ஜனவரி 27, 2011

நினைவுகள் - 5

வார இறுதி திருமணம் ஆனவர்களுக்கும், நண்பர்கள் வட்டம் அதிகம் உடையவர்களுக்கும், உழைத்து சம்பாதித்ததைக் கொண்டாட்டத்தில் வீணடிப்பவர்களுக்கும் அளிக்கும் மகிழ்ச்சி மற்றவர்களுக்கு அளிப்பதில்லை. அவர்களுக்கு அது மற்றும் ஒரு நாளே. வெங்கட்டும் அந்த மற்றவர்களில் ஒருவன்.சில சமயங்களில் ஏன் வார இறுதி என்ற ஒன்று வருகிறது என்றே நினைப்பான்.


அதிகாலையில் எழும் பழக்கம் உடைய வெங்கட் அன்று முழிப்பு வந்தும் எழ மனமில்லாமல் இருந்தவனின் மனதில் முந்தைய நாளின் நிகழ்வுகள் ஓடின . தன் முடிவை சொன்னவுடன் அம்மாவின் மனம் வேதனைக்குள்ளானது அவள் முகத்தில் கண நேரம் தோன்றி மறைந்த வேதனைக் காட்டியது. தான் எடுத்த முடிவு சரியா என்று மீண்டும் ஒரு முறை யோசித்தான். பின் இதை இனி யோசித்துப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான். அன்றையப் பொழுதைக் கழிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கத் துவங்கினான்.

************************************************************************************
சனிக்கிழமை மாலை வேளைகளில் அந்த காபி டே எப்படியும் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கும். விதவிதமாய் பருவ வயதினரும், சில மத்திய வயதினரும் கலவையாய் அமர்ந்திருக்க , சிப்பந்திகளோ நடக்காமல் பறந்து கொண்டிருந்தனர், மேஜைகளுக்கிடையே .

மூலையில் சாலையை பார்த்த வண்ணம் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தான் ரமேஷ். சாலையைப் பார்ப்பதும் பின் செல் போனை எடுத்து நேரம் பார்ப்பதுமாய். ஆர்டர் கேட்ட சிப்பந்திக்கு பிறகு வர சொல்லி மறுமொழி குடுத்த வண்ணம் செல்போனில் எண்களை ஒத்தினான். மறுமுனை ரிங் மட்டுமே செல்ல , குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு யாரும் கவனிக்கமால் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் கண் பதித்தான்.


அதே நேரம், அவசரமாய் உள்ளே வந்தாள் சரஸ்வதி. உள்ளே நுழைந்து அவன் எங்கிருக்கிறான் என்று தேடியவள், சில வினாடிகள் தாமதத்திற்குப் பிறகு அவன் இருந்த சோபாவை கண்டுக் கொண்டாள்.

ஓட்டமும் நடையுமாய் அங்கு சென்றவள் ,அவனது இருக்கைக்கு எதிர் புறம் அமர்ந்து சில வினாடிகள் பேசவில்லை. ஓட்டமாய் அவள் அங்கு வந்தது விடும் மூச்சினில் தெரிந்தது. அவளது கண்கள் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் சுருங்கி விரிந்தது. சில நிமிடங்கள் அங்கு மௌனமே நிலவியது

மூன்று வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கும் ரமேஷிற்கு அவளிடம் இருந்த மாற்றங்கள் எளிதில் தெரிந்தது. கல்லூரியில் சுடி,புடவையை தவிர வேறு எதுவும் அணியாதவள் இன்று ஜீன்ஸிலும் டாப்சிலும் இருந்தது வியப்பளிக்காவிடினும் , அவளின் மேக்கப் அவனுக்கு சிறிது வியப்பளிக்கதான் செய்தது.

புருவங்கள் திருத்தப்பட்டு, செயற்கை பூச்சுகளுடனும், உறுத்தாத லிப் ஸ்டிக்குடனும் , வாரப்படாமல் விரிந்த கூந்தலுடனும் என்றும் அவளைக் கண்டதில்லை அவன். முன்புக்கு இப்பொழுது அவள் சற்று அழகுடன் இருப்பதாய் பட்டது அவனுக்கு.

அவளின் அழகில் மூழ்கியவனை, அவளது குரல் இந்த உலகுக்கு மீட்டது. ஒரு கணம் தன் செய்கையை நினைத்து வெட்கியவன் பின் சுதாரித்துக் கொண்டு பேசத் துவங்கினான்.

