ஜனவரி 03, 2011

ஜகத்குரு -7- சந்நியாசம்

ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அமிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவசங்கர தேசிக மே சரணம்!!

குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!


*********************************************************************************************
 "ஏன் பயப் படனும் . வேளை வந்தாசுனுதானே சொல்றா ? அது நல்லதுக்குதானே ?"


"அப்படி இல்லை. பொதுவா நல்ல வேளை வந்துடுச்சுன்னு சொன்னா நல்ல காரியங்கள் நடக்கும் . பொதுவா வேளை வந்துடுச்சுன்னு சொன்ன உடனே அந்தத் தாய்க்கு கவலை வந்துடுச்சி".


"சங்கரா! என்னப்பா இப்படி சொல்லிடு போறாளே ! என்ன அர்த்தம் இதுக்கு அப்படின்னு " சங்கரர் கிட்ட கேட்கிறாள் தாய்.

"அம்மா, அவர்களை கண்டால், வயதில் மூத்தோரை,ஞானம் அடைந்தவர்களாய் தோன்றுகிறார்கள் . அவர்கள் துன்பம் அடையும் வகையில் வார்த்தைகளை சொல்ல மாட்டார்கள். கவலை அடையவேண்டாம்" என்று தாய்க்கு ஆறுதல் சொல்கிறார்.


"பின் , வீட்டின் பின்புறம் உள்ள நதியில் குளிக்க செல்கிறார் சங்கரர். அவர் நதியில் இறங்கி ஸ்நானம் செய்து கொண்டிருக்கிறார். தாயோ பூஜை பாத்திரங்களை கரையில் அமர்ந்து டுத்துக் கொண்டிருக்கிறார். சங்கரர், குளித்து கரையேற முயற்சித்த நேரம், அவரது காலை எதோ கவ்வி இழுக்க, சங்கரர் வலியில் அலறினார் ."

"தனயனின் அலறல் கேட்டா தாய்,பதறி அடித்து ஓடி வருகிறார்.நதியில் இறங்க போறா.

அப்ப சங்கரர் "அம்மா அப்படியே நில் .என்னை முதலை பிடித்திருக்கிறது. இங்கு வந்தால் உன்னையும் கடித்துவிடும் என்று நிறுத்தி விடுகிறார் "

தாய்க்கோ தவிப்பு, நதிக்கரை என்றால் யாரவது இருப்பர். இதுவோ அவர்களின் வீட்டின் பின்புறம். யாரும் உதவிக்கு இல்லாத இடம். என்ன செய்வதுதேன்று தாய்க்கு புரியவில்லை.

அந்த சமயத்தில் சங்கரரே வழி சொல்கிறார்.

"அம்மா, இதிலிருந்து நான் தப்பிக்க ஒரே வழிதான். என்னை இழந்தேன் என்று சொல் . என்னை முதலை விட்டுவிடும் ."

தாய்க்கோ துயரத்திலும் துயரம். கணவனை இழந்தவள், இப்பொழுது மகனும் இழந்துவிடு என்று சொல்கிறான் . அதை சங்கரரிடம் கேட்கிறாள் ,"என்னப்பா நியாயம் இது ?இருப்பது நீ ஒரே மகன். உன்னையும் இழந்தாள் ...."

சங்கரர் குறுக்கிட்டு "இழப்பது என்பது ஊருக்கு தத்தமாக  குடுப்பது என்று அர்த்தம் .என்னை சந்நியாசியாக போக அனுமதி கொடு " என்று இறைஞ்சுகிறார்.

தாய்க்கோ அதிர்ச்சி.

"சந்நியாசம் வாங்கி விட்டால் , என்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவாயே . இந்த வயதான காலத்தில் எனக்கு யாரப்பாத் துணை ?  என்று புலம்புகிறாள் .

ஒரு கட்டத்தில் மனதை தேத்திக் கொண்டு , "சரி சங்கரா ! நீ உன் இஷ்டப்படி சந்நியாசம் வாங்கிக் கொள்" என்று அனுமதி அளித்தாள்.
-தொடரும் 

அன்புடன் எல்கே

21 கருத்துகள்:

அமைதிச்சாரல் சொன்னது…

அருமையான வார்த்தைகளுடன் ஆரம்பிச்சுருக்கு இன்றைய நாள்.. நன்றி பகிர்வுக்கு.

பெயரில்லா சொன்னது…

bhakthiudan kalai pozhuthu .. arumai LK
thodarattum

RVS சொன்னது…

சங்கரர் சந்நியாசம் வாங்கினது பற்றி ஸ்ரீ சங்கர விஜயத்தில் ஒருமுறை சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் சொல்லி ஒரு சி.டி யில் கேட்டது. நல்லா இருக்கு எல்.கே. தொடருங்கள்.. ;-)

பத்மநாபன் சொன்னது…

தன்னை விட்டு பிரிந்தாலும் எங்காவது தன் மகன் சுகமாக இருந்தால் போதும் என்று பெருந்தியாகம் செய்யும் கட்டத்தை நன்றாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் எல் . கே ... சுவைபட எழுதுகிறிர்கள். ஆதிசங்கரரின் அருள் நிச்சயம் உங்களுக்கு உண்டு .

சேட்டைக்காரன் சொன்னது…

கார்த்தி! ஆன்மீகக்கடலின் துளிபருக வைத்தமைக்கு நன்றி!

Lakshmi சொன்னது…

தன் மகன் சன்யாசி ஆவதை எந்த தாயால் பொறுத்துக்கொள்ள முடியும்?
இது மிகவும் உண்மை யான வார்த்தைகள்.

சே.குமார் சொன்னது…

ஜகத்குரு... ரொம்ப நல்லாயிருக்கு. உங்கள் எழுத்து படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முன்பே படித்திருந்தாலும், உங்கள் எழுத்திலும் சுவாரசியம் குறையாமல்... நல்ல பகிர்வு. நன்றி கார்த்திக்.

ஸ்ரீராம். சொன்னது…

//"அவர்களை கண்டால், வயதில் மூத்தோரை,ஞானம் அடைந்தவர்களாய் தோன்றுகிறார்கள் . அவர்கள் துன்பம் அடையும் வகையில் வார்த்தைகளை சொல்ல மாட்டார்கள்"//

சொல்லப் படும் வார்த்தைகள் எத்தகைய மனிதர்களிடமிருந்து வருகிறது ன்று ஆராய்ந்து பார்த்து தெளிவது நல்லது என்று உணர்த்துகிறது.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

அருமை எல்கே தொடருங்கள்.

கோவை2தில்லி சொன்னது…

இது வரை அவரது வரலாறு ஓரளவு தெரியும். மேலும் தெரிந்து கொள்ள ஆவல். தொடருங்கள்.

Tamilulagam சொன்னது…

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

ஹேமா சொன்னது…

தொடர்ந்தும் வாசிக்கிறேன் கார்த்திக் !

எல் கே சொன்னது…

@சாரல்

நன்றி சகோ

எல் கே சொன்னது…

@கல்பனா

நன்றி

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்


அஹா, அவரெல்லாம் கடல், நான் கரைல நின்னுகிட்டு சும்மா ஒரு துளிய டேஸ்ட் பண்றேன் அவ்ளோதான்

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

நன்றி அண்ணா

எல் கே சொன்னது…

@settai

nandri

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
ஆமாம். நன்றி

எல் கே சொன்னது…

@குமார்

நன்றி

@வெங்கட்

நன்றி

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
மிக மிக சரியாக சொன்னீர்கள்

@நித்திலம்

நன்றிங்க


@ஹேமா
நன்றி