிபாட்டின் மூலம் உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்த ஒருவரிடம் இருந்தே நான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன் என்று சுவாமி விவேகானந்தர்" சொன்ன இராம கிருஷ்ணர் காளி உபாசகர் இல்லையா?

thiruchchikkaaran சொன்னது…

மதிப்பிற்குரிய திரு. கீதா சாம்பசிவம் அவர்களே,

உங்களுடன் தொடர்ந்து வாதம் செய்வது என்னுடைய விருப்பம் அல்ல.

தூரதிர்ஷ்டமோ, அதிர்ஷ்டமோ நான் என் வாழ்க்கையில் எந்த ஒரு குருவையும் சந்தித்தது இல்லை.

ஆனால் சுவாமி விவேகானந்தர் சொன்னதைப் படிக்கும் போது அவரே நேரே வந்து சொல்வது போல என் நெஞ்சில் அந்தக் கருத்துக்கள் பாதிப்பை ஏற்படுத்தியது. அதே போல தியாகராஜர் மூலமாக தான் பலவற்றைக் கற்றேன். ஆதி சங்கரர், புத்தர், கிருஷ்ணர்....... இவர்கள் யாரையுமே நான் நேரில் பார்த்தது இல்லை, ஆனால் அவர்கள் எனக்கு சொல்ல வேண்டியதை சொல்லி விட்டார்கள்.

எனக்கு யார் மீதும் எந்த வெறுப்பும் கிடையாது. அக்காலத்தில் சிஷ்யன் குருவின் துணிகளைத் தோய்ப்பான் என்று சொல்வார்கள் , நீங்கள் சொல்லும் எந்த குருவின் துணியை வேண்டுமானாலும் துவைக்க தயார்.

அவர்கள் கோடிக் கணக்கில் பணத்தை சேர்க்கட்டும், எனக்கு உண்மையிலே பொறாமை இல்லை, (ஏனெனில் பணம் உதவாது, அர்த்தம் அனர்த்தம், நிதி சால சுகமா என்பதை உணரும் நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறேன்), அவர்கள் எவ்வள பெரும் புகழும் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளட்டும். ஆனால் இந்து மதத்தை சேதப் படுத்தாமல் விடுங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.

உலகிலே பிற சேதப் படுத்தாமல் விடுங்கள் மதங்களை வெறுக்க சொல்லாத ஒரே மதமாக மக்களை ஒன்றிணைக்கும் , மதங்களை நல்லிணக்கத்தில் இணைக்கக் கூடிய கோட்பாடுகளை உள்ள ஒரே மதமாக இந்து மதம் உள்ளது. மத வெறிக்கு மாற்றாக நட்பை உருவாக்கி, உலகில் அமைதியை நிலவ செய்து மனிதத்தைக் காக்க உலகின் கடைசி நம்பிக்கை இந்து மதமே.இதற்காகத் தான் இத்தனையும் எழுதுகிறோம்.


அதை முட்டுக் கொடுக்கும் வேலைக்கு பயன் படுத்துவது சரியல்ல என்பது அனைவரும் அறிந்ததே.

thiruchchikkaaran சொன்னது…

//இது ஒன்றும் கோட்பாடெல்லாம் இல்லையே? நிதரிசனமான ஒன்று. ஆனானப்பட்ட அநுமனுக்கு சூரியன் தான் குரு என்றாலும் அவரின் விஷமம் பொறுக்க முடியாமல் அவரோட சக்தியைத் தேவைப்படும் சமயத்தில் பிறரால் நினைவூட்டப் படும்போது மட்டுமே நினைவுக்கு வரும் என்றும் அதுவரையில் தன் சக்தியைப் பற்றித் தானே அறியாதவனாய் இருப்பான் என்றும் ரிஷிகள், முனிவர்கள் கூறவில்லையா?? மேலும் மஹாபாரதக் கர்ணனுக்குப் பரசுராமரின் சாபம் நினைவில் இல்லையா?? குருவின் சாபத்தினால் தானே அர்ஜுனனை அவனால் வெல்ல முடியவில்லை??//


திரு. கார்த்திக் அவர்களே, இதை எல்லாம் வைத்து நிதர்சனமான உண்மை என்று சொல்லி விடுகிறீர்களே, பாஞ்சாலி ஐந்து பேருடன் குடும்பம் நடத்தினார் (அதற்கு அவரை நான் குறை சொல்லவில்லை), ஆனால் அதுவே இந்து மதத்தின் கோட்பாடு என்று ஆகுமா. ஓடியவன் கீழே விழுந்தான் என்றால் ஓடினால் கீழே விழுவது நிச்சயம் என்று ஆகுமா?

thiruchchikkaaran சொன்னது…

உலகிலே பிற மதங்களை வெறுக்க சொல்லாத ஒரே மதமாக மக்களை ஒன்றிணைக்கும் , மதங்களை நல்லிணக்கத்தில் இணைக்கக் கூடிய கோட்பாடுகளை உள்ள ஒரே மதமாக இந்து மதம் உள்ளது. மத வெறிக்கு மாற்றாக நட்பை உருவாக்கி, உலகில் அமைதியை நிலவ செய்து மனிதத்தைக் காக்க உலகின் கடைசி நம்பிக்கை இந்து மதமே.இதற்காகத் தான் இத்தனையும் எழுதுகிறோம்.

எல் கே சொன்னது…

நண்பர் திருச்சிக்காரருக்கு ,

///கொஞ்சம் நிதானம் இருந்தால் போதும், தகுதியான குருவை அடையாளம் கண்டு கொள்ளலாம்.//

இதைதான் நாங்களும் சொல்கிறோம் . இந்தப் பதிவில் இன்னாரை குருவாக ஏற்றுக் கொள் என்று நாங்கள் சொல்லவில்லை. இனியும் வராது. அது இந்தத் தொடரின் நோக்கமும் அல்ல.

எல் கே சொன்னது…

இந்தத் தொடரின் நோக்கம் நான் அறிந்த ஒரு சிலத் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்வதே . குரு தேவையா இல்லையா என்ற விவாதத்தில் இறங்கி திசை மாறுவதை நான் விரும்பவில்லை.

உங்களைப் போன்றோருக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். எப்பொழுதாவது ஒரு ஏகலைவன்கள் வருவார்கள். ஆனால் எல்லோரும் ஏகலைவன் ஆகா இயலாது. எங்களை போன்ற பாமரருக்கு குரு அவசியம் வேண்டும் . இத்துடன் இந்த விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்

thiruchchikkaaran சொன்னது…

ஐயா,

குரு வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. தகுதியான குரு தன் மாணவனை வேகமாக முன்னேற்றுவார்.

ஆனால் அப்படிப் பட்ட குரு கிடைக்காத போது ஒருவன் தானே ஆன்மீக முயற்ச்சியில் ஈடுபட்டு முன்னேற தடை எதுவும் இல்லை என்பதையே நாம் சொல்கிறோம்.

தானே முயலும் வழியை அடைத்து, குரு அவசியம் வேண்டும் என்று, குரு கிடைக்காதவரின் ஆன்மீக வாழ்வை பாழாக்குவதை ஆதரிக்க இயலாது.

விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதனால் நியாயமாக வைக்க வேண்டும்.

குரு கிடைக்காத எம்மைப் போன்ற கோடிக் கணக்கான பாமரர்களுக்கான ஆன்மீக பாதை அடைக்கப் பட்டு விடக் கூடாது என்பதாலேயே இதை தெளிவு படுத்துகிறோம்.