"எப்படி இருக்க சாரு?"

"எனக்கென்ன? நல்ல வேலை, தேவையான சம்பளம். பிரச்சனை இல்லாமல் போகுது . நீ எப்படி இருக்க ரமேஷ் ? அப்ப இருந்ததுக்கு இப்ப இன்னும் கொஞ்சம் சதை போட்ட மாதிரி இருக்கு ?"

"நானும் நல்லாத்தான் இருக்கேன் சாரு. நிம்மதியான வேலை . என்ன பெங்களுருவில் இருப்பதால் வீட்டை விட்டு பிரிந்து இருக்கும் கஷ்டம் மட்டும்தான் . வேற எந்த கஷ்டமும் இல்லை . "

"சரி என்ன சாப்பிடற? இப்ப சொன்னா கொண்டு வர எப்படியும் இன்னும் அரைமணி நேரம் பண்ணுவான் ?"

மெனுவை பார்த்து பிறகு அவனுக்கும் சேர்த்து இரண்டு காபிஸினோ அப்புறம் ஒரு ப்ளாக் பாரெஸ்ட் கேக் ஆர்டர் கொடுத்தாள்.

"நம்ம ப்ரெண்ட்ஸ்,சீனியர்ஸ் யாரவது டச்ல இருக்காங்களா ? "

"ரொம்பப் பேர் மெயில் பண்ணாக் கூட பதில் அனுப்பறது இல்லைடா. சோ நானும் கண்டுக்கறது இல்லை . "

"ஹ்ம்ம் எல்லா இடத்திலும் இதுதான். முதல் ஒரு வருஷம் பாசமா இருக்கறவங்க அப்புறம் எல்லாம் மறந்திடறாங்க."

"என்ன பண்ண? எல்லோருக்கும் வேலை, குடும்பம்னு ஆனப்புறம் நண்பர்களை மறக்கறது சகஜம்தானே ?"

"சரி அதை விடு என்ன திடீர்னு சென்னை விஜயம் ?"

"ஸ்பெசலா இல்லை. சும்மா வந்தேன். நம்ம மக்கள்கிட்ட கேட்டப்ப உன் நம்பர் மட்டும்தான் கிடைச்சது. சரி உன்னையாவது பார்க்கலாமேனு போன் பண்ணேன். பழைய சாருவா இருப்பேன்னு பார்த்தா ஆளே மாறி போயிருக்க. நெறைய மாறிட்ட நீ "

தான் வந்தவுடன் தன்னை அவன் ஆராய்ந்ததை அப்பொழுதே கவனித்த அவள் இப்பொழுது அவன் கண்கள் தன்னை மீண்டும் ஆராயத் துவங்கியதைக் கண்டு " இன்னும் நீ மாறவே இல்லையா ? கண்ணை வச்சிக்கிட்டு சும்மா இருக்கியா ? ஏன் இந்த டிரஸ் எனக்கு செட் ஆகலியா ?"

கேட்டவளின் கண்களில் அவனது பதிலை எதிர்பார்க்கும் ஆர்வம் மிதமிஞ்சித் தெரிந்தது.

-நினைவுகள் தொடரும்

அன்புடன் எல்கே

45 கருத்துகள்:

சே.குமார் சொன்னது…

அப்பா... கதையோட்டத்தோடு வேகமாக படிக்க வைக்கும் ஒரு எழுத்து... நினைவலைகள் வீணை மிட்டுகிறது.

அமைதிச்சாரல் சொன்னது…

மெல்லியதா ஆர்ப்பரிக்க ஆரம்பிச்சிருக்கு நினைவலைகள்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையா போயிட்டு இருக்கு அசத்துறீங்க,அசத்துங்க....................

RVS சொன்னது…

//ஏன் இந்த டிரஸ் எனக்கு செட் ஆகலியா ?"//

சோ.... ரமேஷுக்கு செட் ஆயிடுச்சு? ;-)

komu சொன்னது…

வேகமாகப்படிக்கத்தூண்டும் எழுத்து,வெரி இண்ட்ரெஸ்டிங்க்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நினைவலைகளை நன்றாக மீட்டிருக்கீங்க! நன்றாக போகிறது தொடர்.... தொடரட்டும்... :)

புதுகைத் தென்றல் சொன்னது…

தொடர்கதைன்னாலே அடுத்தது எப்பன்னு காத்திருக்க வைக்கும். அருமையான நடையில் உங்கள் தொடர்கதையின் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல flow....... good going.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

mம்ம்ம் நன்றாக இருக்கிறது எல்கே.

