ஜனவரி 25, 2011

நினைவுகள் -4

 மகனின் முடிவை எதிர்பார்த்திருந்த தாய், வந்தவனின் முகம் கண்டு எதுவும் பேசவில்லை. அமைதியாக சூடான காபி ஒன்று மட்டும் அவன் முன் வைக்கப் பட்டது. மனதில் சிந்தனைகள் பல ஓட, காப்பியை பருகியவனின் முகத்தில் குழப்ப ரேகைகள்.

சிந்திக்க சிந்திக்க மேலும் குழப்பம் அதிகரித்ததே தவிர , தெளிவுப் பிறக்கவில்லை. ஒரு பக்கம் தன் நிலையை நினைத்து சிரிப்பு வந்தது வெங்கட்டுக்கு . இருபத்து நான்கு மணி நேரத்திற்கு முன்பு வரை , இன்னும் சரியாக சொல்லப்போனால் பன்னிரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரைக்கூட அவளைப் பற்றிய சிந்தனைகள் இல்லை .ஒரே ஒரு போட்டோ தன்னை மாற்றிவிட்டது நினைத்து ஒரு பக்கம் கோபம் கூட வந்தது.

எதையோ நினைத்தவனாய், தனது அறைக்கு சென்று , கல்லூரி காலக்  குப்பைகளை கிளறிய பொழுது அவன் தேடியது கிடைத்தது. அதையும் , தற்பொழுது வந்த போட்டோவையும் இரு கைகளில் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கத் துவங்கினான்.

சிறிது நேரம் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தவனின் பார்வை ,பழைய படத்தின் மேல் நிலைத்தது. பின் , கணினியுடன் இருந்த ஸ்கேனரில் அதை வைத்தவன், ஸ்கேன் ஆகி கணிணியில் வந்தப் படத்தில் இவளது உருவத்தை மட்டும் வெட்டி தனியாக ஜூம் செய்து அதிலே தன்னை மறந்தான்.

அழகு நிலையங்களின் தாக்கம் முழு அளவில் வீசத் துவங்காத காலமது. ஒப்பனைகள் அதிகமின்றி பௌர்ணமி நிலவாய் அவள் முகம். சொக்க வைக்கும் அழகில்லை என்றாலும், வீதியில் செல்வோரை பார்க்க வைக்கும் அழகுதான். பருமனும் இல்லாமல் சைஸ் ஜீரோவும் இல்லாமல் உடல் வாகு. பார்ப்போர் கண்ணை உறுத்தாத உடைகள். எதிரில் இருப்போரை ஆழ்ந்து ஊடுருவும் கூறியப் பார்வை அவளுடையது. அவள் கண்களை பார்த்து பேசுவது வெங்கட்டுக்கு என்றுமே கடினமானக் காரியமாக இருந்தது  இப்பொழுது அவனுக்கு நினைவிற்கு வந்தது.

பல மணி நேரங்களுக்குப் பிறகு முகம் மேகமூட்டம் இல்லாத வானம் போல் தெளிவாய் இருந்தது. சிறிது நேரம் சிந்தித்தப் பிறகு முன்னறைக்கு  சென்று தன் அம்மாவிடம் பேசத் துவங்கினான்.

******************************************************************************************
வீட்டிற்கு வந்த சரஸ்வதிக்கு மனம் சிறிது அமைதியானது போல் தோன்றியது .
வெகு நாட்களுக்குப் பின் அழைத்த தன் வகுப்புத் தோழனும் அதற்கு ஒரு காரணம் என்று நினைத்துக்கொண்டாள் .

அவள் மனது மாற்றம் வேண்டும் என்று கூவிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் அவனை சந்திக்கப் போவதை நினைத்தாள். அடுத்த நாள் சந்திப்பிற்கு என்ன உடை அணியலாம் என்று யோசித்தவளுக்கு புதிதாய் வாங்கி அணியாமல் இருந்த ஜீன்ஸ் நினைவிற்கு வர, அதற்குப் பொருத்தமான டாப்ஸை தேடி கிரீம் கலரில் அவளுக்குப் பிடித்த சார்ட் டாப்ஸை எடுத்து வைத்தாள்.

வீட்டில் அவளுடன் தங்கும் மற்ற இருவரும் வார இறுதிக் காரணமாய் ஊருக்கு சென்று விட, எப்பொழுதும் தனிமை தரும் சோகம் இல்லாமல்மனதில் சிறிது மகிழ்ச்சி இருக்க , கணிணியில் புதுப் பாடல்களை ஒலிக்கவிட்டுவிட்டு  கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே ரசிக்கத் துவங்கினாள்.  அன்றைக்கு காலையில் நடந்த நிகழ்வுகள் நேரம் அறியாமல் அவள் மனதில் முகத்தில் மீண்டும் எரிச்சல் லேசாகத் தலை தூக்கியது. ஒரு கணத்தில் அதை மாற்றிய அவள், காலையில் பியூட்டி பார்லர் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது அலைபேசி சிணுங்கியது.

