ஜனவரி 13, 2011

நினைவுகள் -3

மேஜையில் இருந்தத் தொலைபேசியை எடுத்தவன் போட்டோவின் பின்பக்கம் எழுதி இருந்த எண்ணுக்கு அழைத்தான். எதிர்முனையில் ரிங் சென்றுகொண்டிருக்க காத்திருந்த அந்த நொடிகளில் என்றுமில்லா படபடப்புடன் அவனது இதயத்தின் துடிப்புக் கூடியது.

சில நொடிகளின் வீணடிப்புக்குப் பிறகு மறுமுனையில் இருந்து வந்த "ஹலோவை " கேட்டப் பின் வெங்கட்டின் பதட்டம் சிறிது கூடியது . வினாடி நேரத் தயக்கத்துக்குப் பிறகு

"நான் வெங்கட் பேசறேன்" .

"எந்த வெங்கட்?"

"நீ.....நீங்க சரஸ்வதிதான? "

"ஆமாம்."

"என்னை ஞாபகமில்லையா ? காலேஜில் உனக்கு சீனியர் வெங்கட் ."

"ம்ம். சொல்லுங்க. டக்குனு ஞாபகம் வரலை . இப்ப ஞாபகம் வந்திருச்சு " குரலில் இருந்த தடுமாற்றம் அவள் பொய் சொல்வதை வெளிக்காட்டியது.

எப்படி சொல்வது என்றக் குழப்பத்தில் கழிந்த கனத்த மௌனத்திற்குப் பிறகு "உனக்கு கல்யாண ஏற்பாடு நடக்குது போல " என்று தயங்கியக் குரலில் வந்த அவனது கேள்விக்கு சலிப்புடன் வந்த "ம்" என்ற ஒற்றைச் சொல்லே அவளின்
மனநிலையை வெளிப்படுத்தியது .

இதை ஒருவாறு ஏற்கனவே எதிர்பார்த்ததால் " இன்னும் பழசெல்லாம் மறக்கலியா நீ ?"

"எப்படி மறக்க சொல்றீங்க வெங்கட்? மறக்கக்கூடிய விஷயமா அது ?"

பதில் வந்த வேகத்திலும் ,அதில் இருந்த உஷ்ணத்திலும் அமைதியானவன் , "உன் முடிவு ...." வார்த்தையை முடிக்கும் முன் " கண்டிப்பா இது நடக்காது . இது தெரிஞ்சிருந்தும் ஏன் கால் பண்றீங்க ?" உஷ்ணமான வார்த்தைகளுடன் அழைப்புத் துண்டிக்கப் பட்டது .

அவள் கோபம் கொள்வாள் என்று எதிர்பார்த்திருந்தாலும் அவளது உஷ்ணமான வார்த்தைகளும் ,அழைப்பை துண்டித்ததும் அவனுக்கு ஆயாசத்தை உண்டு பண்ணியது . சலிப்புடன் அலுவலகத்தை விட்டு வெளிவந்தவன், வழக்கமான டீக்கடையில் சென்று டீ சொல்லிவிட்டு , ஒரு கிங்க்ஸ் பில்டருடன் பழைய நினைவுகளில் மூழ்கினான்.

பலருக்கும் இனிய நினைவுகளுடன் இருக்கும் கல்லூரிக் காலம் அவனுக்கு கொடுத்த வேதனைகளை மறக்க நினைத்தும் முடியவில்லை. " செய்யாத ஒன்றுக்கு எப்படி பொறுப்பானேன் நான் ?" பலமுறை சிந்தித்தும் அவனுக்கு விடை தெரியாத கேள்வி அது .

இவன் ஒருவிதமாய் சோகத்தில் இருக்க, அவளோ ஒருபுறம் கோபமும் மறுபுறம் மகிழ்ச்சியுமாய் இருந்தாள். அவனது அழைப்பும்,பேச்சும் கோபத்தை தூண்டினாலும், தன் செய்கை அவனை சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் என்ற எண்ணமே அவளுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

ஒருபுறம் மனம் இவ்வாறு மகிழ்ந்தாலும், மனதின் ஒரு மூலையில் தான் செய்வது தவறோ என்ற ஒரு சின்ன சந்தேகமும் கூடவே உயிர்கொண்டது. ஒரு கணம்தான் அந்த எண்ணமும். பின் அதை அலட்சியப் படுத்தி தன் வேலையில் மூழ்கினாள்.

அப்பொழுது மீண்டும் அவளது அலைபேசி துடிக்கத் துவங்க, அதில் வந்தப் பெயரை பார்த்து அழைப்பை உயிர்ப்பித்தாள்.