மனோ சாமிநாதன் சொன்னது…

நினைவலைகள் ஆரம்பித்திருக்கும் விதம் அழகு!

கீதா சாம்பசிவம் சொன்னது…

சஸ்பென்ஸ்! :) வாணி அளித்த பறவை நிஜம்மாவே பறந்துடும்போல் அழகு!

Jaleela Kamal சொன்னது…

mmm present

Chitra சொன்னது…

nice...... keep going....

asiya omar சொன்னது…

சூப்பர் எல்.கே. அருமையாக போய் கிட்டிருக்கு,இரண்டு பேரையும் பிரிச்சுடாதீங்க..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

தொடர் அருமையா இருக்கு கார்த்திக்..

பத்மநாபன் சொன்னது…

நினைவுகள் 4, 5 இரண்டும் இணைந்து இன்று தான் படித்தேன் ...சாருவும் வெங்கட்டும் கேக்கும் காபியும் சாப்பிட்டு முடிவதற்குள் ஒரு முடிவுக்கு நினைவுகள் -6 ல் வந்துவிடுவார்கள் ...

கொண்டுபோகும் விதம் நாவல்டியாக இருக்கிறது...

இளங்கோ சொன்னது…

//வார இறுதி திருமணம் ஆனவர்களுக்கும், நண்பர்கள் வட்டம் அதிகம் உடையவர்களுக்கும், உழைத்து சம்பாதித்ததைக் கொண்டாட்டத்தில் வீணடிப்பவர்களுக்கும் அளிக்கும் மகிழ்ச்சி மற்றவர்களுக்கு அளிப்பதில்லை. அவர்களுக்கு அது மற்றும் ஒரு நாளே.///

Wow.. great lines..

raji சொன்னது…

நல்லா போய்க்கிட்டிருக்கு

அப்பாவி தங்கமணி சொன்னது…

ஸ்டீவும் மீராவும் வீட்டுல டீ குடிச்சா தப்பு....அதே சரஸ்வதியும் ரமேஷும் காபி டேல காபிஸினோ குடிச்சா தப்பில்லையா? யாரும் கேக்க மாட்டேங்களா இதெல்லாம்... (நாராயண... நாராயண....:))))

எனக்கு ஒரு டவுட். "காபிஸினோ" னா என்ன? காபில நெறைய சீனி போட்டு தர்றதா... நோ டென்ஷன்... பொது வாழ்க்கைக்கு வந்துட்டா கேள்விகள face பண்ணித்தான் ஆகணும் கார்த்திக்... :))))

Jokes Apart bro...nice going... travelling faster than mine thats for sure...ha ha ha

அப்பாவி தங்கமணி சொன்னது…

-

S.Menaga சொன்னது…

இப்பதான் முத்லிருந்து படித்தேன்,ரொம்ப சஸ்பென்ஸா போகுது எல்கே..

சுசி சொன்னது…

தினமும் கதைய போஸ்ட் பண்லாமே :) தொடருங்க கார்த்திக்.

ஸ்ரீராம். சொன்னது…

ஆர் வி எஸ் கமெண்ட் ரசித்தேன்.

Porkodi (பொற்கொடி) சொன்னது…

ஐய்யிய்யே! இந்த மாதிரி பார்த்தா எந்த பொண்ணு நிதானமா பேசும்.. எ.கொ.ச.இ.