தந்தையின் பெயரை அதில் பார்த்தவள், என்ன கேள்வி வரும் என்று எதிர்பார்த்தவள் போல, "அப்பா ! எனக்குப்  பிடிக்கலை . இந்த இடம் வேண்டாம் . இன்னும் கொஞ்ச நாள் இந்த மாதிரி எதுவும் போட்டோலாம் அனுப்பாதீங்கன்னு அவள் சொல்லி முடிக்கும் முன் , அவள் தந்தையே " நீ இப்படி சொல்லுவேன்னு எனக்குத் தெரியும். ஆனால் உனக்கு முன்னாடியே அந்தப் பையன் வேண்டாம்னு சொல்லிட்டான். இப்பதான் போன் வந்துச்சி "

இந்த எதிர்பாராத திருப்பதால் திகைத்த அவள் வேறு எதுவும் பேச முடியாமல் பிறகு அழைக்கிறேன் என்று சொல்லி குழப்பத்துடன் யோசிக்கத் துவங்கினாள். ஒருபுறம் மனதிற்கு சிறிது நிம்மதியாய் இருந்தாலும் ,இன்னொருபுறம் அவன் எதனால் அப்படி சொன்னான் என்று குடைந்தது. அவனிடமே போன் செய்து கேட்போம் என்று அலைபேசியை எடுத்தவள் பின் அது நன்றாக இருக்காது என்று அந்த யோசனையை கைவிட்டாள்.

அப்பொழுது வந்த குறுஞ் செய்தியை படித்த அவள் முகத்தில் மீண்டும் புன்னகை .உடனடியாக அதற்கு மறுமொழி அனுப்பி விட்டு தனக்குப் பிடித்த பாட்டை முணுமுணுத்தவாறே வரும்பொழுதே வாங்கி வந்திருந்த ஹோட்டல் பார்சலைப் பிரித்து உண்ணத் துவங்கினாள்.

- நினைவுகள் தொடரும்

அன்புடன் எல்கே

45 கருத்துகள்:

Balaji saravana சொன்னது…

கதை நல்லா போகுது எல்.கே! :)
இது பகுதி 4 தானே?!

Porkodi (பொற்கொடி) சொன்னது…

//இன்னொருபுறம் அவன் எதனால் அப்படி சொன்னான் என்று குடைந்தது//

kudaiyum kudaiyum..

Porkodi (பொற்கொடி) சொன்னது…

oru non-crime storyla kooda ivlo suspense a? edhuku ungluku indha kolaveri?

எல் கே சொன்னது…

@பாலாஜி
மாற்றிவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

எல் கே சொன்னது…

@போர்ஸ்

ஏன்? க்ரைம் கதைல மட்டும்தான் சஸ்பென்ஸ் வைக்கனும்னு ஏதாவது விதி இருக்கா ??

Chitra சொன்னது…

உங்கள் எழுத்து நடை, மெருகேறி கொண்டே வருகிறது. பாராட்டுக்கள்!

Ramani சொன்னது…

மாற்றிவிட்டேன் தகவல் தந்தமைக்கு நன்றி
தங்கள் எழுத்தின் நடைசிறப்பாக உள்ளது.
தொடர்ந்து பின் வருகிறேன்.
தொடர்ந்து முன் செல்லவும் வாழ்த்துக்கள்

S Maharajan சொன்னது…

கதை அருமையா போகுது

வித்யா சொன்னது…

நினைவுகள் நல்லா போய்ட்டிருக்கு. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்கு.

middleclassmadhavi சொன்னது…

எதிர்பாராத திருப்பத்தோடு கதை ஜோராப் போகுது!

தக்குடு சொன்னது…

//காலையில் பியூட்டி பார்லர் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது//

அழகுக்கு அழகு கூட்டனும்னு சொல்ரீங்க!! இருக்கட்டும்! இருக்கட்டும்!..:)

komu சொன்னது…

நினைவுகள் சுவாரஸ்யமாகப்போய்க்கொண்டிருக்கு.

அமைதிச்சாரல் சொன்னது…

கதை நல்லா போயிட்டிருக்கு..

asiya omar சொன்னது…

கதை சூப்பராக போகுது,அடுத்து என்னன்னு கணிக்க முடியலை எல்.கே.

அருண் பிரசாத் சொன்னது…

slow and steady boss

சே.குமார் சொன்னது…

கதை நல்லா போகுது எல்.கே.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

அட தொடர்கதையா.......நன்றாக இருக்கிறதே...வாழ்த்துக்கள் எல்கே

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ம்ம்ம்ம் தொடரட்டும்...