-தொடரும்
அன்புடன் எல்கே

44 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

"ஒருபுறம் மனம் இவ்வாறு மகிழ்ந்தாலும், மனதின் ஒரு மூலையில் தான் செய்வது தவறோ என்ற ஒரு சின்ன சந்தேகமும் கூடவே உயிர்கொண்டது. ஒரு கணம்தான்"

இந்த வரிகள் கதையின் பின்னால் வரக் கூடிய பாசிட்டிவ் பாகத்துக்கு கட்டியம் சொல்கிறது என்று கொள்ளலாமா...?!

RVS சொன்னது…

இப்ப கடைசியா வந்தது யாரோட காலோ?
நினைவுகள் அப்படின்னு பேர் வச்சதுக்கு அழைப்புகள் அப்புடின்னு வச்சுருக்கலாம். இன்னும் ஜோரா இருக்கும். ;-)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமை அருமை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ம்... அடுத்த காலா? சரி... :)

அனாமிகா துவாரகன் சொன்னது…

கார்த்தி சார்,
ஒரு 30 எபிசோடாவது நீங்க போட வேண்டும். சரியா

எல் கே சொன்னது…

ஏன் அனாமிகா ?? அப்பாவிக்கு போட்டியாப் போட சொல்றியா ??

S Maharajan சொன்னது…

அருமை அருமை...

Madhavan Srinivasagopalan சொன்னது…

// அப்பொழுது மீண்டும் அவளது அலைபேசி துடிக்கத் துவங்க, அதில் வந்தப் பெயரை பார்த்து அழைப்பை உயிர்ப்பித்தாள். //

அழைத்தவர் யாரோ ?

asiya omar சொன்னது…

தொடர் படிக்க சலிப்பில்லாமல் அளவாக இருக்கு,பாராட்டுக்கள்.

middleclassmadhavi சொன்னது…

இன்னுமா ஃபோன் நம்பர் மனப்பாடம் ஆகல?.. கதை ஃபோன் கால்களிலேயே விறுவிறுப்பாய் ஓடுது..

அருண் பிரசாத் சொன்னது…

இப்போதான் கதை கொஞ்சம் சூடு பிடிச்சி இருக்கு....

அனாமிகா துவாரகன் சொன்னது…

தலீவா, எங்கேயோ போய்ட்டீங்க. எப்டி கார்த்தி சார் இவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்சீங்க. யூ ஆர் ஆசம்.

ஆமினா சொன்னது…

சத்தியமா அடிச்சு சொல்றேங்க....

அடுத்து எப்படி கதை நகரும்னு என்னால கணிக்கவே முடியல. அது தான் நினைவுகளின் வெற்றி

கலக்குங்க சகோ

S.Menaga சொன்னது…

தொடர்கதையா எல்கே?? ம்ம் நேரமிருக்கும் போது படிக்கனும்..

எல் கே சொன்னது…

நீ யாரை சொல்வீனு எனக்குத் தெரியாதா ?? உன்னோட எதிரி யாருன்னு எனக்குத் தெரியுமே

ஹேமா சொன்னது…

ஒரு தொடர் கதைக்குண்டான....எல்லாமே இருக்கு.போன் வந்திட்டே இருக்கு !

அனாமிகா துவாரகன் சொன்னது…

ஏன் கார்த்தி சார்.. ஏன் இந்த வில்லத்தனம். அவங்க எனக்கு மட்டுமா எதிரி.. நம்ம எல்லாருக்குமே தானே.

கவிதை காதலன் சொன்னது…

அடடா.. சீக்கிரம் ஃபோனை எடுத்து பேச சொல்லுங்க.. என்னதான் ஆகுதுன்னு பார்க்கணும் இல்ல

கோவை2தில்லி சொன்னது…

அடுத்தது படிக்க ஆவல். சீக்கிரம் போடுங்க.

பத்மநாபன் சொன்னது…

அடுத்து வர்ற கால் ..யாரும் எதிர் பார்க்காத மாதிரி ஒரு ட்விஸ்ட் கொடுங்க...

( சபாஷ் சரியான தொடர்கதை போட்டி அப்பாவி..அமெரிக்கா, எல்.கே .. )

Lakshmi சொன்னது…

அடுத்து என்ன?

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

அப்படி இல்லை. எப்பவுமே மனதில் இந்த மாதிரி தோணும்தானே அதைதான் சொன்னேன்

@ஆர்வீஎஸ்

அட இது நல்ல ஐடியா, அடுத்த கதைக்கு அப்படி பேரு வச்சிடலாம்

எல் கே சொன்னது…

@மனோ
நன்றி


@வெங்கட்
ஆமாம்

@அனாமிகா
ஹ்ம்ம் யோசிக்கறேன்

எல் கே சொன்னது…

@மகாராஜன்
நன்றி

@மாதவன்
பொறுத்திருந்தால் தெரியும்

@ஆசியா
நன்றி. சலிப்பு வரக் கூடாது அதுக்குதான் குட்டி குட்டி போஸ்ட்

எல் கே சொன்னது…

@மிடில் கிளாஸ் மாதவி
சரியா படிக்கலையோ ?? மீண்டும் ஒருமுறை படிங்க


@அருண்
அப்ப கூல் பண்ணிடலாமா ??