கொஞ்சம் பெரிசா போடக் கூடாதான்னு கேக்க வந்தேன், அப்புறம் ச்க்ரால் பண்ணப்போ தான் தெரிஞ்சது கதை தான் வேகமான ஃப்ளோ, நிறைய தான் எழுதி இருக்கீங்கன்னு.. ரைட்டு. :))

எல் கே சொன்னது…

@குமார்

நன்றி சார்

@சாரல்

இன்னி ஆர்பரிப்பு ஜாஸ்தியா இருக்கும்

எல் கே சொன்னது…

@மனோ

நன்றி மக்கா

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

ஹ்ம்ம் பார்ப்போம் . அப்படியா சொல்றீங்க ? பெரியவா சொன்னா சரிதான்

எல் கே சொன்னது…

@கோமு
நன்றிங்க

@வெங்கட்
நன்றி

@

எல் கே சொன்னது…

@புதுகை

நன்றிக்கா


@அருண்
நன்றி

@நித்திலம்

நன்றிம்மா

எல் கே சொன்னது…

@மனோ சாமிநாதன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா


@கீதா

இப்பதான் அதை பார்த்தீங்களா >>

@ஜலீலா

என்ன ஜஸ்ட் ப்ரெசென்ட் மட்டும் >?>

எல் கே சொன்னது…

@சித்ரா

நன்றி

@ஆசியா

நன்றி ஆசியா . யார் ரெண்டு பேரையும் ??? மூணு பேரு இருக்காங்க ?? சோ தெளிவா சொல்லுங்க

எல் கே சொன்னது…

@தேனம்மை
நன்றிக்கா

எல் கே சொன்னது…

@பத்மநாபன்


அதானே எங்க போன பாகத்தில் ஆளக் காணோம்னு நினச்சேன் அப்படியா நினைக்கறீங்க ??


@இளங்கோ
ஏன் நீங்களும் நான் சொன்ன மாதிரி ஆளா ??

எல் கே சொன்னது…

@அப்பாவி

அவங்க ரெண்டு பெரும் வீட்லதான் டீ குடிக்கறாங்க . ஆனா இவங்க காபி டே போய் காபி குடிக்கறாங்க . அங்க எவ்ளோ லேட் ஆகும். அதுல ரெண்டு எபிசொட் எழுதிருவேன்

ஒரு வழிய உண்மையை ஒத்துகிட்டதுக்கு நன்றி

Balaji saravana சொன்னது…

செம ஃப்ளொ எல்.கே!

எல் கே சொன்னது…

@மேனகா
நன்றிங்க

@ராஜி
நன்றி


@ஸ்ரீராம்

நன்றினா

எல் கே சொன்னது…

@சுசி

தினமுமா ?? கொஞ்ச கஷ்டம்.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் முயற்சி பண்றேன்

எல் கே சொன்னது…

@பொற்ஸ்
நீங்க சொல்லுவீங்கன்னுதான் பெருசா எழுதினேன் ..

இல்லையே அவ அங்க வரதுக்கு முன்னாடி இருந்தே அப்படிதானே இருக்க. போன எபிசொட் ஒழுங்கா படிங்க

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>வார இறுதி திருமணம் ஆனவர்களுக்கும், நண்பர்கள் வட்டம் அதிகம் உடையவர்களுக்கும், உழைத்து சம்பாதித்ததைக் கொண்டாட்டத்தில் வீணடிப்பவர்களுக்கும் அளிக்கும் மகிழ்ச்சி மற்றவர்களுக்கு அளிப்பதில்லை.

ஓப்பனிங்க்லயே சிக்சரா..அசத்துங்க

middleclassmadhavi சொன்னது…

விறுவிறுப்பாய்ப் போகிறது..

எல் கே சொன்னது…

@பாலாஜி
நன்றி

@செந்தில்
நீங்க சொன்னா சரிதான்

@மிடில் கிளாஸ் மாதவி
நன்றி

அமைதிச்சாரல் சொன்னது…

@அடப்பாவியக்கா.. உண்மையில அது பேரு 'கப்புசீனோ'. ஆனா, அதோட கப்பு தாங்காம, நெறய சீனி போட்டா கப்பு குறையும்ன்னு நெனச்சு, காபிகப் நெறைய சீனி போட்டதால காபிஸீனோ ஆகிடுச்சு..

அனேகமா இந்த ஐடியாவை உங்க மைண்ட் வாய்சுதான் போய் சொல்லியிருக்கும்ன்னு நெனைக்கிறேன் ;-)

எல் கே சொன்னது…

@சாரல் அக்கா
ஓஹோ அதுதான் மேட்டரா ?? அப்பவியோட ஐடியாவா இது ??

அப்பாவி தங்கமணி சொன்னது…

@அமைதி akkov - why this kola veri... :))))

@ LK - grrrrrrrrrrrrrr....

கோவை2தில்லி சொன்னது…

கதை நல்லா போகுது.