ஜனவரி 28, 2011

நினைவுகள் - 6

கேள்விக்கு பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தவளின் கண்களை ஒரு கணம் நோக்கினான் ரமேஷ். மையிட்டு கறுத்த இமைகள் சிறிது படபடக்க புதிய பொருளை காணும் ஒரு குழந்தையின் ஆர்வம் அங்கே மின்னிக்கொண்டிருந்தது. சில வினாடிகள் மௌனித்தப் பின் தன்னிருக்கையில் சாய்ந்து அவளை மீண்டும் அளவெடுக்கத் துவங்கினான்.

அவள் நிறத்துக்கு பொருத்தமான க்ரீம் கலரில் டாப்சும் அதற்கு நேர் எதிரான அடர் நீலத்தில் ஜீன்சும் கனகச்சிதமாய் அவள் உடலை கவ்வி இருக்க , கூந்தல் பின்னப்படாமல் இருந்தாலும், அவள் நெற்றியில் அவ்வப்பொழுது தொட்டு சென்ற முடிகள் அழகாய்தான் இருந்தது. அவன் சொல்லத் துவங்கிய தருணத்தில் அவர்கள் ஆர்டர் செய்தவை வர , மௌனமாய் அதைப் பருகத் துவங்கினர்.

அவன் குடித்து முடிக்கும் வரை , தனது கோப்பையில் இருந்ததை பருகியப் படியே அவனை சிறிது ரசித்தாள் சாரு. ஜிம் செல்லும் உடம்பு என்று சொல்ல இயலாவிட்டாலும் தேவையற்ற சதைகள் இல்லாமல் பிட்டாகவே இருந்தான். கல்லூரி காலத்தில் மீசையுடன் இருந்தவன் , இப்பொழுது மீசை இன்றி வட இந்திய சினிமா நட்சத்திரங்கள் போல் பெண்களின் கண்களை கவர்பவனாகத்தான் தோன்றினான்.

அவன் பதிலை எதிர்பார்த்திருந்த சாரு, "என்னடா பதிலேக் காணோம் ? கேள்விக் கேட்டவுடன் அமைதி ஆய்ட்ட ??"

"ஒண்ணுமில்லை . சும்மாதான். என்ன சொல்லலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் "

மீண்டும் ஒரு முறை அவள் கண்களைப் பார்த்தவன் , அதில் தெரிவது என்ன என்று யோசித்தான் . சில நிமிடங்கள் யோசித்தும் ,முயற்சியில் தோற்றவன் பொதுவாய் "ஹ்ம்ம். நல்லாத்தான் இருக்கு " என்று சொல்லி வைத்தான். .

இந்தப் பதிலால் அவள் முகத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்று பார்த்தான். ஆனால் அவள் முகத்தில் எந்த வித வேறுபாடும் இல்லை. எப்பவும் போல் சாதாரணமாக "தேங்க்ஸ் " என்று புன்னகையுடன் வந்தப் பதிலால் அவன் முகத்தில் ஏமாற்றமே மிஞ்சியது.

அவளின் இந்தப் போக்கு அவனுக்குப் பிடிபடவில்லை. கல்லூரியில் அதிகம் பேசாமல் அடுத்தவரின் கவனத்தை ஈர்க்காமல் இருந்தவளின் மாற்றம் ஒரு பக்கம் வியப்பளித்தது என்றால், அன்றைய அவளின் பேச்சும் , பின் இந்த பதிலும் எதோ குழப்பத்தையே அவனுக்கு உண்டாக்கியது. மனதிற்குள் இந்தப் பெண்களின் மனதை அறிய யாரால் இயலும் என்று நினைத்துக் கொண்டான்

குழப்பத்தை வெளிக்காட்டாமல் ,"நம்ம சீனியர் வெங்கட் இங்கதான் இருக்கார் . தெரியும்தானே ??"

ரமேஷ் திடீரென்று வெங்கட்டை பற்றி பேசுவான் என்று எதிர்பார்க்காத சாரு "ஹ்ம்ம். கேள்விப் பட்டேன் " என்று அசுவாரசியமாக சொன்னாள்.