எல் கே சொன்னது…

@அமீனா

ஆஹா பாராட்டுக்கு நன்றி சகோ


@மேனகா
ஆமாம். தொடர்கதைதான்.


@ஹேமா
ஆமாம் வந்துகொண்டே இருக்கும்

எல் கே சொன்னது…

@கவிதை
அவங்க பேசிட்டாங்க. நான் சீக்கிரம் என்னப் பேசினாங்கன்னு போடறேன்


@கோவை
கண்டிப்பா

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
அண்ணா போட்டியா ?? வாத்தியாரோட சிஷ்யை, ரமணி மேடமின் க்ளோன் இவங்கக் கூட நான் போட்டிப் போட முடியுமா ? சொல்லுங்க

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி
சீக்கிரம் சொல்றேன்

komu சொன்னது…

ஒருபக்கம் ஜகத்குரு,ஒருபக்கம் கவிதைகள், ஒருபக்கம் கதைகள்,எப்படி, எப்படி மேனேஜ் பண்ரீங்க?

Chitra சொன்னது…

நல்லா போகுதுங்க..

சுசி சொன்னது…

//அதில் வந்தப் பெயரை பார்த்து அழைப்பை உயிர்ப்பித்தாள்.//

நான் தான் கால் பண்ணேன்.. :)

அப்பாவி தங்கமணி சொன்னது…

//இவன் ஒருவிதமாய் சோகத்தில் இருக்க, அவளோ ஒருபுறம் கோபமும் மறுபுறம் மகிழ்ச்சியுமாய் இருந்தாள். அவனது அழைப்பும்,பேச்சும் கோபத்தை தூண்டினாலும், தன் செய்கை அவனை சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் என்ற எண்ணமே அவளுக்கு மகிழ்ச்சியை அளித்தது//

Wow... kalakkara karthi... nadathu nadathu...

As Padmanabhan anna said pottiye thaan...naan konjam suthaarichukkanum... nice write up... good.. seekaram next post

Porkodi (பொற்கொடி) சொன்னது…

mmmmmmm apparam?

Philosophy Prabhakaran சொன்னது…

அந்த வெங்கட் நீங்கதானே... கதைக்காகத் தானே பேரை மாத்தி இருக்கீங்க...

GEETHA ACHAL சொன்னது…

என்னமா எழுதுறிங்க...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....

எல் கே சொன்னது…

@கோமு
இதில என்ன இருக்கு ?

@சித்ரா
நன்றி

@சுசி
அப்படியா ? தெரியாம போச்சி

@அப்பாவி
ஏன் இப்படி ? உசுபேத்தி உசுபேத்தியே உடம்பெல்லாம் ரணகளம்..

@போர்ஸ்
அப்புறம் விழுப்புரம்தான்

@பிரபாகரன்
கண்டிப்பா இல்லை.

@கீதா
உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்

ஜிஜி சொன்னது…

தொடர் பிரமாதமாக போய்க் கொண்டு இருக்கிறது. சீக்கிரம் அடுத்த எபிசோடை எழுதுங்க.

அமைதிச்சாரல் சொன்னது…

தொடர்கதை அருமையா போகுது.. அடுத்தது என்ன??..

மாதேவி சொன்னது…

கதை நன்றாக இருக்கிறது.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

angelin சொன்னது…

waiting for next episode

Jaleela Kamal சொன்னது…

ரொம்ப நன்னா இருக்கு ம்ம் மேலே சொல்லுங்கோ

தோழி பிரஷா சொன்னது…

தாமதமாக வந்துள்ளேன்... இருப்பினும் 2 பதிவுகளையும் இன்றே படித்துவிட்டு செல்கின்றேன்...

கதை அருமையாக நகர்கின்றது...

ஆமினா சொன்னது…

//
இவன் ஒருவிதமாய் சோகத்தில் இருக்க, அவளோ ஒருபுறம் கோபமும் மறுபுறம் மகிழ்ச்சியுமாய் இருந்தாள். அவனது அழைப்பும்,பேச்சும் கோபத்தை தூண்டினாலும், தன் செய்கை அவனை சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் என்ற எண்ணமே அவளுக்கு மகிழ்ச்சியை அளித்தது.//

பெண்கள் சைக்காலஜி ஹி...ஹி..ஹி..