Lakshmi சொன்னது…

நன்றாக கொண்டு செல்கிரீர்கள் கார்த்தி.
வாழ்த்துக்கள்.

Riyas சொன்னது…

கதை நல்லாருக்கு எல்.கே

raji சொன்னது…

கதை நல்ல போகுது

சென்னை பித்தன் சொன்னது…

முதல் பகுதிக்குப் பின் படிக்காமல் விட்டிருந்த நான் இப்போதிதான் எல்லப் பகுதிகளையும் சேர்த்துப் படித்தேன். கடந்த காலத்தில் அப்படி என்ன நடந்ததோ?தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.

கோவை2தில்லி சொன்னது…

கதை நல்லா போகுது. தொடருங்கள்.

Jaleela Kamal சொன்னது…

கதை அருமை

ஆம்மாம் மண்டை குடைய தான் செய்யும்,

கவிதை காதலன் சொன்னது…

தொடருங்கள்.. தொடருங்கள்.. சீக்கிரம் தொடருங்கள்.. அடுத்த பாகத்தை படிக்க ஆவலாய்...

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நினைவுகள்-5-க்காக காத்திருக்கிறேன்….

சுசி சொன்னது…

அந்த குறுஞ்செய்தியை அப்டியே பஸ்ல போட்டிடுங்க கார்த்திக்.. ;)

Priya சொன்னது…

சிறந்த எழுத்து நடை... தொடரட்டும் நினைவுகள்!

S.Menaga சொன்னது…

தொடர்கதையா?? தொடருங்கள்...பழைய பகுதியின் லிங்க் கொடுக்கலாமே முதலிலிருந்து படிப்பவர்களுக்கு ஈசியாக இருக்குமே...

அப்பாவி தங்கமணி சொன்னது…

ஆஹா... கலக்கலா போகுது கதை... ஏதோ பழைய misunderstanding ...அவ்ளோ தான் புரியுது... நல்ல flow in writing .. கலக்கு... next post please...

ஹேமா சொன்னது…

தொடர்ந்தும் வாசிக்கிறேன் கார்த்திக் !

ஜிஜி சொன்னது…

கதை அருமையா போயிட்டிருக்கு. தொடர்ந்து எழுதுங்க.வாழ்த்துக்கள்!

எல் கே சொன்னது…

@சித்ரா
உண்மையாகவா ? நன்றி சித்ரா

எல் கே சொன்னது…

@ரமணி

நன்றி அய்யா

@மகாராஜன்
நன்றி

@வித்யா
நன்றிங்க


@மாதவி
நன்றி

எல் கே சொன்னது…

@தக்குடு
கண்ணா உன் அளவுக்கு என்னால விவரிக்க முடியலை

எல் கே சொன்னது…

@கோமு
நன்றிங்க

@சாரல்
நன்றிங்க

@ஆசியா
நன்றி

@அருண்
அதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்

@குமார்
நன்றி

@நித்திலம்
ஆமாம்

@மனோ
நன்றி மக்கா

@லக்ஷ்மி
நன்றிமா

@ரியாஸ்
நன்றி

@ராஜி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@சென்னைப் பித்தன்
நீங்க தேர்தல் (!!!) வேலைல பிசி ஆகிட்டீங்க ஹிஹி

எல் கே சொன்னது…

@கோவை
நன்றி

@ஜலீலா
இந்த பொற்கொடிக்கு இன்னும் நல்லா சொல்லுங்க

@கவிதை காதலன்
சீக்கிரம் வந்திரும்


@வெங்கட்
நன்றி

எல் கே சொன்னது…

@சுசி

சொந்த செலவில் சூனியம் வச்சுக்க சொல்றீங்களா ?

எல் கே சொன்னது…

@ப்ரியா
ரொம்ப நாளா ஆளக் காணோம் .. நன்றி


@மேனகா
அடுத்த பதிவில் இருந்து அதை செய்கிறேன் . நன்றி

எல் கே சொன்னது…

@அப்பாவி
நீ என்ன வேணா கெஸ் பண்ணிக்கோ ...
//நல்ல flow in writing .. கலக்கு..//
மோதிரக் கை பாராட்டா ? நன்றி

எல் கே சொன்னது…

@ஹேமா
நன்றி

@ஜி ஜி
நன்றிங்க

தோழி பிரஷா சொன்னது…

கதையை அருமையாக நகர்த்துகின்றீர்கள் சார்... அடுத்து வரும் ஒவ்வொரு தொடருக்கும் வெயிட்டிங்..

எல் கே சொன்னது…

நன்றி தோழி பிரஷா

ஸ்ரீராம். சொன்னது…

முக்கியமான இடங்கள் எல்லாமே ஒரு மூடு மந்திரமாகவே கொண்டு போறீங்க எல்கே...ஆர்வம் வளருது.