ஓரளவு இந்தப் பதிலை எதிர்பார்த்த ரமேஷ் " ஏன்? அவர்கிட்ட டச் இல்லையா ?" என்றுக் கேட்டு முடிக்கும்முன் " ப்ளீஸ் வேற எதாவது பேசலாமே ?" முதல்முறையாக கோபம் தொனிக்கும் குரலில் சரஸ்வதி கூற, "ஓகே ஓகே ரிலாக்ஸ் எதுக்கு இவ்ளோ டென்சன் ?" , அவள் கோபத்தைக் குறைக்கும் வண்ணம் கூறி அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.,

வெங்கட்டை பற்றிய பேச்சின் விளைவாக இருவருக்கும் இடையே ஒரு மௌனம் நிலவ, மேற்கொண்டு எதுவும் பேசாமல் கேக்கை காலி செய்துவித்து பில் செட்டில் செய்த சமயம் சாரு கொஞ்சம் சமாதானமானவளாய் அவனின் அன்றைய மற்ற திட்டங்களை கேட்டாள். அவனுக்கு வேறு எங்கும் செல்ல வேண்டி இல்லாததால் இருவரும் சிறிது நேரம் பீச்சில் நேரத்தை கழிக்க முடிவு செய்தனர்.

சாரு ஸ்கூட்டியை ஓட்ட , பின் சீட்டில் அமர்ந்தான் ரமேஷ் . கடற்கரை நோக்கி செல்லும் ஆர் கே சாலையில் , சென்னை சிட்டி சென்டரை தாண்டியப் பிறகு , மாலை நேர கடல் காற்றில் அவளது கூந்தல் அலை பாய்ந்து அவனது முகத்தைத் தாக்க , சொல்ல இயலா உணர்ச்சிகளில் சிக்குண்டான் ரமேஷ்.

************************************************************************************
காலைப் பொழுதை கணிணி முன்பும் பின் உணவிற்குப் பிந்தையப் பொழுதை தொலைக்காட்சி முன்பும் செலவழித்த வெங்கட் , மாலை என்ன செய்யலாம் என்று யோசித்துப் பின் வெளியில் செல்ல முடிவெடுத்தான்.

தனது பைக்கில் கிளம்பியவன் , மனம் போன போக்கில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். ஒரு மணி நேரம் சுற்றிப் பின் கடற்கரை நோக்கி செல்லத் துவங்கினான்.

கடற்க்கரை உள்புற சாலையை அடைந்து வண்டியை நிறுத்தி அங்கே இருந்த கல் திட்டுகளில் ஒன்றில் அமர்ந்து இலக்கில்லாமல் கண்களை அலை பாயவிட்டான்.

காலையில் இருந்ததற்கு இப்பொழுது மனம் கொஞ்சம் தெளிவாக இருந்ததுபோல் தோன்றியது வெங்கட்டுக்கு. அவன் நிம்மதியை குலைக்கும் வண்ணம் , ஒரு ஸ்கூட்டி வந்து நிற்க, அந்த சப்தத்தில் திரும்பிப் பார்த்தவன் பின் திரும்பிக் கொண்டான்.

அந்த ஒரு கணத்தில் அவனைப் பார்த்த சாரு ,கண்டும் காணாதவள் போல் ரமேஷுடன் பேசிக் கொண்டே மணல் பரப்பில் இறங்கி நடக்கத் துவங்கினாள். தங்களை அவன் பார்ப்பான் என்று நம்பிய சாரு , வேண்டுமென்றே ரமேஷின் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

ரமேஷும் வெங்கட்டைப் பார்த்தாலும், அவனிடம் பேசவோ இல்லை அதைப் பற்றி சாருவிடம் பேசவோ யோசித்தான். மீண்டும் அவள் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது என்ற யோசனையில் அவனைக் காணாதவன் போல் அவளுடன் செல்ல ஆரம்பித்தான்.

- நினைவுகள் தொடரும்
அன்புடன் எல்கே

27 கருத்துகள்:

கீதா சாம்பசிவம் சொன்னது…

நல்லாத் தான் கிறுக்கறீங்க. முடிவு தெரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)

கீதா சாம்பசிவம் சொன்னது…

to follow, password konda, id kondanu paduthal thangalai! :(

புதுகைத் தென்றல் சொன்னது…

அடுத்த பதிவு எப்பங்க வரும்?

Balaji saravana சொன்னது…

ரைட் ரைட்.. :)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

போலாம் ரைட்.............

அமைதிச்சாரல் சொன்னது…

விறுவிறுப்பா போகுது..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ம்.ம். நடக்கட்டும்...

RVS சொன்னது…

//சாய்ந்து அவளை மீண்டும் அளவெடுக்கத் துவங்கினான்.//
சரியா எடுத்தானா?
எங்க கடற்கரை வராம ஒரு காதல் கதை முடிஞ்சுடுமொன்னு பயந்தேன்.. வந்துடுச்சு...
நினைவுகள் - கதை டைட்டில் தானே!!! ;-) ;-) ;-)

பத்மநாபன் சொன்னது…

வெங்கட்டை உசுப்பி விட்டாச்சுல்ல...இனி கதை வேகமெடுத்துவிடும்

சென்னை பித்தன் சொன்னது…

//மையிட்டு கறுத்த இமைகள் சிறிது படபடக்க//
இது போதுமே எந்த ஆண் மகனையும் வீழ்த்த!

GEETHA ACHAL சொன்னது…

சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க...அருமை...

ஹுஸைனம்மா சொன்னது…

கதை நல்லாவே போகுது.

raji சொன்னது…

க்ளைமாக்ஸ் வந்தாச்சு போலருக்கே
அப்டின்னா அடுத்த பதிவுல முடிவா?

தெய்வசுகந்தி சொன்னது…

சீக்கிரம் தொடருங்க!!

ஸ்ரீராம். சொன்னது…

தூண்டப் படும் உணர்வுகள்...வெடிக்கும் கட்டம் அடுத்தா...?

komu சொன்னது…

வெங்கட் அவளை வெண்டாம்னு ஒதுக்கியதால் வந்தகோபமோ?. இப்பதான் எல்லா பகுதியும் திரும்ப ஒருமுறை படிச்சேன். ரமேஷ், வெங்கட் பயர்க்குழப்பமாச்சு.

Lakshmi சொன்னது…

கார்த்தி, வர்ணனைகள்,கதை சொல்லும் விறு, விறுப்பு நல்லா இருக்கு.

சே.குமார் சொன்னது…

விறுவிறுப்பா போகுது.

அப்பாவி தங்கமணி சொன்னது…

அது சரி... இவனை வம்பிழுக்க அவன் கிட்ட க்ளோஸ்ஆ? அவன் க்ளோஸ் for sure.... ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... கதை சூப்பரா போகுது... கலக்கற கார்த்தி... super...

ஜிஜி சொன்னது…

கதை விறுவிறுப்பா, நல்லா போகுது.
சீக்கிரம் முடிவை சொல்லுங்க.

எல் கே சொன்னது…

@கீதா
அப்ப முடிவை மாத்திடறேன் :P

@புதுகை
சீக்கிரம்

@பாலாஜி
சரி

@மனோ
:)
@சாரல்
நன்றி

@வெங்கட்
நன்றி

@ஆர்வீஎஸ்
அதெப்படி? கடற்க்கரை இல்லாத சென்னை காதலா ??

@பத்மநாபன்
ஹ்ம்ம்

@பித்தன்
ஆமாம் சார்

@கீதா
சரிங்க

@ஹுசைனம்மா
சீக்கிரம் போடறேன்

எல் கே சொன்னது…

@ராஜி
அப்படியா ?? அப்ப முடிவ சொல்லுங்களேன்

எல் கே சொன்னது…

@சுகந்தி
நன்றி

@ஸ்ரீராம்
வெடிக்கும் வெடிக்கும்

எல் கே சொன்னது…

@கோமதி
நெறைய குழப்பமோ ?? வெங்கட் எங்க ஒதுக்கினான் ???

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
நன்றிமா

@குமார்
நன்றி

எல் கே சொன்னது…

@அப்பாவி
பெண்களோட வழியே அப்படிதானே எப்பவும் ??? நன்றி

@ஜிஜி
சரி சொல்லிடறேன்

Jaleela Kamal சொன்னது…

ஒகே படிச்சாச்சு,